பெண்களின் நிறைவேறாத தேவைகளை நாம் பூர்த்திசெய்ய வேண்டும் மற்றும் அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்ற இலக்கை அடைய நாம் வேலை செய்ய வேண்டும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியப் பெண் ஆர்வலர்கள் பெண்களின் உரிமைகள் மற்றும் அதிகாரத்திற்காக போராடத் தொடங்கினர். பெண்களுக்கு ஆண் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஒப்புதல் தேவை என்பதையும், நிதி ரீதியாக ஆண்களைச் சார்ந்திருப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர். இதைச் சமாளிக்க, பெண்களின் அமைப்புரீதியான ஒடுக்குமுறைக்கு தீர்வு காண முன்னோக்கிச் சிந்திக்கும் யோசனைகளை முன்மொழிந்தனர். அவற்றில் பல இன்றும் முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை.
முறைசாரா துறையில் பெண் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளை அங்கீகரிப்பது ஆகியவை முக்கிய இலக்காக இருந்தது. ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்குப் பிறகும், முன்னேற்றம் மெதுவாக உள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் 2024 (World Economic Forum’s, 2024) உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீட்டின்படி, பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்பில் (economic participation and opportunity) இந்தியா 146 நாடுகளில் 142-வது இடத்தில் உள்ளது. பொருளாதார சுதந்திரம் இல்லாமல், பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியாது. ஆண்கள் அதிகமாக உள்ள சமூகத்தில், ஆண்களுக்கு உணவளிப்பவர்கள் வகுத்துள்ள விதிகளையே பெண்கள் பெரும்பாலும் கடைப்பிடிக்க வேண்டும். 78-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும்போது, தீர்வுகளுக்கு வரலாற்றையும் பார்ப்போம்.
1917-ல் நிறுவப்பட்டது, இந்திய பெண்கள் சங்கம் (Women’s Indian Association) இந்தியாவில் முதல் தேசிய பெண்கள் அமைப்பாகும். பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு காண்பதே இதன் நோக்கமாக இருந்தது. சங்கம் ஸ்த்ரி தர்மா (Stri Dharma) என்ற ஒரு இதழை வெளியிட்டது, இது தொழிற்சாலை தொழிலாளர்கள் உட்பட பெண்களின் போராட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. 1927-ல், தொழிற்சாலைகளில் சுமார் 253,000 பெண்கள் பணிபுரிந்தனர்.அவர்களின் செயல்பாடானது பெண்களுக்கு இரவு வேலை நேரத்தை தடை செய்ய வழிவகுத்தது. 1929-ஆம் ஆண்டின் பம்பாய் மகப்பேறு சட்டம் பெண்களுக்கு எட்டு வார ஊதியத்தை வழங்கியது. பிரசவத்திற்கு நான்கு வாரங்களுக்கு முன்பும் நான்கு வாரங்களுக்குப் பிறகும் ஊதியம் வழங்கப்பட்டது.
பெண் ஆர்வலர்கள் மகப்பேறு காலத்தின் பிற்பகுதியில் விடுமுறை, பிரசவத்திற்குப் பிறகு ஆறு வாரங்கள் விடுப்பு மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு மருத்துவ மேற்பார்வை ஆகியவற்றிக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், பொதுமக்களின் ஆதரவு இல்லாமை, தொழிலாளர்களின் நடமாடும் தன்மை மற்றும் பல்வேறு தொழில்களை மேற்பார்வை செய்வதில் உள்ள சிரமங்கள் காரணமாக இந்தக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. முறைசாரா துறையில் (informal sector) பெண் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வாதிடும்போது இதே காரணங்கள் இன்றும் குறிப்பிடப்படுகின்றன.
1945-ஆம் ஆண்டு அகில இந்திய பெண்கள் மாநாட்டில் (All-India Women’s Conference (AIWC)) ஹன்சா மேத்தா தனது உரையில், பொருளாதார உலகில் பெண்கள் தங்கள் இடத்தைப் பாதுகாக்க கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறினார். உறுப்பினர்கள் பல்வேறு அரசியலமைப்புகளை ஆய்வு செய்து பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான உரிமைகளின் பட்டியலை உருவாக்க முடிவு செய்தனர்.
ஹன்சா மேத்தா (Hansa Mehta ) ஊதியம் இல்லாத வீட்டு வேலைகள் மற்றும் ஓய்வுக்கான உரிமை பற்றி விவாதித்தார். அவை இன்றும் முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன. 1946-ல், அகில இந்திய பெண்கள் மாநாட்டில் இந்தியப் பெண்களின் உரிமைகள் மற்றும் கடமைகளுக்கான சாசனத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த சாசனம், வீட்டுவசதிக்கான குறைந்தபட்ச தரங்களை நிர்ணயித்தல், ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி சமையலறைகள் மற்றும் குளியலறைகளை வழங்குதல் உள்ளிட்ட பல முக்கிய பரிந்துரைகளை அளித்தது. பெண்களின் வேலைவாய்ப்பில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்றும், பரந்த சமூகக் காப்பீட்டுத் திட்டத்தில் மகப்பேறு பலன்களை உள்ளடக்கியதாகவும் பரிந்துரைக்கப்பட்டது.
பெண்களுக்கு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மனைவியின் அனுமதியின்றி கணவன் தனது சொத்துக்கள் அனைத்தையும் பயன்படுத்த முடியாது என்று பரிந்துரைக்கப்பட்டது. கூடுதலாக, ஒரு இல்லத்தரசி தனது கணவரின் வருமானத்தில் ஒரு பகுதியை அவள் விரும்பியபடி பயன்படுத்திக்கொள்ளலாம். 1947-ஆம் ஆண்டில், சுபாஷ் சந்திர போஸால் 1939 இல் உருவாக்கப்பட்ட தேசிய திட்டக் குழுவின் (National Planning Committee) பெண்கள் மீதான துணைக் குழு, தனது அறிக்கையில் இந்தக் கருத்துக்களை ஆதரித்தது. சமமான வேலை வாய்ப்புகள், அனைவருக்கும் பொதுவான சிவில் குறியீடு மற்றும் பாலின-நடுநிலை மரபுரிமைச் சட்டங்கள் ஆகியவற்றைப் பரிந்துரைத்தது. அப்போதிருந்து, பெண்களுக்கு அதிக கட்டுப்பாட்டைக் கொடுக்கும் வகையில் வாரிசுரிமைச் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும், சமூக மனப்பான்மை இந்த சட்டங்களை குறைவான செயல்திறன் கொண்டதாக மாற்றும். சம பலன்களைப் பெறும் பெண்கள் அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொள்கின்றனர் மற்றும் ஊதியம் இல்லாத வீட்டு வேலை பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.
ஊதியமில்லாத வீட்டு வேலைகளை (unpaid domestic work) அங்கீகரிப்பது பெண்களின் மன உறுதியைப் போற்றுவதைத் தாண்டி செல்ல வேண்டும். இல்லத்தரசிகள் பொருளாதார உதவியைப் பெற வேண்டும். கர்நாடகாவில் க்ருஹ லக்ஷ்மி, மத்தியப் பிரதேசத்தில் லட்லி பெஹ்னா யோஜனா, தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தோகை மற்றும் மேற்கு வங்காளத்தில் லட்சுமி பந்தர் போன்ற பல மாநில அரசுகள் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகைகளை ஏற்கனவே வழங்குகின்றன. இந்தத் திட்டங்கள் நாடு தழுவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பணவீக்கத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
ஏறக்குறைய நூற்றாண்டுக்கு முந்தைய கொள்கை கருத்துக்கள் இன்றும் பொருத்தமானவை. அனைவருக்கும் வாய்ப்பு என்ற கருத்தை நோக்கிய முன்னேற்றத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கிய பிரச்சினை மாற்றத்தை எதிர்க்கும் காலாவதியான மனநிலை. நமது வரலாற்றிலிருந்து முன்னோடியான பெண் தலைவர்களின் இலக்குகளை நிவர்த்தி செய்ய வேண்டிய நேரம் இது. சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் இன்னும் ஒரு நூற்றாண்டு காத்திருக்கக்கூடாது.
அரிபாம் மற்றும் சத்யவாலி ஆகியோர் The Fifteen: The Lives and Times of the Women in India’s Constituent Assembly என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள்.