அதிக அளவிலான வருமான சமத்துவமின்மை மிகவும் பரவலான ஊழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் நீதித்துறை மீதான அதிக நம்பிக்கை அதைக் கட்டுப்படுத்துகிறது.
பிரெஞ்சு நாவலாசிரியரான ஹோனரே டி பால்சாக் என்பவர், "ஒவ்வொரு பெரிய அதிர்ஷ்டத்திற்கும் பின்னால் ஒரு குற்றம் உள்ளது" என்றார். எவ்வாறாயினும், இந்த அறிக்கை ஓரளவு மட்டுமே உண்மை. செல்வத்தைக் குவிப்பது பெரும்பாலும் கடுமையான குற்றங்களுக்கு வழிவகுக்கிறது என்ற உண்மையை இது புறக்கணிக்கிறது. இந்தியாவுக்கான கேலப் வேர்ல்ட் கருத்துக் கணிப்பு (Gallup World Poll (GWP)) கணக்கெடுப்பு 2019-23 மற்றும் இந்திய பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையத்தின் (Centre for Monitoring Indian Economy (CMIE)) நுகர்வோர் பிரமிடு வீட்டு கணக்கெடுப்பு (Consumer Pyramid Household Survey) ஆகியவற்றின் பகுப்பாய்வின் அடிப்படையில், வருமான சமத்துவமின்மை (income inequality) ஊழலை வளர்க்கிறது என்றார்.
இந்த ஊழல் குறிப்பாக அரசாங்கத்திற்கும் வணிகத்திற்கும் இடையிலான முறைகளில் காணப்படுகிறது. உதாரணமாக, பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க தனியார் முதலீட்டாளர்களால் கட்டப்பட வேண்டிய பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான (நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்றவை) ஒப்பந்தங்களை பொது அதிகாரிகள் பெரும்பாலும் அங்கீகரிக்கின்றனர். மக்கள் பணக்காரர்களாக மாறும்போது, அதிக செல்வத்திற்கான அவர்களின் ஆசை அவர்களின் தார்மீக கடமையை மீறுகிறது. பங்குச் சந்தை சூழ்ச்சி, ஒப்பந்தங்களைப் பெறுவதற்கான அரசியல் பரப்புரை மற்றும் வெளிநாட்டு நிதிகளில் முதலீடு போன்ற வழிகளில் செல்வக் குவிப்பு எளிதாகிறது.
சமீபத்திய ஆய்வில், தாமஸ் பிக்கெட்டியும் மற்றவர்களும் கடந்த பத்தாண்டுகளில், குறிப்பாக 2014-ஆம் ஆண்டு மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியாவில் செல்வம் மற்றும் வருமான சமத்துவமின்மை கணிசமாக அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டினர். 1980-ஆம் ஆண்டில் 12.5% ஆக இருந்த உயர்மட்ட 1% இப்போது இந்தியாவின் மொத்த செல்வத்தில் 40% க்கும் அதிகமானவற்றைக் கட்டுப்படுத்துகிறது. வருவாய் ஈட்டுபவர்களில் உயர்மட்ட 1% பேர் இப்போது மொத்த வரிக்கு முந்தைய வருமானத்தில் 22.6% சம்பாதிக்கின்றனர். இந்நிலை 1980-ஆம் ஆண்டில் 7.3% ஆக இருந்தது. உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. இருப்பினும் சமீபத்திய ஆய்வுகள் இந்த அதிகரித்து வரும் சமத்துவமின்மையின் எதிர்மறையான விளைவுகளை அரிதாகவே பகுப்பாய்வு செய்கின்றன.
செய்முறை
வருமான சமத்துவமின்மைக்கும் ஊழலுக்கும் இடையிலான உறவை ஆராய்வதே இதன் நோக்கம். குறிப்பாக, 2014-22-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அதிக வருமான சமத்துவமின்மை அரசாங்கத்திற்கும் வணிகத்திற்கும் இடையில் ஊழலைத் தூண்டியதா என்பதை ஆராய்வோம். 2018-ஆம் ஆண்டு மற்றும் 2022-ஆம் ஆண்டுகளுக்கான இரண்டு சமீபத்திய தேசிய மாதிரி கணக்கெடுப்புகளை (National Sample Survey (NSS)), 2012-ஆம் ஆண்டிற்கானதேசிய மாதிரி கணக்கெடுப்புடன் நேரடியாக ஒப்பிட முடியாது. எனவே கேலப் வேர்ல்ட் கருத்துக் கணிப்பு (Gallup World Poll (GWP)) மற்றும் இந்திய பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையத்தின் (Centre for Monitoring Indian Economy (CMIE)) தரவை நம்பியுள்ளோம். கேலப் வேர்ல்ட் கருத்துக் கணிப்பு மாதிரி (GWP) சிறியது மற்றும் இந்தியா போன்ற ஒரு பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், இது அளவிட கடினமாக இருக்கும் ஊழல் போன்ற மாதிரிகள் பற்றிய தரவைச் சேர்ப்பது போன்ற நிலைகளைக் கொண்டுள்ளது.
வருமான சமத்துவமின்மை (income inequality) குறித்த பிக்கெட்டி அளவீட்டை (Piketty measure) பயன்படுத்தினோம். இது மொத்த வருமானத்தில் மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள 50% பேரின் பங்கிற்கும் உயர்மட்ட 1% பேரின் பங்கிற்கும் இடையிலான விகிதமாக வரையறுக்கப்படுகிறது. நுகர்வுச் செலவுப் பகிர்வில் உள்ள சமத்துவமின்மை வருமானப் பகிர்வை விட குறைவாக இருந்தாலும், அது மிகவும் நம்பகமானதாக இருக்கிறது. ஊழல் என்பது பொதுவாக பொது அலுவலகத்தை தனிப்பட்ட ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக வரையறுக்கப்படுகிறது, வணிகங்களுக்குள் ஊழல் தவிர்த்து (எ.கா., உள் வர்த்தகம்). அரசியல்வாதிகளை புறக்கணிக்காமல், பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள நிர்வாகிகள் பொது வளங்களை தனியார் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை ஒரு பரந்த தன்மையை உள்ளடக்குகிறது. ஊழல் பரவலாக இருக்கிறதா என்று கேலப் வேர்ல்ட் கருத்துக் கணிப்பு (Gallup World Poll (GWP)) கேள்வி எழுப்புகிறது. அதற்கான பதில் ஆம் எனில், அதற்கு 1 என மதிப்பெண் வழங்கப்படுகிறது. இவற்றைக் கூட்டுவதன் மூலம், தனிமனித கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஊழலின் அளவைப் பெறுகிறோம். ஊழல் அரசாங்கம், வணிகங்கள் மற்றும் இரண்டிற்கும் இடையிலான சந்திப்பில் வெளிப்படுகிறது. இந்த சந்திப்பில் சமத்துவமின்மைக்கும் ஊழலுக்கும் இடையிலான உறவில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, துறைமுகங்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தங்களை அரசாங்கம் வழங்குவது பணக்கார முதலீட்டாளர்களிடமிருந்து லஞ்சத்தால் பாதிக்கப்படுகிறதா? என கேள்வி எழுகிறது.
உலகமயமாக்கலைத் தொடர்ந்து ஊழல் அதிகரித்துள்ளது. ஏனெனில், இயற்கை வளங்கள் மிகவும் மதிப்புமிக்கவையாகிவிட்டன. மேலும், அவற்றின் ஒதுக்கீட்டைக் கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறை அமைப்புகள் சக்திவாய்ந்த வணிக நலன்களுக்கும் ஊழல் நிறைந்த பொது அதிகாரிகளுக்கும் மிகவும் அடிபணிந்துள்ளன. மேலும், உற்பத்தி, அந்நிய நேரடி முதலீடு, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற மேக்ரோ பொருளாதார குறிகாட்டிகளை ஊக்குவிப்பதில் 'மேக் இன் இந்தியா' (‘Make in India) திட்டம் வெற்றி பெறவில்லை. கார்னகி இந்தியா கட்டுரை 2023இல் (Carnegie India essay) குறிப்பிட்டுள்ளபடி, இறக்குமதி கட்டணங்களின் அதிகரிப்பு மற்றும் வரி குறைப்புகள் சிதைந்துள்ளன.
இந்த நிலைமை செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க முதலீட்டாளர்களால் அதிக நிதி கோருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. நிதி கோருதல் என்பது பதிலுக்கு எதையும் வழங்காமல் அரசு / பொது நிறுவனங்களிடமிருந்து சம்பாதிக்கப்படாத பண ஆதாயங்களைப் பிடிக்க வளங்களைப் பயன்படுத்துவதாகும். பொருளாதார நிதி வளங்களின் சிதறலை ஏற்படுத்துகிறது. இந்த நிதிகளுக்காக போட்டியிடும் குழுக்கள் செல்வத்தை உருவாக்குவதை விட செல்வ பரிமாற்றத்தில் நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்கின்றன. 2014-ஆம் ஆண்டு மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில் அரசு மற்றும் வணிகத்தின் சந்திப்பில் ஊழல் அதிகமாக இருந்ததால், நிதி கோருவதும் உயர் மட்டங்களில் நீடித்திருக்கலாம். அதானி குழுமம் மற்றும் செபி தலைவர் விசாரணையின் தாமதம் குறித்த ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை ஆராயவில்லை என்றால், இது ஒரு பெரிய மற்றும் வளர்ந்து வரும் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.
வருமான சமத்துவமின்மை பெரும்பாலும் ஊக முதலீடுகளால் (பரஸ்பர நிதிகள் போன்றவை) இயக்கப்படுவது கண்டுப்பிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் நிலையான வைப்புத்தொகை மற்றும் தபால் அலுவலகங்களில் சேமிப்பு அதைக் கட்டுப்படுத்த உதவியது. நீதித்துறையின் மீதான நம்பிக்கை தண்டனை விகிதத்தால் செல்வாக்கு செலுத்தப்பட்டது. இதனால், நம்பிக்கை அதிகரித்தது. ஆனால், குறைந்து வரும் விகிதத்தில் இருந்தது. அதிக வருமான சமத்துவமின்மை பரவலான ஊழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் நீதித்துறை மீதான அதிக நம்பிக்கை அதைக் குறைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
பணக்காரர்களுக்கு அதிக விகிதத்தில் வரி விதிக்கும் வாய்ப்பை நிதிநிலை அறிக்கைத் தவறவிட்டாலும், ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிக வெளிப்படைத்தன்மை வெறும் மாயையாகவே உள்ளது. மிகவும் போட்டி நிறைந்த அரசியல் அமைப்பு மற்றும் தனியார் வணிகங்களை அடைவது சவாலானது. மேலும், இந்தியாவை வளமானதாக மாற்றுவதற்கான தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை மறுக்க முடியாது.
நிதி கைக்கர், டெல்லி பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும், வாணி எஸ் குல்கர்னி, ஆர்கன்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இணை பேராசிரியராகவும், ஜோன்ஸ்போரோ, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி இணைப்பாளராகவும் உள்ளனர்.