தனியார் துறை மற்றும் பிற துறைகளில் இருந்து பதவிகளை ஈர்க்கும் வகையில், ஆட்சியதிகாரத்தின் மூத்த பதவிகளில் பக்கவாட்டு ஆட்சேர்ப்பை (lateral recruitment) ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. இருப்பினும், இந்த நியமனங்கள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை சேர்க்காததால் இதற்கான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன.
சனிக்கிழமை, ஆகஸ்ட் 17 அன்று, ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC)) ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இது 24 மத்திய அரசின் அமைச்சகங்களில் இணை செயலாளர், இயக்குனர் மற்றும் துணை செயலாளர் பதவிகளுக்கு வெளிப்புற ஆட்சேர்ப்புக்கு "திறமையான இந்திய குடிமக்களிடமிருந்து" விண்ணப்பங்களைக் கோருகிறது.
மொத்தம் 45 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். இதில் மாநில/ யூனியன் பிரதேச அரசாங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் இதில் அடங்குவர். அனைத்து பதவிகளும் "தகுதி அடிப்படையில் மாற்றுத்திறனாளி நபர்கள் (Persons with Benchmark Disability (PwBD)) பிரிவைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு ஏற்றவை" என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்த அறிவிப்புக் கொள்கையை விமர்சித்துள்ளனர். இது எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போட்டியாளர்களை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்குகிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
அதிகார வர்க்கத்திற்குள் 'பக்கவாட்டு' (lateral entry) என்றால் என்ன?
2017-ம் ஆண்டில், NITI ஆயோக் தனது மூன்று ஆண்டு செயல் திட்டத்தில் ஒரு பரிந்துரையைச் சேர்த்துள்ளது. ஆளுகைக்கு, துறைரீதியான குழு செயலாளர்கள் (Sectoral Group of Secretaries (SGoS)) தனது பிப்ரவரி மாதம் வெளியிட்ட அறிக்கையிலும் பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசாங்கத்தில் நடுத்தர மற்றும் மூத்த நிர்வாக மட்டத்தில் பணியாளர்களை பணியமர்த்த இருவரும் பரிந்துரைத்தனர். இந்த புதிய பணியமர்த்தப்பட்டவர்கள், 'பக்கவாட்டு' (lateral entry) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் மத்திய செயலகத்தில் (central secretariat) சேருவார்கள். அதுவரை, செயலகத்தில் அனைத்திந்திய சேவைகள்/ஒன்றிய குடிமைப் பணிகளில் இருந்து பணிபுரியும் அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். பக்கவாட்டு நுழைவின் மூலம் பணியமர்த்தப்படுபவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இது மொத்தம் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
பக்கவாட்டுக்கு திறந்திருக்கும் நிலைகள் யாவை?
இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், வெளிப்புற நுழைவாளர்களுக்கான (lateral entry) முதல் காலியிடங்கள் 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் இணைச் செயலாளர் பதவிகள் மட்டுமே கிடைத்தன. பின்னர், இயக்குநர், துணைச் செயலாளர் மட்டத்தில் பணியிடங்கள் திறக்கப்பட்டன.
அமைச்சரவையின் நியமனக் குழுவால் (Committee of the Cabinet (ACC)) ஒரு இணைச் செயலாளர் நியமிக்கப்படுகிறார். செயலர் மற்றும் கூடுதல் செயலாளரைத் தொடர்ந்து ஒரு துறையின் மூன்றாவது மிக உயர்ந்த பதவி இதுவாகும். இணைச் செயலாளர் துறையின் ஒரு பிரிவின் நிர்வாகத் தலைவராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் இணைச் செயலாளர்களுக்குக் கீழே பதவி வகிக்கின்றனர். துணைச் செயலாளர்கள் இயக்குநர்களுக்குக் கீழே தரப்படுத்தப்பட்டுள்ளனர். பதவியில் வேறுபாடுகள் இருந்தாலும், பெரும்பாலான அமைச்சகங்களில் துணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பெரும்பாலும் ஒரே வேலையைச் செய்கிறார்கள்.
பக்கவாட்டு நுழைவுகளை (lateral entry) அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் உள்ள மத்திய அரசின் காரணம் என்ன?
2019-ம் ஆண்டில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (Department of Personnel and Training (DoPT)) மாநில அமைச்சர் ஜிதேந்திர சிங், பக்கவாட்டு ஆட்சேர்ப்பின் (lateral recruitment) நோக்கத்தை விளக்கினார். புதிய திறமைகளை கொண்டு வருவதும், மனிதவளம் கிடைப்பதை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும் என்று அவர் கூறினார். ஆகஸ்ட் 8, 2024 அன்று, மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த சிங், குறிப்பிட்ட பணிகளுக்கான சிறப்பு அறிவு மற்றும் நிபுணத்துவம் கொண்ட நபர்களை பக்கவாட்டு ஆட்சேர்ப்பு குறிவைக்கிறது என்று கூறினார்.
பக்கவாட்டு ஆட்சேர்ப்பு (Lateral recruitment) என்பது குறிப்பிட்ட திறன்கள் மற்றும் நிபுணத்துவம் கொண்டவர்களைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனிநபர்கள் தொழில் அதிகாரிகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த அறிவைப் பயன்படுத்த அரசாங்கம் விரும்புகிறது.
இதுவரை எத்தனை பேர் பக்கவாட்டு ஆட்சேர்ப்பு (Lateral recruitment) மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்?
முதல் சுற்று 2018 இல் தொடங்கியது. இது இணைச் செயலாளர் நிலை பதவிகளுக்கு 6,077 விண்ணப்பங்களைப் பெற்றது. பின்னர் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேர்வை நடத்தியது. 2019-ல், ஒன்பது நபர்கள் நியமனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அவர்கள் ஒன்பது வெவ்வேறு அமைச்சகங்கள் / துறைகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
மற்றொரு சுற்று பக்கவாட்டு ஆட்சேர்ப்பு 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 2023-ல் மேலும் இரண்டு சுற்றுகள் அறிவிக்கப்பட்டன. ஆகஸ்ட் 9, 2024 நிலவரப்படி, இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் கூற்றுப்படி, "கடந்த ஐந்து ஆண்டுகளில் 63 நியமனங்கள் பக்கவாட்டு (lateral entry) மூலம் செய்யப்பட்டுள்ளன. தற்போது, 57 அதிகாரிகள் அமைச்சகங்கள் / துறைகளில் பதவிகளை வகிக்கின்றனர்.
பக்கவாட்டு ஆட்சேர்ப்பு (lateral entry recruitment) பற்றிய விமர்சனம் என்ன?
பக்கவாட்டு ஆட்சேர்ப்பில் SC, ST மற்றும் OBC போட்டியாளர்களுக்கு இட ஒதுக்கீடுகள் இல்லை என்ற அடிப்படையில் விமர்சிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பக்கவாட்டு ஆட்சேர்ப்புகள் "நன்கு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதியாகும்" என்று பதிவிட்டுள்ளார். இதுபோன்ற ஆட்சேர்ப்புகள் மூலம் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களை இடஒதுக்கீட்டிலிருந்து பாஜக வேண்டுமென்றே விலக்குகிறது என்று அவர் மேலும் கூறினார்.
இராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்த நடவடிக்கையை ஒரு "கெட்ட நகைச்சுவை" என்று அழைத்தார். அறிமுகப்படுத்தப்பட்ட 45 பதவிகள் சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் நிரப்பப்பட்டால், கிட்டத்தட்ட பாதி எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போட்டியாளர்களுக்கு ஒதுக்கப்படும் என்று சுட்டிக்காட்டினார்.
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, இந்தக் கொள்கை கீழ்மட்ட ஊழியர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்புகளை மறுக்கிறது என்று வாதிட்டார். ஒதுக்கீடுகள் இல்லாதது "அரசியலமைப்பின் நேரடி மீறல்" (direct violation of the Constitution) என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) தலைவரும், நாகினா நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரசேகர் ஆசாத், எஸ்சி சமூகத்திற்கான மேல்நிலையினர் ஒதுக்கீடுகள் (creamy layer quotas) குறித்த சமீபத்திய விவாதங்களை, அதன் உறுப்பினர்களில் சிலரை இடஒதுக்கீடுகளுக்குத் தகுதியுடையவர்களாக இருந்து விலக்கி வைத்தனர். ஓபிசி/எஸ்சி/எஸ்டியில் மேல்நிலையினரை (creamy layer) தேடும் மாண்புமிகு நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் ஒரு கேள்வி : இந்தப் பதவிகளில் இருக்கும் போது இந்த வகுப்பினரின் மேல்நிலையினர் (creamy layer) என்று அழைக்கப்படுபவர்கள் எங்கே போவார்கள்?
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜகவின் சதிக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை தொடங்க வேண்டிய நேரம் இது. பிஜேபி தனது சித்தாந்த கூட்டாளிகளை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பின்வாசல் வழியாக உயர் அரசு பதவிகளில் அமர்த்த முயற்சிக்கிறது. இந்த முறை இன்றைய அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் இப்போதும் எதிர்காலத்திலும் உயர் பதவிகளை அடைவதை தடுக்கும். பிடிஏ சமூகங்கள் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது ஓபிசி, தலித் மற்றும் சிறுபான்மையினர்) என குறிப்பிடும் இடங்களுக்கான இடஒதுக்கீட்டை அகற்றுவதற்கான "திட்டம்" என்று அவர் அழைத்தார்.
பக்கவாட்டு ஆட்சேர்ப்பில் (lateral recruitment) ஏன் ஒதுகீடுகள் இல்லை?
மே 15, 2018 அன்று, 45 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் தற்காலிக மத்திய அரசு நியமனங்களில், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (Department of Personnel and Training (DoPT)) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்த சுற்றறிக்கையானது, உள்துறை அமைச்சகத்திலிருந்து செப்டம்பர் 24, 1968 இல் உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட, ஓபிசிகள் சேர்க்கப்பட்டது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. உண்மையில், அதிகாரத்துவத்தில் எந்தவொரு நியமனத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
நவம்பர் 29, 2018 அன்று, வெளிப்புற ஆட்சேர்ப்பின் முதல் சுற்று நடந்து கொண்டிருந்தபோது, DoPT கூடுதல் செயலாளர் சுஜாதா சதுர்வேதி UPSC செயலாளர் ராகேஷ் குப்தாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். மாநில அரசு, பொதுத் துறை, தன்னாட்சி அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பணியாளர்கள் பிரதிநிதித்துவத்திற்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். இந்த பிரதிநிதி குறுகிய கால ஒப்பந்தங்களை உள்ளடக்கியிருக்கலாம், பணியாளர் அவர்களின் தகுந்த துறையில் தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம். மாற்றுப்பணியில் நியமனம் செய்யப்படுவதற்கு கட்டாய இடஒதுக்கீடு தேவை என்ற அறிவுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தற்போதைய ஏற்பாடு, SC/ST/OBC க்கு கட்டாய இடஒதுக்கீடு அவசியமில்லாத பட்சத்தில், பிரதிநிதித்துவத்தின் நெருக்கமான தோராயமாகக் கருதப்படலாம். இருப்பினும், முறையாகத் தகுதியுள்ள SC/ST/OBC பணியாளர்கள் தகுதியுடையவர்களாக இருந்தால், அவர்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் மற்றும் முழுமையான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக இதேபோன்ற சூழ்நிலைகளில் அத்தகைய பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.
இட ஒதுக்கீட்டின் எல்லைக்கு வெளியே வெளிப்புற பதிவுகள் எப்படி வைக்கப்பட்டுள்ளன?
அரசு வேலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு "13-புள்ளி பட்டியல்" (13-point roster) மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தக் கொள்கை ஒரு பணியாளரின் இடத்தை அவர்களின் குழுவின் (SC, ST, OBC மற்றும் இப்போது EWS) ஒதுக்கீட்டு சதவீதத்தை நூறால் வகுப்பதன் மூலம் ஒதுக்கீடு காலிப்பணியிடங்களின் பட்டியலில் தீர்மானிக்கிறது.
உதாரணமாக, ஓபிசி இடஒதுக்கீடு 27% ஆகும். அதாவது ஒரு துறை அல்லது கேடரில் எழும் ஒவ்வொரு 4வது காலியிடத்திற்கும் (100/27=3.7) OBC வேட்பாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். 15% இடஒதுக்கீடு உள்ள SC வேட்பாளர்கள், ஒவ்வொரு 7வது காலியிடங்களையும் (100/15=6.66) நிரப்ப வேண்டும். எஸ்டி வேட்பாளர்கள், 7.5% இடஒதுக்கீட்டுடன், ஒவ்வொரு 14வது காலியிடங்களையும் (100/7.5=13.33) நிரப்ப வேண்டும். EWS வேட்பாளர்கள், 10% இடஒதுக்கீட்டுடன், ஒவ்வொரு 10வது காலியிடத்தையும் (100/10=10) நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், மூன்று காலியிடங்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு கிடைத்த கோப்புகளின் அடிப்படையில், "ஒரு பதவி கேடரில், இடஒதுக்கீடு பொருந்தாது. இந்த திட்டத்தின் கீழ் நிரப்பப்பட வேண்டிய ஒவ்வொரு பணியிடமும் [பக்கவாட்டு] ஒரே பதவி என்பதால், இடஒதுக்கீடு பொருந்தாது.
தற்போதைய ஆட்சேர்ப்பு சுற்றில் 45 வேலை வாய்ப்புகளை UPSC அறிவித்துள்ளது. இந்தத் காலிப்பணியிடங்களை ஒரு குழுவாகக் கருதினால், 13-புள்ளி பட்டியலில் SC வேட்பாளர்களுக்கு ஆறு இடங்களும், ST வேட்பாளர்களுக்கு மூன்று இடங்களும், OBC வேட்பாளர்களுக்கு 12 இடங்களும், EWS பிரிவினருக்கு நான்கு இடங்களும் ஒதுக்கப்படும். இருப்பினும், ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக காலியிடங்கள் விளம்பரப்படுத்தப்படுவதால், அவை தனிப்பட்ட பணியிடங்களாக கருதப்படுகின்றன. இதன் விளைவாக, இட ஒதுக்கீடு கொள்கை பயன்படுத்தப்படவில்லை.