தேசிய கல்வி தினம் : 'பெருமைமிக்க இந்தியர் மற்றும் முசல்மான்' மௌலானா ஆசாத் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 3 விசயங்கள் -யாஷி

 இந்தியாவின் கல்வி நிறுவனங்களை உருவாக்கியதில் மௌலானா ஆசாத்தின் முக்கிய பங்கு என்ன? ஜின்னா ஏன் அவரை காங்கிரஸின் 'முஸ்லிம் ஷோபாய்' (a Muslim showboy) என்று அழைத்தார்?  


சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான, மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவம்பர் 11-ம் தேதி தேசிய கல்வி தினமாக அனுசரிக்கப்படுகிறது. 


மௌலானா ஆசாத் ஒரு பத்திரிகையாளர், சுதந்திர போராட்ட வீரர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார். இவர், சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் வகுப்புவாத பதட்டங்கள் மோசமடைந்தது. இந்தியா பிரிவினையை நோக்கிச் சென்றபோது, முகமது அலி ஜின்னா அவரை காங்கிரஸின் "முஸ்லீம் ஷோபாய்" (a Muslim showboy) என்று அழைக்கும் அளவுக்கு ஆசாத் இந்து முஸ்லீம் ஒற்றுமையில் உறுதியாக இருந்தார். 


இந்த மதச்சார்பற்ற, அறிவார்ந்த மற்றும் மனிதநேயத் தலைவரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று அம்சங்கள்: 


1. பிரிவினை விவகாரத்தில் மௌலானா ஆசாத் நிலைப்பாடு, ஜின்னாவுடன் முரண்பாடு 


இந்துக்களும் முஸ்லீம்களும் பிளவுபட்டு, பிரிவினைக்கான முஸ்லீம் லீக்கின் (Muslim League) அழைப்பு அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், மத நல்லிணக்கத்தில் மௌலானா ஆசாத்தின் நம்பிக்கை வலுவாக இருந்தது. இந்திய முஸ்லிம்கள், இந்திய மற்றும் முஸ்லீம் ஆகிய இரு அடையாளங்களையும் பெருமையுடன் தழுவிக்கொள்ள முடியும் என்று அவர் நம்பினார். 1940-ம் ஆண்டில் ராம்கரில் அவர் ஆற்றிய உரையில் இந்தக் கருத்து தெளிவாகக் காணப்படுகிறது. 


மௌலானா ஆசாத் தனது உரையில், "'நான் ஒரு முசல்மான், அதற்காக பெருமைப்படுகிறேன். இஸ்லாத்தின் 1,300 ஆண்டுகால பாரம்பரியம் எனது மரபுரிமை. இந்த பாரம்பரியத்தில் ஒரு சிறு பகுதியை கூட நான் இழக்க மாட்டேன். நானும் இந்தியன் என்பதிலும், நான் ஒன்றுபட்ட இந்திய தேசியத்தின் ஒரு பகுதியாக இருப்பதிலும் பெருமை கொள்கிறேன். இந்த உன்னத நாட்டிற்கு நான் இன்றியமையாதவன். நான் இல்லாமல், இந்தியாவின் மகத்துவம் முழுமையடையாது. இந்தியாவை உருவாக்குவதில் நான் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று உரையில் குறிப்பிட்டிருந்தார்.


அவரது கருத்துக்கள் முஸ்லிம் லீக்கின் வகுப்புவாத அரசியலுக்கு நேரடியாக சவால் விடுகின்றன. இதனால், ஜின்னா அவர் மீது மேலும் மேலும் அதிருப்தி அடைந்தார். ஜூலை 1940-ம் ஆண்டில், ஆசாத் ஜின்னாவுக்கு, அவர் முஸ்ஸீம் லீக்கின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து, "எந்தவொரு தற்காலிக ஏற்பாடும் இரு தேசத் திட்டத்தின் அடிப்படையில் அல்ல" என்று எழுதினார்.


அதற்கு ஜின்னா பதிலடி கொடுத்தார் : இது பற்றி உங்களுடன் விவாதிக்க மறுக்கிறேன். முஸ்லீம் இந்தியாவின் நம்பிக்கையை நீங்கள் முற்றிலும் இழந்துவிட்டீர்கள். காங்கிரஸை தேசியம் போல காட்டவும், வெளிநாடுகளை ஏமாற்றவும் உங்களை முஸ்லிம் பிரதிநிதியாக காங்கிரஸ் தலைவராக்கியிருப்பதை உங்களால் உணர முடியவில்லையா? நீங்கள் முஸ்லிம்களையோ இந்துக்களையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. [பாக். ஜர்னல் ஆஃப் இன்டர்நேஷனல் விவகாரங்கள், தொகுதி 5, வெளியீடு 4 (2022)]. 


முரண்பாடாக, ஆங்கிலமயமாக்கப்பட்ட ஜின்னாவை விட ஆசாத் மிகவும் நம்பிக்கையுடையவராகவும், நடைமுறைப்படுத்தும் முஸ்லிமாகவும் இருந்தார். 


2. இந்தியாவின் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் மௌலானா ஆசாத்தின் பங்கு 


கல்வி அமைச்சராகவும், அதற்கு முன்பும், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (Indian Institutes of Technology (IIT)), பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)), ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia), இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science (IIS)) போன்ற நிறுவனங்களை உருவாக்குவதில் ஆசாத் பங்கு வகித்தார். 


”மௌலானா ஆசாத்: ஒரு வாழ்க்கை, ஒரு சுயசரிதை” என்ற நூலின் ஆசிரியரும், வரலாற்று ஆசிரியருமான எஸ்.இர்பான் ஹபீப் கூறுகையில், “ஆசாத் தனது பதவிக் காலம் முடியும்போது கல்விச் செலவு ரூ.1 கோடியில் இருந்து ரூ.30 கோடியாக உயர்த்தப்படுவதற்கு காரணமாக இருந்தார். மேலும், வயது வந்தோருக்கான கல்வியறிவு ஒரு தீவிரமான பிரச்சினையாக அவர் கருதினார். 


3. ஆங்கிலத்தை அவசரமாக ஒழிக்க முடியாது என்று அவர் ஏன் நம்பினார் 


ஆங்கிலேயர்கள் வெளியேறியவுடன் இந்தியர்கள் ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று மௌலானா ஆசாத் முதலில் நம்பினார். இருப்பினும், பின்னர் அவர் தனது கருத்தை மாற்றிக்கொண்டார். செப்டம்பர் 14, 1949 அன்று அரசியல் நிர்ணய சபையில் ஒரு உரையில், அதற்கான காரணத்தை "ஆங்கிலத்துக்குப் பதிலாக அரசாங்க அமர்வுகளிலிருந்து இந்துஸ்தானி மொழியைக் கேட்க வேண்டும் என்று சட்டசபையில் முயற்சித்த முதல் ஆள் நான் தான் என்று சொன்னால் அது பொருத்தமற்றதாக இருக்காது. 


ஆனால், இந்த விஷயத்தின் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, வெறும் உணர்ச்சிகளாலும் விருப்பங்களாலும் இந்த விஷயத்தை யதார்த்தத்திற்குக் கொண்டு வர முடியாது என்ற முடிவுக்கு நான் வர வேண்டியிருந்தது. இருப்பினும், இரண்டு பெரிய தடைகள் நம் வழியில் நிற்கின்றன” என்று விளக்கினார்.


அவர் மேலும் விரிவாகக் கூறிப்பிட்டதாவது : "முதல் சிரமம் என்னவென்றால், ஆங்கிலத்தை உடனடியாக மாற்றக்கூடிய தேசிய மொழி எதுவும் இல்லை. இதை ஒப்புக்கொள்வது வேதனையானது என்றாலும், நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது நாட்டில் பொதுவான மொழி இல்லை என்பது இரண்டாவது தடையாக உள்ளது. ஆங்கிலத்திற்குப் பதிலாக நமது தேசிய மொழியை உடனடியாகக் கொண்டுவர முயற்சித்தால், நாடு முழுவதும் ஒரே மாதிரியாகப் படிக்கப்படும் மற்றும் எழுதப்படும் மொழி எதுவாக இருக்க முடியும்?” 


அவசரமாக ஆங்கிலத்தை மாற்றினால், “இதன் மூலம் கல்வித் தரம் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்றும், அது மாணவர்களின் கல்வித் திறனுக்குச் சாதகமாக இருக்காது என்றும் நான் அஞ்சுகிறேன்” என்றார்.




Original article:

Share: