இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா வழித்தடத்திற்கான கலவையான அறிக்கை - அபாக் ஹுசைன், அக்தர் மாலிக்

 மேற்கு ஆசியாவில் உள்ள வழித்தடத்தின் வடக்கு பகுதியில் போர் முடியும் வரை முன்னேற்றம் மெதுவாக இருக்கும். இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்திய துறைமுகங்களை இணைக்கும் கிழக்குப் பகுதி வேகமாக முன்னேறி வருகிறது. 


செப்டம்பர் 2023-ல், இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பிய வழித்தடம் (India-MiddleEast-Europe Corridor (IMEC)) குறித்து புது டெல்லியில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்டது. புதிய வழித்தடமனது அதன் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையே பயண நேரத்தை 40% குறைக்கும் என்றும், சூயஸ் கால்வாய் வழியுடன் ஒப்பிடும்போது போக்குவரத்து செலவுகளை 30% குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததைவிட எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இந்த வழித்தடம் செயல்படத் தொடங்கியவுடன் சர்வதேச கடல் வர்த்தகத்தில் நல்ல முன்னேற்ற ஏற்படும். வழித்தடம் அறிவிக்கப்பட்டதில் இருந்து அது எவ்வாறு வவளர்ச்சியடைந்துள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வழித்தட திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சவால்களை புரிந்துகொள்ள வேண்டும்.


இரு முனைகளிலும் முன்னேற்றம் 


கடந்த ஆண்டில், பல சவால்கள் திட்டத்தின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தியுள்ளன. வழித்தடம் முதலில் அறிவிக்கப்பட்டபோது, ​​அதிக நம்பிக்கை இருந்தது. அரேபிய-இஸ்ரேல் உறவுகளை இயல்பாக்குவதே திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால், இந்தத் திட்டம் திடீரென நிறுத்தப்பட்டது.  இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அதிகரித்தது. இந்த மோதல்  திட்டத்தின் முன்னேற்றத்தை சீர்குலைத்தது. இந்த நெருக்கடியானது மேற்கு ஆசியா முழுவதையும் ஆண்டு முழுவதும் பாதித்தது. இதனால் நடைபாதை திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. இரண்டு முக்கிய நட்பு நாடுகளான சவூதி அரேபியா மற்றும் ஜோர்டான் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் திட்டத்தை பாதிக்காது என்று சிலர் வாதிடலாம். இருப்பினும், இந்த திட்டத்திற்காக சவூதி அரேபியா மற்றும் ஜோர்டான் ஆகிய இரு நாட்டு அரசாங்கங்களும் இஸ்ரேல் உடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். வழித்தடத்தின் வடக்குப் பகுதி பெரும்பாலும் மேற்கு ஆசியாவில் உள்ளது. தற்போதைய, மோதல்கள் தணியும் வழித்தட திட்டத்தின் செயல்பாடு  மெதுவாக இருக்கும்.


ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவை இணைக்கும் வழித்தடத்தின் கிழக்குப் பகுதியில் முன்னேற்றம் வேகமாக நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மேம்பட்டு வருகின்றன. 2022-ல் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (Comprehensive Economic Partnership Agreement (CEPA)) கையெழுத்தான பிறகு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு  அமீரகம் இடையே வர்த்தகம் கணிசமாக வளர்ந்தது. 


2020-21ல் வர்த்தகம் $43.30 பில்லியனாக இருந்தது. 2023-24ல் வர்த்தகம் $83.64 பில்லியனாக 93% அதிகரித்தது. இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மேலும் மாறுபட்டு வருகிறது. எண்ணெய் அல்லாத வர்த்தகத்தின் வளர்ச்சி இதில் ஒரு முக்கிய பகுதியாகும். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான எண்ணெய் அல்லாத வர்த்தகம் 2020-21ல் $28.67 பில்லியனிலிருந்து 2023-24-ல் $57.81 பில்லியன் அதிகரித்துள்ளது. 


இந்த மாற்றம் இந்தியாவுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொருட்கள் இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பிய வழித்தடம் மூலம் மேற்கு மற்றும் வடக்கு நோக்கி நகரும். இது பிராந்தியத்தில் இந்தியா தனது ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.


