நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாத போது, ​​நிலைக்குழுக்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டெரெக் ஓ பிரையன்

 துரதிர்ஷ்டவசமாக, இந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் (Standing Committees) அரசாங்கங்களால் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 


முதல் மக்களவையில் ஆண்டுக்கு 135 நாட்கள் நாடாளுமன்றம் நடைபெறுகிறது. ஆனால், இப்போது 17-வது மக்களவையில் (2019-24) 55 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. எனவே, மீதமுள்ள 300 நாட்களில் என்ன நடக்கும்? மசோதாக்கள், நிதிநிலை அறிக்கைகள் மற்றும் அமைச்சகங்களின் நீண்ட கால கொள்கைகளை மதிப்பாய்வு செய்தல் போன்ற முக்கிய பணிகளை நிலைக்குழுக்கள் கையாளுகின்றன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்காதபோது இங்கு பெரும்பாலான பணிகள் நிலைக்குழுக்களால் நடக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, விவாதம் மற்றும் விவாதத்தை வரவேற்காத அரசாங்கங்கள் இந்தக் குழுக்களை பலவீனப்படுத்தியுள்ளன.


நீண்ட தாமதத்திற்குப் பிறகு, 24 துறை சார்ந்த நிலைக்குழுக்கள் (Departmentally Related Standing Committees (DRSC)) சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்டு அவற்றிற்கான தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு டி.ஆர்.எஸ்.சி.யிலும் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த 31 உறுப்பினர்களும், மக்களவையில் இருந்து 21 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இருந்து 10 உறுப்பினர்களும் உள்ளனர். 


கடந்த சில வாரங்களில், இந்த குழுக்கள் தங்கள் முதல் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளன. இங்கு, வக்ஃப் மசோதா மீதான விரிவான விவாதம் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் (Joint Parliamentary Committee) நடக்கிறது. இதை துறைசார்ந்த நிலைக்குழுவுடன் (DRSC) இணைத்துக் கொள்ளக்கூடாது. செபி போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள் பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வின் கீழ் வர முடியுமா என்பது குறித்து சில முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. 


இத்தனை செயல்பாடுகள் இருந்தும், நிலைக்குழுக்கள் செயல்பட வேண்டிய அளவுக்கு தீர்க்கமாக செயல்படவில்லை. உதாரணமாக, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் குழு மூன்று முக்கிய அமைச்சகங்களை மேற்பார்வை செய்கிறது. இதில், சிறுபான்மையினர் விவகாரங்கள், பழங்குடியினர் விவகாரங்கள் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் விவகார அமைச்சகம் ஆகியவை ஆகும். இருப்பினும், 2023-ம் ஆண்டில், சில எம்.பி.க்கள் 16 கூட்டங்களில் ஒன்று அல்லது இரண்டில் மட்டுமே கலந்து கொண்டனர்.


24 துறைகளில் இரண்டு குழுக்கள் மட்டுமே பெண்களால் தலைமை தாங்கப்படுகின்றன. 18-வது மக்களவைக்கு பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கான நிர்வாகக் குழுவான பெண்கள் அதிகாரமளிப்பதற்கான நிலைக்குழு இன்னும் அமைக்கப்படவில்லை. இருப்பினும், கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றிற்கான துறை சார்ந்த நிலைக்குழுவில் கடந்த இருபது ஆண்டுகளாக ஒரு பெண் தலைவராக நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


15-வது மக்களவையில், 10 மசோதாக்களில் ஏழு மசோதாக்கள் நிலைக்குழுக்களின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. 17-வது மக்களவைக்கு, அந்த எண்ணிக்கை ஐந்தில் ஒன்றாக குறைந்துள்ளது. தற்போது, மசோதாக்கள் சராசரியாக ஒன்பது அமர்வுகளில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் வெறும் 12 அமர்வுகளில் ஒன்றாக விவாதிக்கப்படுகின்றன. 


நாடாளுமன்றக் குழுக்கள் தீவிரமாக ஆய்வு நடத்தப்பட வேண்டுமானால், அவற்றின் அறிக்கைகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும். அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்படுவதையும் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் ஆவணங்களுக்கான குழு பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. 2018-ம் ஆண்டில், டோக்லாம் விவகாரம் குறித்த வெளியுறவுக் குழு அதன் முடிவுகளை, ஆளும் கட்சியின் எம்.பி.க்களின் எதிர்ப்பு காரணமாக பல மாதங்களாக அறிக்கையை நிறுத்தி வைத்துள்ளது. 


குழுவின் பரிந்துரைகள் அரசை கட்டுப்படுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு, மக்களவை முன்னாள் சபாநாயகரும், புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினருமான சோம்நாத் சாட்டர்ஜி, "இல்லை, அவை கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தார். ஆனால், பரிந்துரையை ஏற்காததற்கு அரசு தகுந்த காரணங்களை தெரிவிக்க விரும்புகிறேன். இது ஒரு மாற்றத்திற்கான நேரம் என்று கட்டுரையாளர் நம்புகிறார். இங்கே ஐந்து குறிப்பிட்ட பரிந்துரைகள் உள்ளன.


ஒன்று : குழுவின் பரிந்துரைகளுக்கு அரசு ஆறு மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. இதை, இங்கிலாந்து நாடாளுமன்ற கீழவையில் (British House of Commons) உள்ளதைப் போல இந்த காலக்கெடு 60 நாட்களாக குறைக்கப்பட வேண்டும்.


இரண்டு : நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வருடம் மட்டுமே குழுக்களில் பணியாற்றுகிறார்கள். இது தொடர்ச்சியான மறுசீரமைப்பு மற்றும் நிபுணத்துவம் இல்லாததற்கு வழிவகுக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிரந்தர நிலைக்குழுக்கள் அல்லது 30 மாத பதவிக்காலம் கொண்ட கேரள சட்டமன்றத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். இதன் அடிப்படையில், நீண்ட பதவிக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மூன்று : பொருளாதாரத்தின் நிலையை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய தேசிய பொருளாதாரத்திற்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும். இந்த அறிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குறுகிய காலத்தில் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். பொதுக் கடன் வாங்குவது, எதிர்கால அரசாங்கங்களை பாதிக்கும் என்பதால், இந்தக் குழுவால் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். 


நான்கு : ஒரு கூட்டாட்சி ஜனநாயகத்தில், அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்றும் போது பாராளுமன்றத்திற்கு குறிப்பிடத்தக்க பொறுப்பு உள்ளது. இந்த மசோதாக்கள் அரசியலமைப்பின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பதை உறுதிப்படுத்த, முன் ஆய்வுக்கு ஒரு அரசியலமைப்பு குழு உருவாக்கப்பட வேண்டும். அரசியலமைப்புத் திருத்தங்களின் நம்பகத்தன்மையை வலுப்படுத்த இந்தக் குழு உதவும்.


ஐந்தாவது : நிதிநிலை அறிக்கைக்கான முந்தைய ஆய்வு மற்றும் மானியங்களுக்கான கோரிக்கை (Demand for Grants (DFGs)) பற்றிய முறையான ஆய்வு ஆகியவை தேர்தல்கள் காரணமாக கவனிக்கப்படக்கூடாது. 2014, 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் மக்களவை அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மானியங்களுக்கான கோரிக்கைகள் (DFG) நிலைக்குழுக்களுக்கு அனுப்பப்படவில்லை. 11-வது மக்களவையில் (1996) ஏற்படுத்தப்பட்ட முன்னுதாரணம் பின்பற்றப்பட வேண்டும். ஒன்றிய நிதிநிலை அறிக்கை கடந்த ஜூலை 22-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 2-ம் தேதி சபை ஒத்திவைக்கப்பட்டு, மானியக் கோரிக்கையை மறுஆய்வு செய்வதற்கான குழுக்களுக்கு ஆகஸ்ட் 26-ம் தேதி மீண்டும் கூடியது.


நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் போன்று குழுக்களுக்கான கூட்டங்களை சன்சாத் தொலைக்காட்சியில் (Sansad TV) நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று சில பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், இது ஒரு நல்ல யோசனை என்று நான் நினைக்கவில்லை. ஏன்? என்பதை மற்றொரு பத்தியில் விவாதிக்க வேண்டும்.


எழுத்தாளர் எம்.பி. மற்றும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் ராஜ்யசபா தலைவராக உள்ளார்.




Original article:

Share: