ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம் (Student Direct Stream (SDS)) விசா பயணத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர்ந்தோரின் நுழைவைக் கட்டுப்படுத்த கனடா அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், மாற்று விண்ணப்ப செயல்முறைகளும் ஒரு வழியை வழங்குகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான நேரடி நுழைவுக்கு உதவும் ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம் (Student Direct Stream (SDS)) திட்டத்தை நவம்பர் 8 முதல் நிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. இது குறித்து சிலர் கவலைகளை எழுப்பியிருந்தாலும், மாணவர் விசாக்களைப் பெறுவதற்கான விரைவான பாதையை இத்திட்டம் வழங்கியதாகவும் மற்றும் மாற்று முறையிலும் சில நன்மைகள் இருப்பதாகவும் ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
SDS நிறுத்தப்படுவது மாணவர்களுக்கு அர்த்தம் என்ன?
SDS திட்டம், மாணவர்களின் விசா விண்ணப்பங்களின் செயலாக்கத்தை விரைவுபடுத்த உதவியது. இது 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இரண்டாம் நிலை நியமன கற்றல் நிறுவனங்களுக்கு (Designated Learning Institutions (DLI)) விண்ணப்பிக்கும் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இவை சர்வதேச அளவில் மாணவர்களுக்கு கற்பிக்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் ஆகும்.
இது ஒரு வருட கல்விக் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்துவது மற்றும் நிதிக்கான ஆதாரமாக $20,635 மதிப்புள்ள கட்டாய உத்தரவாத முதலீட்டு சான்றிதழை (Guaranteed Investment Certificate (GIC)) வழங்குவது போன்ற கடுமையான தேவைகளைக் கொண்டிருந்தது. திட்டம் நிறுத்தப்பட்ட போதிலும், மாணவர்கள் தங்கள் விசா வாய்ப்புகளின் அடிப்படையில் கணிசமாக பாதிப்புகளை எதிர்கொள்ள மாட்டார்கள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
கனடா விசாவிற்கு மாணவர்கள் இன்னும் விண்ணப்பிக்க முடியுமா?
ஆம். மாணவர்கள் இன்னும் விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள் இன்னும் வழக்கமான, SDS அல்லாத விண்ணப்ப பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம். இது தற்போது மிகவும் நெகிழ்வானது. உதாரணமாக, மாணவர்கள் ஒரு வருட முழு கல்விக் கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்த வேண்டியதில்லை. ஆனால், ஆறு மாத பயிற்சிக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் மற்றும் அவர்களின் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட போதுமான நிதி இருப்பதை தெரிவிக்க வேண்டும். இது இதுவரை அதிக விலையுயர்ந்த SDS தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத மாணவர்களுக்கு இந்த செயல்முறையை மிகவும் குறைவான கட்டணத்தில் கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. கட்டாய உத்தரவாத முதலீட்டு சான்றிதழ் (GIC) இன்னும் நடைமுறையில் இருந்தாலும், அது கட்டாயமில்லை.
பஞ்சாப்பை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் விசா ஆலோசகரான அமன் பர்மர், நல்ல சுயவிவரங்களைக் கொண்ட பல மாணவர்களால் முழு ஒரு வருடக் கட்டணத்தையும் செலுத்த முடிவதில்லை. மேலும், இது ஜெர்மனி அல்லது ஐரோப்பா போன்ற பிற இடங்களைத் தேர்வு செய்ய வழிவகுத்தது. ஆனால் இப்போது, கனடாவில் படிப்பது மிகவும் எளிதாகிவிட்டது. கனடாவில் தங்கள் கல்வியைத் தொடர விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மாணவர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வி சுயவிவரத்தின் அடிப்படையில் கனடாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியிலிருந்து ஏற்றுக்கொள்ளும் கடிதத்தை (Letter of Acceptance (LOA)) பெற வேண்டும் என்றும், தங்கள் வாய்ப்புகளை அதிகரிக்க கல்விக் கட்டணம் செலுத்தும்போது நிறுவனம் அமைந்துள்ள மாகாணத்திலிருந்து சான்றளிப்புக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆங்கில மொழித் தேர்வுகள் IELTS மற்றும் PTE, முறையே குறைந்தபட்சம் ஆறு தொகுதிகளில் 60 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை SDS செயல்முறையின் ஒரு பகுதியாக இருந்தன. இருப்பினும், SDS முறை அல்லாத மாற்று விண்ணப்ப செயல்முறையின் கீழ், மாணவர்கள் இந்த குறிப்பிட்ட மதிப்பெண்களை பூர்த்தி செய்யாவிட்டால் அவர்களுக்கு இன்னும் மேலும் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. 6 மற்றும் 5.5 அமைப்பு முறையில் ஒட்டுமொத்த மதிப்பெண் பெற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஒரு நல்ல மதிப்பெண் எப்பொழுதும் ஒரு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்தை வலுப்படுத்தும். கனடாவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆங்கிலப் புலமைக்கான வேறு ஏதேனும் சான்று மற்றும் வலுவான கல்விப் பதிவு ஆகியவை மாணவர்களின் சுயவிவரத்தை மேலும் வலுப்படுத்தும்.
முதலாவதாக, மாணவர்கள் இனி, முழு வருட கல்விக் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தத் தேவையில்லை என்றாலும், கனடாவில் தங்குவதற்கு நிதி ரீதியாக ஆதரவளிக்க முடியும் என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். மாற்று விண்ணப்ப செயல்முறையின் கீழ் உள்ள நல்ல செய்தி என்னவென்றால், இதற்கு தேவையான கட்டணம் மிகக் குறைவு. பலருக்கு சுமார் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை போதுமானது. அதே நேரத்தில் SDS முறை இதை விட நான்கு மடங்கு தொகையைக் கோரியது.
கூடுதலாக, மாணவர்கள் ஒரு சிறந்த விசா விண்ணப்பத்தை உறுதி செய்ய வேண்டும். இதன் பொருள் ஒரு வலுவான கல்விப் பதிவு மற்றும் அவர்களின் உயர் கல்விக்கான திட்டத்தை வைத்திருப்பது என்பதாகும். விசா அதிகாரிகள் தீவிரமாக இத்தைகைய மாணவர்களைத் தேடுகிறார்கள் மற்றும் கனடாவில் தொழில்முறை வெற்றியை அடைவதற்கான யதார்த்தமான திட்டத்தைக் கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடா ஆண்டுதோறும் வழங்கப்படும் படிப்பு விசாக்களின் எண்ணிக்கையில் ஒரு வரம்பை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இந்த முறை மிகவும் தாராளமானது. கனடா 2027-ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் சர்வதேச அளவில் 3,05,000 மாணவர்களுக்கு உயர்கல்வி விசாக்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு மாணவர் உயர்கல்வி அனுமதி ஒதுக்கீட்டுடன் ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திற்கு விண்ணப்பித்தால், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மாணவர்கள் பெரும்பாலும் SDS பிரிவின் கீழ் அதிக மறுப்புகளை எதிர்கொண்டனர். அவர்களின் சுயவிவரங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், SDS கீழ் நிராகரிக்கப்படுவர். ஒரு மாணவரின் கல்வியில் ஏதேனும் இடைவெளி இருந்தால், அவர்கள் வலுவான விளக்கத்தை வழங்க தயாராக இருக்க வேண்டும்.
பஞ்சாபைச் சேர்ந்த ஆலோசகரான தீரத் சிங் என்பவர், "ஒரு வலுவான விசா சுயவிவரம் எப்போதும் முக்கியமானது என்றும் கனடா அரசாங்கம் மாணவர் விசா முறையில் மாற்றங்களைச் செய்துள்ளதே தவிர, அது மாணவர் விசாக்களுக்கான கதவுகளை மூடவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.