புதிய அறிவியல் விருதும், பழைய அரசியல் தேர்வு முறையும்… -வாசுதேவன் முகுந்த்

 ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார் விருதுகள் (Rashtriya Vigyan Puraskar), அறிஞர்களுக்கு வழங்கப்படும் வெகுமதியை மாற்றுவது என்பது அவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகத் தெரிகிறது.

 

2023-ஆம் ஆண்டில், அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் நிறுவனங்கள் மற்றும் துறைகளால் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்ட பல விருதுகளை அரசாங்கம் நீக்கியது. இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் பலர் இதற்கு ஆதரவளித்தனர். நிறைய விருதுகள் உள்ளன, பெரும்பாலானவற்றிற்கான தேர்வு செயல்முறை தெளிவாக இல்லை என்றும், லாட்டரி முறைப்  போல விருதுகள் வழங்கபடுவதாகவும் வாதிட்டனர். 

 

இந்த விருதுகளுக்குப் பதிலாக, ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் (Rashtriya Vigyan Puraskar) விருதினைஅரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இது தெளிவான தகுதி விதிகளுடன் குறிப்பிட்ட பிரிவுகளில் சிறிய, அதிக கவனம் செலுத்தும் விருதுகளின் தொகுப்பாகும். மிக முக்கியமாக, விஞ்ஞானிகள் தலைமையிலான ஒரு சிறப்புக் குழு, ஒவ்வொரு ஆண்டும் விருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் என்று அரசாங்கம் கூறியது. வெளிப்படைத்தன்மை மற்றும் அரசாங்கத்தின் ஈடுபாடு இல்லாமை பற்றிய விஞ்ஞானிகளின் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் இந்த மாற்றங்களை செய்தது.


ஒரே இரவில் மாற்றங்கள் 


இந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி, ராஷ்டிரிய விக்யான் புரஸ்கார் விருதுகளின் முதல் வெற்றியாளர்களை அரசாங்கம் அறிவித்தது. முதன்மை அறிவியல் ஆலோசகருக்கு (Principal Scientific Adviser (PSA)) குழு அனுப்பிய பட்டியலில் இருந்த சில விஞ்ஞானிகளின் பெயர் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் விடுபட்டது தெரியவந்தது. முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்திற்கும் பத்திரிகை அலுவலகத்திற்கும் இடையில் பட்டியல் மாற்றப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பியது. அத்தகைய மாற்றங்களை செய்யும் அதிகாரம் அமைச்சர்களுக்கு இருப்பதாக  மக்கள் கருதினர். 


இந்த பட்டியல் குறித்து பத்திரிகையாளர்கள் முதன்மை அறிவியல் ஆலோசகரிடம் கேட்டபோது, ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார் இணையதளத்தில் உள்ள அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக அவர் கூறினார். இது மற்றொரு பிரச்சினை குறித்த கவலைகளை எழுப்பியது. இணைய காப்பகத்தைப் பயன்படுத்தி இன்னும் பார்க்கக்கூடிய பக்கத்தின் முந்தைய பதிப்பு வேறுபட்டது. 


முதன்மை அறிவியல் ஆலோசகரின் அறிக்கைக்கு முந்தைய நாள் இரவு அது ஒரு புதிய விதியைச் சேர்க்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் (Rashtriya Vigyan Puraskar) குழுவின் தலைவர் இறுதி பட்டியலை அறிவியல் அமைச்சகத்திற்கு பரிந்துரைப்பார் என்று புதிய விதி கூறியது. இதற்கு முன்பு, விருது பெறுபவர்களை நேரடியாக இறுதி செய்யும் அதிகாரம் குழுத் தலைவருக்கு இருந்தது. 


அரசாங்கம் பழைய விருதுகளுக்குப் பதிலாக புதிய விருதுகளைக் கொண்டு வந்தது. அது அதற்கு அதிக கட்டுப்பாட்டைக் கொடுத்தது. இது வெறும் யூகமாக இருந்தாலும், விருதுகளின் முக்கியத்துவம் அவற்றைப் பெறுபவர்களால் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இறுதிப் பட்டியலில் விடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம் இருந்தது.  அவர்கள் சில அரசாங்கக் கொள்கைகளை நேரடியாக எதிர்த்தனர். 


இந்த விஞ்ஞானிகளுக்கு ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது கிடைத்திருந்தால், விருதுகளும், அரசும் மேலும் பெருமை பெற்றிருக்கும்.  இருப்பினும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தும் விஞ்ஞானிகளால் அச்சுறுத்தப்படுவதைக் காட்டியுள்ளது. இந்த விஞ்ஞானிகள் எதிர்ப்பு மனுக்களில் கையெழுத்திட்டிருந்தனர் மற்றும் அரசாங்க கொள்கைகள் மற்றும் சட்டங்களை விமர்சிக்கும் கட்டுரைகளை வெளியிட்டனர். 


இந்த அச்சுறுத்தலை அகற்ற அரசாங்கம் பலமுறை முயற்சித்தும் தோல்வியடைந்துள்ளது. இந்த அச்சுறுத்தல் அதன் கொள்கைகள் மற்றும் உலகக் கண்ணோட்டத்திற்கு, குறிப்பாக கல்வித்துறையிடம் இருந்து வரும் எதிர்ப்பில் இருந்து வருகிறது. பெரும்பான்மை மதத்திட்டத்தால் இந்த இடைவெளியை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. நிதி அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (provisions of the Foreign Contributions (Regulations) Act) மூலம் நிதியைக் குறைத்தல், மோசமான அறிவியல் அல்லது போலி அறிவியலை ஊக்குவித்தல், நிர்வாகத்தில் தலையிடுதல் மற்றும் வன்முறையைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் அவர்கள் முயற்சித்துள்ளனர். 


வன்முறைக்கான பல எடுத்துக்காட்டுகளில், ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் 2019-ஆம் ஆண்டு காவல்துறை சோதனை, 2020-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் எல்கர் பரிஷத் வழக்கில் பேராசிரியர்கள் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டது ஆகியவை அடங்கும். கூடுதலாக, கௌரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோரின் கொலைகள் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள் ஆகும்.


மாற்று உதவித்தொகை  (‘Alternative’ scholarship)


அரசாங்கத்தின் கடுமையான முயற்சிகள் நல்ல புலமையின் மதிப்பு மற்றும் மாணவர்களை மனப்பான்மையை பற்றி புரிதல் பற்றாக்குறை  இருப்பது தெளிவாக தெரிகிறது. இவை மாற்று உதவித்தொகை தளங்களின் மூலம்  தெரிகிறது. இந்த தளங்களின் நோக்கம் பெரும்பான்மை மத அரசியல் திட்டத்தின் கொள்கைகளை ஆதரிப்பதாகத் தெரிகிறது. 


ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது ஒரு முக்கிய கூற்று. இருப்பினும், இது ஆரியர்கள் மேற்கு ஆசியாவிலிருந்து குடியேறியவர்கள் என்பதைக் காட்டும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எதிராக உள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் பிற ஆரம்பகால குடியிருப்புகள் ஆரியர்கள் வருவதற்கு முன்பே இருந்தன என்பதையும் வெளிப்படுத்துகின்றன. 


2021-ஆம் ஆண்டில், கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்  “இந்திய அறிவு அமைப்புகள் மையம்” சிந்து சமவெளி தளங்களில் இருந்து சின்னங்களின் கற்பனையான விளக்கங்களை உருவாக்கிய "வேத நாட்காட்டி" ஒன்றை வெளியிட்டது.  உதாரணமாக, மொஹெஞ்சொ-தரோவில் உள்ள புகழ்பெற்ற பசுபதி முத்திரை "வேத-புராண சிவன்" என்று மறுவடிவமைத்தது.

 

2022-ஆம் ஆண்டில், ஸ்ரீ ரவிசங்கர் அந்த ஆண்டு புதிய மாணவர்களைச் சேர்ப்பார் என்று கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் அறிவித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, பல்கலைக்கழக மானியக் குழு, இந்தியாவில் அதன் வேத காலத்தில் ஜனநாயக அரசாங்கம் இருந்ததாகக் கூறி, அரசியலமைப்பு தினத்தில் விரிவுரைகளை நடத்துமாறு பல்கலைக்கழகங்களைக் கேட்டுக் கொண்டது.


கடந்த ஆண்டு, புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் "மருத்துவ அறிவியல் மற்றும் இந்திய வேதங்கள்" பற்றிய விவாதங்களில் கலந்து கொள்ளுமாறு ஊழியர்களைக் கேட்டுக்கொண்டது. அதே நேரத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவரான எஸ்.சோமநாத், இயந்திர கற்றலுக்கு சமஸ்கிருதம் மிகவும் பொருத்தமானது என்று பரிந்துரைத்தார். கூடுதலாக, மண்டி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் லக்ஷ்மிதர் பெஹெரா, இறைச்சி சாப்பிடுவதால் நிலச்சரிவு ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டினார். 


வெளியில் இருந்து கட்டுப்பாட்டைப் பெறத் தவறிய பாரதிய ஜனதா கட்சி, உள்ளிருந்து அறிஞர்கள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது. ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார் விருதுகள் (Rashtriya Vigyan Puraskar), அவர்களின் வெகுமதி முறையை கையகப்படுத்துவதன் மூலம் அறிஞர்களை அரசாங்க நலன்களுடன் இணைக்கும் முயற்சியாகத் தோன்றுகிறது.  


சில ஆண்டுகளில், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (Anusandhan National Research Foundation) விருது வழங்கும் செயல்முறையை எடுத்து, நாட்டின் அனைத்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. எவ்வாறாயினும், விருதுகளுக்கான தேர்வு செயல்முறை குறித்து அறிஞர்கள் தொடர்ந்து பேசுவார்கள் என்று நம்புகிறோம்.  இது அரசாங்கத்தின்  கட்டுப்பாடுகளை குறைக்க உதவும்.




Original article:

Share: