பெண்களின் அதிகாரமளித்தலை, தனிப்பட்ட செயல்திறன், உள்-குடும்ப பேச்சுவார்த்தைகளில் அதிகாரம், சமூக ஈடுபாடு மற்றும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கான அணுகல் ஆகியவற்றை வரையறுக்கும் நான்கு முக்கிய பகுதிகளில், முதல் மூன்று பகுதிகளில் முன்னேற்றங்களைக் காண்கிறோம். இதற்கு நேர்மாறாக, வேலைவாய்ப்புக்கான அணுகல் தேக்கமடைந்துள்ளது.
நாட்டின் வளர்ச்சியானது, பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கவில்லை. இதில், சமூகக் காரணிகள் பெண்களைத் தடுக்கின்றன என்று பலர் கருதுகின்றனர். ஆனால், இந்த நம்பிக்கை வலுவாக ஆதரிக்கப்படவில்லை. இந்திய மனித மேம்பாட்டு ஆய்வு (India Human Development Survey (IHDS)) இதைப் பற்றிய ஆய்வை குறிப்பிடுகிறது. இது மேரிலாந்து பல்கலைக்கழகம் (University of Maryland) மற்றும் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழு (National Council of Applied Economic Research) ஆகியவற்றால் நடத்தப்படுகிறது.
இந்த கணக்கெடுப்பு 2004 மற்றும் 2024-ம் ஆண்டுக்கு இடையில் இந்திய குடும்பங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்காணிக்கிறது. இது 42,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் இந்த கணக்கெடுப்பு, இந்தியாவில் பெண்களின் வாழ்க்கையில் நிலையான முன்னேற்றங்களைக் காட்டுகிறது. இது 2020-ம் ஆண்டுகளில் இளம் இந்தியப் பெண்களின் லட்சியங்களை எடுத்துக்காட்டுகிறது. இந்த பெண்கள் 2000-ம் ஆண்டுகளின் முற்பகுதியில் வயது வந்த பெண்களுடன் ஒப்பிடும்போது வித்தியாசமான மாற்றத்தை அனுபவித்து வருகின்றனர் என்பதை குறிப்பிடுகிறது.
இந்திய மனித மேம்பாட்டு ஆய்வின் (India Human Development Survey (IHDS)) இரண்டாவது கட்டம் 2011-12ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. மேலும், 2022-24 காலகட்டத்தை உள்ளடக்கிய மூன்றாவது கட்டம் சமீபத்தில் நிறைவடைந்தது. இங்கே, ஒவ்வொரு கட்டத்திலும் 20-29 வயதுடைய சுமார் 18,000 திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களுடனான நேர்காணல்களில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த பத்து ஆண்டுகள் என்பது ஒப்பீட்டளவில் குறுகிய காலமாக இருப்பினும், இளம் இந்தியப் பெண்களின் வாழ்க்கையை மாற்றுவதில் முக்கியமானதாக உள்ளது. அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை இது குறிப்பிட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில், இந்தியப் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் திறன்கள் மற்றும் ஆற்றல்களை வளர்ப்பதில் அதிக முதலீடு செய்துள்ளனர்., மகன்கள் மற்றும் மகள்கள் இருவருக்கும் பெற்றோரின் விருப்பங்கள் வேகமாக வளர்ந்து, இது இரு பாலினருக்கும் கல்வியில் பெரும் அதிகரிப்புக்கு வழிவகுத்தது. இன்று, கல்வியில் பாலின இடைவெளி கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. மேலும், பெண்கள் ஆண்களை விட சிறப்பாக செயல்படத் தயாராக உள்ளனர்.
2011-12-ம் ஆண்டில், இந்திய மனித மேம்பாட்டு ஆய்வு (IHDS) கணக்கெடுப்பில் 20-29 வயதுடைய பெண்களில் 27% பேர் 12-ம் வகுப்பை முடித்துள்ளனர். 12% பேர் மட்டுமே கல்லூரிப் பட்டம் பெற்றுள்ளனர். 2022-24 ஆம் ஆண்டில், 50% க்கும் அதிகமானோர் 12 ஆம் வகுப்பை முடித்துள்ளனர். மேலும், 26% பேர் கல்லூரிப் பட்டம் பெற்றுள்ளனர். கல்லூரிப் பட்டம் பெற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களின் விகிதத்தில் வித்தியாசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண் கல்வியின் இந்த அதிகரிப்புக்கு தாமதமான திருமணமும் ஒரு காரணமாகும். 2011-12 ஆம் ஆண்டில், 20 வயதுகளில் உள்ள பெண்களில் 76 சதவீதம் பேர் திருமணமானவர்கள். 2022-24ஆம் ஆண்டில் இந்த விகிதம் 66 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்மையின் விரிவாக்கம், பெண்களுக்கு அவர்களின் சொந்த வாழ்க்கையில் அதிக கட்டுப்பாட்டை விரிவுபடுத்தக் கொடுத்தது. இருப்பினும், திருமணம் என்பது இன்னும் குடும்ப விஷயமாக உள்ளது. ஆனால் 2012-ம் ஆண்டில் 42 சதவீத இளம் பெண்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கை துணையாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தங்கள் கருத்தைக் கொண்டிருந்தனர். 2022-ம் ஆண்டில் இது 52 சதவீதமாக அதிகரித்துள்ளது. வாழ்க்கைத் துணைகளுக்கிடையேயான திருமணத்திற்கு முந்தைய தொடர்பு வரலாற்று ரீதியாக குறைவாக உள்ளது. ஆனால், அது வேகமாக அதிகரித்து வருகிறது. 2011-ம் ஆண்டில், 30 சதவீத பெண்கள் திருமணத்திற்கு முன்பு தங்கள் கணவர்களை சந்தித்து வந்தனர். மேலும், 27 சதவீதம் பேர் தொலைபேசி, வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் வழியாக இணைந்தனர். 2022-ம் ஆண்டில், இந்த விகிதம் முறையே 42 சதவீதம் மற்றும் 54 சதவீதமாக இருந்தது. இந்த மாற்றங்களில் பல பெண்கள் தங்கள் வாழ்க்கையையும் குடும்பங்களையும் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கின்றன. 2012-ம் ஆண்டில் 23 சதவீத பெண்கள் தங்கள் குழந்தைகளில் மகள்களைவிட மகன்களைப் பெறுவது அவசியம் என்று அதிகம் நினைத்தாலும், 2022-ம் ஆண்டில் இந்த விகிதம் 12 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இளம் பெண்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்துடன் அதிகம் தொடர்பு கொள்ளத் தொடங்கினர். பேருந்து அல்லது இரயிலில் தனியாகப் பயணம் செய்ய வசதியாக இருக்கும் பெண்களின் சதவீதம் 42% லிருந்து 54% ஆக உயர்ந்துள்ளது. சுய உதவிக் குழுக்களில் (Self Help Groups) உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதில், 20 வயதிற்குட்பட்ட பெண்கள் 10% முதல் 18% ஆக உயர்ந்துள்ளது. அரசியல் ஈடுபாடும் சற்று ஏற்றம் கண்டது. 2012-ம் ஆண்டில், 6% பேர் ஒரு கிராம சபை அல்லது வார்டு குழுவான அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இது, 2022-ம் ஆண்டில், இது 8% ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும், இவை புரட்சிகரமான மாற்றங்கள் அல்ல. பெண்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். எவ்வாறாயினும், இந்த மாற்றங்கள் முழுமைக்கும், இந்தியப் பெண்கள் தங்கள் வாழ்க்கையை வாழும் சமூக மற்றும் நெறிமுறைச் சூழலில் நடந்து வரும் மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது.
இருப்பினும், பெண்களுக்கான பொருளாதார வாய்ப்புகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குடும்பத் தோட்டக்கலைப் பயிர்களில் வேலை செய்வதன் மூலம் பெண்கள் இன்னும் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றனர். காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) இந்த வகையான வேலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது. இருப்பினும், கூலித் தொழிலாளர்களில் பெண்களின் பங்கேற்பு தேக்கமடைந்துள்ளது. கூலித் தொழிலாளர்களில் 20-29 வயதுடைய பெண்களின் விகிதம் 2012-ம் ஆண்டில் 18 சதவீதமாக இருந்தது. இது 2022-ம் ஆண்டில் 14 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று இந்திய மனித மேம்பாட்டு ஆய்வு (IHDS) காட்டுகிறது. இதற்கு, சில கல்லூரிச் சேர்க்கைக்கான அதிகரிப்பு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், 30 வயதுகளில் உள்ள பெண்களுக்கு, கூலி தொழிலாளர் பங்கேற்பு தேக்கமடைந்துள்ளது.
பெண்களின் குறைந்த வேலை வாய்ப்பு, குடும்பங்களில் பணிபுரியும் பெண்களை ஊக்கப்படுத்தும் சமூக நெறிமுறைகளால் ஏற்படுகிறது என்று புதிய பொருளாதார நம்பிக்கை கூறுகிறது. இருப்பினும், ஆய்வின் மாதிரியில் வேலை செய்யாத திருமணமான பெண்களில், 2011-ம் ஆண்டில் 73 சதவீதம் பேர் தங்களுக்கு தகுந்த வேலை கிடைத்தால் வேலை செய்வதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளனர்.
இந்த விகிதம் 2022–ம் ஆண்டில் 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், 72 சதவீத பெண்கள் தங்களுக்கு தகுந்த வேலை கிடைத்தால் தங்கள் குடும்பங்கள் வேலை செய்ய அனுமதிப்பதாகக் கூறுகின்றனர். இவை வெறும் கனவுகள் அல்ல. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act(MGNREGA)) ஆண்களுக்கு இணையான தொகையை பெண்களுக்கு வழங்கத் தொடங்கியபோது, பல பெண்கள் ஆர்வத்துடன் கைமுறையான வேலைகளையும் செய்தனர். இன்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்களைவிட அதிகமான பெண்கள் வேலை செய்கிறார்கள். போக்குவரத்து அமைப்புகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வழிவகுத்துள்ளன.
பெண்களின் அதிகாரமளிப்பை வரையறுக்கும் பகுதியான, தனிப்பட்ட செயல்திறன், உள்-வீட்டு பேச்சுவார்த்தைகளில் அதிகாரம், சமூக ஈடுபாடு மற்றும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கான அணுகல் ஆகியவை நான்கு முக்கிய பகுதிகளாக உள்ளன. முதல் மூன்று பகுதிகளிலும் முன்னேற்றங்கள் காணப்பட்டன. இருப்பினும், நான்காவது பகுதியான வேலைவாய்ப்புக்கான அணுகல் முன்னேறவில்லை. பொருளாதார வளர்ச்சியில் இருந்து இந்தியா பயனடைய பெண்களை அழைக்க வேண்டிய நேரம் இது. பாலின இடைவெளிக்கு சமமாக பங்களிக்கத் தயாராகவும் இருப்பதை அவர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
எழுத்தாளர் NCAER தரவு கண்டுபிடிப்பு மையத்தில் பேராசிரியர் மற்றும் மைய இயக்குநராக உள்ளார். மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் உள்ளனர்.