காலநிலை மாநாட்டின் COP-29வது பதிப்பு நவம்பர் 11 அன்று அஜர்பைஜானில் தொடங்கியது.
COP29 உச்சிமாநாடு, நவம்பர் 11 திங்களன்று, அஜர்பைஜானின் பாகுவில் தொடங்குவதால், புதிய கூட்டு அளவிடப்பட்ட இலக்கு (New Collective Quantified Goal (NCQG)), பாரிஸ் ஒப்பந்தம் (Paris Agreement), கியோட்டோ ஒப்பந்தம் (Kyoto Protocol), இழப்பு மற்றும் சேதம் (loss and damage) மற்றும் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Contributions (NDC)) போன்ற முக்கிய அறிவிப்புகளை உருவாக்குகின்றன.
COP என்பது ஐக்கிய நாடுகள் சபையால் (UN) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஒரு சர்வதேச காலநிலை கூட்டமாகும். COP என்பது கட்சிகளின் மாநாட்டைக் குறிக்கிறது. இதில், "கட்சிகள்" என்பது காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாடு (UN Framework Convention on Climate Change (UNFCCC)) எனப்படும் சர்வதேச ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 198 நாடுகளைக் குறிக்கிறது. காலநிலை அமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் மனிதனின் தலையீட்டைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக இந்த நாடுகள் உறுதியளித்துள்ளன.
கியோட்டோ ஒப்பந்தம் (Kyoto Protocol) ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். இது, பணக்கார மற்றும் தொழில்மயமான நாடுகள் தங்கள் பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தை குறிப்பிட்ட அளவுகளில் குறைக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் 1997-ம் ஆண்டில் ஜப்பானின் கியோட்டோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 2005–ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. கியோட்டோ ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக 2020-ம் ஆண்டில் முடிவடைந்தது. இது பாரீஸ் ஒப்பந்தத்தால் (Paris Agreement) மாற்றப்பட்டது. இது காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைக்கான முக்கிய ஒப்பந்தமாக மாறியது.
2015-ம் ஆண்டில் பாரிஸில் நடந்த COP-21 மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், அதிகரித்து வரும் உலகளாவிய சராசரி வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு ஏற்ப 195 நாடுகளை முதன்முறையாக சட்டப்பூர்வமாக இணைப்பதால், இது ஒரு முக்கிய ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது.
பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், தொழில்துறைக்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது இந்த நூற்றாண்டில் சராசரி உலக வெப்பநிலையை "2 டிகிரி செல்சியஸுக்கு" கீழே வைத்திருக்க உலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சியஸ் அளவில் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடரவும் உறுதியளித்துள்ளனர். இது ஒரு முக்கியமான வரம்பாக உள்ளது. அதற்கு மேல் வெப்பநிலை உயர்ந்தால், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மிகவும் மோசமாக இருக்கும். இதில் அடிக்கடி மற்றும் கடுமையான வறட்சி, வெப்ப அலைகள் மற்றும் மழைப்பொழிவு ஆகியவை அடங்கும்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், நிலக்கரியை படிப்படியாகக் குறைக்கவும், புதைபடிவ எரிபொருளை படிப்படியாக வெளியேற்றவும் அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை ஒப்பந்தத்தில் நிலக்கரி பற்றி நேரடியாக குறிப்பிடுவது இதுவே முதல் முறையாகும். கார்பன் சந்தைகள் தொடர்பான தடைக்கான தீர்வையும் இந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.
இத்தகைய சந்தைகளின் அடிப்படையில், கார்பன் வரவுகளை விற்கும் மற்றும் வாங்கும் வர்த்தக அமைப்புகளாகும். அவை, பசுமைஇல்ல வாயு உமிழ்வை தங்கள் இலக்குகளுக்கு உட்பட்டு குறைக்கும் போது, நாடுகள் அல்லது தொழில்கள் கார்பன் வரவுகளைப் பெறுகின்றன. இந்த கார்பன் வரவுகளை பணத்திற்கு ஈடாக அதிக ஏலதாரருக்கு வர்த்தகம் செய்யலாம்.
கார்பன் வரவுகளை வாங்குபவர்கள் கரிம உமிழ்வு குறைப்புகளை தங்கள் தனிப்பட்ட இலக்காக காட்டலாம் மற்றும் அவர்களின் குறைப்புக்கான இலக்குகளை அடைய அவற்றைப் பயன்படுத்தலாம்.
ஒரு வர்த்தகம் செய்யக்கூடிய கார்பன் வரவு என்பது, ஒரு டன் கார்பன்-டை-ஆக்சைடை குறைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட அல்லது தவிர்க்கப்பட்ட மற்றொரு பசுமை இல்ல வாயுவின் சமமான தொகைக்கு சமம். கரிம உமிழ்வைக் குறைக்க, ஒதுக்கப்பட்ட அல்லது தவிர்க்க ஒரு வரவு பயன்படுத்தப்பட்டவுடன், அது ஒரு ஈடாக மாறும். இந்த கட்டத்தில், இதை இனி வர்த்தகம் செய்ய முடியாது.
பசுமை இல்ல வாயுக்கள் (Greenhouse gases (GHGs)) வளிமண்டலத்தில் வெப்பத்தை சிக்க வைக்கும் வாயுக்கள் ஆகும். அவை சூரிய ஒளியைக் கடந்து சென்று வளிமண்டலத்தின் வழியாகச் செல்ல அனுமதிக்கின்றன. இதனால், வெப்பம் வெளியேறுவதைத் தடுக்கின்றன. பசுமை இல்ல வாயுக்களின் முக்கிய ஆதாரம் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதாகும். இந்த எரிபொருளில் நிலக்கரி, டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை அடங்கும். கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை மிகவும் பொதுவான பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றாகும்.
நிகர-பூஜ்ஜியம், என்பதை கார்பன்-நடுநிலை (carbon-neutrality) என்றும் அழைக்கப்படுகிறது. இது, ஒரு நாடு அதன் கரிம உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்கும் என்று அர்த்தமல்ல. மாறாக, சுற்றுச்சூழலில் வெளியிடப்படும் உமிழ்வுகளின் அளவு வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்படும் பசுமைஇல்ல வாயுக்களின் அளவிற்கு சமம் என்று அர்த்தம். இங்கு, காடுகள் போன்ற கார்பன் மூழ்கிகளை (carbon sinks) உருவாக்குவதன் மூலம் இந்த நீக்கம் நிகழலாம். கார்பன் டை ஆக்சைடு அகற்றுதல் (carbon dioxide removal (CDR)) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் இதைச் செய்யலாம்.
2018-ம் ஆண்டில், காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) 2050-ம் ஆண்டை காலக்கெடுவாக நிர்ணயித்தது. அதற்குள் உலகம் நிகர பூஜ்ஜியத்தை எட்ட வேண்டும். புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த இந்த இலக்கு முக்கியமானது.
கார்பன் கவரப்படுதல் மற்றும் சேமிப்பு (Carbon capture and storage (CCS)) என்பது கார்பன்-டை-ஆக்சைடை கைப்பற்றி நிலத்தடியில் சேமிக்கும் ஒரு செயல்முறையாகும். இது முக்கியமாக புதைபடிவ எரிபொருள் ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது கார்பன்-டை-ஆக்சைடு காற்றில் செல்வதை நிறுத்த உதவுகிறது. CCS என்பது கார்பன்-டை-ஆக்சைடு அகற்றுதலில் (CDR) இருந்து வேறுபட்டது. CDR என்பது வளிமண்டலத்திலிருந்து நேரடியாக கார்பனை வெளியே எடுப்பதை உள்ளடக்குகிறது.
கார்பன் கவரப்படுதல், பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) என்பது கார்பன் கவரப்படுதல் மற்றும் சேமிப்பின் (CCS) மேம்பட்ட பதிப்பாகும். இது கார்பனைப் பிடிப்பது மட்டுமல்லாமல், ஆல்கஹால், உயிரி எரிபொருள்கள், பிளாஸ்டிக் அல்லது கான்கிரீட் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யவும் பயன்படுத்துகிறது.
இது காலநிலை மாற்றத்தை சமாளிக்க பூமியின் இயற்கை அமைப்புகளில் வேண்டுமென்றே பெரிய அளவிலான தலையீடு ஆகும். கார்பன் டை ஆக்சைடு அகற்றுல் (CDR) உட்பட பல முன்மொழியப்பட்ட புவிசார் நுட்பங்கள் உள்ளன. இருப்பினும், அவற்றின் செயல்திறன் மற்றும் சாத்தியமான பக்க விளைவுகள் பரவலாக விவாதிக்கப்படுகின்றன.
காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) என்பது காலநிலை மாற்ற அறிவியலை ஆய்வு செய்யும் ஐக்கிய நாடுகளின் அமைப்பாகும். இது 1988-ம் ஆண்டில் உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization (WMO)) மற்றும் UN சுற்றுச்சூழல் திட்டம் (UN Environment Programme (UNEP)) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. மதிப்பீட்டு அறிக்கைகள், சிறப்பு அறிக்கைகள் மற்றும் வழிமுறை அறிக்கைகளை தயாரிப்பதே IPCC-ன் முக்கிய பணியாகும். இந்த அறிக்கைகள் காலநிலை மாற்றம் பற்றி அறியப்பட்டவற்றை மதிப்பாய்வு செய்கின்றன.
பாரீஸ் ஒப்பந்தம் ஒவ்வொரு நாடும் கரிம உமிழ்வைக் குறைக்கவும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்பவும் ஒரு திட்டத்தை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறது. இந்த திட்டங்கள் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally determined contributions (NDC)) என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நாடுகள் தங்கள் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDC) சமர்ப்பிக்கின்றன. ஒவ்வொரு புதிய என்டிசியும் கடந்த இலக்கை விட அதிகளவில் கட்டுக்குட்பட்ட இலக்காக இருக்க வேண்டும் என நிர்பந்திக்கின்றன.
காலநிலை மாற்றத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களை உருவாக்க தேசிய தழுவல் திட்டம் (NAP) உதவுகிறது. இந்த திட்டங்கள் கடுமையான காலநிலை விளைவுகளின் அபாயங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவை மாற்றியமைக்கும் மற்றும் பின்னடைவை உருவாக்கும் திறனையும் பலப்படுத்துகின்றன. தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளின் (NDC) தழுவல் பகுதிகளை புதுப்பிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேசிய தழுவல் திட்டங்கள் (National Adaptation Plan (NAP)) முக்கிய பங்கு வகிக்கின்றன.
புதிய கூட்டு அளவு இலக்கு (New Collective Quantified Goal (NCQG)) என்பது 2025-ம் ஆண்டில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்த நாடுகள் திரட்ட வேண்டிய புதிய தொகையாகும். இந்த பணம் வளரும் நாடுகளில் காலநிலை நடவடிக்கைக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும். 2020-ம் ஆண்டில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சியடைந்த நாடுகள் திரட்டுவதாக உறுதியளித்த $100 பில்லியனை விட NCQG அதிகமாக இருக்க வேண்டும். இருப்பினும், அவர்கள் இந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. புதிய கூட்டு அளவு இலக்கு (New Collective Quantified Goal (NCQG)) COP29-ல் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஐந்தாண்டுக்கான மதிப்பாய்வைக் குறிக்கிறது. இந்த மதிப்பாய்வில், காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் நாடுகள் தங்கள் முன்னேற்றத்தை மதிப்பிடுகின்றன. அடுத்த ஐந்தாண்டுகளில் போராட்டத்தை மேலும் திறம்பட மற்றும் சக்தி வாய்ந்ததாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறார்கள்.
2021-ம் ஆண்டில், சர்வதேச எரிசக்தி நிறுவனம் (International Energy Agency (IEA)) தனது '2050-க்குள் நிகர பூஜ்ஜியத்திற்கான சாலை வரைபடம்' (Roadmap to Net Zero by 2050) அறிக்கையை வெளியிட்டது. இது, உலகம் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய வேண்டும் என்றால், 2030-ம் ஆண்டுக்குள் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க திறனை மூன்று மடங்காக அதிகரிக்க உறுதியளிக்க வேண்டும் என்று கூறியது. இந்த ஒற்றை நடவடிக்கை நிறைவேற்றப்பட்டால், இப்போது முதல் 2030 வரை ஏழு பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வைத் தடுக்க முடியும் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது சீனாவின் மின்சாரத் துறையில் இருந்து தற்போதைய அனைத்து கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வையும் அகற்றுவதற்கு சமமாக இருக்கும்.
புதைபடிவ எரிபொருள்கள் போன்ற தொழில்களில் பெரிய மாற்றங்கள் காரணமாக பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சமூகங்களின் தேவைகளை பாதிக்காமல் குறைந்த கார்பன் அல்லது நிகர பூஜ்ஜிய பொருளாதாரத்திற்கு மாறுவதை இந்த தகவல் விவரிக்கிறது.
பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் (Common but differentiated responsibilities (CBDR)) என்ற கொள்கை சர்வதேச சட்டத்தின் ஒரு பகுதியாகும். காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளைச் சமாளிக்க வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு திறன்கள் மற்றும் பொறுப்புகள் உள்ளன என்று அது கூறுகிறது. இந்தக் கொள்கையின் உதாரணம் 1989 மாண்ட்ரீல் புரோட்டோகால் ஆகும். இந்த சர்வதேச ஒப்பந்தம் ஓசோன் படலத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டது. வளரும் நாடுகளுக்கு தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள 10 ஆண்டு கால அவகாசம் அளித்தது.
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (United Nations Development Programme (UNDP)) கூற்றுப்படி, சர்வதேச காலநிலை பேச்சுவார்த்தைகளில் 'இழப்பு மற்றும் சேதம்' (loss and damage) என்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட வரையறை எதுவும் இல்லை. பரந்த வகையில், இது தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் தவிர்க்க முடியாத சமூக மற்றும் நிதி தாக்கங்களைக் குறிக்கிறது.
COP27 இல், காலநிலை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ ஒரு இழப்பு மற்றும் சேத நிதி (loss and damage fund) உருவாக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து, துபாயில் COP28 இல், நிதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.