மௌசம் திட்டம் பற்றி…

 வானிலையை கட்டுப்படுத்தும் முயற்சிகள் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.


இந்த வார தொடக்கத்தில், ₹2,000 கோடியை மௌசம் திட்டத்துக்கு (Mission Mausam)  ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வானிலை கருவிகளை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்தக் கருவிகள் இந்திய வானிலை மையத்தின் நடுத்தர தூர வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் (National Centre for Medium Range Weather Forecasting (NCMRWF)) மற்றும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology (IITM)) ஆகியவற்றால் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிறுவனங்கள் இந்தியாவின் வானிலை மற்றும் காலநிலை முன்னறிவிப்பு அமைப்பின் மையமாக உள்ளன. வானிலை மாற்றங்களை முன்னறிவிப்பதற்காக அவை வெவ்வேறு கால அளவுகளில் வேலை செய்கின்றன. 2026-ஆம் ஆண்டு வரை நீடிக்கும் பணியின் முதல் கட்டத்தை பூமி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences (MoES)) திட்டத்தை வழி நடத்தும். 


60 வானிலை ரேடார்கள், 15 காற்று விவரக்குறிப்புகள் மற்றும் 15 கதிரியக்க ஒலிகளை (radiosondes) அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த கருவிகள் காற்றின் வேகம், வளிமண்டல அழுத்தம், ஈரப்பதம் மற்றும் வளிமண்டலத்தில் வெவ்வேறு உயரங்களில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் பற்றி தெரிவிக்கும். 


மௌசம் திட்டம் கருவிகளை மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் மட்டும் மட்டும் இருந்தால், அது தேசிய மழைக்கால இயக்கத்தில் இருந்து வேறுபட்டதாக இருக்காது. 2012-ஆம் ஆண்டு தேசிய பருவமழை இயக்கம் (National Monsoon Mission) தொடங்கப்பட்டது. பருவமழையை முன்னறிவிப்பதற்கான ஒரு புதிய முறையை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. பருவமழையை முன்னறிவிப்பதைத் தவிர, வெப்ப அலைகள், குளிர் அலைகள் மற்றும் உள்ளூர் வானிலை ஆகியவற்றை முன்னறிவிப்பதற்கு இந்த மாதிரியை மீண்டும் பயன்படுத்தலாம்.

 

வானிலை முன்னறிவிப்புகளை மிகவும் துல்லியமாக உருவாக்குவது ஒரு முக்கிய முயற்சியாகும். ஆனால் மௌசம் திட்டம் புதிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வானிலைக்கு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, அதை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. 


மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப கழகம் (Indian Institute of Technology Madras (IITM)) “மேகம்-உருவகப்படுத்துதல் அறை” (cloud-simulation chamber) உருவாக்குவது புதிய திட்டத்தின் குறிக்கோளாக உள்ளது.  இந்த மழை மேகங்களை மாதிரியாக மாற்றவும், மேக விதைப்பு மற்றும் மேகங்களை சரிசெய்தல் போன்ற மழைப்பொழிவைக் கட்டுப்படுத்தும் சோதனை வழிகளுக்கும் உதவும்.


மின்னலைக் கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை விடவும் இயற்கையால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மின்னல் தாக்கம் தான் முக்கிய காரணமாக உள்ளது. வானிலை ஆய்வாளர்கள், எதிர்காலத்தில், கொடிய மின்னல் தாக்குதல்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேகங்களின் மின் பண்புகளை சரிசெய்ய முடியும் என்று நம்புகிறார்கள்.


மற்ற நாடுகளும் இதே போன்ற சோதனைகளை முயற்சித்துள்ளன.  ஆனால், முடிவுகள் இன்னும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. வளிமண்டலத்தில் (atmospheric sciences) அடிப்படை ஆராய்ச்சியில் முதலீடு செய்வது நல்லது. காலநிலை மாற்றம் சிக்கலானது. எனவே, பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்ற (greenhouse gas emissions) விளைவுகளைத் தீர்க்க பல அணுகுமுறைகள் தேவைப்படுகிறது. வானிலையை மாற்றுவது எல்லாவற்றையும் தீர்க்காது என்றாலும், அதை நன்றாக புரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.



Original article:

Share: