உணவு மானியங்கள் ஒரு முதலீடு, வீண் அல்ல -மிலிந்த் முருகார்

 உணவு மானியங்கள் நலன்புரி நடவடிக்கைகளை ஆதரிக்கிறது. இருப்பினும், மற்ற பகுதிகளில் செலவுக் குறைப்புகள் செய்யப்பட வேண்டும்.


இந்தியா விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (Research and development) அதிக முதலீடு  செய்ய வேண்டும். பயிர் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், காலநிலை எதிர்ப்பு பயிர் வகைகளை உருவாக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த முதலீடு அவசியம். உள்ளீட்டு மானியங்கள் குறித்த நமது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மின்சாரம், உரம் மற்றும் தண்ணீருக்கான மானியங்கள் தேவையற்ற வளங்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. அவை மண் வளம், நிலத்தடி நீர் மட்டம் மற்றும் பயிர்களை பல்வகைப்படுத்தும் முயற்சிகளை எதிர்மறையாக பாதிக்கிறது என்று குலாட்டி கூறுகிறார்.


பொது விநியோகத் திட்டத்தின் (Public Distribution System (PDS)) முழுவடக்க அளவை (coverage) கட்டுப்படுத்துவதன் மூலம் உணவு மானியக் கட்டணத்தைக் குறைக்கவும் அவர் பரிந்துரைக்கிறார். இது விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீட்டை அதிகரித்து வளங்களை உருவாக்கும். விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்ய, அதிக நிதியைப் பெறுவதற்கு செலவுக் குறைப்பு அல்லது புதிய வரிகள் தேவை. உணவு மானியத்தை குறைப்பதன் மூலம் நிதி வரலாம். சில துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு உதவும் உற்பத்தி-இணைக்கப்பட்ட சலுகைகளை குறைப்பதன் மூலமும் இந்த நிதி வரலாம். 


உணவு மானியத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்? இந்த மானியங்கள் விலை ஆதரவு மற்றும் உள்ளீட்டு மானியங்களாக வருகின்றன. இது தேவையற்றது என்று பலர் நினைக்கிறார்கள். இந்த பணத்தை விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உதவியாக இருக்கும். ஆனால், உரம் மற்றும் மின்சார மானியங்களைப் போலவே உணவு மானியத்தையும் பார்க்க வேண்டுமா?


இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India (FCI)) உணவு மானிய முறையைக் கையாளுகிறது. இது நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு மானியங்களை வழங்குகிறது. மின்சாரம் மற்றும் உரம் போன்ற உள்ளீட்டு மானியங்களைவிட, உணவு மானியங்கள் மூலம் விவசாயிகளுக்கு குறைவாகவே கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, உணவு மானியங்கள் உண்மையில் R&D அல்லது மற்ற விவசாய செலவினங்களுடன் போட்டியிடுவதில்லை. 


உணவு மானியங்கள் முக்கியமாக நுகர்வோருக்கு உதவுகின்றன. விவசாயிகளுக்கு அல்ல என்று குலாட்டி கூறுகிறார். உணவு மானியத்தை மற்ற விவசாயிகளின் நலன்களுடன் ஒப்பிடக்கூடாது. அரிசி விவசாயிகள் பொது விநியோக திட்டத்தின் மூலம் மானிய விலையில் அரிசியை பெற்றுவருகின்றனர். அவர்கள் விவசாயிகளாக அல்லாமல் நுகர்வோராக தேவையான உதவி பெறுகிறார்கள். 


உணவு மானியம் பாதி ஏழைகளுக்கு ஓரளவு வருமானத்தை அளிக்கிறது. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி அல்லது கோதுமை கிடைக்கும். இது உள்ளூர் விலைகளைப் பொறுத்து, மாதத்திற்கு சுமார் ரூ. 700-800 வருமானமாகும். ஏழைக் குடும்பங்களுக்கு (ரூ. 20,000க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள்), இது மிகவும் மதிப்புமிக்க பணப் பரிமாற்றம் மற்றும் அவர்களின் உணவுப் பாதுகாப்பை நிலைநிறுத்துகிறது. பருப்பு, பால் போன்ற பிற உணவுகளுக்கு அவர்கள் பணத்தைச் செலவிடலாம். இது பாதிக்கப்படக்கூடிய மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது. விமர்சகர்கள் கூட கோவிட் காலத்தில் அதன் முக்கியத்துவத்தைக் கண்டனர்.


இவ்வளவு பேருக்கு நாம் உதவ வேண்டுமா? பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act’s (NFSA)) பொது விநியோக திட்டத்தை விரிவுபடுத்தியது. இது முந்தைய இலக்கு அமைப்பில் உள்ள சிக்கல்களை சரிசெய்தது. ஏழை மக்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்று பலர் தங்களது கருத்தை தெரிவிக்கின்றனர். யாரையும் தவறவிடாமல் இருக்க பரந்த முழுவடக்கம் உதவுகிறது. அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவதை இது நோக்கமாக கொண்டுள்ளது.


தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்  விளைவுகள் குறித்து குலாட்டி உட்பட பல விமர்சகர்கள் தவறாக புரிந்து கொண்டனர். அதற்கு அதிக தானியக் கொள்முதல் தேவைப்படும் என்று நினைத்தனர். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் பொது விநியோக திட்டத்தின் நிதியை 44.5%-லிருந்து 67% ஆக அதிகரித்தது. ஆனால், ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்பட்ட தானியத்தின் அளவு 7.9 கிலோவிலிருந்து 5 கிலோவாகக் குறைந்துள்ளது. இந்த மாற்றம் கூடுதல் தானியத்தின் தேவையை குறைத்தது. இதன் விளைவாக, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மானியத்தை அதிகரிக்கவில்லை.


விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நல்ல வருமானத்தை அளிக்கிறது. பருப்பு வகைகள், பால், முட்டை, காய்கறிகள் மற்றும் பழங்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஊட்டச்சத்தை மேம்படுத்த இந்த உணவுகள் முக்கியமானவை. தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருவருக்கும் இது நல்ல பலன் அளிக்கிறது. இது குறைந்த வருமானம் கொண்ட தனிநபர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளையும் ஆதரிக்கிறது. இருப்பினும், வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த மற்ற பகுதிகளில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


மிலிந்த் முருகார்எழுத்தாளர் மற்றும் பொருளாதார நிபுணர்




Original article:

Share: