இந்தியா மின்மயமாகிறது, ஆனால் மின்னேற்று நிலையங்கள் (Charging Points) எந்த அளவில் உள்ளன? -சோனல் ஷா மனிஷா ஷர்மா

 ஆண்கள், மலிவு விலை (affordability) மற்றும் செயல்பாட்டு சார்ஜிங் நிலையங்களுக்கு (functional charging points) முன்னுரிமை அளிப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. இதற்கிடையில், பெண்கள் பாதுகாப்பு, வசதி, பயன்பாடு மற்றும் அணுகல் ஆகியவை இவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. 


இந்திய அரசு தனது போக்குவரத்து அமைப்பிலிருந்து கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க கடுமையாக உழைத்து வருகிறது. இந்த மாற்றத்தில் மின்சார இரு சக்கர வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை அனைத்து மின்சார வாகன (EV) விற்பனையில் 58% ஆகும். இருப்பினும், நாட்டின் அனைத்து இருசக்கர வாகன விற்பனையில் 5% மட்டுமே அவை இன்னும் பிரதிநிதித்துவம் செய்கின்றன. பெண் ஓட்டுநர்கள் இந்த சந்தையில் ஒரு சிறிய குழு ஆவார். 2019-20ஆம் ஆண்டில், அனைத்து ஓட்டுநர் உரிமங்களில் 12% மட்டுமே பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் பெண்கள் மின்சார இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வதற்காக அர்பன் கேடலிஸ்ட்ஸ் (Urban Catalysts) ஆய்வு நடத்தியது. இந்த ஆராய்ச்சிக்கு இங்கிலாந்தின் எய்டின் உயர்-தொகுதி போக்குவரத்து பயன்பாட்டு ஆராய்ச்சி திட்டத்தால் (High-Volume Transport Applied Research Programme) நிதியளிக்கப்பட்டது. இவர்கள் தற்போதைய உள் எரிப்பு இயந்திரம் (internal combustion engine(ICE)) மற்றும் மின்சார இரு சக்கர வாகனம் பயன்படுத்துபவர்களுடன் முதன்மை ஆய்வுகள் மற்றும் குழு விவாதங்களை (focus group discussions (FGD)) மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளானது சென்னை மற்றும் டெல்லியில் நடைபெற்றது. இதில், பொது இடங்களில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வது குறித்த பெரும் கவலை அடைவதாக இந்த ஆய்வுக்கான முடிவுகள் காட்டுகின்றன.


பெரும்பாலான மின்சார இரு சக்கர வாகன (electric two-wheeler (E2W) பயனர்கள் தங்கள் வாகனங்களை வீட்டிலேயே சார்ஜ் செய்கிறார்கள். இதில் 90% தனிப்பட்ட பயனர்களும், 75% வணிகப் பயனர்களும் அடங்குவர். இதனால், இவர்கள் பெரும்பாலும் தங்கள் பயண தூரத்தை குறைத்துக் கொள்கிறார்கள். சார்ஜிங் நிலையங்களின் இடங்கள் பற்றிய நம்பகமான தகவல்கள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும், பொதுவாக பெண்கள் E2W பயனர்கள் கூடுதல் பாதுகாப்புக்கான கவலைகளை எதிர்கொள்கின்றனர். இதில், சென்னையைச் சேர்ந்த பெண் பயனர் ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதாவது, “சார்ஜ் செய்ய மாலுக்குச் சென்றாலும், பார்க்கிங் பகுதியில்தான் இதற்கான வசதிகள் அமைந்துள்ளன. மேலும், இதைச் சுற்றிலும் விளக்குகளோ, பாதுகாப்பு வசதிகளோ மற்றும் இதைச் சுற்றிலும் ஆட்களே இல்லை. இதனால், சார்ஜ் செய்யும் போது தனியாக நிற்பது பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள்.


மின்சார இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தும் மற்றொரு பெண் குறிப்பிடுவதாவது, “பொது சார்ஜிங் நிலையங்களுக்குச் செல்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், எனக்கு அங்கு நீண்ட நேரம் நிற்க வசதியாக இல்லை. இது தேவையற்ற கவனத்தை ஈர்க்கும். மேலும், நான் ஏன் நிற்கிறேன் என்று மக்கள் கேள்வி எழுப்பலாம். இதை தவிர்க்க, வீட்டிலேயே எனது வாகனத்தை சார்ஜ் செய்ய தேர்வு செய்கிறேன் என்று குறிப்பிடுகிறார்.


ஆண்கள் மலிவு விலை மற்றும் செயல்பாட்டு சார்ஜிங் நிலையங்களைக் கொண்டிருப்பதில் கவனம் செலுத்தினர். இருப்பினும், பெண்களுக்கு இதில் வெவ்வேறு முன்னுரிமைகள் இருந்தன. பாதுகாப்பு, சௌகரியம், பயன்பாட்டினை மற்றும் சார்ஜிங் நிலையங்களை எளிதாக அணுகுவதை அவர்கள் மதிப்பிட்டனர். சார்ஜிங் நிலையங்களை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பெண்கள் கவலைப்பட்டனர். இந்த இடங்களின் பாதுகாப்பு மற்றும் நீண்ட நேர காத்திருப்பு குறித்து அவர்கள் கவலைப்பட்டனர்.


தற்போதுள்ள மின்சார இரு சக்கர வாகன (E2W) பயனர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்றோம். இதன் அடிப்படையில், சென்னை மற்றும் டெல்லியில் உள்ள பொது சார்ஜிங் நிலையங்களை (public charging stations) மதிப்பிடுவதற்கான மதிப்பாய்வு கட்டமைப்பை உருவாக்கினோம். இந்த கட்டமைப்பு 23 தொடர்புடைய பண்புகளுடன் நான்கு விதமான முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது. இந்த நான்கு அம்சங்கள் கீழே குறிப்பிடுவன:


1. சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிவதில் எளிமை.


2. பாதுகாப்பு.


3. மின்னேற்ற உள்கட்டமைப்பு மற்றும் நெட்வொர்க் இணைப்பு.


4. வசதிகள்.


இதில், ஒவ்வொரு பண்புக்கும் அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் 0.5 முதல் 3.0 வரை மதிப்பு கொடுக்கப்பட்டது. டெல்லி மற்றும் சென்னையில் உள்ள 60 சார்ஜிங் நிலையங்களை மதிப்பீடு செய்ய களஆய்வு மேற்கொண்டது. இதன் அடிப்படையில் டெல்லி வடக்கு, மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில், சென்னை மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. தரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பண்புக்கும் 0 முதல் 3 வரை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதில், மொத்த மதிப்பெண்ணானது சார்ஜிங் நிலையங்களின் மதிப்பீட்டை தீர்மானித்தது. 0 முதல் 33 வரையிலான மதிப்பெண்கள் மிகவும் மோசமாகவும், 33.01 முதல் 66 வரை மோசமானதாகவும், 66.01 முதல் 99 வரை திருப்திகரமாகவும் மதிப்பிடப்பட்டது.


சென்னையில் சார்ஜிங் நிலையங்கள் அனைத்து அம்சங்களிலும் மோசமாக மதிப்பிடப்பட்டுள்ளன. டெல்லி சார்ஜிங் நிலையங்கள் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு வசதியில் மோசமாக மதிப்பிடப்பட்டன. ஆனால், சார்ஜிங் நிலையங்களின் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பில் சிறப்பாக மதிப்பெண் பெற்றன. மேலும்,  இதன் வசதிகளில் மிகவும் மோசமாக மதிப்பிடப்பட்டன. 


சார்ஜிங் நிலையங்கள் குறித்து நம்பகத்தன்மை இல்லாத தகவல்கள் 


தேர்ந்தெடுக்கப்பட்ட சார்ஜிங் நிலையங்களில், டெல்லியில் 64% மற்றும் சென்னையில் 46% ஆக செயல்பட்டன. ஆற்றல் திறன் பணியகத்தின்படி (Bureau of Energy Efficiency), சென்னையில் 151 பொது சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. இதற்கு மாறாக, டெல்லியில் 2,452 சார்ஜிங் நிலையங்கள் இருப்பதாக ஸ்விட்ச் டெல்லி இணையதளம் (Switch Delhi website) தெரிவித்துள்ளது. டெல்லியில் ஒவ்வொரு 103 மின்சார வாகனங்களுக்கும் ஒரு சார்ஜிங் நிலையம் உள்ளது என்று மாதிரி கணக்கெடுப்பு (sample survey) காட்டுகிறது. சென்னையில் 455 மின்சார வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையங்கள் உள்ளது. இது ஒவ்வொரு 6-20 மின்சார வாகனங்களுக்கு ஒரு பொது சார்ஜரின் உலகளாவிய சராசரியுடன் ஒப்பிடப்படுகிறது  என்று Alvarez & Marsal, 2022 கணக்கெடுப்பு காட்டுகிறது.


மின்னேற்று நிலையங்கள் செயல்படுகின்றனவா மற்றும் துல்லியமாக அமைந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்த குழு வெவ்வேறு சார்ஜிங் நிலையங்களை இயக்குபவர்களிடமிருந்து திறன்பேசி பயன்பாடுகளைப் பயன்படுத்தியது. இதில், பலவற்றில் தெளிவான அடையாளங்கள் அல்லது தெரிவுநிலையைக் கொண்டிருக்கவில்லை.

மின்னேற்று (சார்ஜிங்) நிலையங்களின் பாதுகாப்பு  


பெரும்பாலான மின்னேற்று நிலையங்களில் உதவியாளர் அல்லது பாதுகாப்பு பணியாளர்கள் இல்லை. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் பயனர்களுக்கு தகவலுடன் உதவுவதற்கு இது ஒரு கவலையாக இருந்தது. சில இடங்களில், குறிப்பாக பெட்ரோல் பம்புகள் (petrol pumps) மற்றும் சாலையோரங்களில் (along roadsides) சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும், மத்திய டெல்லியில் சில நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டன.


மின்னேற்று (சார்ஜிங்) உள்கட்டமைப்பு மற்றும் இணைய இணைப்பு


இதில் பொதுவாக, பல காரணிகளை மதிப்பீடு செய்தோம். E2W-களுக்கான வேகமான சார்ஜர்களின் கிடைக்கும் தன்மை, அவற்றின் இயங்குதன்மை, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய தகவல் மற்றும் சார்ஜிங் நிலையங்களை அணுகுவதற்கான காத்திருப்பு நேரம் ஆகியவற்றை பொறுத்து மதீப்பீடு அமைகிறது.


ஒரு பெண் E2W பயனர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “நான் சார்ஜ் செய்யும் இடத்திற்கு வந்தபோது, ​​சார்ஜிங் போர்ட் (charging port) எனது வாகனத்திற்குப் பொருந்தவில்லை என்பதைக் கண்டறிந்தேன். எனது இரு சக்கர வாகனத்தின் பேட்டரியின் அளவு குறைந்ததால், அது கண் சிமிட்ட ஆரம்பித்ததால் நான் மிகவும் பயந்தேன். நான் எப்படியோ வீட்டிற்கு திரும்பினேன். ஆனால், அது எனக்கு ஒரு கனவாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.


வசதிகள் (Amenities)


சென்னை மற்றும் டெல்லியில் சார்ஜிங் நிலையங்களில் வசதிகள் இல்லை. மேலும், இவர்களுக்கு இருக்கை, நிழலான காத்திருப்புப் பகுதிகள், குடிநீர், கழிவறைகள் இல்லை. மேலும், வாகனத்தை சார்ஜ் செய்யும் போது நிறுத்த போதுமான இடவசதி இல்லை. டெல்லி, சென்னை மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் வெப்ப அலைகள் இருப்பதால் நிழல் காத்திருப்புப் பகுதிகள் மிகவும் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகிறது.

 

பரிந்துரைகள் (Recommendations)


சார்ஜிங் நிலையங்களில் உள்கட்டமைப்புக்கு கட்டணம் வசூலிப்பதற்கான வழிகாட்டுதல்களை மின் அமைச்சகமானது திருத்தம் கொண்டு வருகிறது. இந்த வழிகாட்டுதல்கள், சார்ஜிங் நிலையங்களின் தரவுத்தளத்தை பராமரிக்க ஒரு இணையவழி போர்டல், மென்பொருள் அல்லது திறன்பேசி பயன்பாட்டை உருவாக்க பரிந்துரைக்கின்றன. மேலும், நாடு முழுவதும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, சில முக்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.


பொது இடங்களில் சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான அனுமதிகளை வழங்க ஒன்றிய மற்றும் மாநில நோடல் முகமைகள் (Central and state nodal agencies) சார்ஜிங் நிலையங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். சார்ஜிங் பாயின்ட் ஆபரேட்டர்கள் (Charging point operators (CPO)) ஒவ்வொரு வாரமும் சார்ஜிங் நிலையங்களின் இருப்பிடம் மற்றும் செயல்பாட்டு நிலையைப் புதுப்பிக்க வேண்டும். பயனர் வசதிக்காக அவை உடனடியாக கிடைக்கும் தகவல்களையும் வழங்க வேண்டும். கூடுதலாக, சார்ஜிங் நிலையங்களின் பயன்பாட்டினை இருமொழி அடையாளங்கள் (bilingual signage) மற்றும் அறிவுறுத்தல் தகவல்களுடன் (instructional information) மேம்படுத்த வேண்டும்.


சார்ஜிங் நிலைய ஆபரேட்டர்கள் (Charging point operators (CPO)) ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் மாநில நோடல் முகமைகளுடன் இணைந்து, பாலினத்தால் பிரிக்கப்பட்ட சார்ஜிங் நிலையங்களின் பயன்பாடு குறித்த தரவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். மாநில நோடல் முகமைகள் இந்தத் தரவை மத்திய நோடல் முகமைகளுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும். இந்த அணுகுமுறை சார்ஜிங் நிலையங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன மற்றும் அவை நாள் மற்றும் வாகன வகையின் அடிப்படையில் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதைப் புரிந்துகொள்ள உதவும். சில வாகன வகைகளுக்கு கூடுதல் சார்ஜிங் நிலையங்களைச் சேர்க்கலாமா அல்லது சிலவற்றை அகற்றலாமா என்பதைத் தீர்மானிக்கவும் இந்த தரவு உதவும்.


சார்ஜிங் நிலையங்கள் (CPs) இரவில் நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும். அவை செயல்படும் பகுதிகளில் இருக்க வேண்டும், தனி மதுபானக் கடைகளுக்கு அருகில் இருக்கக்கூடாது. சார்ஜிங் நிலையங்களின் உயரம் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கப்பட வேண்டும். வாகனங்களை நிறுத்துவதற்கும், நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் அணுகக்கூடிய, தடையற்ற பாதை இருக்க வேண்டும். மின்சார இரு சக்கர வாகனம் (E2W) பயன்படுத்துபவர்களுக்கு உதவ பயிற்சி பெற்ற பணியாளர்கள் ஆதரவாக கருதப்படலாம். 


நம்பகமான பொது சார்ஜிங் இணையவழியை உருவாக்குவதற்கு வேகமான சார்ஜர்களின் கிடைக்கும் தன்மை மற்றும் இயங்கும் தன்மையும் மிக முக்கியமானதாக இருக்கும். கூடுதலாக, நிழலான இருக்கை பகுதிகள், குடிநீர் மற்றும் அருகிலுள்ள கழிப்பறைகள் போன்ற வசதிகள் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான (E2Ws) ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும்.


மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் பிற வணிக வாகனங்களின் பயன்பாடு பல காரணிகளைப் பொறுத்தது. பொது சார்ஜிங் உள்கட்டமைப்பின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு, வசதி மற்றும் மலிவு ஆகியவை இதில் அடங்கும். அரசாங்கமும் சார்ஜிங் நிலையங்களின் ஆபரேட்டர்களும் (Charging Point Operators (CPOs)) இணைந்து ஒரு ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும்.



Original article:

Share: