வயநாடு மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பாடங்கள் : காலநிலை மாற்றம் தீவிரமடையும் போது, தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு எவ்வாறு தயாராவது ? -சினேகா பிஸ்வாஸ்

 48 மணி நேரத்திற்குள் இரண்டு பெரிய இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்து நாட்டை அச்சுறுத்தியது. 


கேரளாவின் வயநாட்டில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தின் சிம்லா, குலு மற்றும் மண்டியில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வுகள் 350 க்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு வழிவகுத்தன. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயினர். இந்த அவசர நிலைமையில் உடனடி கவனம் தேவை.  


மேக வெடிப்பு (Cloud burst)மற்றும் நிலச்சரிவு (landslide)   


மேக வெடிப்பு என்பது குறுகிய நேரத்தில் மற்றும் சிறிய பகுதியில் பெய்யும் கனமழை ஆகும். இது சில சதுர கிலோமீட்டருக்குள் நிகழ்கிறது மற்றும் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். 20-30 சதுர கி.மீ பரப்பளவில் மணிக்கு 100 மிமீ க்கும் அதிகமான மழைப்பொழிவு மேக வெடிப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department’s (IMD)) வரையறுக்கிறது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி, இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா, தர்மசாலா, சூரி மற்றும் பாலம்பூர் போன்ற சில பகுதிகளில் 150 மிமீ முதல் 212 மிமீ வரை மழை பெய்தது.


இடியுடன் கூடிய மழை மேகங்கள் என அழைக்கப்படும் கார்திரள் முகில் மேகங்கள் (Cumulonimbus clouds) குறிப்பிடத்தக்க மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை ஏற்படுத்துகின்றன. இந்த மேகங்கள் மலைப்பகுதிகளில் குறுகிய மற்றும் தீவிரமான புயல்களை உருவாக்குகின்றன. இது மேக வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளத்திற்கு வழிவகுக்கிறது. 2013-ஆம் ஆண்டில் கேதார்நாத் திடீர் வெள்ளம் மற்றும் 2010-ஆம் ஆண்டில் லே மேக வெடிப்பு போன்ற பெரிய மேக வெடிப்பு நிகழ்வுகளை இமயமலைப் பகுதி கண்டுள்ளது.  


வயநாட்டின் வெள்ளரிமலை மலைப் பகுதியில், சராசரி ஆண்டு மழைப்பொழிவான 3,000 மி.மீ உடன் ஒப்பிடும்போது, வெறும் 48 மணி நேரத்தில் 572 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த தீவிர மழையால் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு பல கிராமங்கள் அழிந்தன. நிலச்சரிவுகள் பெரும்பாலும் பூகம்பங்கள் அல்லது அதிக மழைப்பொழிவால் ஏற்படுகின்றன. அப்பகுதியின் நிலப்பரப்பு, சாய்வு, பாறை மற்றும் மண் அமைப்பு மற்றும் நிலப் பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்தது. 


இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (Geological Survey of India) தேசிய நிலச்சரிவு பாதிப்பு வரைபடம் (National Landslide Susceptibility Mapping (NLSM)) மேற்குத் தொடர்ச்சி மலைகள், வடமேற்கு இமயமலை மற்றும் வடகிழக்கு இமயமலை ஆகியவற்றை அதிக நிலச்சரிவு பாதிப்புக்குள்ளான மண்டலங்களாக அடையாளம் கண்டுள்ளது. 2011-ஆம் ஆண்டில் மாதவ் காட்கில் குழு அறிக்கை (Madhav Gadgil Committee) மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை குறித்த அதன் பரிந்துரைகள் வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு காரணமாக கவனத்தை ஈர்த்துள்ளன. 


இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளுவதில் இந்தியாவின் தயார்நிலை 


அதிக மக்கள்தொகை பாதிக்கப்படும்போது இடர்கள் பேரழிவுகளாக மாறுகின்றன. இயற்கை பேரழிவுகளால், வறுமை, சமத்துவமின்மை மற்றும் பாதுகாப்பற்ற வாழ்க்கை நிலைமைகள் போன்ற சமூக-பொருளாதார சூழல்களில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பேரழிவு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேக வெடிப்பு அல்லது நிலச்சரிவு போன்ற நிகழ்வுகள் இந்த மூல காரணங்களுடன் தொடர்பு கொள்ளும்போது, பேரழிவுகள் ஏற்படுகின்றன.  

 

காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) தனது 2021-ஆம் ஆண்டு அறிக்கையில், காலநிலை மாற்றம் காரணமாக தீவிர நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் என்று எச்சரித்தது.  இந்தியா போன்ற வளரும் நாடுகள் பேரழிவு தயார்நிலையை விட நிவாரணம் மற்றும் மறுவாழ்வில் அதிக கவனம் செலுத்துகின்றன என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேம்பட்ட முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் இருந்தபோதிலும், இந்தியா பெரும்பாலும் சரியான நேரத்தில் பேரழிவு தயார்நிலை மற்றும் ஆபத்து குறைப்புடன் போராடுகிறது.


கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் பிற பொது சுகாதார பிரச்சினைகளை நிர்வகித்ததற்காக கேரள அரசு பாராட்டப்பட்டாலும், முந்தைய அறிக்கைகளின் எச்சரிக்கைகளை கவனிக்கத் தவறிவிட்டது. பேரழிவின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் போராடி வரும் நிலையில், மத்திய, மாநில அதிகாரிகளை குற்றம் சாட்டி வருகின்றனர்.


பேரழிவுகளைத் தவிர்த்தல்: எதிர்காலத்திற்கான ஒரு கண்ணோட்டம் 


சமீபத்திய பேரழிவுகள், அவர்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே, உயிர்கள், சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரங்களின் குறிப்பிடத்தக்க இழப்புக்கு வழிவகுத்துள்ளன. மேலும், வட்டாரங்கள், கிராமங்கள் மற்றும் நகரங்களின் அழிவுக்கு வழிவகுத்துள்ளன. குடியிருப்புக்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. மனித உடல்கள் கூட  சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வெகு தொலைவில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற பெரிய அளவிலான சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களைத் தடுக்க,  நாம் பொறுப்பேற்று நிலையான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


முதலாவதாக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் மற்றும் சுற்றுச்சூழல்  திட்டங்கள்  ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதிகளுக்கான வளர்ச்சித் திட்டமிடலில் விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.


இரண்டாவதாக, பேரழிவால் பாதிக்கப்பட்ட இரண்டு பகுதிகளும் குறிப்பிடத்தக்க பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்ட பிரபலமான சுற்றுலாத் தலங்களாக  பரிந்துரைக்கப்பட்டாலும், இது பெரும்பாலும் சுற்றுச்சூழல் அழுத்தங்களை மோசமாக்குகிறது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். சுற்றுலாவை நம்பியிருப்பதைக் குறைக்க பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் மாற்று வாழ்வாதார வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.


மூன்றாவதாக, சரியான நேரத்தில் வெளியேற்றம் மற்றும் விரைவான பேரழிவு நிலையை  உறுதி செய்வதற்காக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும் தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்.


நான்காவதாக, காலநிலை மாற்றம் இனி ஒரு தொலைதூர நிகழ்வு அல்ல; அதன் தாக்கம் நம் முன்னே வந்து பாதிப்புகளைப் ஏற்படுத்துகிறது.  பல நிலைகளில் தணிப்பு மற்றும் தழுவல் திட்டங்களுக்கு (adaptation plans ) நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். இருப்பினும், கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில்  கவனம் செலுத்தும் பகுதிகளில் காலநிலை மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ரூ.99.35 கோடி ரூபாயாக சிறிய நிதியை  மட்டுமே ஒதுக்கியுள்ளது. (2023-24 இல் ரூ.3,231.02 கோடி ரூபாயாயிலிருந்து 2024-25 இல் ரூ.3,330.37 கோடி ரூபாயாக இருந்தது). காலநிலை - திறன்மிகு விவசாய (climate-smart agriculture ) திட்டங்களுக்கு ரூ.598 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது மட்டுமே காலநிலை மாற்றத்திற்கான ஒரே குறிப்பிடத்தக்க ஒதுக்கீடு  ஆகும்.



Original article:

Share: