மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த இந்தியாவிற்கு பாகுவில் நடைபெறவிருக்கும் உறுப்பு நாடுகளின் மாநாடு (Conference of Parties (COP29)) ஒரு வாய்ப்பளிக்கும்.
2024 நவம்பர் 11 முதல் 22 வரை, உலகத் தலைவர்கள் அனைவரும் அஜர்பைஜானின் உள்ள பாகுவில், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) உறுப்பு நாடுகளின் 29-வது மாநாட்டில் சந்திக்க இருக்கிறார்கள். இந்த நிகழ்வு "கட்சிகளின் நிதி மாநாடு" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், 15 ஆண்டுகளில் முதல் முறையாக, "காலநிலை நிதிக்கான புதிய கூட்டு அளவுகோல்" (new collective quantified goal (NCQG)) எனப்படும் புதிய உலகளாவிய காலநிலை நிதி இலக்கை மாநாட்டில் பங்கேற்கும் நாடுகள் உருவாக்க இருக்கிறார்கள்.
மாநாட்டை நடத்தும் நாடான அஜர்பைஜான் ஒரு செயல் திட்டத்தை பகிர்ந்துள்ளது. அதில் பேட்டரி சேமிப்பு திறனை ஆறு மடங்கு அதிகரிப்பது, மின்சார வலையமைப்பை விரிவுபடுத்துவது மற்றும் கரிம கழிவுகளில் இருந்து மீத்தேன் உமிழ்வைக் குறைப்பது ஆகியவை அடங்கும்.
மீத்தேன் காலநிலை மாற்றத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது தொழில்துறைக்கு முந்தைய காலத்திலிருந்து 30% புவி வெப்பமடைதலை ஏற்படுத்துகிறது. வளிமண்டலத்தில் அதன் அளவும் வேகமாக உயர்ந்து வருகிறது.
புவி வெப்பமடைதலில் கார்பன்-டை-ஆக்சைடை விட மீத்தேன் அதிக பங்களிக்கிறது. இது கார்பன்-டை-ஆக்சைடை விட 28% அதிக புவி வெப்பமடையும் திறனைக் கொண்டுள்ளது. 20 ஆண்டு காலத்தில், மீத்தேன் இன்னும் சக்தி வாய்ந்ததாக மாறும் வாய்ப்புள்ளது. புவி வெப்பமடைதலை ஏற்படுத்துவதில் கார்பன்-டை-ஆக்சைடை விட மீத்தேன் 84 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.
மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைப்பது மிகவும் முக்கியம். வெப்பநிலை அதிகரிப்பதைக் குறைக்க பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். மீத்தேன் குறைப்பது கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைப்பதற்கான நீண்டகால முயற்சிகளுக்கு நேரத்தை வாங்க உதவுகிறது. காலநிலை மாற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பாகு காலநிலை சந்திப்பு
இருநாடுகளின் உறவில் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்த போதிலும், அமெரிக்காவும் சீனாவும் மீத்தேன் போன்ற கார்பன்-டை-ஆக்சைடு அல்லாத பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதற்கு இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் துபாயில் நடைபெற்ற COP28-ல் மாநாட்டில் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து மீத்தேன் மற்றும் பிற கார்பன்-டை-ஆக்சைடு அல்லாத உமிழ்வுகளை மையமாகக் கொண்ட உச்சி மாநாட்டை நடத்தினர்.
நவம்பர் 2023-ல், மீத்தேன் உமிழ்வைக் கட்டுப்படுத்த சீனா தனது முதல் தேசிய திட்டத்தையும் வெளியிட்டது. திட்டமானது குறிப்பிட்ட இலக்குகளை நிர்ணயிக்கவில்லை என்றாலும், அது திறனை வலியுறுத்தியது. மீத்தேன் பிரச்சினையில் அமெரிக்காவுடன் நடவடிக்கை எடுக்கவும் ஒத்துழைக்கவும் சீனா தயாராக உள்ளது என்பதை இது காட்டுகிறது.
மனிதனால் உருவாக்கப்பட்ட மீத்தேன் உமிழ்வுகளில் இந்தியா மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது. சீனாவைத் தொடர்ந்து இந்தியாவும், அமெரிக்கா-சீனா மீத்தேன் கூட்டாண்மையைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. மீத்தேன் உமிழ்வைக் குறைக்க குறிப்பிட்ட துறைகளுக்கு நிதி மற்றும் ஆதரவைப் பெற இது இந்தியாவுக்கு உதவும்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் இந்தியாவின் மூன்றாவது இருபதாண்டு புதுப்பிப்பு அறிக்கையின்படி, 2016-ஆம் ஆண்டில் 409 மில்லியன் டன் CO2-க்கு சமமான மீத்தேனை இந்தியா வெளியேற்றியது. இந்த எண்ணிக்கை நில பயன்பாடு மற்றும் வனவியல் உமிழ்வைக் கொண்டிருக்கவில்லை.
இந்தியாவில் மீத்தேன் வெளியேற்றத்தின் ஆதாரங்கள், விவசாயத்தில் இருந்து 74% கழிவுகளில் 14%. ஆற்றல்களில் 11% .தொழில்துறை செயல்முறைகளில் இருந்து 1% எனபன ஆகும்.
மீத்தேன் காலநிலை மாற்றத்தை தாண்டி பல்வேறு வழிகளில் தீங்கு விளைவிக்கும். உதாரணமாக, குப்பைக் கிடங்குகளில் ஏற்படும் தீ, காற்று மாசுபாட்டை அதிகரிக்க செய்கிறது. 2022-ஆம் ஆண்டில், டெல்லியில் உள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் இரண்டு வார தீ விபத்து காரணமாக அருகிலுள்ள கண்காணிப்பு நிலையங்களில் வழக்கமான அளவை விட காற்று மாசு அளவு 30% முதல் 70% வரை அதிகரித்தது.
ஒட்டுமொத்த மீத்தேன் குறைப்பு இலக்குகளை நிர்ணயிப்பது அல்லது உலகளாவிய மீத்தேன் உறுதிமொழியில் சேர்வது குறித்து இந்தியா எச்சரிக்கையாக உள்ளது. இது 2020-ஆம் ஆண்டிலிருந்து 2030-ஆம் ஆண்டிற்குள் 30% உமிழ்வைக் குறைக்கும் நோக்கம் கொண்டது. இந்த தயக்கம் நாட்டில் விவசாயத்தின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. விவசாயத்தின் முக்கிய பகுதிகள் கால்நடைகள் மற்றும் நெல் சாகுபடி ஆகியவை ஆகும். இருப்பினும், மீத்தேன் மீது அமெரிக்கா மற்றும் சீனாவின் கவனம் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. கழிவு மேலாண்மை (waste management) போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் உமிழ்வைக் குறைப்பதற்கான இலக்கு உதவியைப் பெற இது இந்தியாவை அனுமதிக்கிறது.
கழிவு மேலாண்மை திட்டங்கள்
இந்திய அரசு கழிவு மேலாண்மைக்கான வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இருப்பினும், பலவீனமான உள்ளூர் செயல்பாடுகள் இந்த செயல்முறையை கடினமானதாக மாற்றுகிறது. இருப்பினும், நாடு முழுவதும் புதுமையான தீர்வுகளை விரிவுபடுத்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ளது. இந்த மாதிரி நகரம் முழுவதும் உள்ள கரிமக் கழிவுகளை ஒரு பெரிய பயோமீத்தேன் ஆலையுடன் இணைக்கிறது. இந்த ஆலையில் பஸ்களுக்கு தேவையான எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. கிராமங்களில் கால்நடைக் கழிவுகளின் பயன்பாடு மற்றும் தூய்மையான எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் கரிம உயிரி வேளாண் வளங்கள் தன் (Galvanizing Organic Bio-Agro Resources Dhan (GOBARdhan)) திட்டத்தையும் அரசு ஊக்குவித்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கான விரிவான தூய்மை இந்தியா இயக்கம் -நகர்ப்புற 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சிகள் உள்ளன. இருப்பினும், கரிம கழிவு மேலாண்மையை அதன் முழு திறனுக்கு அளவிட நகரங்களுக்கு அதிக ஆதரவு தேவை. விவசாயத் துறையில், நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் (National Mission for Sustainable Agriculture (NMSA)) மூலம், காலநிலை-எதிர்ப்பு நடைமுறைகளை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. நெல் விவசாயத்தில் மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதற்கான நுட்பங்கள் இதில் அடங்கும், இது உமிழ்வை கணிசமாகக் குறைக்க வழிவகுக்கும்.
தேசிய கால்நடை இயக்கம் (National Livestock Mission) கால்நடைகளில் இருந்து மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடைமுறைகளை ஊக்குவிக்கிறது. இந்த நடைமுறைகளில் பசுந்தீவனம் உற்பத்தி (green fodder); பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனம் செய்தல்; வைக்கோலை சிறிய துண்டுகளாக வெட்டுதல் (chaff cutting); கால்நடைகளிலிருந்து மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைக்க மொத்த கலப்பு உணவுப்படி ஆகியன அடங்கும்.
அமெரிக்காவின் திட்டத்தில் ஒரு வாய்ப்பு
இங்குதான் COP-29 மற்றும் இந்தியாவின் மீத்தேன் இராஜதந்திரம் முக்கியமானதாகிறது. அமெரிக்க-சீன மீத்தேன் கூட்டாண்மை, அவர்களின் கடந்தகால ஒத்துழைப்பைப் போல வலுவாக இல்லாவிட்டாலும், இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான அதன் முயற்சிகளுக்கு இந்தியா குறிப்பிடத்தக்க உதவியை அமெரிக்காவிடமிருந்து பெறலாம். நிதி மற்றும் ஆதரவைப் பெற மீத்தேன் உமிழ்வைக் குறைக்க அமெரிக்காவின் முயற்சியை இந்தியா பயன்படுத்தலாம். இந்த உதவியானது, நாட்டின் 14% மீத்தேன் உற்பத்தி செய்யும் இந்தியாவின் கழிவுத் துறையில் இருந்து உமிழ்வைக் குறைப்பதில் கவனம் செலுத்த முடியும். இந்தியாவின் 2016-ன் பொருள் விவரப்பட்டியலின் படி, நாட்டின் மொத்த மீத்தேன் வெளியேற்றத்தில் சுமார் 4% கழிவு மூலங்கள் உற்பத்தி செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த உமிழ்வுகள் பற்றிய தரவுகளின் கணிப்பு நன்றாக இல்லை.
எடுத்துக்காட்டாக, டெல்லி மற்றும் மும்பையில் செயற்கைக்கோள் கண்காணிப்பு, உண்மையான உமிழ்வு பொதுவாகப் பயன்படுத்தப்படும் மதிப்பீடுகளை விட 50% முதல் 100% வரை அதிகமாக இருப்பதாகக் காட்டுகிறது. மும்பையில், நகரின் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் குப்பைத் தொட்டிகள் முக்கிய காரணமாகின்றன.
உறுப்பு நாடுகளின் மாநாட்டில் (COP29) மீத்தேன் உமிழ்வு பற்றி முக்கிய கவனம் செலுத்தாமல் இருக்கலாம். ஆனால், மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த இந்தியாவிற்கு இது ஒரு வாய்ப்பை இந்த மாநாடு வழங்குகிறது. இந்த இலக்கை ஆதரிப்பதற்கான கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளை இந்திய அரசு ஏற்கனவே நிறுவியுள்ளது.
பெரிய அளவில் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக செயல்படுத்த, இந்தியாவிற்கு இப்போது குறிப்பிட்ட சர்வதேச உதவி தேவைப்படுகிறது. இதில் நிதியுதவி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவை அடங்கும். பெரிய அளவில் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக செயல்படுத்த, இந்தியாவிற்கு குறிப்பிட்ட சர்வதேச ஆதரவு தேவை. இதில் நிதியுதவி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவை அடங்கும்.
அமெரிக்க-சீன மீத்தேன் கூட்டாண்மையை மேம்படுத்துவதன் மூலமும், COP29-ல் இந்த ஆதரவை முன்கூட்டியே நாடுவதன் மூலமும், மீத்தேன் குறைப்பில் அதன் முன்னேற்றத்தை விரைவுபடுத்த தேவையான வளங்களை இந்தியா பயன்படுத்த முடியும்.
ரக்ஷித் ஷெட்டி, பெங்களூரு தக்ஷஷீலா இன்ஸ்டிடியூஷனில் ஆய்வாளர்