1. உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கும், இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (Indian Cyber Crime Coordination Centre (I4C)) அதிகாரிகள், சமீபத்தில் பிரதமர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சைபர் கிரைம் பற்றி தெரிவித்தனர். அங்கு, வங்கி அமைப்பின் குறைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மோசடி செய்பவர்கள் இப்போதெல்லாம் இதுபோன்ற "ஆள்மாறாட்ட பணப் பரிமாற்றக் கணக்குகளிலிருந்து" (mule accounts) பணம் திரும்பப் பெறுகிறார்கள் என்பதை அதிகாரிகள் எடுத்துக்காட்டுகின்றனர். இது வழக்கமாக மற்றொரு நபரின் KYC ஆவணங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இதில் காசோலைகள், ATMகள் மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் எடுக்கப்படுகிறது.
2. ஆதாரங்களின்படி, இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) குடிமக்களின் நிதி சைபர் மோசடி அறிக்கையிடல் மற்றும் மேலாண்மை அமைப்பின் (Financial Cyber Frauds Reporting and Management System) பதிவுகளை மேற்கோள் காட்டியது. இத்தகைய புகார்களை இந்த அமைப்பு பதிவு செய்கிறது.
தெரிந்த தகவல்கள் பற்றி :
1. இணைய குற்றங்கள் பல தீங்கு விளைவிக்கும் செயல்களை உள்ளடக்கியது. இந்த நடவடிக்கைகள் அடையாள திருட்டு (identity theft), ஆன்லைன் மோசடி (online fraud), நிதி மோசடி (financial fraud), ஹேக்கிங் (hacking), சைபர்ஸ்டாக்கிங் (cyberstalking) மற்றும் தீங்கு விளைவிக்கும் மென்பொருளைப் பரப்புதல் (spreading harmful software) ஆகும். டிஜிட்டல் கைது (Digital Arrest) என்பது ஒரு வகையான ஆன்லைன் மோசடியாகப் பார்க்கப்படுகிறது.
2. இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) 2018-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது உள்துறை அமைச்சகத்தின் (Ministry of Home Affairs (MHA) கீழ் உள்ள ஒரு துறையாகும். சைபர் கிரைம் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு மையத்தை உருவாக்குவது இதன் முக்கிய பணியாகும்.
3. செப்டம்பர் 2024-ஆம் ஆண்டில், நான்கு இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) இயங்குதளங்கள் திறக்கப்பட்டன. இணைய மோசடி தணிப்பு மையம் (Cyber Fraud Mitigation Centre (CFMC)), 'சமன்வயா' தளம், சைபர் கமாண்டோஸ் திட்டம் மற்றும் சந்தேகத்துற்குரிய பதிவகம் (Suspect Registry) ஆகியவை இதில் அடங்கும்.