இந்தியாவிலேயே அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியின் முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது. சீனாவிற்கு மாற்றுகளைத் தேடுவதில், உலக முதலீடுகளுக்கான வலுவான போட்டியாளராக தமிழ்நாடு திகழ்கிறது.
1968-ஆம் ஆண்டில், தொலைநோக்கு தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான சி.என்.அண்ணாதுரை அவர்கள் மதிப்புமிக்க சப் பெல்லோஷிப் திட்டத்தின் (Prestigious Chubb Fellowship Program) ஒரு பகுதியாக யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அண்ணாதுரை தனது பயணத்தின் போது, இந்தியாவை "ஜனநாயகத்திற்கான சோதனை நிலையம்" (‘experiment station for democracy’) என்று விவரித்தார். ஜனநாயகத்தைப் பயன்படுத்தி இந்தியா தனது பொருளாதாரத்தை மீண்டும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லமுடிந்தால், அது சீனா மற்றும் பிற கம்யூனிச நாடுகளின் சர்வாதிகார மாதிரிகளுக்கு மாற்றாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா எவ்வளவு பொருளாதார முன்னேற்றம் அடைந்தாலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல் வறுமையை ஒழிக்க முடியாது என்று சி.என்.அண்ணாதுரை எச்சரித்தார்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு, அண்ணாதுரையின் தொலைநோக்குப் பார்வையின் வலிமையை தமிழ்நாடு நிரூபித்துள்ளது. ஜனநாயக கருவிகளை திறம்பட பயன்படுத்தி, கருவுறுதல் விகிதத்தை கட்டுப்படுத்தி, நமது பொருளாதாரத்தை மீண்டும் மறுசீரமைப்பு செய்துள்ளோம். இதன் மூலம் இந்தியாவிலேயே அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியின் முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது. 'சீனா+1' (“China+1”) என்ற ராஜதந்திர கொள்கையுடன் சீனாவிற்கு மாற்றாக தேடும் போது, உலகளாவிய முதலீடுகளுக்கான வலுவான போட்டியாளர்களில் ஒன்றாக தமிர்நாடு உருவடுத்துள்ளது.
தமிழ்நாடு அதன் ஜனநாயக இலட்சியங்கள் மற்றும் மக்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட கொள்கைகளால் விவசாய மற்றும் ஏழைப் பொருளாதாரத்தில் இருந்து தொழில் துறையின் முக்கிய மையமாக மாறியுள்ளது. கடுமையான பொருளாதார மாதிரிகளை அமல்படுத்தும் சர்வாதிகார அரசாங்கங்களைப் போல் இல்லாமல், தமிழ்நாட்டின் வளர்ச்சியானது பங்கேற்பு ஆளுமை, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் இட ஒதுக்கீடு மூலம் வளங்களை நியாயமான முறையில் விநியோகித்தல் ஆகியவற்றின் அடிப்படையிலானது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வெற்றியானது சமூக நீதி, பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் அனைத்து குடிமக்களின் நல்வாழ்வுக்கும் முன்னுரிமை அளிக்கும் ஒரு நிர்வாக மாதிரியிலிருந்து வருகிறது. மொத்த கருவுறுதல் விகிதத்தில் (TFR) மாநிலத்தின் குறைப்பு வறுமையைக் குறைக்க உதவியது. இந்தக் குறைப்பு கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அதிக முதலீடுகளை அனுமதிக்கிறது. இந்த முதலீடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளன.
சீனா+1 இலக்கு (The New China+1 Destination)
இன்று, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) தமிழ்நாடு இரண்டாவது பெரிய பங்களிப்பாளராக உள்ளது. மக்கள் தொகையில் 6% மட்டுமே இருந்தாலும், நாட்டின் மொத்த உற்பத்தியில் 9% பங்களிக்கிறது.
மாநிலத்தின் தனிநபர் வருமானம் (per capita income) அதிகமாக உள்ளது. இது அதன் உள்ளடக்கிய வளர்ச்சி மாதிரியின் (inclusive development model) வெற்றியைக் காட்டுகிறது.
சீனாவிலிருந்து விநியோகச் முறைகளை நகர்த்துவதற்கான உலகளாவிய முயற்சியில், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. “இந்தியாவின் டெட்ராய்ட்” ('Detroit of India') என்று அழைக்கப்படும் தமிழ்நாடு, இந்தியாவின் ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் 35% பங்களித்து வருகிறது. மாநிலம் ஒரு வலுவான வாகன சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. Hyundai, Daimler, Renault, Nissan, BMW மற்றும் Stellantis போன்ற முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இது விநியோகிப்பாளர்கள் மற்றும் துணைத் தொழில்களின் திடமான கணினி கட்டமைப்புயும் கொண்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்க்க பயணம் மேற்கொண்ட பின்னர், ஃபோர்டு (Ford) தனது சென்னை தொழிற்சாலையில் மீண்டும் செயல்பாடுகளை தொடங்குவதாக அறிவித்தது.
ஆட்டோமொபைல் தவிர மற்ற துறைகளிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மின்னணு உற்பத்தியில் மாநிலம் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் 33% பங்களிக்கிறது. Apple, Dell, HP, Samsung மற்றும் Google Pixel போன்ற உலகளாவிய வணிக நிறுவனங்களுக்கும் சேவை செய்கிறது. திறமையான தொழிலாளர்கள், வலுவான விநியோகச் சங்கிலி மற்றும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு ஆகியவை மாநிலத்தை மின்னணு மற்றும் தொழில்நுட்பத் தொழில்களுக்கான மையமாக மாற்றியுள்ளன.
விநியோக முறையில் உலகளாவிய மாற்றத்தின் ஒரு பகுதியாக புதிய முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்த மாநில அரசு கொள்கைகளை (State government has implemented policies) அறிமுகப்படுத்தியுள்ளது. வரிச்சலுகைகள், மானியமிடப்பட்ட நிலம் மற்றும் செயல்பாடுகளை எளிமைப்படுத்த ஒற்றைச் சாளர அனுமதி அமைப்பு (single window clearance system) ஆகியவை இதில் அடங்கும். இதன் மூலம் மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதன் பயனாக, எளிதாக தொழில் தொடங்குவதில் இந்தியாவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் உலக முதலீட்டாளர்களை ஈர்க்கிறது.
திறன், புதுமை மற்றும் புதிய கூட்டாண்மைகள்
தமிழ்நாடு அதன் உற்பத்தித் திறன் மட்டுமின்றி, புதுமை மற்றும் திறன்களாலும் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கிறது. மாநில அரசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (research and development (R&D)) மற்றும் உலகளாவிய நிறுவனங்களுடன் திறன் கூட்டாண்மைகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்த அணுகுமுறை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
சமீபத்திய அமெரிக்கப் பயணம் இந்த முயற்சியில் ஒரு முக்கியமான படியாகும். பயணத்தின் போது, Google, Applied Materials, Jabil, PayPal, Nokia, Microchip போன்ற சிறந்த நிறுவனங்களுடன் திறன்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முக்கிய முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகளைப் பெற்றோம். இந்த கூட்டாண்மை புதிய வேலைகள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து, புதுமைக்கான உலகளாவிய மையமாக மாற்றுகிறது.
திராவிட முன்மாதிரியின் பலம் (Strengths of the Dravidian Model)
தமிழ்நாட்டின் வெற்றியானது முன்திராவிட மாதிரி (Dravidian Model) எனப்படும் அதன் தனித்துவமான ஆட்சி மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. இந்த அணுகுமுறை சமூக நீதி, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வளங்களின் நியாயமான விநியோகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. பொருளாதார வளர்ச்சி அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை உறுதி செய்கிறது.
கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட பல சமூகக் குறிகாட்டிகளில் (social indicators) இந்தியாவை தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. உயர்கல்வியில் மாநிலம் 47% ஆக உயர்ந்த மொத்த சேர்க்கை விகிதத்தை (Gross Enrolment Ratio (GER)) கொண்டுள்ளது. மேலும், இது இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட 42% பெண் தொழிலாளர்களை தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தியுள்ளது. நான் முதல்வன் (Naan Mudhalvan) போன்ற திட்டங்கள் இந்தியாவின் மிகப்பெரிய திறன் முயற்சி திட்டமாகும். மாநில இளைஞர்கள் எதிர்கால வேலைகளுக்குத் தேவையான திறன்களைப் பெற உதவுகிறது. குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் நிதித் துறைகளுக்கு இளைஞர்களை தயார்படுத்துகின்றன.
பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் (diversity, equity and inclusion (DEI)) ஆகியவற்றிற்கான தமிழ்நாட்டின் அர்ப்பணிப்பு சமூக பொறுப்பில் கவனம் செலுத்தும் உலகளாவிய நிறுவனங்களுக்கு ஈர்க்கக்கூடிய இடமாக அமைகிறது. பெண்கள், திருநங்கைகளை வேலைக்கு அமர்த்தும் முதலீட்டாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்குவது போன்ற கொள்கைகளில் இந்த தெளிவாக தெரிகிறது.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இயக்கத்திலும் (renewable energy revolution) தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தற்போது, அதன் நிறுவப்பட்ட ஆற்றல் திறனில் 57% புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்து வருகிறது. காற்று, சூரிய சக்தி மற்றும் கடல் ஆற்றல் வெப்பவினை பகுதிகள் (offshore energy hotspots) உள்ளிட்ட மாநிலத்தின் இயற்கை நன்மைகள் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தியுள்ளன. தமிழ்நாடு அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை 75% ஆக உயர்த்தவும், பசுமைப் பரப்பை அதன் மொத்த பரப்பளவில் 33% ஆக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மிழ்நாடு முதலீட்டிற்கான விதிவிலக்கான வாய்ப்பை வழங்குகிறது, அதன் வலுவான உற்பத்தித் துறை, மிகவும் திறமையான மற்றும் மாற்றியமைக்கக்கூடிய பணியாளர்கள், உள்ளடக்கிய நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மைக்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு, செய்தி எதுவென்றால்: "தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள் (go bullish on Tamil Nadu), அதன் வளர்ச்சியின் (join the bull run) ஒரு பகுதியாக இருங்கள்".
மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ளார்.