இந்தியாவில் தேர்தல் செயல்முறை : வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் -மதுகர் ஷியாம்

 நாட்டில் தேர்தல் நடைமுறையை நிர்வகிக்கும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. இது, வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிப்பின் போது தேர்தலின் பாரம்பரியத்தை பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) நாட்டில் தேர்தல்களை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளதுடன், தேர்தல் நடைமுறையின் ஒருமைப்பாட்டை பராமரிக்க, இது பல முக்கிய படிநிலைகளைப் பின்பற்றுகிறது.  இது, தேர்தலில்  வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் ஆகியவை இதில் அடங்கும். மேலும், இந்திய தேர்தல் ஆணையம் இந்த செயல்முறைக்காக கட்டமைக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறையை உறுதி செய்கிறது. மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் நியாயமானவை என்பதை உறுதிப்படுத்த, இந்திய தேர்தல் ஆணையம் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.


1. வாக்கு எண்ணுவதற்கான தயாரிப்பு : வாக்குப்பதிவு முடிந்ததும், ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் உள்ள தலைமை அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (Electronic Voting Machines (EVMs)) உடனடியாக சீல் வைக்க வேண்டும். வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இதற்கானப் பணியைச் செய்ய வேண்டும். பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வலுவான அறைகளுக்கு கொண்டு செல்லுவதற்கு, போக்குவரத்தில் பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.


2. வாக்குப்பகுதி மையங்களில் வாக்கு எண்ணுதல் : வழக்கமாக மாவட்டத் தலைமையகம் அல்லது ஒரு தொகுதிக்குள் உள்ள மற்ற மையப் பகுதிகளில், நியமிக்கப்பட்ட மையங்களில் எண்ணுதல் நடைபெறும். பெரிய தொகுதிகளுக்கு, பல வாக்கு எண்ணுவதற்கு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்கு எண்ணும் பணியாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் அறைகளுக்குள் நுழைய முடியும். 


3. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறப்பு : வாக்கு எண்ணிக்கை நாளன்று, பார்வையாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன: வாக்குச்சீட்டு அறை (Balloting unit(s) (BU)), கட்டுப்பாட்டு அலகு (Control Unit (CU)) மற்றும் வாக்காளர் சரிபார்க்கப்பட்ட காகித தணிக்கை சோதனை (Voter-verified paper audit trail (VVPAT)) ஆகும். வாக்குச்சீட்டு அறை (BU) என்பது வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யும் இடம். கட்டுப்பாட்டு அலகு (CU) அவற்றை வாக்கு எண்ணிக்கையை பதிவு செய்கிறது. மேலும், வாக்கு எண்ணும் அறைக்கு எண்ணுவதற்காக கொண்டு வரப்படும் பகுதியாகும். 


வாக்காளர் சரிபார்க்கப்பட்ட காகித தணிக்கை சோதனை (Voter-verified paper audit trail (VVPAT)) ஒவ்வொரு வாக்குக்கும் ஒரு காகிதத் தடத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு வாக்குக்கும் ஒரு சிறு துண்டு காகிதத்தை அச்சிடுகிறது. கட்டுப்பாட்டு அலகில் (CU) முடிவுகளைச் சரிபார்க்க வாக்காளர் சரிபார்க்கப்பட்ட காகித தணிக்கை சோதனைகள் (VVPAT) பயன்படுத்தப்படுகின்றன. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற  பொதுத் தேர்தலிலும், அதற்குப் பிறகும், இந்திய உச்ச நீதிமன்றம், தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் இருந்து VVPAT சீட்டுகளை எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டது. இது, ஒரு சட்டசபை தொகுதிக்கு ஐந்து சீட்டுகள் எண்ணப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) எண்ணிக்கை முடிந்ததும் இந்த செயல்முறை நடைபெறுகிறது.


தேர்தல் ஆணைய விதிகளின்படி, தபால் வாக்கு எண்ணிக்கை முதலில் தொடங்கி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை, 30 நிமிடங்கள் கழித்து துவங்குகிறது. இதற்கான, வாக்கு எண்ணிக்கை சுற்றுகளாக நடக்கிறது. இதில், ஒவ்வொரு சுற்றும் ஒரு தொகுதி வாக்குச் சாவடிகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு சுற்றுக்குப் பிறகும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளங்களில் தரவானது புதுப்பிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முடிவுகள் கணினித் திரையில் காட்டப்பட்டு, அனைத்து தரப்பினர் முன்னிலையில் கைமுறையாக பதிவு செய்யப்படுகின்றன. 


4. முடிவுகளை அறிவித்தல் : அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிந்ததும், தேர்தல் நடத்தும் அலுவலர் முழு தொகுதிக்கான முடிவுகளை தொகுப்பார். அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்படும். பின்னர், முறையான அறிவிப்பு செய்யப்படுகிறது. இறுதியாக, இந்திய தேர்தல் ஆணையருக்கு முடிவு தெரிவிக்கப்பட்டது.


5. மறு வாக்கு எண்ணிக்கை கோரிக்கைகள் : மறு வாக்கு எண்ணிக்கைக்கான கோரிக்கை இருந்தால், வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்தாலோ அல்லது பிழையை சந்தேகிக்க சரியான காரணங்கள் இருந்தாலோ தேர்தல் நடத்தும் அலுவலர் அதை பரிசீலிக்கலாம். அனைத்து வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகளை வைத்து மறுபடியும் எண்ணும் பணி நடைபெறும். ஒரு வேட்பாளர் முடிவுகளுடன் உடன்படவில்லை என்றால், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனுவை தாக்கல் செய்யலாம்.


6. தேர்தல் பொருட்களை எண்ணுவதற்குப் பிந்தைய சேமிப்பு : EVMகள், VVPATகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற பொருட்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பாதுகாப்பாக சேமிக்கப்படும். சட்டப்பூர்வ மதிப்பாய்வுகள் அல்லது தணிக்கைகளுக்குத் தேவைப்படும் பட்சத்தில், தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு பிந்தைய தணிக்கை அல்லது மதிப்பாய்வுகளையும் மேற்கொள்ளலாம். இது தேர்தல் செயல்முறையின் நேர்மையை உறுதி செய்வதோடு, ஏதேனும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்கிறது.


7. தொழில்நுட்பம் மற்றும் வெளிப்படைத்தன்மையின் பயன்பாடு : வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் ஆணையம் அதன் இணையதளம் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் நேரடி புதுப்பிப்புகளை வழங்குகிறது. CCTV கேமராக்கள், அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையம் வழங்கும் வழக்கமான விளக்கங்கள் ஆகியவை வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த உதவுகின்றன. அவர்கள் செயல்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையையும் உருவாக்குகிறார்கள்.


தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் 


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்பது வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் ஆகும். அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பு வாக்காளர்களிடம் அவர்கள் யாரை ஆதரித்தார்கள் என்று கேட்பதன் மூலம் தேர்தல் முடிவுகளை இந்த கருத்துக்கணிப்புகள் கணிக்கின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வாக்களிக்கும் நடத்தை மற்றும் போக்குகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன. கருத்துக் கணிப்புகள், மறுபுறம், அரசியல் முன்னுரிமைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் பொதுமக்களின் கருத்தை அளவிட தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் வாக்காளர் ஆதரவில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள அவை உதவுகின்றன. 


 மேற்கூறிய எதுவும் இல்லை (None of the Above(NOTA)) 


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், "மேலே எதுவும் இல்லை" (None of the Above(NOTA)) என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பம் மிகவும் பொதுவானதாகி வருகிறது. நோட்டா என்பது தேர்தலின் போது தங்கள் தொகுதியில் உள்ள எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்களுக்கு வழங்கப்படும் ஒரு விருப்பமாகும். இது அனைத்து வேட்பாளர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக நிராகரிப்பு வாக்கை பதிவு செய்ய அனுமதிக்கிறது.


2013-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது நோட்டா தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. 2013-ஆம் ஆண்டில், பொது உரிமைகளுக்கான மக்கள் சங்கம் vs இந்திய ஒன்றியம் (People's Union for Civil Liberties vs Union of India) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.


வாக்காளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த அனுமதிப்பது ஜனநாயகரீதியாக வாக்களிப்பதற்கான செயல்பாட்டில் ஈடுபடுவதற்கு அதிகமான மக்களை ஊக்குவிக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் தேர்தல் செயல்பாட்டில் நோட்டாவை இணைப்பதற்கான முடிவு நிறுவப்பட்டது. எண்ணியல் முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், நோட்டா விருப்பமானது "உண்மையில் அரசியல் கட்சிகளை ஒரு நல்ல வேட்பாளரை நியமிக்க கட்டாயப்படுத்தும்" என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.


உச்ச நீதிமன்றத்தின் பார்வையைத் தவிர, மக்களிடையே நோட்டா மீது இரண்டு கண்ணோட்டங்கள் உள்ளன. முதலில், இந்திய அமைப்புகளில் நோட்டாவுக்கு தேர்தல் முக்கியத்துவம் இல்லை. நோட்டாவுக்கு ஆதரவாக அதிக வாக்குகள் பெற்றாலும், அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர், சில நேரங்களில் ஒரு வாக்கு மட்டுமே வெற்றியாளராக கருதப்படுவார்.


இரண்டாவதாக, நோட்டா வாக்குகள் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், இது அரசியல் கட்சிகளுக்கான வாக்குகளைக் குறைக்கிறது, அதன் விளைவாக வெற்றி வித்தியாசத்தில் மாற்றத்திற்கு பங்களிக்கிறது.


முடிவாக, அமர்த்தியா சென் வெளியிட்ட அறிக்கையில், ஒரு நாடு ஜனநாயகத்திற்கு ஏற்றதாக மாறாது; அது ஜனநாயகத்தின் மூலம் பொருத்தமாகிறது (country does not become fit for democracy, it becomes fit through democracy) என்று குறிப்பிட்டிருந்தார். நமது ஜனநாயக அமைப்பை மேம்படுத்த, அரசியலமைப்புச் சட்டம் இந்திய சுதந்திர தேர்தல் ஆணையத்தை உருவாக்கியது.  நோட்டா (None of the Above(NOTA)) இப்போது முக்கியமானதாகத் தெரியவில்லை என்றாலும், எதிர்காலத்தில் அது பொருத்தமானதாக இருக்கலாம்.



Original article:

Share: