பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana), 2008-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வரி நிதியளிக்கப்பட்ட தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் (national health insurance scheme) உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், ஏழை மற்றும் சமூகத்தில் மிகவும் பின் தங்கிய மக்களுக்கு, வருமானத்தை தாண்டிய செலவுகள் உள்ளது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச பொது சுகாதார காப்பீடு வழங்குவது அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு (Universal Health Coverage (UHC)) அடைவதற்கு முக்கியமானது. ஏழைக் குடும்பங்களுக்கு மருத்துவ சேவையை அணுகக்கூடியதாகவும், குறைந்த செலவில் பயன்பெறவும், இந்திய அரசாங்கம் 2008-ல் ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா (Rashtriya Swasthya Bima Yojana (RSBY)) எனப்படும் வரி-நிதி சுகாதார காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டம் 2008-ல் 1% க்கும் குறைவான சுகாதார காப்பீட்டுத் தொகையை வழங்கியது. 2018-ல் அரசாங்கம் காப்பீட்டுத் தொகையை 12%-ஆக உயர்த்தியது. இருப்பினும், இது கைமீறிய செலவை (Out-of-Pocket Expenditure (OOPE)) குறைக்கவில்லை.
ஏழைக் குடும்பங்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசாங்கம் 2018-ல் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய (Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY)) யோஜனாவைத் தொடங்கியது. இந்தத் திட்டம் 500 மில்லியன் மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது. இந்த திட்டத்தால் 40% ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர். பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா முந்தைய ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா திட்டத்தை மேம்படுத்தி, பாதுகாப்பு வரம்பை ரூ. 30,000 லிருந்து ரூ. 500,000 ஆக உயர்த்தி, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரப் பாதுகாப்புக்கான கூடுதல் சேவைகளை வழங்குகிறது. கூடுதலாக, சமூக-பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்பு (socio-economic caste census (SECC)) 2011-ன் பற்றாக்குறை மற்றும் தொழில்சார் அளவுகோல்களைப் பயன்படுத்துவதன் மூலம் பயனாளிகள் பயனடைவதில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வதை பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பொது சுகாதார காப்பீட்டில் உள்ள இடைவெளிகளை எந்தளவுக்கு நிவர்த்தி செய்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் செயல்திறனை மதிப்பிடுவது முக்கியம். சமீபத்தில் வெளியிடப்பட்ட 2022-23ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு (household consumption expenditure survey (HCES)) தரவுகளின்படி, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் மாநில குறிப்பிட்ட காப்பீடு உள்ளிட்ட பொது சுகாதார காப்பீட்டுத் திட்டங்களின் பாதுகாப்பு அதிகரித்திருந்தாலும், அது இன்னும் குறைவாகவே உள்ளது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், இந்தக் குழுவில் 30%-க்கும் குறைவானவர்களே பாதுகாக்கப்படுகிறார்கள். மக்கள் தொகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள 50 கோடி பேரில் சுமார் 13 கோடி பேர் காப்பீடு செய்துள்ளதாக வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு தரவு தெரிவிக்கிறது. கூடுதலாக, மொத்த பொது சுகாதார காப்பீட்டில் 50%-க்கும் அதிகமானவை அதிக வருமானம் உள்ளவர்களுக்கு செல்கிறது.
மருத்துவமனை சேவைகளைப் பயன்படுத்திய ஏழ்மையான 40% மக்களில் சுமார் 25% பேர் பொது சுகாதாரக் காப்பீட்டை பயன்படுத்தினர். காப்பீடு உள்ளவர்களில், 34% பேர் பலன்களைப் பெற்றனர். மாறாக, அதிக வருமானக் குழுக்களில் உள்ள 36% பேர் பலன்களைப் பெற்றனர். 2017-18-ஆம் ஆண்டிலிருந்து மருத்துவக் காப்பீட்டின் பயன்பாடு இரண்டு மடங்கு அதிகரித்தாலும், ஒட்டுமொத்தப் பயன்பாடு குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக, கடந்த ஐந்தாண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு மற்றும் மருத்துவ சேவைகளுக்கான விநியோகம் குறைந்துள்ளது. இதற்கான காரணங்கள் மேலும் ஆராயப்பட வேண்டும்.
கணக்கெடுப்பு தரவுகளின் பகுப்பாய்வு, குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுடன் ஒப்பிடும்போது நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர வருவாய் குழுக்கள் பொது சுகாதார காப்பீட்டு திட்டங்களில் (public health insurance programs) அதிகம் பங்கேற்கின்றன என்பதை தரவு முடிவுகள் காட்டுகிறது. இந்தப் போக்கு பல மாநிலங்களில் உள்ள முழு மக்களுக்கும் பொது காப்பீடு நீட்டிக்கப்படுவதால் இருக்கலாம். ஆனால், காரணங்கள் மேலும் ஆராயப்பட வேண்டும்.
வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு தரவுகள் 68% மருத்துவமனை நோயாளிகள் அரசாங்க வசதிகளில் சிகிச்சை பெற்றதாகக் காட்டுகிறது. இதன் பொருள் பொது சுகாதார காப்பீடு உள்ளவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளை சிகிச்சை பெறுவதற்காக பயன்படுத்துகின்றனர். இந்த முறை 2017-18 ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறது. கூடுதலாக, பொது சுகாதார காப்பீடு இல்லாதவர்களில் 50%-க்கும் அதிகமானோர் அரசாங்க சலுகைகளை பயன்படுத்தினர். காப்பீடு இருந்தாலும், உள்நோயாளிகள் சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ளனர்.
அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பை (Universal Health Coverage (UHC)) அடைவதற்கு, கைமீறிய செலவை (Out-of-Pocket Expenditure (OOPE)) தடுக்க நிதிப் பாதுகாப்பை வழங்க வேண்டும். தேசிய மாதிரி அலுவலகம் ஆய்வகத்தின் (National Sample Survey Office (NSSO)) 75-வது கணக்கெடுப்பின் படி 2018, முதல் இரண்டு உயர் நிலைகளில் உள்ளவர்கள் உள்நோயாளி மற்றும் வெளிநோயாளர் பராமரிப்பு இரண்டிற்கும் கடைசி இரண்டு நிலைகளில் உள்ளவர்களை விட அதிக கைமீறிய செலவை எதிர்கொண்டனர் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இருப்பினும், 2022-23-ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு தரவு, உள்நோயாளிகளுக்கான சேவைகளுக்காக குறைந்த வருமானத்திலிருந்து உயர் வருமானக் குழுக்களுக்கு இந்த சுமை மாற்றப்படுவதைக் சுட்டிக்காட்டுகிறது. குறைந்த வருமானக் குழுக்களுக்கு கைமீறிய செலவுகளில் (OOPE) பொது சுகாதார காப்பீட்டின் நேர்மறையான தாக்கத்தை இது அறிவுறுத்துகிறது. ஆனால், உயர்ரக பரிசோதனை தேவை. வெளிநோயாளர் பராமரிப்புக்கான நிதிச் சுமை மாறாமல் உள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் இன்னும் அதிக செலவுகளை எதிர்கொள்கின்றன.
வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு தரவுகள், ஏழ்மையான 40% மக்களுக்கு மருத்துவமனை செலவுகள் குறைந்துள்ளதாகக் காட்டினாலும், அவர்கள் இன்னும் மருத்துவமனை பராமரிப்புக்காக அதிகம் செலவுசெய்கின்றனர். சராசரியாக, அனைத்து வருமானக் குழுக்களிலும் உள்ளவர்கள் மருத்துவமனை சிகிச்சைக்காக ஒரு நபருக்கு ரூ.6,700 செலவிடுகிறார்கள். இது 2023 தலைமை தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India (CAG)) அறிக்கையுடன் பொருந்துகிறது, பொது சுகாதார காப்பீட்டில் பயனடைபவர்கள் இன்னும் சில செலவுகளை தங்கள் சொந்த நிதியில் இருந்து செலுத்த வேண்டும் என்று கண்டறியப்பட்டது.
2022-23-ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு (household consumption expenditure survey (HCES)) தரவு, இந்தியாவில் அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு (Universal Health Coverage (UHC)) நோக்கிய முன்னேற்றம் இரண்டு முக்கிய பகுதிகளில் மெதுவாக இருப்பதாகத் தெரிவிக்கிறது. இலக்கு மக்கள்தொகை பாதுகாப்பு. ஏழை 40% மக்களுக்கான பாதுகாப்பு இன்னும் குறைவாகவே உள்ளது. நிதிப் பாதுகாப்பு, மிகக் குறைந்த இரண்டு வருமானக் குழுக்களில் உள்ளவர்கள் அதிக மருத்துவச் செலவுகளை செய்கின்றனர்.
2022-23-வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு தரவானது கேள்விகள் மற்றும் கால இடைவெளிகளின் காரணமாக, 2017-18 முதல் தேசிய மாதிரி அலுவலகம் ஆய்வகத்தின் (National Sample Survey Office (NSSO)) 75-வது கணக்கெடுப்புடன் நேரடியாக ஒப்பிடப்படவில்லை என்றாலும், ஒரு பரந்த ஒப்பீடு மெதுவான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. பொது சுகாதாரக் காப்பீட்டில் நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர வருமானக் குழுக்கள் அதிகமாகப் பங்குபெறும் அதே வேளையில், குறைந்த வருமானக் குழுக்களுக்கான பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. பயனாளிகளைக் கண்டறிந்து சேர்ப்பதில் உள்ள சிரமங்கள், குறைந்த பாதுகாப்பு மற்றும் பலவீனமான நிதிப் பாதுகாப்பு போன்ற முந்தைய தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் சிக்கல்கள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்பதை இந்தச் சிக்கல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
கட்டுரையாளர் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையத்தில் (Centre for Social and Economic Progress (CSEP)) சுகாதாரப் பிரிவில் ஆராய்ச்சி இணையாளராக உள்ளார்.