வர்த்தக அளவுகளை அதிகரிப்பதோடு, இரு நாடுகளும் வர்த்தக செயல்முறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி  வருகின்றன. சமீபத்தில், இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் மெய்நிகர் வர்த்தக வழித்தடத்தை (Virtual Trade Corridor) அறிமுகப்படுத்தின. மெய்நிகர் வர்த்தக நடைபாதை IMEC-ன் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும். நிர்வாக செயல்முறைகள் மற்றும் நேரத்தை குறைக்கவும். குறைந்த தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் வர்த்தகத்தை எளிதாக்கவும் வர்த்தக செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவது இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பயனளிக்கும். இது இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பிய வழித்தடத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் உதவும். இந்த நாடுகள் இதை ஒரு முன்மாதிரியாக பயன்படுத்தி, எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கான தங்கள் சொந்த அமைப்புகளை உருவாக்கலாம்.


இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பிய வழித்தடம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும், வழித்தடத்தின் மேற்குப் பகுதி மோதல் காரணமாக உறுதியற்ற நிலையை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், கிழக்குப் பகுதியானது உலகளாவிய வர்த்தகத்தின் எதிர்காலத்தைத் உருவாக்குவதற்காக புதிய இணைப்புகளை தீவிரமாக அமைத்து வருகிறது. 


மேலும், இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பிய வழித்தடம் அதன் முதல் ஆண்டில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தற்போது, ​​இணைப்பு பகுதி மட்டுமே முன்னேறி வருகிறது. அவை சுத்தமான எரிசக்தி ஏற்றுமதி, கடலுக்கடியில் ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள், பைப்லைன்கள், எனர்ஜி கிரிட் இணைப்புகள், தொலைத்தொடர்பு கோடுகள் மற்றும் சுத்தமான எரிசக்தி தொழில்நுட்ப கூட்டாண்மைகள் உள்ளிட்ட பல கூறுகளை கொண்டுள்ளது. மேற்கு ஆசியா ஆசியாவில் நிலைமை முன்னேற்றம் அடையும்  வரை இந்தப் பகுதிகள் காத்திருக்க வேண்டும். இதற்கிடையில், வழித்தடத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகள் ஒருவருக்கொருவர் தங்கள் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

 

இந்தியாவால் என்ன செய்ய முடியும் 


இந்தியா, குறிப்பாக, தனது துறைமுகங்களைத் தயாரிக்கவும், இணைப்பு முனைகளில் குறிப்பிட்ட பொருளாதார மண்டலங்களை உருவாக்கவும், இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பிய வழித்தடத்துடன் தடையற்ற ஒருங்கிணைப்புக்கான உள்நாட்டு தளவாடங்களை மேம்படுத்தவும் இந்த நேரத்தைப் பயன்படுத்தலாம். உள்நாட்டு தளவாட நிலப்பரப்பில் டிஜிட்டல் தடத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இது தளவாட நேரம் மற்றும் செலவுகளைக் குறைக்க உதவும். மேலும் இந்திய ஏற்றுமதிகளை அதிக போட்டித்தன்மையுடன் மாற்றும். இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பிய வழித்தடம் ஒரு பெரிய திட்டம், ஆனால் இந்தியா உலகளாவிய மதிப்பு சங்கிலிகளில் சிறப்பாக ஒருங்கிணைத்தால் உண்மையான பலன்கள் வரும். இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பிய வழித்தடத்துடன், இந்தியா உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஒரு முக்கிய மாற்றாக மாற விரும்புகிறது. இந்தியா தனது உற்பத்தியை அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற்ற முயற்சித்தால் மட்டுமே இது நடக்கும்.

 


இறுதியாக, இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பிய வழித்தடத்தின் செயலகத்தை உருவாக்குவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது. இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பிய கட்டமைப்பையும் செயல்பாட்டையும் மேலும் ஒழுங்கமைக்க செயலாக்கம் உதவும். எல்லை தாண்டிய வர்த்தக செயல்முறைகளை எளிதாக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்குதல், பங்குபெறும் நாடுகளுக்கான நன்மைகளைக் காண்பிப்பதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் ஆராய்ச்சி நடத்துதல் போன்ற சூழல்கள் வழித்தடத்திற்கு அருகில் உள்ள நாடுகளை இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பிய வழித்தட திட்டத்தை பற்றி புரிந்துகொள்ள உதவும். இதன் விளைவாக, இந்த நாடுகள் வழித்தட திட்டத்தில் சேர ஆர்வம் காட்டலாம்.

 

அபாக் ஹுசைன், இயக்குநர், தொழில் மற்றும் பொருளாதார அடிப்படைகள் ஆராய்ச்சி பணியகம், புது தில்லி; அக்தர் மாலிக், புதுதில்லியில் உள்ள தொழில் மற்றும் பொருளாதார அடிப்படைகள் குறித்த ஆராய்ச்சி பணியகத்தின் திட்டங்களின் தலைவர் ஆவார்.




Original article:

Share: