டிஜிட்டல் மோசடியை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது

 டிஜிட்டல் மோசடி குறித்த பிரதமர் மோடியின் எச்சரிக்கை விழிப்புணர்வு. இணைய பாதுகாப்பை வலியுறுத்துகிறது. மோசடிகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க கூட்டு முயற்சிகளை வலியுறுத்துகிறது.


பிரதமர் நரேந்திர மோடியின் எச்சரிக்கை வார்த்தைகள்: "நிறுத்துங்கள், சிந்தியுங்கள் மற்றும் அதை எதிர்கொள்ள செயல்படுங்கள்" (stop, think, and act to counter it).  "டிஜிட்டல் கைது" தவிர்க்க, அரசாங்க நிறுவனங்களின் நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக பாதிக்கப்பட்டவர்களை பணம் செலுத்த வேண்டும் என்று நம்ப வைப்பதன் மூலம் செய்யப்படும் நிதி மோசடி போன்ற டிஜிட்டல் மோசடிகளுக்கு இது பொருந்தும். பிரதமர் தோற்கடிக்க முடியாத ஒரு மந்திரத்தை வழங்கியிருந்தாலும், டிஜிட்டல் மோசடி என்பது பல அடுக்கு பிரச்சினையாகும்.  இது பல்வேறு முனைகளில் கவனத்தை ஈர்க்கிறது. 


முதலவதாக, நிதி பரிவர்த்தனைகள், அடையாளச் சோதனைகள், நிர்வாக சேவைகளுக்கான குறைகளை நிவர்த்தி செய்தல் (grievance redress to governance services) மற்றும் அரசாங்க சேவைகள் போன்ற அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்கள் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. இருப்பினும், மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இந்த மாற்றத்திற்கு இன்னும் பழகி வருகின்றனர். டிஜிட்டல் சேவைகளில் உள்ள நன்மைகள் மற்றும் அபாயங்கள் இரண்டையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. பாதுகாப்பாக இந்த டிஜிட்டல் சேவைகளை எப்படி பயன்படுத்துவது என்பது பலருக்கு முழுமையாக புரியவில்லை.


கூடுதலாக, குறைந்த விழிப்புணர்வு, டிஜிட்டல் இடைமுகங்களில் பிரச்சனை, புதிய கருவிகளைப் பயன்படுத்துவதில் தயக்கம் மற்றும் கடவுச்சொற்கள், பாதுகாப்பு கேள்விகள் மற்றும் பிற அங்கீகார விவரங்களை நினைவில் கொள்ளுதல் போன்ற பிரச்சனைகள் உள்ளது. டிஜிட்டல் மோசடி குழு, குறிப்பாக முதியவர்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகள் குறித்து அறியதாவர்கள், மோசடிக்கு உள்ளாகின்றனர்.


இரண்டாவதாக, மோசடி செய்பவர்களின் அணுகல் மற்றும் ஊடுருவலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. டிஜிட்டல் நிதி மோசடி உட்பட இணைய பாதுகாப்பு மீறல்களை எதிர்த்துப் போராட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. உதாரணமாக, அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் கையாள மத்திய அரசு இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தை (I4C) (Indian Cyber Crime Coordination Centre (I4C)) உருவாக்கியுள்ளது. நாட்டிற்குள் இதுபோன்ற குற்றங்கள் நடக்கும் முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், முரண்பாடு என்னவென்றால், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் பெயரில் செய்யப்பட்ட மோசடி முயற்சிகள் குறித்த எச்சரிக்கைகளை கூட வெளியிட வேண்டியிருந்தது. மூன்றாவதாக, குடிமக்கள் அரசாங்க அமைப்புகளுடன் தொடர்புகொள்வதற்குப் பழக்கமாகிவிட்டனர். இது பெரும்பாலும் தனிப்பட்ட தரவுகளுக்கான கோரிக்கைகளுடன் உடனடி மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி இணக்கத்தை உள்ளடக்கியது. இந்தத் தரவு தேவையில்லாத  சில சமயங்களில் கூட கேட்கப்படுகிறது.


இவற்றை சரிசெய்ய தனியார் மற்றும் அரசு என பல அமைப்புகள் ஒருங்கிணைந்து, மோசடியைத் தவிர்ப்பதற்கான அடிப்படை காரணங்களை பொதுமக்கள் புரிந்துகொள்வதை எளிதாக்க வேண்டும்.  ஒரு வலுவான இணைய பாதுகாப்பு கட்டமைப்பால் விழிப்புணர்வு செய்யும் போது, சாதரண நபரை டிஜிட்டல் தளங்களில் அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது. மேலும், இதற்கு பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளிடையே தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.



Original article:

Share: