இந்தியாவின் அதிக மக்கள்தொகை, இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்கிறது -சுப்ரகாந்த் பாண்டா

 இளைஞர்கள் மற்றும் நாட்டில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகளை  அனைவருக்கும் வழங்குவது கடினம். தற்போது இந்தியா எதிர்கொள்ள கூடிய மிக பெரிய  சவாலாக  இது உள்ளது. 


இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடக மாறி வருகிறது. இது உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் இந்தியாவின் மக்கள்தொகை. சராசரி வயது சுமார் 28 ஆண்டுகள், மற்றும் மக்கள்தொகையில் 63% வேலை செய்யும் வயதுடையவர்கள் ஆவர்.


இருப்பினும், 2022-ல், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 55.2% ஆக இருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization (ILO)) அறிக்கையின்படி, உற்பத்தி துறையை விட சேவைத் துறையில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் இந்த குறைந்த விகிதம் சாத்தியம் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு குறிப்பிடுகிறது. எனவே, "வேலையில்லா வளர்ச்சியை" எதிர்கொள்ளவில்லை என்றாலும், இளைஞர்கள் முழுமையாகப் பயனடைய இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


சீர்திருத்த கொள்கைகளை தொடரவும் 


முதலாவதாக, இந்தியா தனது வளர்ச்சியைத் தக்கவைக்க அல்லது விரைவுபடுத்த அதன் தற்போதைய சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும்.  இது பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கை உரையில் இதை குறிப்பிட்டு, உற்பத்தியை மேம்படுத்தி, சந்தைகள் மற்றும் துறைகளை மேலும் திறமையாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.


ஒன்றிய அரசு வணிகத்தை எளிதாக்கியுள்ளது. மாநில அரசுகள் இப்போது உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தச் சீர்திருத்தங்களைத் தொடரவும் விரிவுபடுத்தவும் ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

 

2023-24-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, தொழில்நுட்பம் மூலதனத்தையும் உழைப்பையும் பயன்படுத்துவதை மாற்றியுள்ளது என்று கூறுகிறது. உற்பத்தியின் ஒவ்வொரு அலகுக்கும் தேவையான மூலதனத்தின் அளவு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் ஒரு தொழிலாளிக்கான மூலதனத்தின் அளவு அதிகரித்து வருகிறது. 16-வது நிதிக் குழுவின் தலைவரான பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா (Arvind Panagariya), இந்தியாவில் ஏராளமான உழைப்பாளிகள் இருப்பதால், மூலதனம் சார்ந்த வளர்ச்சி ஏற்படும் என்ற எண்ணம் இந்தியாவுக்கு உகந்தது அல்ல என்று சமீபத்தில் குறிப்பிட்டார்.

 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Micro, Small, and Medium Enterprises (MSMEs)) பல்வேறு பணிகளுக்கு முக்கியமானவை. பழைய தொழிலாளர் சட்டங்களின் அதிக சுமை மற்றும் செலவுகள் காரணமாக பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சியடையவில்லை. பெரிய நிறுவனங்களும் இதே காரணத்திற்காக உழைப்பு மிகுந்த துறைகளைத் தவிர்க்கின்றன. நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தொழிலாளர் குறியீடுகளை அமல்படுத்துவதில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களுக்கு தவறான செய்திகளை அனுப்புகிறது. வலுவான உற்பத்தித் துறைகளைக் கொண்ட சில மாநிலங்கள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதும் முக்கியம்.

 

45% தொழிலாளர்கள் விவசாயத்தில் உள்ளனர். ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 18% மட்டுமே பங்களிப்பதால் உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய அரசின் பங்களிப்பு வருகிறது. விவசாய உற்பத்தியை மேம்படுத்துவது முக்கியம் என்றாலும், அமைப்புசாரா மற்றும் விவசாயம் அல்லாத துறைகளில் உள்ள 19% தொழிலாளர்கள் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்தத் துறைகள் குறைந்த உற்பத்தித் திறன் கொண்டவை. பொம்மைகள், ஆடைகள், சுற்றுலா மற்றும் தளவாடங்கள் போன்ற உயர் வளர்ச்சித் துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியா சிறந்த வேலைகளை உருவாக்க முடியும். திறன்கள் மேம்படும்போது, மதிப்புச் சங்கிலியை நகர்த்துவதற்கும் அதிக ஊதியம் பெறும் வேலைகளை வழங்குவதற்கும் வாய்ப்புகள் உருவாகும். 

 

திறன் வளர்ப்பு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை


எதிர்கால சந்ததியினரை உற்பத்தி செய்யத் தயார்படுத்துவதில் திறன் மிக முக்கியமானது. 15-29 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களில் 4.4% பேர் மட்டுமே முறையாக திறமையானவர்கள் என்று பொருளாதார ஆய்வு காட்டுகிறது. பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான வலுவான கூட்டாண்மை மூலம் அதிக உழைப்பு மற்றும் திறன் குறைபாடு ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்ய வேண்டும். வணிகங்கள் பயிற்சித் திட்டங்களை வடிவமைக்கவும், அனுபவத்தை வழங்கவும் உதவ வேண்டும். கூடுதலாக, திறன் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக இருக்க வேண்டும், நெகிழ்வான அமைப்புகளை கற்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.  


அடிப்படை மற்றும் விமர்சன சிந்தனை திறன்களை வலியுறுத்தும் 2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  புதிய கல்விக் கொள்கை (New Education Policy (NEP)) ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். இருப்பினும், வேகமாக மாறிவரும் உலகில், கொள்கை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும். 


 செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)) மற்றும் இயந்திர கற்றலின் (machine learning (ML)) தாக்கம்


செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் யுகத்தில், அடிக்கடி மேற்கொள்ளப்படும் வேலைகள் மிகவும் ஆபத்தில் உள்ளன. இருப்பினும், இந்த வேலைகளை மேற்பார்வை செய்வதற்கு மனிதனின் உதவி தேவைப்படும்.   செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலின் நன்மைகள் மற்றும் சவால்கள் இரண்டையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். அதன் பயன்பாட்டை வழிநடத்தவும் அதன் நன்மைகளைப் பயன்படுத்தவும் சரியான விதிமுறைகளை உருவாக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் கணிசமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


2030-ஆம் ஆண்டுக்குள் $826.73 பில்லியன் சந்தையாக மாறும் என்று Statista மதிப்பிடுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலில் இந்தியா ஏற்கனவே இரண்டாவது பெரிய திறமைக் நிலையைக் கொண்டுள்ளது என்று நாஸ்காம் குறிப்பிடுகிறது. ஆனால், விநியோகத்திற்கும் தேவைக்கும் இடையே 51% இடைவெளி உள்ளது. எனவே, இது மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இளைஞர்களை குறிப்பிட்ட ஊதியத்துடன் வேலையில் அமர்த்துவது என்பது எளிதானது அல்ல. ஆனால், வயதான ஒருவரை உதவியாளராக அமர்த்துதல் என்பது  சவாலானது.  இந்தியா இதில் சிறப்பான இடத்தில் உள்ளது.  இந்தியாவின் மக்கள்தொகை உலகத்தின் நன்மைக்காகப் பயன்படுத்துவதற்காக ஒரு முழுமையான அணுகுமுறையைப் பயன்படுத்த வேண்டும்.


சுப்ரகாந்த் பாண்டா, இந்தியன் மெட்டல்ஸ் மற்றும் ஃபெர்ரோ அலாய்ஸ் லிமிடெட் (Indian Metals and Ferro Alloys Limited (IMFA) நிர்வாக இயக்குநர்.



Original article:

Share: