இந்தியா 2047-ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட நாட்டில் உமிழ்வைத் தானாக முன்வந்து குறைக்க வேண்டும் என்ற குரல் அதிகரித்து வருகிறது.
தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு (Nationally Determined Contributions (NDCs)) தொகுப்பு அறிக்கை மற்றும் ஐக்கிய நாடுகளின் உமிழ்வு இடைவெளி அறிக்கை (United Nations Emission Gap report) ஆகியவை பழைய கதையையே கூறுகின்றன. காலநிலை மாற்ற விவாதங்கள் பெரும்பாலும் விலையுயர்ந்த உணவு மற்றும் பானங்கள் கொண்ட ஆடம்பரமான இடங்களில் நடைபெறும். இவ்வாறு நடைபெறும் விவாதங்கள் உண்மையான மாற்றத்திற்கான முயற்சிகள் அல்ல.
முதல் காலநிலை நெறிமுறை அமல்படுத்தப்பட்ட 26 ஆண்டுகளுக்குப் பிறகும், உமிழ்வு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், தொழில்துறைக்கு முந்தைய நிலையை விட இரண்டு டிகிரி வெப்பம் உயர்வதை தடுக்க முடியவில்லை.
பருவநிலை இலக்குகளை அடைவதில் உலகளாவிய தோல்வியை வலியுறுத்தும் அறிக்கைகள், அடுத்த ஆண்டுக்குள் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டில் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) நாடுகள் புதிய தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDCs) சமர்ப்பிக்க வேண்டும்.
காலநிலை அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் உமிழ்வைக் குறைப்பதற்கும், 2040-ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியத்தை நோக்கி விரைவாக மாறுவதற்கும் NDCகளின் கீழ் நாடு வாரியான இலக்குகளை கணிசமாக அதிகரிக்குமாறு கொள்கை வகுப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறார்கள்.
தொகுப்பு அறிக்கையின் கண்டுபிடிப்புகள் உண்மையானவை. ஆனால், அவை ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போதைய தேசிய காலநிலைத் திட்டங்கள் ஒவ்வொரு பொருளாதாரத்தையும் முடக்கி, ஒவ்வொரு நாட்டிலும் பில்லியன் கணக்கான உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களைச் சிதைப்பதில் இருந்து உலகளாவிய வெப்பத்தைத் தடுக்கத் தேவையானதைவிட குறைவாக செயல்படுகின்றன. தற்போதைய திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் 2030-ஆம் ஆண்டில் 51.5 ஜிகா டன் கார்பன் உமிழ்வானது வெளிப்படும். இது 2019-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2.6% மட்டுமே குறைவாக உள்ளது. இந்த அளவுகளில் பசுமை இல்ல வாயு (Greenhouse gas pollution) மாசுபாடு விதிவிலக்கு இல்லாமல் ஒவ்வொரு நாட்டிற்கும் மனித மற்றும் பொருளாதார அழிவுக்கு வழிவகுக்கும்.
2019-ஆம் ஆண்டை விட 2030-ஆம் ஆண்டிற்குள் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் (GHG) 43% குறைக்கப்பட வேண்டும் என்று காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு கூறியுள்ளது. 2035-ஆம் ஆண்டளவில், நிகர உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் 2019-ஆம் ஆண்டு அளவுகளுடன் ஒப்பிடுகையில் 60% குறைக்கப்பட வேண்டும். காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் தவிர்க்க, இந்த நூற்றாண்டில் உலக வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த இது மிகவும் முக்கியமானது. காலநிலை பேரழிவுகள் விரைவாக மோசமடைவதால், இதில் ஒவ்வொரு பகுதியும் முக்கியமானது.
ஐக்கிய நாடுகளின் உமிழ்வு இடைவெளி அறிக்கை, பசுமை இல்ல வாயு உமிழ்வு அதிகரிப்பு, நூற்றாண்டின் தொடக்கத்தில் வெப்பநிலை 2.6 முதல் 3.1 டிகிரி செல்சியஸ் வரை உயர வழிவகுக்கும் என்று கூறியது. முதல் காலநிலை மாநாடு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. இது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டில் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) கையெழுத்திட வழிவகுத்தது. 2030-ஆம் ஆண்டில் 42% மற்றும் 2035-ஆம் ஆண்டில் 57% மாசு உமிழ்வைக் குறைத்து 1.5 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இடைவெளி அறிக்கை, வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சாத்தியம் என்று கூறுகிறது. சூரிய ஒளி, காற்று மற்றும் காடுகள் விரைவான, பெரிய உமிழ்வு இடைவெளிகளுக்கு வலுவான ஆற்றலை வழங்குகின்றன. இருப்பினும், வலுவான NDCகள் மூலம் ஆதரிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. அரசாங்க அணுகுமுறை, சமூக-பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள், உலகளாவிய நிதிக் கட்டமைப்பின் சீர்திருத்தம், வலுவான தனியார் துறை நடவடிக்கை மற்றும் குறைந்தபட்ச முதலீடு ஆகியவற்றை உள்ளடக்கியது.
UNFCCC நாடுகள் தங்களின் அடுத்த தேசிய காலநிலைத் திட்டங்களைச் சமர்ப்பிக்கவும், அவற்றின் அதிகரிப்பைக் குறைக்காமல், உமிழ்வைக் கணிசமாகக் குறைக்கும் லட்சிய இலக்குகளை அமைக்கவும் அழைப்பு விடுத்துள்ளது. இந்த புதிய இலக்குகள் ஏபிசி சோதனையை (ABC test) சந்திக்க வேண்டும் அவை முழு பொருளாதாரம் மற்றும் இவை அனைத்து பசுமை இல்ல வாயுக்களுக்கும் பொருந்தும். வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரிக்கு கீழே வைத்திருக்க வேண்டும். இலக்குகள் நிறைவேற்றப்படுவதையும் திட்டங்களை செயல்படுத்துவதையும் உறுதிசெய்வதற்கு திடமான விதிமுறைகள், சட்டங்கள் நம்பகமானதாக இருக்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப புதிய தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs) திட்டங்களைக் கோடிட்டுக் காட்டுமாறு நாடுகளை ஐ.நா வலியுறுத்தியுள்ளது. இந்தத் திட்டங்கள் முக்கியமான துறைகள், உள்கட்டமைப்பு மற்றும் காலநிலை பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், அவை தேசிய ஏற்புத்தன்மை திட்டங்களுடன் (National Adaptation Plans) இணைந்திருக்க வேண்டும். தொகுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, இந்தத் திட்டங்கள் 2035-ஆம் ஆண்டிற்கு முன்னோக்கிப் பார்க்க வேண்டும் என்றும், உலகளாவிய அளவில் கணிசமான உமிழ்வுக் குறைப்புகளை அடைய 2030-ஆம் ஆண்டிற்கு மிகவும் வலுவான இலக்குகளை அமைக்க வேண்டும் என்றும் ஐ,நா பரிந்துரைக்கிறது.
நவம்பரில் அஜர்பைஜானின் பாகுவில் நடைபெறும் COP29 மாநாடு, NDCகளுக்கான வரையறைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வளரும் நாடுகளின் தேவைகளுக்கு பொருளாதார கட்டமைப்பை செயல்படுத்துகிறது மற்றும் வளர்ந்த நாடுகளின் அதிக பொறுப்புணர்வை வழங்குகிறது. இது 80% கூட்டு உமிழ்வுகளுக்கு பொறுப்பாகும். COP29 என்பது மத்திய கிழக்கில் அமெரிக்கா ஆதரவுடன் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு ஹமாஸ் மறுபுறம் மற்றும் வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் வருகிறது.
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால், பருவநிலை பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கும். 2016-ஆம் ஆண்டில் அவர் முதன்முதலில் வெற்றி பெற்றபோது, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. தற்போதைய அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் மீண்டும் இணைந்தது. இந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, பாகுவில் நடக்கவிருக்கும் காலநிலை மாநாட்டில் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்பட வேண்டியதில்லை.
எவ்வாறாயினும், வலுவான மற்றும் உண்மையான உமிழ்வு குறைப்பு NDC கட்டமைப்பை நாடுகள் ஒப்புக் கொண்டால், அது ஒரு சாதனையாக இருக்கும். ஏனெனில், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் முதல் NDC கட்டமைப்பானது பல நாடுகளை தன்னார்வ உலகளாவிய ஆட்சியில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது.
சீனா மற்றும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கான தன்னார்வ உமிழ்வு குறைப்பு இலக்குகளை பாகுவில் நடைபெறும் மாநாட்டில் ஒப்புக்கொள்கிறார்களா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். இரு நாடுகளும் வளர்ந்த நாடுகளின் அமைப்பில் முன்னேறும்போது உலகளவில் அதிகரித்து வரும் அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும். 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்த கூக்குரலை முறியடிப்பது உலகளாவிய காலநிலை அரங்கில் எளிதானது அல்ல.