கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்: காரணம் என்ன? -அபூர்வா விஸ்வநாத்

 ஏப்ரலில் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தபோது, ​​பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) ஜாமீன் விதிகளில் பெண்களுக்கு முக்கிய விதிவிலக்கு அளிக்கக்கூடாது என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் முடிவை  உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.


ஆகஸ்ட் 27, 2024 அன்று, டெல்லி கலால் கொள்கை தொடர்பான மத்திய புலனாய்வுப் பிரிவு (Central Bureau of Investigation (CBI)) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) வழக்குகளில் பாரத ராஷ்டிர சமிதி (Bharat Rashtra Samithi (BRS)) தலைவர் கே.கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.


நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்துள்ளது. ஏப்ரல் 1, 2024ல் நீதிமன்றம் கவிதாவுக்கு ஜாமீன் தர  மறுத்துவிட்டது. நீதிபதி ஸ்வரணா காந்தா ஷர்மா, கவிதா "நன்கு படித்த" பெண் என்பதால், "பாதிக்கப்படக்கூடியவர்" என்று கருத முடியாது என்று தீர்ப்பளித்தார். எனவே, பெண்களுக்கான விதிவிலக்கு அவருக்கு  பொருந்தாது. நீதிபதி காவேரி பவேஜாவும் இதே தீர்ப்பை வழங்கியுள்ளார்.


டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சட்டமாக மாறினால், படித்த எந்தப் பெண்ணும் ஜாமீன் பெற முடியாது என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.


சட்டம் என்ன சொல்கிறது?


 ​​பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) பிரிவு 45 பணமோசடி குற்றச்சாட்டில் ஜாமீன் வழங்கிறது. இது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967ல் உள்ள ஜாமீன் வழங்கும் முறையை போன்றது. ஜாமீன் கோரும் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிராக முதன்மையான வழக்கு எதுவும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பது சட்டம்.


பிரிவு 45(1) கூறுகிறது: “இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபரும் ஜாமீனில் அல்லது அவரது சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட மாட்டார்

 

 (i) அத்தகைய விடுதலைக்கான விண்ணப்பத்தை எதிர்ப்பதற்கு அரசு வழக்கறிஞருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.


 (ii) அரசு வழக்குரைஞர் விண்ணப்பத்தை எதிர்த்தால், அவர் அத்தகைய குற்றத்தில் குற்றவாளி அல்ல என்றும், ஜாமீனில் இருக்கும் போது அவர் எந்தக் குற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்றும் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் திருப்தி அளிக்கிறது.


இந்த தரநிலைக்கு ஒரு முக்கியமான விதிவிலக்கு உள்ளது: "பதினாறு வயதிற்குட்பட்ட அல்லது ஒரு பெண் அல்லது நோய்வாய்ப்பட்ட அல்லது பலவீனமான ஒரு நபர், சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தினால், ஜாமீனில் விடுவிக்கப்படலாம்." இந்த விதிவிலக்கு பெண்கள் மற்றும் சிறார்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ளதைப் போன்றது.


2023-ஆம் ஆண்டில், தில்லி உயர் நீதிமன்றம் பெண்களுக்கு விதிவிலக்கு அளித்து, யூனிடெக் குழுமத்தின் இயக்குநர் சஞ்சய் சந்திராவின் மனைவி 49 வயதான ப்ரீத்தி சந்திராவுக்கு ஜாமீன் வழங்கியது.


அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)), கவிதாவின் வழக்கைப் போலவே, குற்றம் சாட்டப்பட்டவர் "இல்லத்தரசி" அல்ல என்று ஒரு வாதத்தை முன்வைத்தது. இருப்பினும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) அல்லது  நமது அரசியலமைப்பு, ஒரு இல்லத்தரசி, ஒரு தொழிலதிபர் அல்லது ஒரு அரசியல் பிரமுகர் என்ற வேறுபாட்டைக் காட்டவில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியது.


இவ்வாறு, பரந்த வகைப்பாட்டிற்குள் படித்த பெண்கள், வேலையில் உள்ள பெண்கள், உயர் சமூகப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் என்ற தற்காலிக மாயையான துணை வகைப்பாட்டை உருவாக்குவதன் மூலம், பிரிவு 45(1) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிமுறைக்குள் எந்த வகையான பெண் வரத் தகுதியுடையவள் என்பதை வாதிடுவதற்கு பதிலாக, "பெண்" என, எதிர்மனுதாரரால் வாதம் செய்யப்படுவது தவறான அனுகுமுறையாகக் கருதப்படுகிறது," என்று நீதிமன்றம் கூறியது.


எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனுக்குத் தகுதிபெறுவதற்கு "வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் ஆபத்து" அல்லது "சாட்சிகளை சேதப்படுத்தியவர்கள்" ஆக இருக்க முடியாது என்று நீதிமன்றம் ஒரு தகுதியைச் சேர்த்தது.


கவிதா வழக்கு


கவிதாவின் வழக்கறிஞர்கள் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவரது கட்சிக்காரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உரிமை உண்டு என்று வாதிட்டனர்.


கவிதா "நன்கு படித்தவர்" மற்றும் "சமூகத்தில் நல்ல பதவியில் உள்ளார்" என்று நீதிபதி பவேஜா குறிப்பிட்டார், எனவே பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிவிலக்கின் கீழ் அவரை "பாதிக்கப்படக்கூடிய" பெண்ணாக கருத முடியாது.


பொதுவாக 45வது பிரிவு ஜாமீன் வழங்க அனுமதித்தாலும், பெண்களுக்கு ஜாமீன் மறுக்கப்படும் போது, குற்றம் சாட்டப்பட்டவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயற்சி செய்தல், ஆதாரங்களை சேதப்படுத்துதல் அல்லது சாட்சிகளை சேதப்படுத்துதல் போன்ற மூன்று நிபந்தனைகளை பட்டியலிடும் பிரீத்தி சந்திரா வழக்கின் வழிகாட்டுதல்களை நீதிபதி குறிப்பிட்டார். 


கவிதா "விசாரணைக்கு முன் தனது தொலைபேசி ஆதாரங்களை அழித்துவிட்டார்" மற்றும் "சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்" என்று ஆதாரங்கள் காட்டுகின்றன என்று பவேஜா குறிப்பிட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் தொடர்ந்து இச்செயலில் ஈடுபடுவார் என  நீதிபதி குறிப்பிட்டார்.



Original article:

Share: