நியாயமான பங்கு : அதிக செயல்திறன் கொண்ட மாநிலங்களின் கவலைகள் குறித்து . . .

 சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு 16-வது நிதிக் குழு தீர்வு காண வேண்டும்.

 

கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் ஆளும் ஐந்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள் தங்கள் மாநிலத்திற்கு  தேவையான கோரிக்கையை முன்வைத்தனர். பிரிக்கக்கூடிய வரித் தொகுப்பை உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். பதினைந்தாவது நிதிக் குழுவின் தற்போதைய பரிந்துரை 41% ஆகும். ஆனால், அவர்கள் அதை 50% ஆக உயர்த்த விரும்புகிறார்கள். கூடுதல் கட்டணங்கள் மூலம் ஒன்றிய அரசு வசூலிக்கக்கூடிய தொகைக்கு ஒரு வரம்பு விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இவை வழக்கமாக குறிப்பிட்ட  ஒன்றிய அரசு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக விலைப்பட்டியல்களில் சேர்க்கப்படுகின்றன மற்றும் வரி பகிர்வு முறைக்கு வெளியே உள்ளன. 


எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மற்றும் பாஜக தலைமையில் ஆட்சியில் இருக்கும் இரு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து வரி வசூலிப்பதற்கான மாநிலங்களின் உரிமைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். சிறந்த பொருளாதார குறியீடுகளைக் கொண்ட மாநிலங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 


2024-25-ஆம் ஆண்டிற்கான, ஒன்றிய பட்ஜெட்டில் சிறிய அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. உதாரணமாக, பெங்களூரின் புறநகர் ரயில் திட்டத்திற்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் விழிஞ்சம் துறைமுகம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை.

 

சில நாட்களுக்கு முன் இந்தியா முழுவதும் ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள் காரணமாக இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த டிசம்பரில் தமிழ்நாட்டின் தெற்கு டெல்டா பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மேற்கு குஜராத்தில் பெய்த கனமழை மற்றும் கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு ஆகியவை இதில் அடங்கும். பதினாறாவது நிதிக் குழு 2025 அக்டோபருக்குள் வரிப் பகிர்வு (tax devolution) குறித்த தனது பரிந்துரைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


பதினைந்தாவது நிதிக் குழு வரிப் பணத்தை எவ்வாறு விநியோகிப்பது என்பதை தீர்மானிக்கும் போது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) உள்ள வித்தியாசத்திற்கு (45%) அதிக முக்கியத்துவம் கொடுத்தது. இது இந்தியாவில் உள்ள ஏழ்மையான பகுதிகளுக்கு உதவுவதாகும். இருப்பினும், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு போன்ற அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களுக்கு குறைவான பணம் வழங்க வழிவகுத்தது. இந்த மாநிலங்கள், பெரிய தொழில்துறை மற்றும் பொருளாதார மையங்களாக இருப்பதால், அவற்றின் தனித்துவமான வளர்ச்சி, காலநிலை மற்றும் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்ய அதிக முதலீடுகள் தேவைப்படுகிறது. 

 

மேலும், சரக்கு மற்றும் சேவை வரி  அமைப்பு மற்றும் குறைந்த வரிப் பகிர்வு ஆகியவை உயர் செயல்திறன் கொண்ட மாநிலங்கள் தங்கள் பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்ய போராடி வருகின்றன. கூடுதலாக, சரக்கு மற்றும் சேவை வரியோ அல்லது நிதி ஆணையமோ தீவிர வானிலை நிகழ்வுகளுக்கான அவசரச் செலவுகளைக் வழங்கவில்லை. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், மாநிலங்களுக்கு கூடுதல் கட்டுப்பாட்டை வழங்க வரி விநியோக விதிகளை புதுப்பிப்பது மிகவும் முக்கியமானது. இது மேலும், ஒரு உண்மையான கூட்டாட்சி மற்றும் ஒரு பங்கேற்பு ஆளுகை மாதிரி (governance model) முறையை உருவாக்க உதவும்.



Original article:

Share: