ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சகத்தின்படி, MATES ஆனது இந்தியப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் மற்றும் ஆரம்பகால தொழில் வல்லுநர்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியாவைச் சேர்ந்த திறமையான இளைஞர்கள் அந்நாட்டில் சில காலம் பணியாற்ற அனுமதிக்கும் புதிய திட்டத்தை ஆஸ்திரேலியா கொண்டு வந்துள்ளது.
திறமையான ஆரம்ப-தொழில்முறை திட்டத்திற்கான மொபிலிட்டி ஏற்பாடு (Mobility Arrangement for Talented Early-professionals Scheme (MATES)) பற்றிய விவரங்கள் கீழே குறிப்பிட்டுள்ளன.
MATES என்றால் என்ன?
ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சகத்தின்படி, MATES ஆனது இந்தியப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் மற்றும் ஆரம்பகால தொழில் வல்லுநர்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
மே 23, 2023 அன்று, ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இடம்பெயர்வு மற்றும் மொபிலிட்டி கூட்டாண்மை ஏற்பாட்டில் (Migration and Mobility Partnership Arrangement (MMPA)) கையெழுத்திட்டன. MMPA என்பது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் என்பது இரு நாடுகளிலும் குடியேற்றத்தை ஆதரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் கொண்டுவரப்பட்டது. மேலும், இது சட்டவிரோத மற்றும் ஒழுங்கற்ற இடம்பெயர்வு தொடர்பான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. MMPA-ன் கீழ் MATES திட்டம் நிறுவப்பட்டது.
இந்த திட்டம் இந்த ஆண்டு டிசம்பரில் நிபுணர்களுக்காக திறக்கப்படும். லூதியானாவைச் சேர்ந்த கல்வி ஆலோசனை நிறுவனமான EDU Planet இன் குடியேற்ற ஆலோசகர் கௌரவ் சவுத்ரி இதனைத் தெரிவித்தார்.
MATES திட்டத்தின் கீழ் யார் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்?
MATES பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் இந்திய குடிமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது:
- விண்ணப்பத்தின் போது அவர்கள் 30 வயது அல்லது அதற்கு குறைவானவர்கள்.
- அவர்கள் இதற்கு முன்பு MATES-ல் பங்கேற்றிருக்க கூடாது.
- வலுவான ஆங்கில மொழித் திறன்களைக் கொண்டவர்கள். IELTS மதிப்பெண்கள் ஒட்டுமொத்தமாக குறைந்தது 6, மற்றும் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 5.
- அவர்கள் தகுதியான கல்வி நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்கள்.
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுரங்கம், பொறியியல், தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் (ICT), செயற்கை நுண்ணறிவு (AI), நிதித் தொழில்நுட்பம் (FinTech) அல்லது விவசாயத் தொழில்நுட்பம் (AgriTech) ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு மேல் பட்டம் பெற்றவர்கள் ஆகியவர்கள் தகுதி பெற்றவர்களாவர்.
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (National Institutional Ranking Framework (NIRF)) தரவரிசை 2024-ம் ஆண்டின்படி இந்தியாவின் முதல் 100 பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள்.
பஞ்சாபிலிருந்து, தகுதியான பல்கலைக்கழகங்கள்: பஞ்சாப் பல்கலைக்கழகம் (Panjab University), சண்டிகர் பல்கலைக்கழகம் (Chandigarh University), தாப்பர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (Thapar Institute of Engineering and Technology) மற்றும் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம் (Lovely Professional University) ஆகும். இதில், ஆஸ்திரேலிய முதன்மையானவர்களின் ஸ்பான்சர்ஷிப் தேவை இல்லை.
இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன?
MATES பங்கேற்பாளர்கள் ஆஸ்திரேலியாவில் 2 ஆண்டுகள் வரை வசிக்கலாம் மற்றும் வேலை செய்யலாம். விசா வைத்திருப்பவர்கள் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட படிப்புத் துறையில் பணிபுரிய வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகள் எதுவும் இல்லை.
இருப்பினும், இந்தத் திட்டம் இளம் தொழில் வல்லுநர்கள் தங்கள் திறன்களையும் நெட்வொர்க்குகளையும் விரிவுபடுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலே பட்டியலிடப்பட்டுள்ள துறைகளில் இது குறிப்பாக உண்மை.
MATES ஒரு முன்னோடித் திட்டமாக ஒரு வருடத்திற்கு முதன்மை விண்ணப்பதாரர்களுக்கு 3,000 இடங்களை வழங்கும். பங்கேற்பாளர்கள் மனைவி மற்றும் குழந்தைகள் போன்ற சார்ந்திருப்பவர்களை அழைத்து வர விண்ணப்பிக்கலாம். சார்ந்திருப்பவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை செய்ய உரிமை உண்டு. மேலும், இவர்கள் வருடாந்திர வரம்பில் கணக்கிடப்பட மாட்டார்கள்.
தங்கியிருக்கும் காலம் என்ன?
விசா வைத்திருப்பவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் முதன்முறையாக நுழைவதற்கு 12 மாதங்கள் உள்ளன. அவர்கள் முதலில் நுழைந்த நாளிலிருந்து 24 மாதங்கள் ஆஸ்திரேலியாவில் தங்கலாம். விசா ஆஸ்திரேலியாவிற்குள் பல நுழைவுகளை (multiple entries) அனுமதிக்கிறது. பங்கேற்பாளர்கள் மற்றொரு விசாவிற்கு விண்ணப்பிப்பதன் மூலம் தங்கள் தங்குமிடத்தை நீட்டிக்க முடியும். இந்த விசா அனைத்து தகுதித் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வரை, தற்காலிக அல்லது நிரந்தர வசிப்பிடத்தை அனுமதிக்கும்.
விசா எப்படி வழங்கப்படும்?
வாக்குச்சீட்டின் மூலம் விசா வழங்கப்படும். வாக்குச் சீட்டு, விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கிறது. வாக்குச் சீட்டுக்கான விண்ணப்பக் கட்டணம் ஆஸ்திரேலியன் டாலர் (AUD) 25 ஆகும். அதன் பிறகு, பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றுவார்கள் என்று கௌரவ் சவுத்ரி கூறினார்.