சிஏஜி அறிக்கை, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் தீயணைப்பு சேவைகள் ஆகியவை மாநிலங்களால் சட்டப்படி மிகக்குறைந்த அளவு பகிர்ந்தளிக்கப்பட்ட செயல்பாடுகளாக உள்ளன.
74-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வைக் கட்டாயமாக்கி, குடிமக்களுக்கு நேரடியாகவும், திறம்படவும் சேவையாற்றுவதை கட்டாயமாக்கியது. நாடாளுமன்றம் அரசியலமைப்பை திருத்திய பிறகும், 18 மாநிலங்களால் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (Comptroller and Auditor General (CAG)) செயல்தணிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
நவம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட 74-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்த செயல்தணிக்கை அறிக்கைகளின் தொகுப்பு, 18 நகராட்சி செயல்பாடுகளில் 17 சட்டப்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (urban local self-governments (ULSGs)) மாற்றப்பட்டிருந்தாலும், நான்கு செயல்பாடுகள் மட்டுமே முழு தன்னாட்சியுடன் திறம்பட பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. CAG பகுப்பாய்வு செய்த 16 காரணிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட விஷயங்களில் 14 மாநிலங்களில் பத்து மாநிலங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மீது அதிக அதிகாரங்களைக் கொண்டுள்ளன.
அரசியலமைப்பின் பன்னிரண்டாவது அட்டவணை நகர்ப்புற திட்டமிடல், நில பயன்பாடு மற்றும் கட்டிட விதிமுறைகள், பொது சுகாதாரம், குடிமை வசதிகள் மற்றும் வாகன நிறுத்த மேலாண்மை போன்ற நகராட்சி செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டுகிறது. CAG அறிக்கை நகர்ப்புற திட்டமிடல் மற்றும் தீயணைப்பு சேவைகள் சட்டத்தால் மிகக் குறைந்த அதிகாரம் அளிக்கப்பட்ட செயல்பாடுகள் என்று கண்டறிந்துள்ளது.
ஜுன் 1993-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு திருத்தம், நல்ல வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்கு இன்றியமையாத இந்த அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. இதற்காக, நகராட்சிகளை உருவாக்கவும், அவற்றின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடவும், தேர்தல்களை நடத்தவும், பயனுள்ள சட்டங்கள் மற்றும் கொள்கைகளை இயற்றவும், வரி விதிக்கவும், நகராட்சி செயல்பாடுகளைச் செய்வதற்கான நிறுவன வழிமுறைகளை நிறுவவும் மாநிலங்களை இது கட்டாயப்படுத்துகிறது.
2050-ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகையில் 50% நகர்ப்புறமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், வலுவான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் (ULSG) அவசியத்தை அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இருப்பினும், இதை அடைய, மாநிலங்கள் தங்கள் முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும்.
17 மாநிலங்களில் உள்ள 2,625 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (ULSG) 1,600 செயலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் இல்லை என்றும், ஐந்து மட்டுமே நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்களைக் கொண்டுள்ளன என்றும் தொகுப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 14 மாநிலங்களில் 6 மாநிலங்கள் தங்கள் நகர சபை இடங்களில் 50% பெண்களுக்கு ஒதுக்கியுள்ளன. இது பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என்ற அரசியலமைப்பு தேவையை மீறுகிறது. 15 மாநிலங்களில் நான்கு மாநிலங்கள் மட்டுமே தங்கள் மாநில தேர்தல் ஆணையங்களுக்கு (State Election Commissions (SEC) ) வார்டு மறுவரையறையுடன் அதிகாரம் அளித்துள்ளன.
நகராட்சி அமைப்புகள் நிதிக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளை பெரிதும் நம்பியுள்ளன என்பதையும் தொகுப்பு காட்டுகிறது. சராசரியாக, ULSG-ன் மொத்த வருவாயில் 32% மட்டுமே அவர்களுடையது. அவர்களின் செலவில் 29% மட்டுமே சமூக மேம்பாடு பணிகள் மற்றும் நலத்திட்டங்களுக்கு சென்றது. அதே நேரத்தில் அவர்களின் சராசரி வள செலவின இடைவெளி 42% ஆகும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின்படி 10 மாநிலங்கள் மட்டுமே மாநில நிதி ஆணையங்களை அமைத்துள்ளன. சராசரியாக, மாநிலங்களில் மாநில நிதி ஆணையம் (SFC) அமைப்பதில் 412 நாட்கள் தாமதம் ஏற்படுகிறது.
2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை 18 மாநிலங்களில் உள்ள 393 ULSGகளில் அரசியலமைப்பு திருத்தம் செயல்படுத்தப்படுவதை CAG மதிப்பீடு செய்தது. மேலும் ஜூன் 2024-ஆம் ஆண்டுக்குள், இந்த அறிக்கைகள் மாநில சட்டமன்றங்களில் வைக்கப்பட்டன.
பெங்களூருவை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற குடியுரிமை மற்றும் ஜனநாயக மையமான ஜனக்ரஹா(Janaagraha), இந்த அறிக்கைகளை ஒரு தொகுப்பாக ஒருங்கிணைக்க உதவியது. ஆந்திரா, அசாம், சத்தீஸ்கர், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களை CAG தணிக்கை செய்தது.
நகராட்சி நிர்வாகத்தை வலுப்படுத்த, ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நகராட்சி தேர்தல்களை நடத்த வேண்டியதன் அவசியத்தை CAG அறிக்கை வலியுறுத்தியது. தாறுமாறான நகரமயமாக்கலைக் கட்டுப்படுத்த திட்டமிடல் குழுக்களை அமைக்க வேண்டும் மற்றும் சிறந்த நிதி நிர்வாகத்தில் கவனம் செலுத்த மாநில நிதி ஆணையங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
ஜனக்கிரகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் விஸ்வநாதன் என்பவர், முழுமையடையாத அதிகாரப் பகிர்வு மற்றும் பலவீனமான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை எவ்வாறு சரிசெய்வது என்பதற்கான வலுவான ஆதாரங்களையும், பரிந்துரைகளையும் இந்த தொகுப்பு வழங்குகிறது என்று கூறினார்.
"நகர்ப்புற உள்ளூர் அரசாங்கங்களை மேம்படுத்துவது இந்தியாவுக்கு ஒரு முக்கியமான தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும். மேலும், அரசாங்கம் அவற்றை, சமூகம் மற்றும் கல்வியாளர்கள் முழுவதும் நல்ல அர்த்தமுள்ள மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட பங்குதாரர்கள் ஒன்றிணைந்து அதை நிறைவேற்ற வேண்டும். CAG தணிக்கை அறிக்கைகள் மற்றும் தொகுப்பு அத்தகைய முயற்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.