காற்றுத் தரக் குறியீடு (Air Quality Index (AQI)) என்றால் என்ன? இந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் காற்றின் தரம் எப்படி இருக்கிறது?

 தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 2014-ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. காற்றுத் தரக் குறியீடு (Air Quality Index (AQI)) என்பது மாசுபாடு பற்றிய பொதுவான புரிதலை எளிதாக்க உதவும். 


தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் (நவம்பர் 1) புதுதில்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI)  351  என்ற நிலையில் இருந்தது.  தேசிய தலைநகரில் பட்டாசுகளுக்கு தடை இருந்தபோதிலும், நகரின் பல்வேறு பகுதிகளில் விதிமீறல்கள் காணப்பட்டன. 


குளிர்காலத்தின் ஆரம்பம்  மற்றும் குளிர், நகரத்தை சூழ்ந்திருக்கும் அடர்த்தியான காற்று, சாலை தூசி மற்றும் வாகன மாசுபாடு மற்றும் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பயிர்க்கழிவுகள் எரிப்பு போன்ற காரணிகளும் ஆண்டுதோறும் இந்த முறை காற்றின் தரம் குறைவதற்கு பங்களிக்கின்றன. 


கடந்த இரண்டு ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய மற்றும் தீபாவளி நாட்களில் 24 மணி நேர சராசரியில் காற்றின் தரம் மோசமாக இருந்தது. ஆனால், தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை காலை நேரங்களில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளதால், சமீபத்திய ஆண்டுகளில் காணப்பட்ட மாசு அளவுகள் அதிகரிக்கவில்லை.


தீபாவளிக்கு அடுத்த நாளில், காற்றுத் தரக் குறியீடு (AQI) 339 ஆனது கடந்த ஆண்டு (நவம்பர் 13, 2023 அன்று) 358-ஆக இருந்ததை விட சிறப்பாக இருந்தது.  இந்த நிலைக்கு பல காரணிகள் பங்களித்தன.  அதில் மிக முக்கியமானது வானிலை நிகழ்வாகும்.  காலை 9 மணியளவில் காற்றின் வேகம் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வீசியது. மாசுக்கள் பரவுவதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது.


டெல்லியில் AQI கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது எப்படி உள்ளது? 


காற்றுத் தரக் குறியீடு (AQI)  என்பது காற்றின் தரத்தைக் குறிக்கும் எண். காற்றுத் தரக் குறியீடு (AQI) அதிகமாக இருந்தால், காற்று மோசமாக இருக்கும். காற்றின் தரக் குறியீடு ஆறு வகைகளாக உள்ளது. அவை,


  • 'நன்று' (0-50)

  • 'திருப்திகரமானவை' (50-100) 

  • 'மிதமான மாசுபட்டவை' (100-200) 

  • 'மோசம்' (200-300) 

  • 'மிகவும் மோசம்' (300-400)  

  • 'கடுமையானவை' (400-500)


வண்ண-குறியிடப்பட்ட காற்றுத் தரக் குறியீடு (AQI)  இந்தியாவில் 2014-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மேலும், இது பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் காற்றின் நிலை மற்றும் அதன் தீவிரத்தின் அடிப்படையில் நிலைமையை எதிர்த்துப் போராட அடுத்தடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. 


AQI என்றால் என்ன, அது மாசுபாட்டை எவ்வாறு கணக்கிடுகிறது? 


தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 2014-ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. காற்றுத் தரக் குறியீடு (AQI) காற்று மாசுபாடு  பற்றிய பொதுவான புரிதலை எளிதாக்க உதவும். மருத்துவ வல்லுநர்கள், காற்றின் தர நிபுணர்கள், கல்வியாளர்கள், வழக்ககறிஞர் குழுக்கள் ஆகியோரை உள்ளடக்கியது. தொழில்நுட்ப ஆய்வு கான்பூர் ஐ.ஐ.டிக்கு வழங்கப்பட்டது. ஐ.ஐ.டி கான்பூர் மற்றும் நிபுணர் குழு (Expert Group) காற்றுத் தரக் குறியீடு (Air Quality Index (AQI))  திட்டத்தை பரிந்துரைத்தது. 


சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் ஒரு பகுதியான மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, பல்வேறு மாசுபடுத்திகளின் சிக்கலான காற்றின் தரத் தரவை, காற்றுத் தரக் குறியீடு (AQI)  ஒரே எண்ணாக மதிப்பீடு செய்கிறது.  அளவிடப்பட்ட மாசுபடுத்திகளில் PM 10, PM 2.5, நைட்ரஜன் டை ஆக்சைடு, ஓசோன், கார்பன் போன்றவை அடங்கும். 


பாதிக்கப்பட்ட காற்றில் ஆறு அல்லது எட்டு மாசுபடுத்திகள் உள்ளன. மேலும், இந்த மாசுபடுத்திகள் ஒவ்வொன்றும் ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த அளவு மனித ஆரோக்கியத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தது.  இந்த அளவுகளில் மோசமான நிலை, காற்றின் தரம் என்று வழங்கப்படுகிறது.  எனவே உங்களுக்கு ஆறு வெவ்வேறு எண்கள் மற்றும் ஆறு வெவ்வேறு வண்ணங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த தாக்கத்தைக் குறிக்க இது ஒரு ஒற்றை நிறம், ஒரு ஒற்றை எண்ணை குறிப்பிடுகிறது.  நாடு முழுவதும் உள்ள கண்காணிப்பு நிலையங்கள் இந்த நிலைகளை மதிப்பிடுகின்றன. 


PM 2.5 மற்றும் PM 10 போன்ற மாசுபடுத்திகளின் தாக்கம் என்ன? 


மிகவும் தீங்கு விளைவிக்கும் மாசுபடுத்திகளில் துகள்கள் (particulate matter(PM)) 2.5 போன்ற சிறிய அளவிலான துகள்கள் உள்ளன. இது 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட வளிமண்டல துகள்கள் (அல்லது மனித முடியின் விட்டத்தில் சுமார் 3 சதவீதம்). இது சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது மற்றும் கண் பார்வை நிலையை குறைக்கிறது. துகள்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் எலக்ட்ரான் நுண்ணோக்கியின் உதவியுடன் மட்டுமே கண்டறிய முடியும். 


அவற்றின் அளவு காரணமாக, பி.எம் 2.5 துகள்கள் மூக்கு மற்றும் தொண்டையை எளிதில் கடந்து சுற்றோட்ட அமைப்பில் எளிதாக நுழைய முடியும். இந்த துகள்கள் ஆஸ்துமா, மாரடைப்பு, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பிற சுவாச பிரச்சினைகள் போன்ற நாள்பட்ட நோய்களுக்கும் வழிவகுக்கும். 


AQI அரசாங்கக் கொள்கையை எவ்வாறு பாதிக்கிறது? 


காற்றின் தர அளவுகளின் அடிப்படையில், டெல்லி போன்ற பகுதிகளில் உள்ள அரசாங்கங்கள் சில நடவடிக்கைகளை அறிவிக்கின்றன. குறிப்பாக டெல்லி என்.சி.ஆர் பகுதியில் காற்றின் தரம் மேலும் மோசமடைவதைத் தடுக்கும் அவசரகால நடவடிக்கைகளுக்காக தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (Graded Response Action Plan (GRAP))  நிறுவப்பட்டுள்ளது.  முன்னதாக, இது விடுதிகள், உணவகங்கள் மற்றும் திறந்த உணவகங்களில் தந்தூரி செயல்பாடுகள் மற்றும் டீசல் ஜெனரேட்டர் அமைப்புகள் (அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தவிர) உள்ளிட்ட நிலக்கரி மற்றும் விறகு பயன்பாட்டிற்கு தடை விதிக்க வழிவகுத்தது. தனியார் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்த பார்க்கிங் கட்டணத்தை உயர்த்துவதும் இதில் அடங்கும்.




Original article:

Share: