இந்தியாவில் எல்லை நிர்ணயத்தின் நோக்கம் என்ன, நியாயமான தேர்தல் பிரதிநிதித்துவத்திற்கு அது ஏன் முக்கியமானது? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. சில வடகிழக்கு மாநிலங்களில் எல்லை நிர்ணயம் ஏன் தொடங்கப்படவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2020-ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் உத்தரவு இருந்தபோதிலும், அதற்கான பணியைத் தாமதப்படுத்தும் முந்தைய அறிவிப்பை ரத்து செய்தது.


2. இதற்கான அறிக்கை ரத்து செய்யப்பட்டவுடன், எல்லை நிர்ணய நடவடிக்கையை தொடங்கியிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.


3.   தாமதம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி சஞ்சய் குமார், குடியரசுத் தலைவரின் உத்தரவுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


4. இந்திய தலைமை நீதிபதி (CJI) சஞ்சீவ் கண்ணா, சட்டத்தை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஒத்திவைப்புக்கான அறிவிப்பு (deferment notice) ரத்து செய்யப்பட்டவுடன், செயல்முறைக்கான சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.


5. அசாமில் ஏற்கனவே எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மற்ற மாநிலங்களில் எல்லை நிர்ணயத்தின் நிலை தெளிவாக குறிப்பிடவில்லை.


6.   உச்ச நீதிமன்றம் அடுத்த விசாரணையை ஜனவரி 2025-ம் ஆண்டுக்கு நிர்ணயித்தது. இதற்கான, எல்லை நிர்ணயத்தின் முன்னேற்றம் குறித்த புதுப்பிப்புகளை வழங்குமாறு ஒன்றிய மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது.


உங்களுக்குத் தெரியுமா?


1. மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளை மறுவடிவமைக்கும் செயல்முறையே எல்லை நிர்ணயம் ஆகும். இந்த செயல்பாட்டில், ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையும் மாறக்கூடும். சமமான மக்கள் தொகை பிரிவுகளுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை வழங்குவதும், புவியியல் பகுதிகளை நியாயமான முறையில் பிரிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும். இது எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆதாயம் அடையாமல் தடுக்க உதவுகிறது. எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உத்தரவுகளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது.


2. முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கான முதல் பணி, 1950-51-ல், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்பட்டது. 1952-ம் ஆண்டில் எல்லை நிர்ணய ஆணைக்குழு சட்டம் (Delimitation Commission Act) நிறைவேற்றப்பட்ட பின்னர், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் எல்லை நிர்ணய ஆணைக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆணையங்கள் 1952, 1963, 1973 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டன.


3.  1981 மற்றும் 1991 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை. ஒரு மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் மாநிலத்தின் மக்கள்தொகைக்கும் இடையிலான விகிதம், முடிந்தவரை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற விதியின் காரணமாக இது நடந்தது. இது திட்டமிடப்படவில்லை என்றாலும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் அதிக அக்கறை இல்லாத மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெறலாம் என்று அர்த்தம். மறுபுறம், குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவித்த தென் மாநிலங்கள் குறைவான இடங்களுடன் முடிவடையும். இந்தக் கவலைகள் காரணமாக, 2001-ம் ஆண்டு வரை எல்லை நிர்ணயத்தை இடைநிறுத்துவதற்காக 1976-ம் ஆண்டில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது.




Original article:

Share: