இமாச்சல் பிரதேசம், ஜம்மு மற்றும் வடகிழக்கு போன்ற மலை மாநிலங்களில் இருந்து செல்வாக்கு மிக்க பழங்குடியினர் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் இடஒதுக்கீட்டின் (ST reservation) பெரும்பாலான நன்மைகளைப் பெற்றுள்ளனர். இது ஏழை பழங்குடியினருக்கு இழப்பாகும்.
கடந்த வெள்ளி கிழமையன்று, ஒன்றிய அமைச்சரவையில் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (Scheduled Caste (SC)) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribe (ST)) பிரிவினருக்கு மேல்நிலையினர் (creamy layer) என்ற இட ஒதுக்கீடு கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது, எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டிலிருந்து மேல்நிலையினரை (creamy layer) விலக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்த முடிவு வந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் எஸ்சி/எஸ்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சில மணிநேரங்களுக்குப் பிறகு அமைச்சரவை சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதில், மேல்நிலையினரை (creamy layer) விலக்க உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 1-ம் தேதி அன்று, உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு 6-1 பெரும்பான்மையுடன் ஒரு முக்கிய முடிவை எடுத்தது. பட்டியலிடப்பட்ட வகுப்பினர் சமூக ரீதியாக ஒரே மாதிரியான வகுப்பை உருவாக்கவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, மாநிலங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க பட்டியலிடப்பட்ட வகுப்பினர்களை, துணை வகைப்படுத்துவதற்கு (sub-classify) உட்படுத்தலாம். இதில், நான்கு நீதிபதிகள் எஸ்.சி., எஸ்.டி., இட ஒதுக்கீட்டில் இருந்து மேல்நிலையினரை (creamy layer) நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
1950-ல் அரசியலமைப்பு SC மற்றும் ST வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியபோது மேல்நிலையினர் (creamy layer) என்ற கருத்து இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Other Backward Classes (OBCs)) இடஒதுக்கீட்டை உறுதி செய்த இந்திரா சாவ்னி வழக்கு 1992-ல் ஒரு முக்கிய உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மேல்நிலையினர் (creamy layer) என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இடஒதுக்கீடு அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று குறிப்பிடப்பட்டது.
மேல்நிலையினர் (creamy layer) வகுப்பானது, எஸ்சி இடஒதுக்கீட்டிற்கு பொருந்தாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஏனென்றால், எஸ்சி இடஒதுக்கீடு என்பது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இடஒதுக்கீடு போன்ற சமூக மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையில் மட்டும் இல்லாமல், தீண்டாமையின் மூலம் சமூக ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இடஒதுக்கீடு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு இந்த இரண்டையும் தவிர, தேர்தல்களுக்கும் பொருந்தும்.
ஆகஸ்ட் 1 அன்று, ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் - ஜி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மிட்டல் மற்றும் சதீஷ் சந்திர சர்மா SC/ST வகுப்பினருக்கு ஒரு மேல்நிலையினர் (creamy layer) வகுப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
தற்போதைய இடஒதுக்கீடு முறையானது, இடஒதுக்கீட்டின் நோக்கத்தின் விதிமுறைகளை தோற்கடித்து, இந்த சமூகங்களில் அதிகாரம் பெற்றவர்கள் பயனடைவதால், இடஒதுக்கீடுகளின் பலன் SC/ST வகுப்பினர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பின்தங்கிய பிரிவினரை சென்றடைய வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக, SC/ST வகுப்பினர்களுக்கு ஒரு மேல்நிலையினர் (creamy layer) எனும் வகைப்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கான வாதம் வலுப்பெற்றுள்ளது. ஆனால், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (Dalits) மற்றும் பழங்குடியினரிடையே (tribals) அதிகாரம் பெற்றவர்கள் இடஒதுக்கீட்டின் பெரும்பாலான நன்மைகளைப் பெற்றுள்ளனர் என்பதற்கு போதுமான தரவு கிடைக்கவில்லை.
2023-ம் ஆண்டில் SC/ST வகுப்பினர்களின் நலனுக்கான நிலைக்குழுவுக்கு (Standing Committee) ஒன்றிய அரசு வழங்கிய தரவுகள், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (Dalits) மற்றும் பழங்குடியினர் (tribals) குறைந்த அளவிலான சேவை, அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டின்படி - SC வகுப்பினருக்கு 15% மற்றும் ST வகுப்பினருக்கு 7.5% குழு C மற்றும் D (Group A and B) மட்டத்தில் மட்டுமே போதுமான வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தபோதிலும், இந்த சமூகங்கள் நிர்வாக மற்றும் நீதித்துறையின் உயர் மட்டங்களில் ஊடுருவ முடியவில்லை என்பதை இந்த தரவு காட்டுகிறது. பதவிகளில் இட ஒதுக்கீடு இந்த பதவிகளுக்கு பொருந்தாது. மத்திய அரசுப் பணிகளில் SC/ST சமூகத்தினர் போதுமான பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதாகத் தோன்றினாலும், அவர்கள் இன்னும் உயர்மட்டத்தில் ஊடுருவ முடியவில்லை.
22.5% இடஒதுக்கீடு இருந்தும் மத்திய அரசின் துறைத் தலைவர்களில் 10%க்கும் குறைவானவர்கள் SC/ST சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உயர் நீதித்துறையில், அவர்களின் பிரதிநிதித்துவம் 5% க்கும் குறைவாக உள்ளது. உயர்மட்ட அரசுப் பணிகளுக்கு SC மற்றும் ST பணியாளர்களின் விகிதம் குறைவதாக வேலைவாய்ப்புத் தரவு காட்டுகிறது.
2010-ம் ஆண்டில் பல்வேறு சாதிக் குழுக்களின் சமூக-பொருளாதார நிலை குறித்து நடத்தப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பு (National Sample Survey (NSS)) (அதன் பிறகு அத்தகைய கணக்கெடுப்பு எதுவும் செய்யப்படவில்லை) எஸ்சி / எஸ்டி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஊதிய வேலைகளில் இடஒதுக்கீடு இருந்தபோதிலும் அவர்களின் மக்கள் தொகையின் விகிதத்தை விட மிகக் குறைவாக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (NSS) கணக்கெடுப்பின் அடிப்படையில் வேலை இட ஒதுக்கீட்டின் செயல்திறன்: சாதி, மதம் மற்றும் இந்தியாவில் பொருளாதார நிலை (The Effectiveness of Jobs Reservation: Caste, Religion, and Economic Status in India) என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், இடஒதுக்கீடு வேலைகளில் SC/ST சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை ஐந்து சதவீத புள்ளிகளால் அதிகரித்துள்ளது என்று ஆய்வு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இடஒதுக்கீடு இல்லாவிட்டால், அவர்களின் பிரதிநிதித்துவம் முஸ்லிம்கள் மற்றும் OBCகளை விட குறைவாக உள்ளது என்றும் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், SC/ST இடஒதுக்கீட்டின் பெரும்பாலான நன்மைகளைப் பெறும் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினரிடையே கல்வி மற்றும் சமூக ரீதியாக பெரும்பாலான பலன்களைப் பெறுகிறார்களா என்பது குறித்து எந்த ஆய்வுகளும் இல்லை. இருப்பினும் கோட்பாட்டளவில், அதற்கான நிகழ்தகவு அதிகமாக உள்ளது. கல்வி மற்றும் சமூக ரீதியாக நல்ல நிலையில் உள்ள பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் குழந்தைகள் சாதி மற்றும் சமூக அந்தஸ்தின் காரணமாக எந்த பாகுபாட்டையும் எதிர்கொள்ளவில்லை என்றாலும் இடஒதுக்கீட்டால் பயனடைகிறார்கள் என்று தோன்கிறது. இமாச்சல், ஜம்மு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற மலை மாநிலங்களில் இருந்து செல்வாக்கு மிக்க பழங்குடியினர், ஏழை பழங்குடியினரின் இழப்பில் வந்த எஸ்டி இடஒதுக்கீட்டின் பெரும்பாலான பலன்களைப் பெற்றுள்ளனர்.
மேல்நிலையினருக்கான (creamy layer) வழக்கு
அனுபவ ஆய்வுகள் (Empirical studies) மற்றும் உச்ச நீதிமன்றம் எஸ்சி / எஸ்டி இடஒதுக்கீட்டில் மேல்நிலையினருக்கு (creamy layer) வலுவான வாதத்தை முன்வைத்துள்ளன. எஸ்சி / எஸ்டி இடஒதுக்கீட்டிற்கான மேல்நிலையினர் (creamy layer) கருத்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இட ஒதுக்கீட்டு மேல்நிலையினரிலிருந்து (creamy layer) வேறுபடலாம். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு (OBC), விலக்கு அளவுகோலில் ஆண்டு வருமானம் ₹8 லட்சம், உயர் பதவியில் உள்ள அரசு வேலைகள் மற்றும் பெரிய பண்ணை உரிமை ஆகியவை இந்த அளவுகோலில் அடங்கும். மேலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான (OBC) மேல்நிலையினர் (creamy layer) கடந்த ஏழு ஆண்டுகளாக திருத்தப்படவில்லை என்பது உறுதியான உண்மை.
பட்டியலிடப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டில் துணைப்பிரிவு என்பது மேல்நிலையினரை (creamy layer) அறிமுகப்படுத்தி, அதிகாரம் பெற்ற பட்டியலிடப்பட்ட வகுப்பினர்களுக்கான வேலைகளுக்கான ஒதுக்கீட்டு பங்கைக் குறைக்கும். இதற்கு தீர்வு காண, கூடுதல் நடவடிக்கைகளை அரசு பரிசீலிக்கலாம். உதாரணமாக, ஒரு குடும்பத்தின் இரண்டு தலைமுறைகள் வேலைக்கான ஒதுக்கீட்டில் பலனைப் பெற்றிருந்தால், மூன்றாம் தலைமுறையினர் ஒதுக்கீட்டைப் பெறக்கூடாது. மேலும், ஒரு குடும்பத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், குறிப்பிட்ட சதவீதம் அதிகரித்திருந்தால், அவர்கள் இடஒதுக்கீட்டுப் பலன்களுக்குத் தகுதி இல்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
துணைப்பிரிவுகளைப் போலவே, எஸ்சி மற்றும் எஸ்டி இடஒதுக்கீட்டில் மேல்நிலையினர் (creamy layer) என்ற கருத்தை அறிமுகப்படுத்துவது பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினரிடையே ஏழைக் குடும்பம் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு பயனளிக்கும் மற்றும் இந்த சமூகங்களில் செல்வாக்கு மிக்கவர்களின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும்.
மேல்நிலையினர் (creamy layer) விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்த பாஜக எஸ்சி/எஸ்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேல்நிலையினர் (creamy layer) அறிமுகப்படுத்தப்பட்டால் தங்கள் அரசியல் பதவியை இழக்க நேரிடும் என்று கவலையில் உள்ளனர். பெரும்பாலான எஸ்சி/எஸ்டி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல்நிலையினர் (creamy layer) அறிமுகப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டாலன்றி, ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட முடியாது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேல்நிலையினர் (creamy layer) பிரிவை எதிர்ப்பதன் மூலம் தங்கள் சமூகங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய நபர்களுக்கு தீங்கு விளைவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அமைச்சரவை தீர்மானம் அரசியலமைப்பில் உள்ள இடஒதுக்கீட்டிற்கு எதிரானது.
சேத்தன் சவுகான், தேசிய விவகாரங்களின் ஆசிரியர். இந்த வாரம் நாட்டின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் செய்திகளை பகுப்பாய்வு செய்கிறார்.