கோவிட்-19 முதல் குரங்கம்மை நோய் (Mpox) வரை : ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை மேம்படுத்துதல் -காஷிஷ் அனேஜா, சாம் ஹலாபி, லாரன்ஸ் கோஸ்டின்

 குரங்கம்மை நோய் (Mpox) பரவல் என்பது, உலகளாவிய சமூகத்திற்கு சமமான தடுப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கான அதன் உறுதிப்பாட்டை நிரூபிக்க வாய்ப்பு உள்ளது. தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதற்கான அணுகலை உறுதி செய்வதன் மூலம் இதை மேற்கொள்ளலாம்.


COVID-19 தொற்றுநோய் நடந்து ஐந்து ஆண்டுகளுக்குள், உலகம் மற்றொரு உலகளாவிய சுகாதார நெருக்கடியின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இது, உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) மீண்டும், காங்கோ ஜனநாயகக் குடியரசில் (Democratic Republic of the Congo (DRC)), ஆப்பிரிக்காவில் பரவியதைத் தொடர்ந்து, mpox-ஐ (முன்னர் குரங்கு பாக்ஸ் என்று அழைக்கப்பட்டது) சர்வதேச அளவில் ஒரு பொது சுகாதார அவசரநிலை (Public Health Emergency of International Concern (PHEIC)) என அறிவித்துள்ளது. வைரஸ் பின்னர் ஒரு குறிபிட்ட அளவில் மற்ற ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது. இது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆப்பிரிக்கா மையங்களின் (Africa Centres for Disease Control and Prevention (AfricaCDC)) பொது சுகாதார அவசரநிலை கான்டினென்டல் செக்யூரிட்டியின் (Public Health Emergency of Continental Security (PHECS)) அறிவிப்பின் அடிப்படையில் வருகிறது. இது பிராந்திய மற்றும் உலகளாவிய சுகாதார அவசரநிலைகள் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்ட முதல் நிகழ்வைக் குறிக்கிறது. PHEIC பிரகடனத்திற்கு அடுத்த நாட்களில், ஸ்வீடன், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸில் குரங்கம்மை நோய் (mpox) பரவல்கள் அடையாளம் காணப்பட்டன. இது வைரஸ் ஆப்பிரிக்க கண்டத்திற்கு அப்பால் பரவ வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது.


இந்த WHO அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது மே 2024=ல் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளில் (International Health Regulations (IHR)) திருத்தங்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட முதல் PHEIC பிரகடனம் ஆகும். மேலும் அனைத்து சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை (IHR) சீர்திருத்தங்களிலும், சமபங்குகளை ஒரு முக்கிய கொள்கையாக சேர்ப்பது மிக முக்கியமானதாக இருக்கலாம். இந்த திருத்தங்கள் 2025 வரை நடைமுறைக்கு வராது என்றாலும், mpox பரவல்களுக்கான உலகளாவிய பிரதிபலிப்பு ஆரம்பத்தில் இருந்தே இந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அந்தத் திருத்தங்கள், அவசர காலங்களில் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை எளிதாக்குவதில் WHO-ன் பங்கை மேலும் விரிவுபடுத்துகின்றன.


ஒரு சர்வதேச அளவில் ஒரு பொது சுகாதார அவசரநிலை (PHEIC) சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் தங்கள் பதில்களை ஒருங்கிணைக்கவும், தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், பரஸ்பர உதவிகளை வழங்கவும் ஒத்துழைக்க வேண்டும். அவசரகால நிதியுதவி, பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட நிதி மற்றும் தொழில்நுட்ப வளங்களை விரைவாகத் திரட்டுவதை இந்த அறிவிப்பால் தீவிரம் காட்ட வேண்டும்.


கோவிட்-19 தொற்றுநோய்க்கான பதிலைப் பிரதிபலிக்கிறது


கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து ஒரு முக்கிய சிக்கலை எடுத்துக்காட்டியுள்ளது. இது, உலகளாவிய தெற்கில் போதிய தடுப்பூசி உற்பத்தி திறன்களின் போதாமை ஆகும். இதில், தொழில்நுட்ப இடமாற்றங்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்குத் தேவையான நிபுணத்துவம் இல்லாததால் இந்தப் பிரச்சனை இன்னும் மோசமாகியது. இதுவரை, குரங்கம்மை நோய் (mpox) பரவல்களுக்கான உலகளாவிய பதிலானது இதேபோன்ற முறையைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது.


mpox-க்கான தற்போதைய பதில் ஒரு முக்கிய வழியில் COVID-19லிருந்து வேறுபட்டது. இதற்கு, ஏற்கனவே ஒரு தடுப்பூசி உள்ளது. இது, மாற்றியமைக்கப்பட்ட Vaccinia Ankara-Bavarian Nordic (MVA-BN), Jynneos என்றும் அழைக்கப்படும், Bavarian Nordic என்ற டேனிஷ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசி முதன்மையான சிக் எம்ப்ரியோ ஃபைப்ரோபிளாஸ்ட் (chick embryo fibroblast (CEF)) செல் வகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இந்த உற்பத்தி முறையானது தட்டம்மை (measles), சளி (mumps), வெறிநாய்க்கடி (rabies) மற்றும் டிக்-பரவும் என்செபாலிடிஸ் (tick-borne encephalitis) போன்ற பிற தடுப்பூசிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து (இது Imvanex® என விற்பனை செய்யப்படுகிறது), அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து (இது Jynneos® என சந்தைப்படுத்தப்படுகிறது) மற்றும் கனடா (இது Imvamune® என சந்தைப்படுத்தப்படுகிறது) ஆகியவற்றில் உள்ள ஒழுங்குமுறை அதிகாரிகள் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.


mpox தடுப்பூசிகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்காவிற்கு ஏன் வருகின்றன?


உலகளாவிய தெற்கில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், தற்போதுள்ள MVA-BN தடுப்பூசியை மேம்படுத்துவதன் மூலமும், COVID-19 தொற்றுநோயிலிருந்து பாடங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை mpox பரவல் வழங்குகிறது. இந்திய உற்பத்தியாளர்கள், குறிப்பாக, இந்தத் தடுப்பூசிக்கான சமமான அணுகலை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனர். மேலும், இது மிகவும் தேவைப்படும் மக்களை சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதிசெய்கிறது. உண்மையில், COVID-19-ன் போது இந்தியா ஒரு முக்கியமான நட்பு நாடாக செயல்பட்டது. தடுப்பூசியின் பெருமளவிலான உற்பத்தியை எளிதாக்கியது. இது அதிக உயிர்களைக் காப்பாற்றிய பெருமைக்குரியது ஆக்ஸ்போர்டு/ அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டாக சந்தைப்படுத்தப்பட்டது.


தொழில்நுட்ப பரிமாற்றத்தை உறுதி செய்தல்


குரங்கம்மை நோய் பரவுவதை நாடுகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. இதனால், தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நோய்க்கான பரவலை கட்டுப்படுத்த 10 மில்லியன் தடுப்பூசிகள் தேவை என்று ஆப்பிரிக்காசிடிசி (AfricaCDC) மதிப்பிடுகிறது. இருப்பினும், இப்போது சுமார் 0.21 மில்லியன் தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கக்கூடும். பவேரியன் நோர்டிக் (Bavarian Nordic) ஆப்பிரிக்காசிடிசியிடம் 2025-ம் ஆண்டின் இறுதிக்குள் 10 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் என்று கூறியுள்ளார். ஒவ்வொரு mpox தடுப்பூசிக்கும் $100 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், MVA-BN தடுப்பூசியின் நிலையான மற்றும் குறைந்த விலை உற்பத்தியின் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது.


இந்தியாவில் தற்போதைக்கு mpox குறைந்த அளவு பெரிய அளவில் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த சவாலை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. நாட்டில் மூன்று முக்கிய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உள்ளனர். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India), பாரத் பயோடெக் (Bharat Biotech) மற்றும் ஜிடஸ் காடிலா (Zydus Cadila) ஆகும். இந்த நிறுவனங்கள் ஏற்கனவே சிக் எம்ப்ரியோ ஃபைப்ரோபிளாஸ்ட் (chick embryo fibroblast (CEF)) செல்களைப் பயன்படுத்தி தடுப்பூசிகளை தயாரிப்பதில் அனுபவம் பெற்றுள்ளன. தேசிய அளவிலும் உலக அளவிலும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவை முக்கியமானவையாக செயல்படுகிறது.


இந்த உற்பத்தியாளர்கள் CEF செல்களில் MVA உற்பத்தியை விரைவாக அதிகரிக்க நிபுணத்துவம் பெற்றிருக்கலாம். SPF முட்டைகள் போன்ற முக்கியமான பொருட்களுக்கான விநியோகச் சங்கிலிகளை அவர்கள் ஏற்கனவே நிறுவியிருக்கலாம். இது உற்பத்தியை எளிதாக விரிவுபடுத்த உதவும். குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் (lower-middle-income countries (LMIC)) உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் குறைந்த செலவைக் கொண்டுள்ளனர். இது தடுப்பூசிகளின் விலையைக் குறைக்கலாம். இதனால், தேவையை அதிகரிக்கும் மற்றும் மருந்தளவுகளை சுலபமாக அணுகக்கூடியதாக மாற்றும்.


MVA-BN உற்பத்தியை விரைவாக அதிகரிக்க, உயிரியல் வளங்கள், அறிவு மற்றும் காப்புரிமைகள் ஆகியவற்றைப் பகிர்வது உட்பட விரிவான தொழில்நுட்ப பரிமாற்றம் தேவைப்படும். பெரும்பாலும் கவனிக்கப்படாமல், தொடர்புடைய அறிவின் பரிமாற்றம் முக்கியமானது மற்றும் வரலாற்று ரீதியாக நோய் பரவல்களுக்கான பதில்களில் ஒரு பெரிய தடையாக உள்ளது. வெறும் தடுப்பூசிகளைவிட அறிவைப் பகிர்வதுதான் தர்மத்தையும் நீதியையும் வேறுபடுத்துகிறது. இந்த நாளிதழில் WHO தொற்றுநோய் ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் உள்ள முக்கிய சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி எழுதுகையில் (தலையங்கம் பக்கம், "ஒரு தொற்றுநோய் ஒப்பந்தத்திற்கான உலகளாவிய போராட்டம்" (The global struggle for a pandemic treaty), ஆகஸ்ட் 1, 2024), இந்த எழுத்தாளர்கள் "பன்முகத்தன்மையை உறுதிப்படுத்த தொழில்நுட்ப பரிமாற்றங்கள் தேவை" என்று வாதிட்டனர். உலகளவில் உற்பத்தி திறன்கள், அதனால் குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் (LMIC) அதிக வருமானம் கொண்ட நாடுகளின் 'தொண்டு'களை நம்பியிருக்காது மற்றும் தன்னிறைவை பராமரிக்க முடியும்.


இந்திய அரசாங்கம், கட்டுப்பாட்டாளர்களுடன் இணைந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் WHO, Gavi, மற்றும் Coalition for Epidemic Preparedness Innovations (CEPI) போன்ற முக்கிய சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பவேரியன் நோர்டிக் உடன் தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த நிறுவனங்களின் நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பயன்படுத்தி, வளரும் நாடுகளில் உள்ள உற்பத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இந்த முயற்சிகள் குறைந்த விலை உற்பத்தியை அளவிட உதவுவதோடு, MVA-BN தடுப்பூசிக்கு சமமான அணுகலை உறுதிசெய்து, தொற்றுநோயைக் குறைத்து மேலும் நோய் பரவுவதைத் தடுக்கும். இது உலகளாவிய வடக்கு மற்றும் தெற்கில் உள்ள நாடுகளுக்கு பயனளிக்கும்.


நடவடிக்கையால் ஏற்படும் தாக்கம்


ஆகஸ்ட் 7 அன்று, இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை நிறுவனமான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organization (CDSCO)) ஒரு முக்கிய முடிவை எடுத்தது. இது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கு இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகள் தேவை என்பதை அவர்கள் தள்ளுபடி செய்தனர். தொற்றுநோய் சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் புதிய மருந்துகளுக்கும் இந்த விலக்கு பொருந்தும். இதன் விளைவாக, MVA-BN போன்ற முக்கியமான தடுப்பூசிகள் இந்தியாவில் விரைவாகக் கிடைக்கும்.


குரங்கம்மை நோய் (mpox) பரவலுடன், உலகளாவிய சமூகம் சமமான தடுப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பில் அதன் அர்ப்பணிப்பைக் காட்ட ஒரு முக்கிய வாய்ப்பைப் பெற்றுள்ளது. mpox தடுப்பூசி தேவைப்படும் அனைவருக்கும் அதை பெற முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும். இது சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பகிர்வு தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. இந்தியா போன்ற நாடுகளின் உற்பத்தித் திறனையும் நாம் பயன்படுத்த வேண்டும். இதைச் செய்வதன் மூலம், தற்போதைய நெருக்கடியைக் கையாளலாம் மற்றும் எதிர்கால சுகாதார அவசரநிலைகளுக்கு சிறப்பாக தயாராக இருக்க முடியும். கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க நாம் இப்போது தீவிரமாக செயல்பட வேண்டும்.


ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் தேசிய மற்றும் உலகளாவிய சுகாதார சட்டத்திற்கான ஓ'நீல் நிறுவனத்தில் ஆசியாவின் முன்முயற்சிகளுக்கு காஷிஷ் அனேஜா முன்னணியில் உள்ளார். 

சாம் ஹலாபி, தேசிய மற்றும் உலகளாவிய சுகாதாரச் சட்டத்திற்கான ஓ'நீல் நிறுவனத்தில் உருமாறும் சுகாதாரச் சட்ட மையத்தின் இயக்குநராக உள்ளார். 

லாரன்ஸ் கோஸ்டின் ஒரு புகழ்பெற்ற பேராசிரியர் மற்றும் ஓ'நீல் நிறுவனத்தில் தேசிய மற்றும் உலகளாவிய சுகாதார சட்டத்திற்கான உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பு மையத்தின் இயக்குநராக உள்ளார். அவர் உலக சுகாதார அமைப்பின் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை மறுஆய்வுக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.



Original article:

Share: