முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டாய அணுகல் தரங்களை (mandatory accessibility standards) வகுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. அணுகல் ஒரு அடிப்படை உரிமை என்பதை தீர்ப்பு மீண்டும் உறுதி செய்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான கட்டாய விதிகளை வகுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு, கடந்த வாரம் உத்தரவிட்டது. ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வுக்கு தலைமை தாங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (Rights of Persons with Disabilities (RPwD)) மற்றும் அதன் கீழ் அறிவிக்கப்பட்ட விதிகள் கட்டாயமாக கருதப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, அணுகல் ஒரு அடிப்படை உரிமை என்பதை தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.
முதலில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் (Rights of Persons with Disabilities (RPwD)) சட்டம் என்றால் என்ன?
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் (Convention on Rights of Persons with Disabilities (CRPD)) இந்தியா கையொப்பமிட்டுள்ளது. இந்தியா அணுகலை ஒரு அடிப்படை உரிமையாக ஊக்குவிக்க கடமைப்பட்டுள்ளது. பிரிவு 9-ன் படி, "மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக வாழவும், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையாக பங்கேற்கவும், மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களுடன் சமமான அடிப்படையில், போக்குவரத்து, தகவல் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றை அணுகுவதை உறுதி செய்ய மாநிலங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சேவைகள் நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரண்டிலும் இருக்க வேண்டும்.
2016ல் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் CRPDஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் கண்ணியத்துடன், பாகுபாடு இல்லாமல், சம வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 2017ன் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகள், குறிப்பிட்ட அணுகல் தரநிலைகளை வகுத்துள்ளன.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (Rights of Persons with Disabilities (RPwD)) கட்டாய இணக்கத்திற்கான ஒரு அமைப்பை உருவாக்கியது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், 2017 விதிகள் சுய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை மட்டுமே வழங்கியுள்ளன. சட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவனத்தில் (National Academy of Legal Studies and Research (NALSAR)) உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆய்வு மையம் தயாரித்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் குறிப்பிடுகிறது.
இதுவரை, பல்வேறு அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 17 தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் வசதிகளை வழங்குவதற்காக இந்திய ரயில்வே வழங்கிய அணுகல் வழிகாட்டுதல்கள், அத்துடன் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆகியவை இதில் அடங்கும். துறைமுகத் துறைக்காக (Ministry of Ports) வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் அவை இயற்கையில் விளக்கமானவை மற்றும் முழுமையானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
வழிகாட்டுதல்களில் சீரான தன்மை இல்லாததால் செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. ஒரே அணுகல் தேவைகளுக்கு வெவ்வேறு தரங்களைக் கொண்டிருப்பது இந்த சிக்கலுக்கு முக்கிய காரணமாகிறது.
உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது?
பொது இடங்களில் பாதுகாப்பு மற்றும் அணுகலை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களைக் கோரி பார்வையற்ற மாற்றுத்திறனாளி ராஜீவ் ரதூரி 2005ஆம் ஆண்டில் தாக்கல் செய்த ரிட் மனு மீது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் உரிமை (Rights of Persons with Disabilities (RPwD)) விதிகள், இப்போது உள்ளதைப் போல, கட்டாயத் தரங்களை வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மாறாக, அவை நடைமுறைப்படுத்த முடியாத வழிகாட்டுதல்களை மட்டுமே வழங்குகின்றன. RPwD சட்டத்தின் விதி 15(1) நோக்கத்திற்கு எதிரானது. இது சட்டத்தின் அதிகாரங்களுக்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்த விதியின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பரிந்துரை என்று கூறிய நீதிபதிகள், இந்த தீர்ப்பு தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் கீழ் தேவைப்படும் கட்டாய விதிகளை வகுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த செயல்பாட்டில் பங்குதாரர்கள் மற்றும் பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவன (National Academy of Legal Studies and Research (NALSAR)) ஊனமுற்றோர் ஆய்வுகள் மையத்துடன் கலந்தாலோசிக்குமாறு ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கட்டாய விதிகள் அமைக்கப்பட்டவுடன், அணுகல் தரத்தை மீறினால், ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நிறைவு சான்றிதழ்களை நிறுத்தி வைப்பது மற்றும் அபராதம் வசூலிப்பது ஆகியவை இதில் அடங்கும்.
பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவன (National Academy of Legal Studies and Research (NALSAR)) அறிக்கை என்ன கண்டுபிடித்தது?
நவம்பர் 2023ல், உச்ச நீதிமன்றம் NALSAR-CDS அணுகல் தொடர்பான நிலைமையை மதிப்பிடுமாறு உத்தரவிட்டது. ஒன்றிய, மாநில அரசுகளின் முன்னேற்றம் இல்லாததைக் குறிப்பிட்டு இது நடந்தது. NALSAR-CDS ஆனது அணுகல் முயற்சிகள் பற்றிய தகவல்களை சேகரிக்க, ஒன்றிய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் இருந்து கருத்துக்களை சேகரித்தது. 14 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்கள் மட்டுமே பதிலளித்தன. மாற்றுத்திறனாளிகளின் நிஜ வாழ்க்கை அனுபவங்களில் கவனம் செலுத்தி அவர்களின் கருத்துக்களையும் சேகரித்தனர்.
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு போக்குவரத்து அமைப்புகளுக்கான அணுகல் முக்கியமானது என்று அறிக்கை எடுத்துக்காட்டியது. டெல்லியில் 3,775 தாழ்தள எரிவாயு பேருந்துகள் (cng busses) அணுகக்கூடிய பயணத்திற்கு உள்ளன. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 21,669 அணுகக்கூடிய பேருந்துகளில் 1,917 உள்ளன.
அணுகல் உரிமை (right to accessibility) என்பது சாதி, பாலினம், மதம் மற்றும் பிராந்தியம் போன்ற பிற காரணிகளையும், இயலாமை இந்த காரணிகளுடன் எவ்வாறு குறுக்கிடுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்தியது. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு இணையதளங்கள் பயன்படுத்த கடினமாக இருப்பது மற்றும் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்களுக்கு சைகை மொழி அங்கீகாரம் இல்லாதது போன்ற குறிப்பிட்ட சவால்களை அது சுட்டிக்காட்டியது.