போர்ட் பிளேர் நகரம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் நுழைவுப் புள்ளியாகும். இது பம்பாய் கடற்படை சர்வேயர் மற்றும் லெப்டினன்ட் ஆர்க்கிபால்ட் என்பவரால் பிளேயர் பெயரிடப்பட்டது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயர் இனி ‘ஸ்ரீ விஜய புரம்’ என அழைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். பெயரை மாற்றும் முடிவு பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்டதாக கூறினார். "தேசத்தை ஆங்கில ஆட்சியின் முத்திரைகளில் இருந்து விடுவிக்க" இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
"முந்தைய பெயர் ஆங்கில ஆட்சியின் மரபைக் கொண்டிருந்தாலும், ஸ்ரீ விஜய புரம் நமது சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது" என்று ஷா கூறினார்.
போர்ட் பிளேயர் என்ற பெயர் எப்படி வந்தது?
போர்ட் பிளேர் நகரம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் நுழைவுப் புள்ளியாகும். இது பம்பாய் கடற்படை சர்வேயர் மற்றும் லெப்டினன்ட் ஆர்க்கிபால்ட் பிளேயர் என்பவரால் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகளை முழுமையாக ஆய்வு செய்த முதல் அதிகாரி பிளேயர் ஆவார்.
1771-ஆம் ஆண்டில் பாம்பே கடற்படையில் சேர்ந்த பிறகு, பிளேயர் இந்தியா, ஈரான் மற்றும் அரேபியாவின் கடற்கரைகளில் ஆய்வுப் பணியைத் தொடங்கினார். 1780-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், சாகோஸ் தீவுக்கூட்டம், கல்கத்தாவின் தெற்கில் அமைந்துள்ள டயமண்ட் துறைமுகம் மற்றும் ஹூக்ளி ஆற்றங்கரையில் உள்ள பல ஆய்வுப் பணிகளில் அவர் பங்கேற்றார்.
1778-ஆம் ஆண்டில் டிசம்பரில், எலிசபெத் மற்றும் வைப்பர் ஆகிய இரண்டு கப்பல்களுடன் கல்கத்தாவிலிருந்து அந்தமானுக்கு தனது முதல் ஆய்வுப் பயணத்திற்கு பிளேயர் புறப்பட்டார். ஏப்ரல் 1779-ஆம் ஆண்டு வரை நீடித்த இந்தப் பயணம், அவரை தீவின் மேற்குக் கடற்கரையைச் சுற்றிக் கொண்டு, அதன் மூலம் வடக்கே கிழக்குக் கடற்கரை வழியாகப் பயணம் செய்து, இயற்கைத் துறைமுகத்தை அடைந்தார்.
தொடக்கத்தில் போர்ட் கார்ன்வாலிஸ் (Port Cornwallis) என்று பெயரிட்டார். பின்னர் தீவு அவரது பெயரில் மறுபெயரிடப்பட்டது. பிளேயர் தனது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து, அந்த ஆய்வின் விரிவான அறிக்கையை எழுதினார். இது கிழக்கிந்திய கம்பெனி (East India Company (EIC)) அதிகாரிகளால் மிகவும் சாதகமாகப் பெற்றது.
கிழக்கிந்திய கம்பெனி (EIC) தீவுகளை கைப்படுத்த முடிவு செய்தது. மலாய் கடற்கொள்ளையர்களின் செயல்பாடுகளை அடக்கி பாதுகாப்பான துறைமுகமாக நிறுவப்பட்டது.
இந்த தீவு கப்பல் விபத்தில் சிக்கிய மக்களுக்கு புகலிடமாகவும், மற்ற சக்திகளுடன் விரோதம் ஏற்பட்டால் அவர்களது அதிகாரிகள் தஞ்சம் அடையக்கூடிய இடமாகவும் இருந்தது. பல குற்றவாளிகள் ஊதியம் பெறாத உழைப்புக்காக தீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதால், தீவு விரைவில் ஒரு சிறை போன்ற பகுதியாக மாறியது.
இருப்பினும், டிசம்பர் 1792-ஆம் ஆண்டில், இப்பகுதி, அந்தமானின் வடகிழக்கு பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட கார்ன்வாலிஸ் துறைமுகத்திற்கு சில இராஜதந்திர காரணங்களுக்காக மாற்றப்பட்டது. ஆனால், கடுமையான நோய் மற்றும் இறப்பு காரணமாக புதிய ஆங்கில அரசு நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை. கிழக்கிந்திய கம்பெனி (EIC) 1796-ஆம் ஆண்டில் அதை இயக்குவதை நிறுத்தியது.
1857-ஆம் ஆண்டின் கிளர்ச்சியின் விளைவாக ஆங்கிலேயர்களுக்கு ஏராளமான கைதிகள் கிடைத்தனர். போர்ட் பிளேயரை தண்டனைக் பகுதியாக உடனடியாகப் புதுப்பித்து மீண்டும் குடியேற்றத் தூண்டியது. பெரும்பாலான குற்றவாளிகள் போர்ட் பிளேயரில் ஆயுள் தண்டனை பெற்றனர். அவர்களில் பலர் தூக்கிலிடப்பட்டனர். பலர் நோய் மற்றும் இப்பகுதியில் உள்ள மோசமான சூழ்நிலை காரணமாக இறந்தனர்.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்திய சுதந்திர இயக்கம் வலுப்பெற்றதால், 1906-ஆம் ஆண்டில் இங்கு ஒரு பெரிய செல்லுலார் சிறை (cellular jail) நிறுவப்பட்டது. இது காலா பானி (Kala Pani) என்று அழைக்கப்பட்டது. வீர் தாமோதர் சாவர்க்கர் உட்பட பல சுதந்திரப் போராட்ட வீரர்களை தங்கவைத்தது.
இதற்கிடையில், பிளேயர் ஏற்கனவே 1795-ஆம் ஆண்டில் இங்கிலாந்து திரும்பியிருந்தார், மேலும் 1799-ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொசைட்டி முன் அந்தமான் தீவினைப் பற்றி கூறியதாக அறியப்படுகிறது.
11-ஆம் நூற்றாண்டின் சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திரனால் இன்றைய இந்தோனேசியாவில் உள்ள ஸ்ரீவிஜயா மீது தாக்குதல் நடத்த அந்தமான் தீவுகள் ஒரு கடற்படை தளமாக பயன்படுத்தப்பட்டதாக சில வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.
1050-ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் கிடைத்த கல்வெட்டின்படி, சோழர்கள் தீவை மா-நக்கவரம் நிலம் (Ma-Nakkavaram) என்று குறிப்பிட்டனர். இது ஆங்கிலேயர்களின் கீழ் நிக்கோபார் என்ற நவீன பெயருக்கு வழிவகுத்தது.
வரலாற்றாசிரியர் ஹெர்மன் குல்கே, நாகப்பட்டினம் முதல் சுவர்ணத்வீபா வரையிலான அவரது இணைத் திருத்தப்பட்ட புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தென்கிழக்காசியாவிற்கு சோழர் கடற்படைப் பயணங்கள் பற்றிய பிரதிபலிப்புகள் (2010), ஸ்ரீவிஜய சோழர் படையெடுப்பு இந்திய வரலாற்றில் ஒரு தனித்துவமான நிகழ்வாகும், மேலும், "அது அமைதியானது என்றும், தென்கிழக்கு ஆசியாவின் மாநிலங்களுடனான உறவுகள் இந்தியாவின் வலுவான கலாச்சார செல்வாக்கின் கீழ் ஒரு மில்லினியம் வரை வந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீவிஜயா மீதான தாக்குதலுக்கான காரணம் குறித்து பல அறிஞர்கள் பல காரணங்களை குறிப்பிட்டுள்ளனர். நீலகண்ட சாஸ்திரி, சோழர்களைப் பற்றிய தனது படைப்பில், “கிழக்குடனான சோழர் வணிகத்தின் வழியில் தடைகளை ஏற்படுத்துவதற்கு ஸ்ரீவிஜயாவின் தரப்பில் ஏதேனும் ஒரு முயற்சியை நாம் கருத வேண்டும் என்றார்.
ராஜேந்திர சோழன் தனது பயணத்தை கடலுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கு விரிவுபடுத்தி தனது பேரரசை விரிவுப்படுத்தினார். அமெரிக்க வரலாற்றாசிரியர் ஜி டபிள்யூ ஸ்பென்சர் போன்றவர்கள் ஸ்ரீவிஜய பயணத்தை பல காலக் கட்டங்களில்,. தென்னிந்தியா மற்றும் இலங்கையின் பிற சாம்ராஜ்யங்களுடனான போர்களில் உச்சக்கட்டத்தை அடைந்த சோழ விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக விளக்குகிறார்கள்.
கல்வெட்டுக் குறிப்புகளின்படி, ஸ்ரீவிஜயாவைத் தாக்கி, முதலாம் ராஜேந்திர மன்னன் சங்கராம விஜயொத்துங்கவர்மனைக் வீழ்த்தினார். மேலும், புத்த சாம்ராஜ்யத்திலிருந்து ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்தார். இதில் ஸ்ரீவிஜயாவின் நகைகள் நிறைந்த போர் வாசலான வித்யாதர தோரணமும் அடங்கும்.