தேர்தல் கண்காணிப்பு மற்றும் வழக்கமான அரசாங்க நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஒரு ஆதாரமாக மாதிரி நடத்தை விதி (Model Code of Conduct (MCC)) உள்ளது. சட்டத்தை திறம்பட செயல்படுத்தும் தேர்தல் ஆணையம் தான் உண்மையில் தேவை.
மாதிரி நடத்தை விதிகளை (MCC) கைவிட வேண்டிய நேரம் இது. இவை தீங்கற்ற புனைகதை மட்டுமல்ல என்பதை உணர வேண்டும். இது கவனச்சிதறல் மற்றும் இடையூறுக்கான ஆயுதமாக செயல்படுகிறது. இந்த ஜனநாயக கருவியை குறைவாக மதிப்பிட்டதற்கு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பொறுப்பேற்க வேண்டும்.
அக்டோபர் 24 அன்று, ஹிமந்த பிஸ்வா சர்மா ஜாம்ஷெட்பூரில் தேர்தல் உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், “நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பாபர் போன்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை வெளியேற்ற வேண்டிய நேரம் இது" என்று குறிப்பிட்டிருந்தார். முதலில், மாதிரி நடத்தை விதியின் (MCC) முதல் வாக்கியத்தில், “எந்தவொரு கட்சியும் அல்லது வேட்பாளரும் தற்போதுள்ள வேறுபாடுகளை மோசமாக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது. அவர்கள் பரஸ்பர வெறுப்பை உருவாக்கவோ அல்லது வெவ்வேறு வர்க்க மற்றும் சமூகங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது.
குறிப்பாக, மதம் அல்லது மொழி சார்ந்த விதத்தில்” என்று முதல் பத்தி I.1 குறிப்பிடுகிறது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட்டின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி பாஜக தலைவர் ஒருவர் அவதூறாகப் பேசியதையும் மேலும், ஜார்கண்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் பாஜக தலைவர் சீதா சோரனுக்கு எதிராக கூறிய கருத்துகளும் விவாதம் பெற்றுள்ளன. சட்டசபை தேர்தலுக்கு முன், மகாராஷ்டிரா அரசு மொத்தம் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்தது. இந்தத் தொகை வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் வெளிப்படையான லஞ்சமாகவே பார்க்கப்படுகிறது. இதைத்தான் மாதிரி நடத்தை விதி (MCC) குறிப்பிடுகிறது.
இந்த வழக்குகளில் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஒழுங்குமுறை அறிவிப்பை வெளியிட்டாலும், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. பொதுவாக, மாதிரி நடத்தை விதிகளில் (MCC) தடைசெய்யப்பட்ட செயல்பாடுகள் விளக்கப்படலாம். தேர்தல் காலங்களில், இந்த நடவடிக்கைகள் எந்தக் கண்காணிப்பும் இன்றி தொடர்ந்து நடைபெறும். வாக்குகளைப் பெறுவதற்காக வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டுதல், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தல், மது விநியோகம், பொது நிதி மற்றும் அதிகாரப்பூர்வ ஊடகங்களை தவறாக பயன்படுத்துதல், தேர்தல் ஆதாயம் பெற அதிகாரப்பூர்வ பதவிகளை தவறாக பயன்படுத்துதல் ஆகியவையை உள்ளடக்கியது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.10 முதல் 50 கோடி வரை செலவு செய்கிறார்கள்.
இது அதிகாரப்பூர்வ உச்ச வரம்பான ரூ.40 லட்சத்தை விட அதிகம். கூடுதலாக, இதில் கட்சி செலவழித்த பணம் சேர்க்கப்படவில்லை. ஆளுங்கட்சியின் நியாயமற்ற குற்றச்சாட்டை சுமத்துதல் என்பது முக்கியமான செயலாக இருக்கும். தனிப்பட்ட கருத்துகணிப்புகளுக்கு அப்பாற்பட்ட ஆதாரங்களை நீங்கள் விரும்பினால், இந்தியத் தேர்தல்களைக் கண்காணிப்பதற்கான தன்னிச்சை குழுவின் (Independent Panel) அறிக்கை 2024 உதவிகரமான கண்ணோட்டத்தை வழங்குகிறது. மாதிரி நடத்தை விதிகளின் (MCC) வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதை இது காட்டுகிறது.
மாதிரி நடத்தை விதிகளின் (MCC) இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் அவநம்பிக்கையான எதிர்வினையாகத் தோன்றலாம். ஒரு விதி புறக்கணிக்கப்பட்டால், அதைக் கைவிடுவதற்குப் பதிலாக அதைச் செயல்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். தன்னிச்சைக் குழுவின் (Independent Panel) அறிக்கை மாதிரி நடத்தை விதியை பலப்படுத்துவதையும் பரிந்துரைக்கிறது.
இந்த தவறான பகுத்தறிவு மற்றும் அரசியல் செயலற்ற தன்மை ஆகியவை மாதிரி நடத்தை விதியை தொடர வைக்கின்றன. மாதிரி நடத்தை விதிகளை (MCC) என்பது நம் நாட்டில் தேர்தல்களை நிர்வகிக்கும் முக்கிய விதி அல்ல. தேர்தல் ஆணையம் (EC) உண்மையிலேயே சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய விரும்பினால், அதற்கு மாதிரி நடத்தை விதிகள் தேவையில்லை.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951, கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான விதிகளை கோடிட்டுக் காட்டுகிறது. கூடுதலாக, தேர்தல்களின் போது எந்தவொரு பொது நடவடிக்கைகள், பேச்சுகள் அல்லது கூட்டங்களுக்கு சாதாரண சட்டங்கள் பொருந்தும். இந்தச் சட்டங்கள் லஞ்சம், வற்புறுத்தல், அரசு ஊழியர்களின் தவறான நடத்தை மற்றும் வர்க்க அல்லது வகுப்புவாத வெறுப்பைத் தூண்டுவதைத் தடுக்கின்றன. மேலும், அரசியலமைப்பின் பிரிவு 324 தேர்தல்களை மேற்பார்வையிடுவதற்கும் வழிநடத்துவதற்கும் தேர்தல் ஆணையத்திற்கு குறிப்பிடத்தக்க அதிகாரங்களை வழங்குகிறது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
நமக்கு ஏன் மாதிரி நடத்தை விதிகள் (MCC) தேவை? முதலாவதாக, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் என்பது சட்டத்தைப் பின்பற்றுவது மட்டுமல்ல. அவர்கள் சட்டத்தின் நோக்கத்தையும் மதிக்க வேண்டும். இந்த நோக்கத்தை விதிமுறைகளின் தொகுப்பாக வெளிப்படுத்த மாதிரி நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டது. இந்த விதிமுறைகள் அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவற்றை மீறுவது தார்மீக விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
குறிப்பாக, ஒரு கண்ணியமான பிரச்சாரத்தின் அவசியத்தை எடுத்துரைப்பதன் மூலம் தற்போதுள்ள விதிகளை மாதிரி நடத்தை விதிகள் சேர்க்கிறது. தேர்தலுக்கு முன்பும், தேர்தலின் போதும் ஆளும் கட்சிக்கு நியாயமற்ற வலியுறுத்தல்கள் இருக்கலாம் என்பதையும் அது அங்கீகரிக்கிறது.
இரண்டாவதாக, தேர்தல் சட்ட மீறல்களை நிவர்த்தி செய்வது ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கும். இதற்கு உயர் மட்ட ஆதாரம் தேவை, சிக்கல்களை விரைவாகத் தீர்ப்பது கடினம். மாதிரி நடத்தை விதிகள் தேர்தல் விதிமீறல்களை எளிதாகக் கண்டறிய உதவுகிறது மற்றும் அவற்றை விரைவாகத் திருத்த அனுமதிக்கிறது. மூன்றாவதாக, தேர்தல்களின் போது எந்த நீதித்துறை தலையீட்டையும் அரசியலமைப்பு தடை செய்கிறது. மாதிரி நடத்தை விதிக்கான அமலாக்க அமைப்பாக தேர்தல் ஆணையம் (EC), இந்த காலகட்டத்தில் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சுதந்திரமான வழியை வழங்குகிறது.
பல ஆண்டுகளாக, தேர்தல் ஆணையம் (EC) இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் ரத்து செய்துள்ளது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் பாதுகாவலராக இருப்பதற்குப் பதிலாக, தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை (MCC) ஒரு நீண்ட விதி புத்தகமாக மாற்றியுள்ளது. இந்த புத்தகம் 250 பக்கங்களுக்கு மேல் நீளமானது மற்றும் சட்ட விவரங்களுடன் 150 க்கும் மேற்பட்ட சுற்றறிக்கைகளைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, கவனக்குறைவாக கையாளப்படுகிறது.
கட்சிக் கொடிகளை வைப்பது மற்றும் தேர்தல் கூட்டங்கள் நடைபெறும் நேரம் குறித்த அர்த்தமற்ற விதிகளை கடுமையாக அமல்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். அரிதாகவே சரிபார்க்கப்படும் செலவு அறிக்கைகளால் வேட்பாளர்களும் கட்சிகளும் வழக்கமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதற்கிடையில், வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குதல், சமூக ஊடகங்களை கையாளுதல் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் பாரபட்சமான நடத்தை போன்ற நியாயமான போட்டியின் மிகக் கடுமையான மீறல்கள் குறித்து தேர்தல் ஆணையம் அக்கறை காட்டவில்லை. மேலும், கட்சிகளையும் அவற்றின் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், தனது தார்மீக அதிகாரத்தை தேர்தல் ஆணையம் இழந்துவிட்டது.
உதாரணமாக, மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் மோடியின் "ஊடுருவல்" (ghuspaithia) கருத்துக்காக தேர்தல் ஆணையம் (EC) நோட்டீஸ் அனுப்பத் தவறிவிட்டது. தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்காமல், இந்திய தேர்தல் ஆணையம் அதன் சொந்த நடத்தை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பானது ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்பியுள்ளது.
இது 543 மக்களவைத் தொகுதிகளில் 536 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் பதிவான வாக்குகளுக்கும் இந்த இயந்திரங்கள் (அஞ்சல் வாக்குச் சீட்டுகளைத் தவிர்த்து) எண்ணும் வாக்குகளுக்கும் இடையே ஏன் வேறுபாடு இருந்தது? இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.
தேர்தல் கண்காணிப்பு மற்றும் வழக்கமான அரசாங்க நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கான ஒரு எளிதான காரணமாகவும், கவனச்சிதறலுக்கான ஆதாரமாகவும் மாதிரி நடத்தை விதிகள் மாறியுள்ளது. தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அன்றே மாதிரி நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருகிறது.
எனவே, மகாராஷ்டிராவைப் போலவே, தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை தாமதப்படுத்தலாம் மற்றும் பரந்த அளவிலான தேர்தல் முறைகேடுகளை சட்டப்பூர்வமாக விலக்கலாம். உள்ளூர் அதிகாரிகள் குடிமக்களுக்கு தேவையான வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க ‘மாதிரி நடத்தை விதி அமலில் உள்ளது (achaar sanhita lagoo hai)’ என்ற நிர்வாக விடுமுறையை எடுக்கலாம். மிக முக்கியமாக, இந்த சட்டப் புனைவு, ஒரு நடுவரைக் கொண்டு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் என்ற மாயையை பராமரிக்கிறது.
தற்போதுள்ள மாதிரி நடத்தை விதிகள் தேவையில்லை. மாறாக, தேர்தல் சட்டங்களில் சில விதிகளை மட்டுமே சேர்க்க வேண்டும். நமக்கு உண்மையிலேயே தேவை ஒரு வலுவான இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆகும். ஒவ்வொரு தேர்தல் முடிவும் சர்ச்சைக்குரிய நமது அண்டை நாடுகளைப் போல் இல்லாமல், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய மற்றும் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நிலையான அமைப்பு தேவை.
யோகேந்திர யாதவ், ஸ்வராஜ் இந்தியா மற்றும் பாரத் ஜோடோ அபியானின் (Swaraj India and national convenor of Bharat Jodo Abhiyaan) தேசிய ஒருங்கிணைப்பாளர்.