பிரிக்ஸ் உச்சி மாநாடு ரஷ்யாவுக்கு நட்பு நாடுகள் இருந்ததை உணர்த்தியது.
16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா (BRICS)) ரஷ்யா கசானில் நடத்தியது. உலகிற்கு, குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு முக்கியமான செய்திகளை அனுப்பியது. 2022-ல் உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவில் நடைபெறும் மிகப்பெரிய மாநாடு இதுவாகும். ஒன்பது பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூடுதலாக, உலகளாவிய தெற்கில் இருந்து 30 தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர்.
உக்ரைன் போரினால் ரஷ்யா "தனிமைப்படுத்தப்படவில்லை" என்று வெளி உலகிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெளிவுபடுத்தினார். உச்சிமாநாட்டு கொள்கைகள் மற்றும் கசான் பிரகடனம் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட பிரிக்ஸ் நாடுகளிடையே பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒரு தலைபட்ச தடைகளை அனைவரும் ஏற்கவில்லை என்பதை இது காட்டுகிறது.
உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்:
வங்கிகளுக்கிடையேயான ஒத்துழைப்பு பொறிமுறையை உருவாக்குதல். தானிய பரிமாற்றத்தை உருவாக்குதல். எல்லை தாண்டிய கட்டண முறை மற்றும் காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்குதல். பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியை விரிவுபடுத்துதல். இந்த ஒப்பந்தங்கள் தற்போதைய உலகளாவிய நிர்வாக அமைப்புகளுக்கு மாற்றுகளைக் கண்டறியும் விருப்பத்தைக் காட்டுகின்றன.
ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ளன. பிரிக்ஸ் என்பது வளர்ந்து வரும் வலுவான பொருளாதார அமைப்பு என்பதை இது காட்டுகிறது. பல பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், தற்போதைய உலகளாவிய சர்வதேச அமைப்புகள் மேற்கத்திய நாடுகளுக்கு அதிக அதிகாரம் வழங்குவதாக அவர்கள் நம்புகிறார்கள்.
பிரிக்ஸ் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மாநாட்டின் நிறைவு நாளில் பிரதமர் மோடி பேசினார். பிரிக்ஸ் என்பது மக்களைப் பிரிக்கும் அமைப்பு அல்ல, மனித குலத்தின் நலனுக்காகச் செயல்படும் ஒரு முக்கியமான அமைப்பு என்று பிரதமர் விவரித்தார். குவாட் மற்றும் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு போன்ற அமெரிக்க தலைமையிலான குழுக்களில் உறுப்பினராக உள்ள ஒரே பிரிக்ஸ் உறுப்பினர் இந்தியா என்பதால், இந்த அறிக்கை சமநிலையை பராமரிப்பதற்குக் மிகவும் முக்கியமானது.
இந்தியா பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தை ஆதரிக்கிறது, போரை அல்ல. போர்க்களம் எதற்கும் தீர்வாகாது என்று பிரதமர் கூறினார். காசாவில் இஸ்ரேல் குறித்த பிரகடனத்தில் வலுவான அறிக்கைகளை இந்தியா ஆதரித்தது மற்றும் பாலஸ்தீன அரசுக்கு ஆதரவை தெரிவித்தது. பிரிக்ஸ் குழு உறுப்பினர்களுக்கு இருதரப்பு பிரச்சினைகளை விவாதிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. டோக்லாம் பகுதியில் இந்திய மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை பிரச்சனைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் சரி செய்யப்பட்டுள்ளன. நடைமுறையில் உள்ள எல்லைக் கோட்டில் ஏற்பட்ட (Line of Actual Control (LAC)) நான்கு ஆண்டு கால மோதலை தீர்க்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்புகளின் போது இந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.