இராணுவத் தலைமையின் மாற்றங்கள் சீர்திருத்தத் திட்டத்தில் உள்ள பலவீனங்களை காட்டியுள்ளன.
ஆகஸ்ட் 1, 2024-ஆம் ஆண்டு, சீன மக்கள் விடுதலை இராணுவம் (People’s Liberation Army (PLA)) நிறுவப்பட்டதன் 97வது ஆண்டு விழாவை பிரமாண்ட நிகழ்வுகளுடன் கொண்டாடியது. இந்த வாரத்தில் இராணுவத் தலைமைத்துவத்தில் அமைதியான பல மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, ஜெனரல் வு யானன் மற்றும் ஜெனரல் ஹுவாங் மிங் ஆகியோர் முறையே தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கு தளபதிகளாக கடந்த மாதத்தில் பொறுப்பேற்றனர். இந்த நியமனங்கள் ஆகஸ்ட் 1 விழாக்களின் போது நுட்பமாக வெளிப்படுத்தப்பட்டது. அவற்றின் காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றிய கேள்விகளை சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA)
எழுப்புகிறது.
தெற்கு பகுதியில் பரபரப்பு
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸுடன் சீனா மோதலில் ஈடுபட்டு, ஜப்பான் மற்றும் அமெரிக்காவிடம் இருந்து விமர்சனங்களை பெற்றுள்ளது. இது பிராந்திய பாதுகாப்பை மோசமாக்கியுள்ளது. ஜனாதிபதி ஜி ஜின்பிங், "ஒரு நூற்றாண்டில் காணாத ஆழமான மாற்றங்களை" குறிப்பிட்டுள்ளார். இது பல்வேறு பிராந்திய மோதல்களுக்குத் தயாராக இருக்கும் ஒரு உயர்மட்ட இராணுவப் படையாக சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) மாற வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
இதற்கு உறுதுணையாக சீனா வலுவான தகவல் போர் படையை அமைத்துள்ளது. தெற்கு பகுதியில் இருந்து ஜெனரல் வாங் சியுபினை அமைதியாக அகற்றுவது, சீனாவின் கடற்படை சக்தியை வலுப்படுத்துவதில் அவர் தோல்வியடைந்ததைக் குறிக்கலாம். இருப்பினும், இந்த வெளிப்படையான காரணிகளுக்கு அப்பால், தெற்கு பகுதியில் உள்ள உள் அரசியலும் ஜெனரல் வாங் சியுபின் மாற்றத்துடன் ஏதாவது செய்யக்கூடும்.
ஜூன் 2024 இல், சீனாவின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான மத்திய இராணுவ ஆணையம் (Central Military Commission (CMC)) அரசியல் பணி மாநாட்டை நடத்தியது. அதன்பிறகு, மாநாட்டின் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு ஆய்வு அமர்வை நடத்தியது. சமீபத்திய கூட்டு கடற்படை பயிற்சி மோசமான முடிவுகளைக் காட்டியது. சில அரசியல் அதிகாரிகள் போர்க்கால பணிகளில் மோசமாக செயல்பட்டனர்.
ஏப்ரல் 2024-ல், இராணுவ அதிகாரிகள் பழைய மற்றும் புதிய அதிகாரிகளுக்கு இடையிலான பதட்டங்களைப் பற்றி விவாதித்தனர். பரஸ்பர ஆதரவின் அவசியத்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர் மற்றும் தவறுகளை அச்சமின்றி புகாரளித்து சரிசெய்யக்கூடிய "தவறு சகிப்புத்தன்மை" அமைப்பை உருவாக்கினர்.
சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) 2015-ஆம் ஆண்டு சீர்திருத்தங்கள் தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் பயனுள்ள போர்க்கால அணிதிரட்டலுடன் ஒரு சிறந்த இராணுவப் படையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தெற்கு பகுதியின் வெளியீடுகள் இந்த சீர்திருத்தங்களில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன.
சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) அமைப்பின் தாக்கங்கள்
ஜெனரல் வு யானனின் தலைமை தெற்கு பகுதியல் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும். கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்திருத்தத் திட்டங்களைச் செயல்படுத்த, கட்சித் தலைவர்களுடனும், மத்திய இராணுவ ஆணையம் (Central Military Commission (CMC)) கூட்டுப் பணியாளர் துறையில் துணைத் தலைவராகவும் இருந்த வூவின் விரிவான அனுபவமும், சென்ட்ரல் பகுதியின் கமாண்டர் என்ற அவரது முந்தைய அனுபவமும் பயன்படுத்தப்படலாம்.
வூவின் நியமனம் முதல், தெற்கு பகுதியில் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறியது. ஆகஸ்ட் 7 அன்று, அதன் திறன்களை சோதிக்க ஸ்கார்பரோ தீவுகளுக்கு அருகே கூட்டு கடல் மற்றும் வான்வழி ரோந்துகளை நடத்தியது. வூவின் கீழ், பகுதியில் போர் தயார்நிலை மற்றும் அரசியல் ஒற்றுமை மிகவும் கடுமையான சோதனைகளை எதிர்கொள்ளக்கூடும்.
மேலும், தென் சீனக் கடலில் அடிக்கடி இராணுவ வலிமையைக் காட்டுவது ஒரு முக்கிய செயல்திறன் நடவடிக்கையாக மாறும்.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) மாற்றங்கள், சீர்திருத்த செயல்முறை இன்னும் தொடர்கிறது மற்றும் முழுமையடையவில்லை என்பதைக் காட்டுகிறது. ஊழல் மற்றும் திறமையின்மை காரணமாக ஏற்படும் தலைமை மாற்றங்களால் குறிக்கப்பட்ட உள் எழுச்சியின் நிலை தொடர்கிறது. புதிய தலைமையானது, நூற்றாண்டின் நடுப்பகுதியில் "உலகத் தரம் வாய்ந்த" இராணுவமாக மாறும் இலக்கை நோக்கி நகர்வதற்கு இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவிற்கான பாடங்கள்
இந்த சீன மக்கள் விடுதலை இராணுவதின் (PLA) தலைமை மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனிக்க வேண்டும். சீன மக்கள் விடுதலை இராணுவதின் கமாண்டர்கள் அவர்களின் திறமைக்காக மட்டுமல்ல, கட்சி-அரசின் நோக்கங்களுக்கான விசுவாசத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சீனா இந்தியாவின் முக்கிய போட்டியாளர் மற்றும் இராணுவ சவாலாக இருப்பதால், சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமை பரிணாமம் மற்றும் சீர்திருத்தங்களைப் புரிந்துகொள்வது இந்தியாவிற்கு முக்கியமானது.