குரங்கம்மை (Mpox) உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது: இது மற்றொரு தொற்றுநோயைத் தூண்டுமா? -மரியா செங்

 காங்கோ மற்றும் ஆப்பிரிக்காவின் பிற பகுதிகளில் பரவி வரும் குரங்கம்மை

(mpox) வெடிப்புகளை உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) உலகளாவிய அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வைரஸ் பரவுவதைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுக்கிறது.


ஸ்வீடனில், முன்பு ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்பட்ட ஒரு புதிய வடிவ  குரங்கம்மை நோயின் முதல் தொற்று ஆப்பிரிக்கா  பயணியில் கண்டறியப்பட்டது. பிற ஐரோப்பிய சுகாதார அதிகாரிகள் அதிக  வெளிநாட்டு பயணிகளால்  நோய்ப் பரவல் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். 


குரங்கம்மை  மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்தப் போகிறதா?


இது மிகவும் சாத்தியமற்றது. பன்றிக் காய்ச்சல் மற்றும் கோவிட்-19 போன்ற தொற்றுநோய்கள், பொதுவாக அறிகுறிகளைக் காட்டாத மக்களிடையே கூட விரைவாக பரவும் காற்றில் பரவும் வைரஸ்களால் ஏற்படுகின்றன.  

   

குரங்கம்மை என்றும் அழைக்கப்படும் எம்போக்ஸ்(mpox), முக்கியமாக பாதிக்கப்பட்ட நபர்களுடன் அல்லது அவர்களின் அசுத்தமான ஆடை அல்லது படுக்கை விரிப்புகளுடன் நெருங்கிய தோலுக்கு-தோல்(skin-to-skin) தொடர்பு மூலம் பரவுகிறது. இது பெரும்பாலும் தெரியும் தோல் புண்களை ஏற்படுத்துகிறது.  நோய்த்தொற்று பாதித்தவர்கள் மற்றவர்களுடன் நெருங்கி பழகுவதால் எளிதாக பரவும் அபாயம் உள்ளது. 


பொதுமக்ள் பாதுகாப்பாக இருக்க, எம்போக்ஸ் போன்ற புண்கள் உள்ள எவருடனும் நெருங்கிய உடல் தொடர்பு, மற்றும் அவர்களின் பாத்திரங்கள், ஆடை அல்லது படுக்கை விரிப்புகளைப் பகிராமல் இருத்தல் போன்றவை நோய் பாதிப்புகளை குறைக்கும். வழக்கமான கை கழுவுதல் போன்ற நல்ல சுகாதாரத்தை கடைப்பிடிக்கவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


ஐரோப்பாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Europe’s Centre for Disease Prevention and Control), ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அதிக வெளிநாட்டு பயணிகளால் நோய்த்தொற்று "மிகவும் சாத்தியம்" என்று கூறியது.  ஆனால் ஐரோப்பாவில் உள்ளூர் பாதிப்புகள் மிகவும் சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது.


தற்போது குரங்கம்மை இல்லாத நாடுகளில் பொது மக்களுக்கு ஆபத்து குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.


கோவிட்-19 இலிருந்து எம்போக்ஸ் எவ்வளவு வித்தியாசமானது?


கொரோனா வைரஸை விட எம்பாக்ஸ் மிக மெதுவாக பரவுகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்ட சிறிது நேரத்திலேயே, 2020-ஆம் ஆண்டில் ஜனவரியில் ஒரு வாரத்திற்குள் நோய்த்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை பல நூறுகளில் இருந்து பல ஆயிரங்களாக உயர்ந்தது. மார்ச் 2020-க்குள், கோவிட்-19யை ஒரு தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தபோது, வைரஸ் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பின்னர், அங்கு 1,26,000க்கும் அதிகமான தொற்றுநோய்களும் 4,600 இறப்புகளும் இருந்தன.


இதற்கு நேர்மாறாக, 2020-ஆம் ஆண்டு முதல், உலகளவில் கிட்டத்தட்ட 1,00,000 நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 200 இறப்புகள் ஏற்பட்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


கோவிட்-19 தொற்றுநோயின் ஆரம்ப நாட்களைப் போலல்லாமல், குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன. 


டியூக் பல்கலைக்கழகத்தின் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட்டின் (Duke University’s Global Health Institute) இயக்குனர் டாக்டர் கிறிஸ் பெய்ரர், "எம்பாக்ஸை நிறுத்த எங்களுக்குத் தேவையானதை நாங்கள் கொண்டுள்ளோம்" என்று கூறினார். இந்த நிலைமை கோவிட் -19 போன்றது அல்ல என்று அவர் வலியுறுத்தினார். அங்கு ஆரம்பத்தில் தடுப்பூசி அல்லது வைரஸ் தடுப்பு சிகிச்சை முறை நடைமுறையில் இல்லை.


இந்த எம்பாக்ஸ்  எவ்வளவு விரைவாக நிறுத்தப்படும்?


இது நிச்சயமற்றது. 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2022-ஆம் ஆண்டில் குரங்கம்மை பாதிப்பு சில மாதங்களுக்குள் குறைக்கப்பட்டது. பணக்கார நாடுகளில் தடுப்பூசி திட்டங்கள் மற்றும் ஆபத்தில் உள்ள மக்களுக்கு மருந்துகள் எளிதில் கிடைத்ததால் இவை கட்டுப்படுத்தப்பட்டன.


தற்போது, பெரும்பாலான குரங்கம்மை பாதிப்புகள் ஆப்பிரிக்காவில் உள்ளன. இந்த தொற்று பாதிப்புகள் மற்றும் இறப்புகளில் 96% காங்கோவில் நிகழ்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, காலரா மற்றும் அம்மை ஆகியவற்றால் பலவீனமடைந்த சுகாதார அமைப்பைக் கொண்ட உலகின் ஏழ்மையான நாடுகளில் காங்கோவும் ஒன்றாகும். காங்கோ அதிகாரிகள் நன்கொடையாளர்களிடமிருந்து 4 மில்லியன் தடுப்பூசிகளைக் கோரியபோதிலும், இதுவரை எதுவும் கிடைக்கவில்லை.


2022-ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு குரங்கம்மை நோயினை உலகளாவிய அவசரநிலையை அறிவித்த பிறகும், ஆப்பிரிக்காவுக்கு மிகக் குறைவான தடுப்பூசிகள் மற்றும் உதவிகள் கிடைத்தன.


டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பெய்ரர், ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தடுக்க உதவி செய்வது உலகின் நலனுக்கு உகந்தது மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும்  நல்ல நிலையில்  மற்ற நாடுகள் உள்ளன. எனவே, ஆபிரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கும் முடிவை மற்ற நாடுகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.



Original article:

Share: