ஜார்கண்ட் பழங்குடியினர் தங்கள் உரிமைகளுக்காக நூற்றாண்டுகளாக எப்படிப் போராடி வந்தனர்? -நிகிதா மோஹ்தா

 ஜார்க்கண்ட் மாநிலத்தின் வரலாறு எப்போதும் அதன் பழங்குடி சமூகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. உண்மையில், தனி மாநிலத்தை உருவாக்குவதற்கு வழிவகுத்த இயக்கம் 1767-ம் ஆண்டில் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு பழங்குடி கிளர்ச்சியுடன் தொடங்குகிறது. 


ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக சமீபத்தில் வெளியிட்டது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code (UCC)) அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில், பழங்குடி சமூகங்கள் இதன் விதிகளில் இருந்து விலக்கப்படும் என்றும், அவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பேணப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


ஜார்க்கண்ட் மாநில பழங்குடியினரின் நலனுக்கான இந்த அர்ப்பணிப்பு புதியதல்ல. இது, மாநிலத்தின் பழங்குடி மக்களின் தேவைகள் மற்றும் நலன்கள் தேர்தல் அறிக்கைகளில் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. இது மாநிலத்தில் இந்த சமூகத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூக-அரசியல் நிலப்பரப்பில் பழங்குடியினர் முக்கிய பங்கு வகித்துள்ளனர் மற்றும் அவர்களின் போராட்டங்கள் பல வரலாற்று நிகழ்வுகளைத்  தூண்டியுள்ளன. 


ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெரும்பகுதி கிழக்கு இந்தியாவில் உள்ள சோட்டா நாக்பூர் பீடபூமியில் அமைந்துள்ளது. 1765-ம் ஆண்டில், வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா போன்ற பிராந்தியங்களுக்கு முகலாயர்கள் திவானி உரிமைகளை வழங்கிய பின்னர், ஆங்கிலேயர்கள் பீகாரின் ஒரு பகுதியான ஜார்க்கண்ட் மீது வருவாய் ஈட்ட அனுமதியைப் பெற்றனர். 


பல ஆண்டுகளாக, சோட்டா நாக்பூர் பீடபூமியில் முண்டா, சந்தால், ஓரான், ஹோ மற்றும் பிர்ஹோர் போன்ற பல்வேறு பழங்குடியினரின் தாயகமாக உள்ளது. லக்னோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் சமூக மானுடவியல் பேராசிரியரான நதீம் ஹஸ்னைன், தனது ”பழங்குடியினர் இந்தியா” (Tribal India) என்ற புத்தகத்தில், இந்த பழங்குடியினரைச் சேர்ந்த தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயிகள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த எண்ணிக்கை அனைத்து பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கும், தேசிய சராசரியான 44.7 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. இவர்கள், சாகுபடியை நம்பியிருப்பது அவர்களுக்கு நிலத்தை ஒரு முக்கிய சொத்தாக ஆக்குகிறது.


18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரத்தை விரிவுபடுத்தியபோது, அவர்கள் வணிக விவசாயம் மற்றும் சுரங்கத்தை ஊக்குவிக்கும் பல்வேறு நிர்வாக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தினர். இதனால், பல பழங்குடியினரை தங்கள் பூர்விக நிலங்களிலிருந்து இடம்பெயரச் செய்தது. இந்த வளச் சுரண்டலுக்கு எதிர்வினையாக, பழங்குடியினத் தலைவர்கள் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், தங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இயக்கங்களையும், கிளர்ச்சிகளையும் நடத்தினர். 


மறைந்த அறிஞர்களான ராம் தயாள் முண்டா மற்றும் பிஷேஷ்வர் பிரசாத் கேசரி ஆகியோர் 2003-ம் ஆண்டு எழுதிய 'ஜார்க்கண்ட் இயக்கத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள்' (Recent Developments In The Jharkhand Movement) என்ற கட்டுரையில், 1769-93 ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டம் ”வெளிப்படையான கிளர்ச்சியின் காலம்” (period of open revolt) என்று குறிப்பிடுகின்றனர்.


தால் கிளர்ச்சி முதல் முண்டா கிளர்ச்சி வரை 


ஜார்க்கண்டில் ஆங்கிலேய ஆட்சியின் போது நடந்த முதல் பழங்குடியினர் கிளர்ச்சி 1767-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியான தல்பூமின் முன்னாள் மன்னர் ஜகந்நாத் தால் தலைமையில் நடந்த ‘தால் கிளர்ச்சி (Dhal Revolt)’ ஆகும். உள்ளூர் மக்களை ஒடுக்கப்பட்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் தூண்டப்பட்ட இந்த கிளர்ச்சி 10 ஆண்டுகள் நீடித்தது. நடந்து கொண்டிருந்த கிளர்ச்சியின் அமைதியின்மைக்கு பதிலளிக்கும் விதமாக, ஆங்கிலேயர்கள் 1777-ம் ஆண்டில் ஜகந்நாத் தாலை தால்பமின் ஆட்சியாளராக மீண்டும் நியமித்தனர். 


இருப்பினும், இது ஒரு ஆரம்பம்தான். அதைத் தொடர்ந்து பல கிளர்ச்சிகள் நடந்தன. அவற்றில், இரண்டு குறிப்பிடத்தக்க கிளர்ச்சிகள் முண்டா கிளர்ச்சி மற்றும் தானா பகத் இயக்கம் என்று ஹஸ்னைன் கூறுகிறார். "பீகார்-ஜார்க்கண்ட் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட பழங்குடி இயக்கங்களில், பிர்சா இயக்கம் மிகவும் பரவலானது மற்றும் நன்கு அறியப்பட்டதாகும். தானா பகத் இயக்கத்திற்குப் பிறகு, நீண்டகால சமூக-அரசியல் தாக்கங்களின் பன்முக முக்கியத்துவம் காரணமாக மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது" என்று ஹஸ்னைன் குறிப்பிடுகிறார். 


1899 முதல் 1900-ம் ஆண்டு வரை நீடித்த முண்டா கிளர்ச்சி, ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் கந்துவட்டிக்காரர்களின் கீழ் பாரம்பரியமாக விவசாயிகளாக இருந்த முண்டாக்கள் எதிர்கொண்ட சுரண்டலுக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க பதிலாக கிளர்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த கிளர்ச்சிக்கு பிர்சா முண்டா தலைமை தாங்கினார். அவர் தெய்வீக உத்வேகம் கொண்ட ஒரு இளம் மற்றும் துடிப்பான தலைவர் ஆவார். இந்த இயக்கம் கொரில்லா போர் மற்றும் காலனித்துவ சொத்துக்கள் மற்றும் அதிகாரிகள் மீது நேரடி தாக்குதல்களை நடத்தியது.


இந்த இயக்கம் ஜார்க்கண்டில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பரவலான ஒன்றாகும். அது தெளிவான நோக்கங்களைக் கொண்டிருந்தது. இது, ஆங்கிலேய  அரசாங்கத்தை தூக்கியெறிவது, பிராந்தியத்திலிருந்து வெளிநாட்டினரை வெளியேற்றுவது மற்றும் ஒரு சுதந்திரமாக முண்டா அரசை நிறுவுவது, கந்துவட்டிக்காரர்கள், நில உரிமையாளர்கள், அறக்கட்டளைகள் மற்றும் பிற ஒடுக்குமுறையாளர்களை குறிவைத்து தைரியமாக போராட்டத்தில் இணையுமாறு  பிர்சா தனது ஆதரவாளர்களை வலியுறுத்தினார். ஆரம்பத்தில் ராஞ்சியில் ஆங்கிலேய கம்பெனி இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பிர்சா விரைவில் விடுவிக்கப்பட்டு தனது படைகளை அணிதிரட்ட மீண்டும் திரும்பினார். 


டிசம்பர் 25, 1897 அன்று, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை மூலதனமாகக் கொண்டு, பிர்சா உள்ளூர் கிறிஸ்தவ மக்களை குறிவைத்து ஒரு திடீர் தாக்குதலைத் திட்டமிட்டார். இதன் விளைவாக, வன்முறை ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் கிளர்ச்சியை அடக்கி, பிர்சா மற்றும் அவரது கூட்டாளி கயா முண்டாவை கைது செய்தனர். இறுதியில், போதுமான மருத்துவ வசதி இல்லாததால் 1900-ம் ஆண்டில் பிர்சா சிறையில் மரணத்திற்கு வழிவகுத்தது. 


கிளர்ச்சியின் அடக்குமுறை இருந்தபோதிலும், முண்டா கிளர்ச்சி நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, முண்டா மக்களால் பிர்சா ஒரு வீரனாகவும் தியாகியாகவும் நினைவுகூரப்படுகிறார்.


