இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கு எதிராக சீனாவில் பொதுமக்களின் உணர்வு அதிகரித்து வருவதாக தெரிகிறது. இது ஏன் நடந்தது?, சீன பொதுமக்களில் ஒரு பகுதியினர் என்ன சொல்கிறார்கள்? என்பதை புரிந்து கொள்வதும் முக்கியம்.
சீனாவுடனான இந்தியாவின் பொருளாதார உறவு "மிகவும் நியாயமற்றது மற்றும் மிகவும் சமநிலையற்றது" (very unfair and very unbalanced) என்று சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறினார். மேலும், சீனாவில் சந்தை அணுகலானது அதே அளவில் இந்தியாவிற்கு இல்லை என்றும், அதே சமயம் சீனா இந்திய சந்தையில் சிறந்த அணுகலை அனுபவிக்கிறது என்றும் அவர் விளக்கினார். செப்டம்பரில் ஜெனிவாவில் உள்ள பாதுகாப்பு கொள்கைக்கான உலகளாவிய மையத்தில் ஜெய்சங்கர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. 2024-ம் நிதியாண்டில், இந்தியாவிற்கான சீன இறக்குமதிகள் (Chinese imports to India) 100 பில்லியன் டாலரைத் தாண்டியது. அதே சமயம், சீனாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி (India’s exports to China) சுமார் $16 பில்லியன் மட்டுமே ஆகும்.
அதே நேரத்தில், சீனாவில் மக்கள் உணர்வு இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கு எதிராக மாறுகிறது. இது கேள்வியை எழுப்புகிறது. ஏன் இந்த மாற்றம் ஏற்பட்டது? மேலும், சீன மக்களிடையே பல்வேறு குழுக்கள் என்ன சொல்கிறார்கள்?
இதைப் புரிந்து கொள்ள, சீன மக்கள் பொதுவாக இந்தியாவை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம்.
சீனாவில் படிக்கும் மாணவர்கள் உட்பட பல இந்தியர்கள், சீன ஊடகங்களில் இந்தியாவை எதிர்மறையாக சித்தரிப்பதால் அடிக்கடி ஆச்சரியப்படுகிறார்கள். இருப்பினும், பொதுவான சீன மக்களின் கருத்தைப் புரிந்து கொள்ள, சமூக ஊடகங்கள் ஒரு மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்க முடியும்.
சீன சமூக ஊடகம் என்பது, ஒரு துடிப்பான மற்றும் உற்சாகமான களமாகும். அங்கு பயனர்கள் முக்கிய சர்வதேச விவகாரங்களில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்கின்றனர். இந்த விவாதங்களில் இந்தியாவும் மற்றும் இந்தியர்களும் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்கள்.
பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட ஊடக வல்லுநர் மு சுன்ஷான் (Mu Chunshan), இருபதாண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டு விவகாரங்களை அறிக்கை செய்து பகுப்பாய்வு செய்து வருகிறார். பொதுவாக, சீன மக்கள் இந்தியா மீது தீய எண்ணத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று அவர் நம்புகிறார். இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் எல்லைப் பிரச்னை முக்கிய பிரச்னையாக உள்ளது.
"மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இந்தியா சீனாவை முற்றுகையிட்டு கட்டுப்படுத்தியுள்ளது. இந்த நோக்கத்திற்காக இந்தியா குவாட் அமைப்பில் இணைந்துள்ளது என்பது சீனாவின் கருத்தாகும். இருப்பினும், பெரும்பாலான சீன மக்கள் இந்தியா, அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருப்பதை விரும்பவில்லை என்றாலும், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் உலகளாவிய தெற்கு உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகளிடையே இந்தியா ஒரு சமநிலையை பராமரிக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
பல சீன இணையவாசிகள், இந்தியர்களை பொறாமையுடன் பார்க்கிறார்கள். ஏனென்றால், பெரும்பாலான இந்தியர்கள் வாழ்க்கையைப் பற்றிய கவலையற்ற அணுகுமுறையைக் கொண்டிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். மேலும், அதே நேரத்தில் சீனர்கள் இந்தியர்கள் மீது அடிக்கடி புகார் கூறுகிறார்கள் என்று பரவலான செய்தி இணையத்தில் கருத்து பரவுகிறது. டங்கல் (Dangal), 3 இடியட்ஸ் (3 Idiots), பஜ்ரங்கி பைஜான் (Bajrangi Bhaijaan) போன்ற பாலிவுட் படங்கள் சீனாவில் மில்லியன் கணக்கில் வசூலித்ததற்கு இது ஒரு காரணமாகும்.
பல சீனர்கள் பாராட்டும் மற்ற விஷயங்கள் என்னவென்றால், இந்திய பில்லியனர்கள் சீனாவை விட பணக்காரர்களாகத் தெரிகிறார்கள். மேலும், இந்தியா தனது செவ்வாய் கிரக திட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. எவ்வாறாயினும், இந்தியாவின் பாலியல் வன்கொடுமை புள்ளிவிவரங்களும் (high rape statistics), சாதி அமைப்பும் (caste system) அடிக்கடி கண்டனத்திற்கு உள்ளாகின்றன.
சீனா மீதான விரோத மனப்பான்மை
இந்த பரந்த போக்குகளுக்கு மத்தியில், நிபுணர்கள், சமூக ஊடக கருத்துக்கள் மற்றும் செய்தி இணையதளங்களின் 'ஆசியருக்கு கடிதப்' (letter to the editor) பிரிவுகள் ஒரு புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளன. சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதாரங்களை துண்டிக்க வேண்டுமா என்பதன் அடிப்படையில் அமைகிறது. குறிப்பாக, இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து விவாத மையமாக அமைந்துள்ளது. சமீபத்திய ப்ளூம்பெர்க் (Bloomberg) அறிக்கைக்குப் பிறகு, இந்த விவாதம் தீவிரமடைந்தது. மின்சார வாகன (EV) தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என்று சீனா தனது கார் தயாரிப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது என்று அது கூறியது.
சீனாவில், டிஜிட்டல் செய்தி நாளிதழில் எழுதிய இந்தியாவுக்கு தொழில் திறனை ஏற்றுமதி செய்யாதீர்கள் (‘Don’t export industrial capacity to India) என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், இந்தியாவில் செயல்படும் பல சீன நிறுவனங்களான Xiaomi, OPPO மற்றும் Vivo போன்றவற்றை இந்திய அரசாங்கம் "பாதிக்கக்கூடிய" (victimising) மற்றும் "துன்புறுத்தக்கூடியது" (harassing) என்று கட்டுரையில் கூறுகிறது. இந்தியாவில் டிக்டோக் (TikTok) போன்ற சீன பயன்பாடுகள் மற்றும் வணிகங்களுக்கான தடையையும் அது குறிப்பிட்டுள்ளது.
இந்த கட்டுரை குறித்த சீன வாசகர்களின் கருத்துக்களையும் அணுகுமுறைகளையும் பார்த்தால், அவற்றை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
பொதுவாக வெளிநாடுகளில் உள்ள சீன வணிகங்களின் அணுகுமுறை மற்றும் நடவடிக்கை குறித்து ஒரு தொகுப்பாக கருத்துக்கள் விமர்சிக்கப்படுகின்றன. "சீன நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதிக்கு இன்னும் கடுமையான கட்டுப்பாடு மற்றும் மறு ஆய்வுக்கான செயல்முறையாக இல்லை. ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் ஒரு முழுமையான தடையில்லா சந்தைக்கான பொருளாதாரத்தை நம்பவில்லை. ஆனால், சீனர்கள் இன்னும் அதை நம்பி ஏமாற்றப்படுகிறார்கள். இது கடமை தவறியதா?" என்று ஒரு வாசகர் எழுதினார்.
இதைக் கருத்தில் கொள்ளுங்கள், "சீனாவில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் சில தலைவர்கள் தங்கள் தனிப்பட்ட சாதனைகளை மட்டுமே கருத்தில் கொள்கிறார்கள். மேலும், சீனாவில் லாபத்தை மட்டுமே பார்க்கும் சில தனியார் முதலாளிகள், தடுக்க முடியாத ஆசைகள் மற்றும் பேராசை நிறைந்தவர்கள் ஆவார். அவர்களின் பார்வையில், குறுகிய கால லாபம் எல்லாவற்றையும் விட முக்கியமானது" ஆகும்.
ஆட்டோமொபைல்கள், புதிய எரிசக்தி தொழில்நுட்பங்கள், அதிவேக ரயில் போன்ற துறைகளில் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு சீனா உறுதியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசாங்கம் சட்டமன்ற நிலையிலிருந்து ஒழுங்குபடுத்த வேண்டும்" என்றார்.
இதில் புரிந்துகொள்ளக்கூடிய மற்றொரு கருத்துக்கள், குறிப்பாக இந்தியாவை மையமாகக் கொண்டுள்ளன. பல சீனர்கள் தொழில்துறை திறன்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை சங்கிலிகளை உருவாக்க உதவினால், அவர்கள் இந்தியாவுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறார்கள். இருப்பினும், சீனாவின் தொழில்துறை விநியோகச் சங்கிலிக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படவும் இது உதவும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஹேமந்த் அட்லகா புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சீன மொழி பேராசிரியராக உள்ளார். அவர் டெல்லியில் உள்ள சீன ஆய்வுகள் நிறுவனத்தில் (ICS) துணைத் தலைவராகவும் கௌரவ உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.