இந்தியா - இத்தாலி இராஜதந்திர செயல் திட்டம் 2025-29-ன் முக்கியத்துவம் - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான விரிவான ஐந்தாண்டு கூட்டு இராஜதந்திர செயல் திட்டத்தை (2025-29) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் அறிவித்தனர். இந்தியா-இத்தாலி இராஜதந்திர கூட்டாண்மையை விரிவுப்படுத்துவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் இரு தலைவர்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான உயர்மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து இந்தத் திட்டம் அமைந்துள்ளது.



செயல்திட்டத்தில் உள்ள சில முக்கிய அம்சங்கள்:


பாதுகாப்பு: தகவல் பகிர்வு, வருகைகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை எளிதாக்க வருடாந்திர கூட்டு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் கூட்டுப் பணியாளர்கள் பேச்சுவார்த்தைகள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இயங்குதன்மை மற்றும் இராஜதந்திர சீரமைப்பை மேம்படுத்த ஒத்துழைப்பை அதிகரித்தல் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் பொது மற்றும் தனியார் துறை கூட்டாண்மையை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.


பொருளாதார ஒத்துழைப்பு:  தொழில்துறை கூட்டாண்மை, தொழில்நுட்ப மையங்கள் மற்றும் பரஸ்பர முதலீடுகளை ஊக்குவித்தல், வாகன, குறைக்கடத்திகள், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்.


இணைப்பு: இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட கட்டமைப்பில் கடல்சார் மற்றும் நில உள்கட்டமைப்பிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.


அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு: முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், தொலைத்தொடர்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற துறைகளில் இரு நாடுகளிலும் தொழில்நுட்ப மதிப்பு சங்கிலி கூட்டாண்மைகளை உருவாக்குதல்.


விண்வெளி:  இத்தாலிய விண்வெளி முகமை (Italian Space Agency) மற்றும் இஸ்ரோ (ISRO) இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, புவி கண்காணிப்பு, சூரிய இயற்பியல் மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் பொதுவான சந்திரனை ஆராயும் திட்டங்களுக்கு  முக்கியத்துவம் அளித்தல்.


இடம்பெயர்வு மற்றும் நகர்வு: சட்டப்பூர்வ இடம்பெயர்வு அமைப்புகளை ஊக்குவித்தல், அத்துடன் நியாயமான மற்றும் வெளிப்படையான தொழிலாளர் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகள் மற்றும் இந்தியாவில் சுகாதார நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் இத்தாலியில் அவர்கள் வேலைவாய்ப்பு பெறுவது ஆகியவற்றை ஒரு முன்னோடித் திட்டம் உள்ளடக்கும்.


ஆற்றல் மாற்றம்: உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (Global Biofuels Alliance) மற்றும் சர்வதேச சூரிய கூட்டணியை (International Solar Alliance) வலுப்படுத்துதல்.


உங்களுக்குத் தெரியுமா?:


  • இந்தியாவும் மற்றும் இத்தாலியும் 2,000 ஆண்டுகள் பழமையான தொடர்புகளைக் கொண்ட பண்டைய நாகரிகங்களில் இத்தாலிய துறைமுக நகரங்கள் மசாலா நறுமணப் பொருட்கள் வணிகத்தில் (spice route) முக்கியமான வர்த்தக மையங்களாக இருந்தன.  வெனிஸ் நகர வணிகரான மார்க்கோ போலோ 13-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்குப் பயணம் செய்து தனது அனுபவங்களைப் பற்றி எழுதினார்.


  • சென்ற நூற்றாண்டில், நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் 1926-ஆம் ஆண்டில் மே-ஜூன் மாதங்களில் இத்தாலிக்கு பயணம் செய்தார். இதற்கு ரோம் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியர் கார்லோ ஃபார்மிச்சி ஏற்பாடு செய்தார்.


  • மகாத்மா காந்தி 1931-ஆம் ஆண்டு டிசம்பரில் லண்டனில் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் ரோம் சென்றார். இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்கள் இத்தாலியப் புரட்சியாளர் மாஜினியின் படைப்புகளைப் படித்தார்கள்.


  • 2012-ஆம் ஆண்டில், அந்த ஆண்டு பிப்ரவரியில் இரண்டு இந்திய மீனவர்களைக் கொன்றதாக இரண்டு இத்தாலிய கடற்படையினர் குற்றம் சாட்டப்பட்டபோது இருதரப்பு உறவுகள் ஒரு பின்னடைவை சந்தித்தன. 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அப்போதைய பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் இந்த பிரச்சனையை எழுப்பியதால் இந்த வழக்கு வெடித்தது. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், இருவரும் இத்தாலிக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். 2015-ஆம் ஆண்டில்,  இரு நாடுகளும் இந்த வழக்கை ஹேக்கில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்திற்கு (Permanent Court of Arbitration (PCA)) கொண்டு சென்றன.  உயிர் இழப்புக்கு இழப்பீடு வழங்குமாறு இத்தாலிக்கு PCA உத்தரவிட்டது, மேலும், இத்தாலி ஒப்புக்கொண்ட 100 மில்லியனை ரூபாயை செலுத்திய பின்னர் வழக்குகள் முடிக்கப்பட்டன.  இறுதியாக, இந்த வழக்கு 2021 இல் முடிக்கப்பட்டது.


  • 2011-12-ஆம் ஆண்டில், அரசு ஆதரவு பெற்ற பாதுகாப்பு நிறுவனமான ஃபின்மெக்கானிகாவின் நெறிமுறையற்ற பரிவர்த்தனைகள் குறித்து இத்தாலிய அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் விசாரணையில், குழுமத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் இந்தியாவுடன் கையெழுத்திட்ட 3,500 கோடி ரூபாய்க்கு அதிகமான ஊழலில் ஈடுபட்டது.


  • செப்டம்பர் 2022-ஆம் ஆண்டில், தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மார்ச் 2-3, 2023 அன்று, பிரதமர் மெலோனி இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இத்தாலி முதல் உயர்மட்ட பயணம் இதுவாகும். இந்த பயணத்தின் போது, மெலோனியும் மோடியும் பசுமை பொருளாதாரம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மாற்றம், பாதுகாப்பில் இணைந்த உற்பத்தி (co-production) மற்றும் இணைந்த கண்டுபிடிப்பு (co-innovation) மற்றும் நீல பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்.




Original article:

Share: