நலம்சார் திட்டங்களுக்கு (welfarism) நாடுகள் திரும்பும்போது, இந்தியாவின் முன்மொழியப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) ஓய்வு பெற்றவர்களுக்கு வலுவான ஆதரவை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தியாவில் ஓய்வூதிய முறை பல ஆண்டுகளாக மாறியுள்ளது. மூன்று முக்கிய திட்டங்கள் உள்ளன: பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme (OPS)), புதிய ஓய்வூதியத் திட்டம் (New Pension Scheme (NPS)) மற்றும் முன்மொழியப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme (UPS)). ஒவ்வொரு திட்டமும் ஓய்வு பெற்றவர்களை வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இதற்கு மாறாக, புதிய ஓய்வூதியத் திட்டம் ஓய்வூதிய நிதிகளை கணிக்க முடியாத சந்தை நிலைமைகளுடன் இணைக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளிலிருந்து உலகம் விலகிச் செல்லும்போது, நலம்சார் திட்டங்கள் பற்றிய விவாதம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இந்த சூழலில், ஓய்வு பெற்றவர்களின் நலன்களுக்கு திறம்பட சேவைகளை வழங்க ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட ஆபத்தை அதிகரிக்கும் மாற்றம்
2004-ஆம் ஆண்டுக்கு முன், பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme (OPS)) அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. ஓய்வூதியத் தொகையானது கடைசியாகப் பெற்ற சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டது. அதை செலுத்துவதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பாகும். பழைய ஓய்வூதியத் திட்டம் ஓய்வு பெற்றவர்களை பாதுகாத்தது. நிதிச் சந்தை அபாயங்கள், ஓய்வூதியம் என்பது கடைசி சம்பளத்தில் ஒரு நிலையான சதவீதமாக இருந்ததால், ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய ஆண்டுகளில் அவர்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். சந்தை தாக்கங்களை தவிர்த்து, உத்தரவாதமான ஓய்வூதியங்களை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கியது.
2004-ஆம் ஆண்டில், இந்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை (பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme (OPS))) மாற்றி புதிய ஓய்வூதிய திட்டத்தை (New Pension Scheme (NPS)) அறிமுகப்படுத்தியது. இந்த மாற்றம் ஒரு வரையறுக்கப்பட்ட நன்மை மாதிரியிலிருந்து வரையறுக்கப்பட்ட பங்களிப்பு மாதிரிக்கு (defined-benefit model to a defined-contribution model) மாறியது. புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஊழியர்கள் மற்றும் அரசாங்கம் இரண்டும் ஓய்வூதிய நிதிக்கு பங்களிக்கின்றன. இந்த ஓய்வூதிய நிதி பின்னர் நிதிச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் செலுத்துதல் இந்த முதலீடுகளின் செயல்திறனைப் பொறுத்தது. இதன் விளைவாக, ஓய்வூதியதாரர்களின் வருமானம் இப்போது சந்தைகளின் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படுகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறியிருப்பது புதுத் தாராளமயக் (neoliberal) கொள்கையை பிரதிபலிக்கிறது. இந்த போக்கு நலம்சார் திட்டங்களுக்கு அரசின் ஈடுபாட்டைக் குறைக்கிறது மற்றும் தனிநபர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. புதிய ஓய்வூதியத் திட்டம் ஓய்வு பெற்றவர்களை சந்தை ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படக்கூடியவர்களாக ஆக்குகிறது. அவர்களுடைய வருங்காலங்களை வணிக சந்தை நிலைமைகளின் அடிப்படையில் மாறுபடுகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கிய பாதுகாப்பை புதிய ஓய்வூதியத் திட்டம் பலவீனப்படுத்தியுள்ளது. பொருளாதார வீழ்ச்சியின் போது, ஓய்வு பெற்றவர்கள் குறைந்த வருமானத்தைப் பெறலாம். இது அவர்களின் நிதி பற்றிய நிலைத்தன்மையை கடுமையாக பாதிக்கும்.
இந்த சந்தை அடிப்படையிலான ஓய்வூதிய மாதிரியானது, மக்கள் நலத் திட்டங்களை வணிகமயமாக்குவது மற்றும் அதன் குடிமக்களுக்கு ஆதரவளிக்கும் அரசாங்கத்தின் பொறுப்பை பலவீனப்படுத்துவது பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது.
நலம்சார் திட்டங்களை நோக்கி (welfarism) திரும்புதல்
உலகளவில், புதுத் தாராளமயக் (neoliberal) கொள்கை கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரக் கொள்கையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், அது இப்போது பின்னடைவுக்கான சந்தித்து வருகிறது. 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி சந்தையை அதிகமாக நம்பியிருப்பதன் அபாயங்களை வெளிப்படுத்தியது. இது வலுவான சமூகப் பாதுகாப்பு வலைகளுக்கான அழைப்புகளுக்கும் மற்றும் நலம்சார் திட்டத்திற்கு திரும்புவதற்கும் வழிவகுத்தது. COVID-19 தொற்றுநோய் இந்த கோரிக்கைகளை மேலும் அதிகரித்தது. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பு இல்லாத வழிகளில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவும் இதேபோன்ற மாற்றத்தை அனுபவித்து வருகிறது, அரசு ஆதரவிலான நலம்சார் திட்டஉதவிகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme (UPS)) உலகளாவிய ஓய்வூதியங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அரசாங்க ஈடுபாடு மற்றும் சந்தைப் பங்கேற்பு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைக் கண்டறியும் முயற்சியாக வெளிப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியபடி, மோடி அரசாங்கத்தின் புதிய ஓய்வூதிய திட்டத்தை (New Pension Scheme (NPS)) எழுப்பிய பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், புதிய ஓய்வூதிய திட்டம் இன்னும் அதன் ஆரம்ப கட்டத்தில் உள்ளது மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ஒரு மாற்றாகக் காணப்படுவதற்கு முன்பு குறிப்பிடத்தக்க திருத்தம் தேவைப்படுகிறது. புதிய ஓய்வூதிய திட்டம் ஓய்வூதிய சலுகைகளை வழங்குவதாக உறுதியளிக்கிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்துடன் (Old Pension Scheme (OPS)) ஒப்பிடும்போது குறைந்த வருமானத்தை வழங்குகிறது மற்றும் நிச்சயமற்ற சந்தை அடிப்படையிலான சொத்துக்களின் அபாயங்களை ஓய்வு பெற்றர்வர்களுக்கு வழங்குகிறது என்று விமர்சகர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர்.
முழு ஓய்வூதியத்திற்கு 25 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற விதி, பின்னர் வேலை செய்யத் தொடங்குபவர்களுக்கு ஒரு புதிய விதிகள் பாதகமாக உள்ளன. கூடுதலாக, குறைவான நிதியுதவி பற்றிய கவலைகள் எதிர்கால ஓய்வூதிய தாமதங்கள் அல்லது நிதி குறைப்பு பற்றிய கவலைகளை எழுப்புகின்றன.
மேலும், இந்த திட்டம் ஆசிரியர்கள் போன்ற பல பொதுத்துறை ஊழியர்களைத் தவிர்த்து, ஒன்றிய அரசு ஊழியர்களை மட்டுமே உள்ளடக்கியது. மேலும், ஊதியக் குழுக்களை குறைக்கக்கூடும். ஓய்வு பெற்றவர்கள் சந்தை மாற்றங்களினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த அதிக அரசு தலையீடு தேவை என்பது கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (Unified Pension Scheme (UPS)) முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஒரு உலகளாவிய கட்டமைப்பை வழங்கும் அதே வேளையில், அதன் கட்டமைப்பு சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு எதிரான பாதுகாப்புகளை இணைக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத்தை புதிய திட்டம் வழங்க வேண்டும்.
அரசாங்க பங்களிப்பு பிரச்சினை
பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme (OPS)), புதிய ஓய்வூதியத் திட்டம் (New Pension Scheme (NPS)) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme (UPS)) ஆகியவற்றின் ஒப்பீடு, இந்தியாவின் ஓய்வூதிய அமைப்பில் அரசு ஆதரவு நலம்சார் திட்டங்கள் மற்றும் சந்தை சார்ந்த கொள்கைகளுக்கு இடையே உள்ள பதற்றத்தைக் காட்டுகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் இதற்கு நேர்மாறாக உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டமானது, ஓய்வு பெற்றவர்களின் நிதி எதிர்காலத்தை சந்தை முதலீடுகளின் அபாயகரமான பகுதிக்கு மாற்றியது.
புதுத் தாராளமயக் (neoliberal) கொள்கையிலிருந்து உலகளாவிய பின்வாங்குவது மற்றும் நலன் சார் திட்டங்களை நோக்கி திரும்புதல் இந்தியா தனது ஓய்வூதிய முறையை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை அளிக்கிறது. மாநில பொறுப்பு மற்றும் சந்தை பங்கேற்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு சிறந்த சமநிலையைக் கண்டறிய ஒரு வாய்ப்பு உள்ளது. இவை ஒழுங்காக மறுசீரமைக்கப்பட்டால், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஓய்வூதியதாரர்களின் நிதிப் பாதுகாப்பைப் பாதுகாக்க உதவும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பிரச்சனைகளையும் இது சரி செய்ய முடியும். இந்தியாவில் ஓய்வூதியம் பெறுவோர் சந்தை மாற்றங்களால் பாதிக்கப்படாமல், வலுவான அமைப்பால் ஆதரிக்கப்படுவதை இது உறுதி செய்யும்.
டி.டி.ஸ்ரீகுமார், பேராசிரியர், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம் (English and Foreign Languages University), ஹைதராபாத்.