தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் முடிவுகளை வெளியிடும் இந்தியாவின் தேர்தல் அமைப்பு அமெரிக்க முறையை விட சிறப்பாக செயல்படுகிறது.
சமீபத்திய, அமெரிக்க அதிபர் தேர்தலில் பாப்புலர் வாக்குகள் மற்றும் எலெக்ட்ரோல் காலேஜ் வாக்குகள் ஆகிய இரண்டிலும் கணிசமான வாக்குகளை பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். நிருபர்கள் தேர்தல் முடிவுகளைச் சுலபமாகச் சேகரித்தனர். வாக்கு எண்ணிக்கையின் போது, டிரம்ப் தேர்தலில் வெற்றி பெறப் போகிறார் என்பது ஆரம்பத்திலேயே தெளிவாகத் தெரிந்தது. அவர் முக்கிய 'ஸ்விங் ஸ்டேகளில்' முழுமையாக வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக இருப்பதாக முடிவுகள் காட்டின.
இந்தத் தேர்தல் 2020ல் இருந்து மிகவும் வித்தியாசமானது. 2020 தேர்தலில் பல சர்ச்சைகளும் சிக்கல்களும் இருந்தன. அந்தத் தேர்தலின் போது, கோவிட்-19 பரவியது. தொற்றுநோய் காரணமாக பல அமெரிக்கர்கள் முன்கூட்டியே வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை பல நாட்கள் ஆனது. டொனால்ட் டிரம்ப் ஜோ பைடனிடம் தோற்றார். ஆனால், தோல்வியை ஏற்கவில்லை. கருத்துக் கணிப்புகள் கணித்தவற்றுடன் உண்மையான முடிவுகள் பொருந்தவில்லை. வாக்கு எண்ணிக்கை மெதுவாக சென்றதால் செய்தி சேகரிப்பது கடினமாகிவிட்டது.
அமெரிக்காவில், வாக்கு எண்ணும் தரவு அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) மற்றும் பிற செய்தி நிறுவனங்களில் இருந்து வருகிறது. இந்தத் தரவின் போக்குகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றியாளர்களை ஊடகங்கள் கணிக்கின்றன. அமெரிக்க ஃபெடரல் தேர்தல் ஆணையம் பிரச்சார நிதி மற்றும் தேர்தல் விதிகளை மேற்பார்வை செய்கிறது. ஆனால், அது நேரடி தேர்தல் தரவுகளை வழங்கவில்லை. அசோசியேட்டட் பிரஸ் (AP) போன்ற ஏஜென்சிகளால் தேர்தல் தரவு சேகரிக்கப்படுகிறது. பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface) மூலம் வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவலை வெளியிடுகிறது அல்லது ஒவ்வொரு மாநிலத்தின் மாநிலச் செயலாளர் மூலம் தகவலை வெளியிடுகிறது.
இந்தியாவில், இந்த செயல்முறை வேறுபட்டது. இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தொகுதிக்கும், சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் நேரலை எண்ணும் தரவை வழங்குகிறது. ஊடகங்கள், குறிப்பாக டிவி பத்திரிகையாளர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து புகாரளிக்க ஏஜென்சிகள் அல்லது அவர்களின் சொந்த நிருபர்களைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த அறிக்கைகள் எப்போதும் துல்லியமாக இருக்காது.
தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மெதுவாக செயல்பட்டாலும் நம்பகமான தரவை வழங்குகிறது. இந்தத் தரவு வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள வாக்குச் சாவடி முகவர்களால் சரிபார்க்கப்பட்டு, தேர்தல் போக்குகளின் தெளிவான முடிவை வழங்குகிறது. தேர்தல் ஆணைய முடிவுகளை வழங்கும் கட்டமைக்கப்பட்ட விதம், ஊடகங்கள் மற்றும் தரவு ஆய்வாளர்களுக்கு, தகவலை உடைக்க உதவுகிறது. வெவ்வேறு மாநிலங்களில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாக்களிக்கும் போக்குகள் போன்ற விரிவான தரவை அவர்களால் வழங்க முடியும்.
அமெரிக்க செய்தி ஊடகங்கள் தேர்தல் முடிவுகளை சிறப்பாக வழங்குகின்றன. ஆனால், இந்தியாவின் அமைப்பு மிகவும் திறந்த நிலையில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அனைவருடனும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. அவர்கள் பொது பயன்பாட்டிற்காக தரவை நேர்மையாக செய்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணையம் விரிவான தகவல்களை (‘deep-dive data’) வழங்குகிறது.
நாடாளுமன்றத் தொகுதிகளுக்குள் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தரவுகளையும் தேர்தல் ஆணையம் வழங்குகிறது. இந்தத் தகவல் இணையதளத்தில் தாமதத்துடன் பதிவேற்றப்படுகிறது. இதன் காரணமாக முடிவுகள் அறிவிக்கப்பட சில வாரங்கள் ஆகலாம். இருப்பினும், இந்த தரவு கிடைப்பது பயனுள்ளதாக இருக்கும். சமூக விஞ்ஞானிகளும் பத்திரிகையாளர்களும் தேர்தல் முடிந்ததற்கு பின்னர் முடிவுகளை இன்னும் விரிவாக பகுப்பாய்வு செய்யலாம்.
ஒரு தரவு பத்திரிகையாளருக்கு, ஒரு பொது அதிகாரத்தின் மூலம் தேர்தல் முடிவுகளை வழங்கும் இந்திய மாதிரி அமெரிக்க மாதிரியை விட சிறப்பாக செயல்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இந்திய தேர்தல் ஆணையம் பல பிரச்சனைகளுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகப்பெரும் சர்ச்சையை எதிர்கொள்கிறது. மாதிரி நடத்தை விதிகள் பலவீனமான செயலாக்கம் பல்வேறு விமர்சங்களை (legitimate criticism) எதிர்கொள்கிறது.
சில மாநிலங்களில் வாக்களிக்கும் செயல்முறையில் தாமதம் சில சூழல்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது மற்றும் பிரச்சார செலவினங்களின் தளர்வான கட்டுப்பாடு ஒரு பிரச்சனையாகி வருகிறது. எவ்வாறாயினும், இந்தியாவில் உள்ள பொதுமக்களால் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், தேர்தல் ஆணையம் கட்டமைக்கப்பட்ட வாக்குப்பதிவு தரவை வெளியிடுகிறது. இந்த தரவு வெளிப்படையான, சரியான நேரத்தில் மற்றும் திறமையான முறையில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.