தானா பகத் இயக்கம் 1914-ம் ஆண்டில் தொடங்கியது. இது, பிர்சா இயக்கத்துடன் இணைந்து உருவானது. ஒரான் பழங்குடியினரின் தலைவரான ஜத்ரா பகத் என்பவரால் இந்த இயக்கம் நிறுவப்பட்டது. பகத் பாரம்பரிய நடைமுறைகளுக்கு திரும்ப அழைப்பு விடுத்தார். அவர் காலனித்துவ ஆட்சி மற்றும் மேற்கத்திய நாடுகளின் தாக்கங்களை நிராகரித்தார். பகத் விவசாய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, ‘வாடகை தராத’ பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதில், கட்டாய அல்லது குறைந்த ஊதிய வேலைகளை மறுக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்தினார். 


தானா பகத்கள் புரட்சிகர இந்து காங்கிரஸ் தொழிலாளர்களுடன் கூட்டணி வைத்தனர். அவர்கள் சத்தியாகிரகம், ஒத்துழையாமை மற்றும் கீழ்ப்படியாமை இயக்கங்களில் தீவிரமாகப் பங்குகொண்டனர். வன்முறையற்ற இந்திய தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக, அவர்கள் காங்கிரஸ் தொழிலாளர்களுடன் இணைந்து மதுபானக் கடைகளைத் தாக்கவும், உள்கட்டமைப்புகளை அழிக்கவும், காவல் நிலையங்கள் மற்றும் காலனித்துவ அரசாங்க அலுவலகங்களைத் தாக்கவும் முயன்றனர். இந்த இயக்கம் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இது அகிம்சை மற்றும் கூட்டு நடவடிக்கை போன்ற கருத்துக்களை அறிமுகப்படுத்தியது, பின்னர் அவை பரந்த சுதந்திரப் போராட்டத்தில் இணைக்கப்பட்டன.


இந்த இரண்டு இயக்கங்களின் மரபு ஜார்க்கண்டின் பழங்குடி சமூகங்களுக்குள் தொடர்ந்து எதிரொலிக்கிறது. இது, அவர்களின் கலாச்சார மற்றும் அரசியல் முயற்சிகளை இன்றுவரை வடிவமைக்கிறது. 


ஒரு புதிய மாநிலம் உருவாகிறது 


ராம் தயாள் முண்டா மற்றும் பிஷேஷ்வர் பிரசாத் கேசரி ஆகியோர் 1986-ம் ஆண்டு முதல் (அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டபோது, அதைத் தொடர்ந்து 1987-ல் ஜார்க்கண்ட் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டபோது) "மறுசீரமைப்புக் காலம்" (Period of Reconstruction) பற்றி குறிப்பிடுகின்றனர். இது இறுதியில் ஜார்க்கண்ட் இயக்கத்திற்கும், 2000-ம் ஆண்டில் ஒரு தனி மாநிலத்தை உருவாக்குவதற்கும் வழிவகுத்தது. 


இந்த அரசியல்-புவியியல் பிரதேசத்திற்கான உரிமைகோரலின் அடிப்படை அதன் கலாச்சார தொடர்ச்சி, இயற்கையின் சீரான தன்மை மற்றும் அதன் பொருளாதார வாழ்க்கையின் கட்டமைப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த இயக்கம் யதார்த்தமான நலன்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் கூட ஒப்புக் கொண்டுள்ளது என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர். 


ஜார்கண்ட் இயக்கத்தை ஆராய்வது ஜார்கண்டி கலாச்சாரம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வாறு மெதுவாக சிதைந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது என்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த செயல்முறை ஆங்கிலேயர்களின் வருகையுடன் தொடங்கி, சுதந்திரத்திற்குப் பிறகும் இன்றுவரை தொடர்கிறது.


ஜார்க்கண்ட் இயக்கத்தின் உணர்வை 1767-ம் ஆண்டில் ஜகந்நாத தால் கிளர்ச்சியில் காணலாம். இன்று, மாநிலத்தில் வசிப்பவர்கள், குறிப்பாக பழங்குடி சமூகங்கள், நிலத் தகராறுகள், குறைந்த கல்வியறிவு விகிதங்கள் மற்றும் தொடர்ச்சியான வறுமை மற்றும் வேலையின்மை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சவால்களை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். விரைவான தொழில்துறை வளர்ச்சி மற்றும் மின் திட்டங்களுக்கு மத்தியில், பொருளாதார சுரண்டல் அவர்களின் கூட்டு அடையாளத்தின் மைய அம்சமாக உள்ளது.




Original article:

Share: