மூத்த குடிமக்கள் இதன் மூலம் பெரிதும் பயனடையலாம்.
இணையவழி மூலம் மருந்துகளை ஆர்டர் செய்ய பல செயலிகள் உள்ளன. இருப்பினும், மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 25 சதவிகிதம் இருக்கும் இந்தியாவில் உள்ள ஓய்வுபெற்ற மக்கள், இந்த செயலிகளை பயன்படுத்தியதில்லை. அவர்கள், நேரடியாக மருந்தகங்களுக்குச் சென்று அனைத்து காகித வேலைகளையும் செய்துவிட்டு வரிசையில் நிற்க வேண்டும். இது போன்ற, தொழில்நுட்பம் ஏன் அத்தகைய முன்னுரிமையான பகுதியை விட்டு வெளியேற வேண்டும்?
"ஒருங்கிணைந்த மின்னணு மருந்தகத் தளம்" (Unified Digital Pharmacy Platform’ (UDPP)) மூத்த குடிமக்களுக்கு டிஜிட்டல் ஹெல்த்கேர் தீர்வாக இருக்கலாம். அவர்கள் நேரடியாக மருந்தகங்களுக்குச் செல்வதற்கான தேவையை நீக்குகிறது மற்றும் மருந்துகளைப் பெறுதல் மற்றும் பில்களை செலுத்தும் செயல்முறையை தானியங்குபடுத்துகிறது.
செயலிதளத்தின் அம்சங்கள்
கணக்கு உருவாக்கம் : மூத்த குடிமக்கள் தங்கள் ஆதார் மற்றும் நிகழ்நேர புகைப்படத்தைப் பயன்படுத்தி எளிதாக கணக்கை உருவாக்கலாம். நோயாளியின் தொழில் இணைப்பு மற்றும் தகுதியான மருத்துவச் சலுகை (eligible medical allowance) உட்பட நோயாளியின் வரலாற்றை உருவாக்க ஆதார் தகவலைப் பயன்படுத்தலாம்.
இணையவழி ஆலோசனை : மூத்த குடிமக்கள் காணொலி அழைப்புகள் மூலம் மருத்துவர்களுடன் ஆலோசனை பெறலாம்.
டிஜிட்டல் மருந்துச் சீட்டுகள் : மருத்துவர்கள் மருந்துகளை டிஜிட்டல் முறையில் பரிந்துரைக்கலாம். மேலும், மருந்துச் சீட்டை நேரடியாக டிஜிட்டல் மருந்தகத்திற்கு அனுப்பலாம்.
மருந்து விநியோகம் : மருந்தகம் மூத்த குடிமக்களின் வீட்டிற்கு நேரடியாக மருந்துகளை வழங்குவதுடன், இது வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
QR குறியீடு ஸ்கேனிங் : மூத்த குடிமக்கள் மருந்துத் தொகுப்பில் (medication package) உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும் அதன் பயன்பாட்டைக் கண்காணிக்கவும் முடியும்.
டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் : பணப் பரிவர்த்தனைகளின் தேவையை நீக்கி, டிஜிட்டல் வாலட்கள் அல்லது இணையவழியின் மூலம் பில்களை தானாக உருவாக்கி பணம் செலுத்தலாம்.
மருந்து நினைவூட்டல்கள் : இந்த செயலியின் தளங்களின் பயனர்கள் தங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள நினைவூட்டுகிறது. இது அவர்கள் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைக்கானத் திட்டங்களைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த உதவுகிறது.
இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த டிஜிட்டல் மருந்தக தளம் மிகவும் அணுகக்கூடிய மற்றும் வசதியான சுகாதார அனுபவத்தை வழங்கும். குறிப்பாக, உடல் நகர்வு பிரச்சினைகள் உள்ள மூத்த குடிமக்கள் அல்லது தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒருங்கிணைந்த டிஜிட்டல் மருந்தகத் தளத்தை ஒழுங்குபடுத்த முடியும். ஏனெனில், இது தேசிய சுகாதார கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்துவதற்கு பொறுப்பாகும்.மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தளத்தில் தேவையான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பதை உறுதிசெய்யலாம்.
ஒருங்கிணைந்த மின்னணு மருந்தகத் தளத்திற்கான (Unified Digital Pharmacy Platform’ (UDPP)) வெற்றிக்கு இந்த இரண்டு அமைச்சகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு அவசியம். சுகாதார வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நோயாளி அமைப்புகளின் உள்ளீடும் முக்கியமானதாக இருக்கும்.செயற்கை நுண்ணறிவின் (AI) இன்றைய காலத்தில், நாம் இன்னும் காலாவதியான, இயற்பியல் செயல்முறைகளை நம்பியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. இந்த இயங்குதளம் நன்றாக வேலை செய்வதையும், பாதுகாப்பாக இருப்பதையும், தேவைக்கேற்ப வளரக்கூடியதையும் உறுதிசெய்ய, தொழில்நுட்பங்களின் கலவை தேவைப்படும்.
எடுத்துக்காட்டாக, வளர்ந்து வரும் பயனர் தேவை மற்றும் தரவு சேமிப்பக தேவைகளை கையாள கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud computing) எளிதாக அளவிட முடியும். பிளாக்செயின் தொழில்நுட்பம் (Blockchain technology) தரவு பாதுகாப்பை உறுதிசெய்து சேதமடைவதைத் தடுக்கும்.
எடுத்துக்காட்டாக, நோயாளிகள் முழு மருந்து விநியோகச் சங்கிலியையும், உற்பத்தியாளரிடமிருந்து தங்களுக்குள் கண்காணிக்க முடியும். இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things (IoT)) மருந்துகளின் நிலைகளைக் கண்காணிக்கலாம் மற்றும் தானியங்கு மறுவரிசைப்படுத்தலைத் தூண்டலாம். சைபர் செக்யூரிட்டி (Cybersecurity) நோயாளியின் முக்கியமான தரவைப் பாதுகாக்கவும், தளத்திற்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்கவும் வலுவான குறியீட்டைப் பயன்படுத்துகிறது.
கடைசியாக, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing (NLP)) மருத்துவ ஆவணங்களை பகுப்பாய்வு செய்ய உதவும். அவர்கள் மருத்துவப் பதிவுகள் மற்றும் பிற ஆவணங்களில் இருந்து தொடர்புடைய தகவல்களைப் பிரித்தெடுக்க முடியும். படப் பகுப்பாய்வு, நோயாளி கண்காணிப்பு மற்றும் ஒழுங்கின்மை கண்டறிதல் ஆகியவற்றிற்கும் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம். அத்தகைய செயலியை அரசு விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும்.
ஜெயின் டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள ஷியாம் லால் கல்லூரியில் உதவி பேராசிரியராக உள்ளார். அவர் பஹ்லே இந்தியா அறக்கட்டளையில் பகுதிநேர ஆய்வாளராகவும் உள்ளார். குப்தா டெல்லியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஆவார்.