பிரதம மந்திரி ஜன் தன் யோஜனாவில் கணக்கு வைத்திருப்பவர்கள் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு முறையான நிதி அமைப்பில் சேர்ந்துள்ளனர். எதிர்கால அரசாங்க திட்டங்கள் இந்த கணக்குகளை மற்ற திட்டங்களுடன் இணைத்து ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு (economic empowerment) உதவும்.
அனைவருக்கும் வங்கிச் சேவைகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் சமத்துவமின்மைகளைக் குறைக்கவும் வாழ்க்கையை மேம்படுத்தவும் நிதிச் சேர்க்கை (Financial inclusion) உதவுகிறது. ஆகஸ்ட்-28, 2014 அன்று, வங்கி கணக்கு இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிச் சேவை வழங்க பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) திட்டத்தை அரசாங்கம் தொடங்கியது. ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் (JAM trinity) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 7.5 கோடி வங்கி கணக்கு இல்லாத குடும்பங்களுக்கு இரண்டு கட்டங்களில் வங்கிச் சேவை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டது.
இன்று, 80% பெரியவர்கள் முறையான வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். இது 2011-ல் 50% ஆக இருந்தது. உலகளவில் நிதி சேர்க்கையை மேம்படுத்துவதில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளி, கணக்கு உரிமையில் (account ownership) வெகுவாகக் குறைந்துள்ளது. குடும்பங்களை மையமாகக் கொண்ட முந்தைய அணுகுமுறையை போல் இல்லாமல், தனிநபர்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட, அடிப்படை சேமிப்புக் கணக்குகளால் இந்த முன்னேற்றம் ஏற்படுகிறது.
வங்கிகள், 53 கோடி பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்குகளைத் தொடங்கி, ரூ.2.31 லட்சம் கோடியை நிலுவை தொகை வைத்துள்ளன. இது மார்ச் 2015-ல் ரூ.15,670 கோடியுடன் இருந்த 14.7 கோடி கணக்குகளை விட மூன்று மடங்கு அதிகமாகும் பொதுத்துறை வங்கிகள் இந்தக் கணக்குகளில் 78%-ஐ கையாளுகின்றன. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்குகளின் சராசரி இருப்பு மார்ச் 2015-ல் ரூ 1,065-ல் இருந்து ஆகஸ்ட் 2024-ல் ரூ4,352 ஆக அதிகரித்துள்ளது. இந்த கணக்குகளில் 81.2% தற்போது செயல்பாட்டில் உள்ளது. 55.6% பெண்கள் மற்றும் 66.6% கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களில் (semi-urban areas) உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 9.4 கோடியுடன் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கி கணக்குகள் உள்ளன. அதைத் தொடர்ந்து 6 கோடி வங்கி கணக்குகள் பீகாரில் உள்ளது.
ஜன்தன் கணக்குகள் பல நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. காப்பீட்டுத் தொகை, தனி நபர் கடன் வசதிகள் (overdraft facility) மற்றும் மேம்படுத்தப்பட்ட சேமிப்புப் பழக்கம் ஆகியவை இதில் அடங்கும். அவை சமூகத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. உ.பி., மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) கணக்குகளின் பயன்பாடு காலப்போக்கில் திருட்டுகள் குறைவதற்கு வழிவகுத்தது. மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளா தொடக்கத்தில் இருந்தே பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் நேர்மறையான தாக்கத்தைக் கண்டுள்ளன. குஜராத் மற்றும் கர்நாடகாமாநிலங்கள் நல்ல பலனை பெற்றுள்ளன. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்குகள் அதிகம் உள்ள மாநிலங்களில், மது மற்றும் புகையிலைக்கு மக்கள் குறைவாகச் செலவிடுகின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில், நேரடி பயன் பரிமாற்றங்கள் (Direct Benefit Transfers (DBT)) மூலம் ரூ.38.49 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டு, ரூ.3.48 லட்சம் கோடி தேவையற்ற செலவுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் மயமாக்கல், மின் வணிகம் (e-commerce) மற்றும் கட்டண முறைகளையும் ஆதரித்துள்ளது. ஜூலை 2024-க்குள், இந்தியா 55.7 பில்லியன் ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (Unified Payments Interface (UPI)) பரிவர்த்தனைகளைக் கண்டுள்ளது. எதிர்காலத்தில், நிதி சேர்க்கையை மேம்படுத்த நான்கு முக்கிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகள் பிரச்சினையின் விநியோகப் பக்கம் (supply-side) மற்றும் தேவைப் பக்கம் (demand-side) ஆகிய இரண்டையும் நிவர்த்தி செய்கின்றன.
முதலில், நிதிச் சேர்க்கையை ஊக்குவிக்கும் அமைப்பையும் ஆதரவையும் மேம்படுத்த வேண்டும். கூட்டாண்மை மூலம் நிதி உள்ளடக்கத்தில் தனியார் துறை பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும். ஆதரவு மற்றும் நிதிக் கல்வியை வழங்குவதன் மூலம் தனிநபர்கள் மற்றும் சிறு வணிகங்கள் வளர உதவ வேண்டும். கூடுதலாக, அனைத்து பாலினங்களையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகள் மற்றும் திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும்.
இரண்டாவதாக, மைக்ரோ-இன்சூரன்ஸ் (micro-insurance) மற்றும் கிரெடிட் போன்ற நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாம் மிகவும் பரவலாகவும் குறைந்த விலையிலும் வழங்க வேண்டும். இருப்பினும், புதிய பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) கணக்கு வைத்திருப்பவர்கள் அதிகக் கடனில் மாட்டிக்கொள்வதைத் தவிர்க்க, அவர்கள் மீது அதிகவட்டி விதிக்காமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் (Unified Lending Interface) செலவுகளைக் குறைப்பதன் மூலமும், பணப் பட்டுவாடாவை விரைவுபடுத்துவதன் மூலமும், வளர்ச்சிக்கு அனுமதிப்பதன் மூலமும் கடன் செயல்முறையை மிகவும் திறமையானதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது விரைவான விநியோகம் மற்றும் அளவிடுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
மூன்றாவதாக, நுகர்வோர் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். புதிய மற்றும் சிக்கலான டிஜிட்டல் தயாரிப்புகளில் நுகர்வோரின் நம்பிக்கையைப் பராமரிக்க இது அவசியம். விதிமுறைகளையும் மற்றும் கொள்கைகளை வகுக்க வேண்டும். இந்த விதிமுறைகள் பாதுகாப்புக்கும் புதுமைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.
நான்காவது, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) திட்டத்தில் உள்ள பலர் நிதி அமைப்புக்கு புதியவர்கள். அவர்கள் பெரும்பாலும் ஒழுங்கற்ற அல்லது பருவகால வருமானங்களைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்களால் சிறிய அளவில் மட்டுமே சேமிக்க முடியும். அவர்களின் தேவைகள் வழக்கமான நுகர்வோரிடமிருந்து மிகவும் வேறுபட்டவை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு நிதி தயாரிப்புகள் வடிவமைக்கப்பட வேண்டும்.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிடத்தக்க முயற்சிக்குப் பிறகு முறையான நிதி அமைப்பில் சேர்ந்துள்ளனர். எதிர்கால அரசாங்க திட்டங்கள் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்குகளை மற்ற அரசாங்க திட்டங்களுடன் இணைக்க வேண்டும். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான தற்போதைய பொருளாதார ஆதரவுக்கான முழுமையானஅணுகுமுறையை உறுதி செய்யும்.