இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி, தேவைகள் மற்றும் உண்மை நிலை -மாதவ் பாய்

 நகர்ப்புற மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. நகர்ப்புற இந்தியாவின் எதிர்காலம் நிதி மற்றும் கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ளும் திறனைப் பொறுத்து இருக்கும்.


இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை கடந்த பத்தாண்டுகளில் 400 மில்லியனிலிருந்து அடுத்த 30 ஆண்டுகளில் 800 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சி இந்தியாவின் நகர்ப்புறங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. இருப்பினும், இந்த வளர்ச்சி நிதி சவலைகளை மேலும் அதிகரிக்கும். இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 2036-ஆம் ஆண்டுக்குள் ₹70 லட்சம் கோடி தேவைப்படும் என உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நகர்ப்புற உள்கட்டமைப்பிற்காக 2036-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு சுமார் ₹70 லட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடுகிறது. தற்போது, ​​இந்தத் துறையில் 2018 நிலவரப்படி அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ₹1.3 லட்சம் கோடி முதலீடு செய்கிறது என்றும் இந்தத் தொகை, ஆண்டுக்கு தேவைப்படும் ₹4.6 லட்சம் கோடியில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே என்றும் 50% அடிப்படை நகர்ப்புற சேவைகளுக்காகவும், மற்ற பாதி நகர்ப்புற போக்குவரத்துக்காகவும் செலவிடப்படுகிறது.


உள்ளூர் மட்டத்தில் உள்ள சிக்கல்கள்


நகர்ப்புற உட்கட்டமைப்புக்கு நிதியளிப்பதில் நகராட்சி நிதி முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால், பல ஆண்டுகளாக அவை தேக்கமடைந்துள்ளன. 2002 முதல், நகராட்சி அமைப்புகள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% மட்டுமே பங்களித்துள்ளன. நகர்ப்புற முதலீடுகளில் நகராட்சி அமைப்புகள் 45% பங்களிக்கின்றன. மீதமுள்ளவை அரசு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. ஒன்றிய மற்றும் மாநில அளவில் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் 37% இலிருந்து 44% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், நகராட்சிகளின் நிதிநிலை இன்னும் பலவீனமாக உள்ளது. 2010 மற்றும் 2018-க்கு இடையில் வரி வருவாய் 8% மட்டுமே அதிகரித்துள்ளது. மானியங்கள் 14% அதிகரித்தது மற்றும் வரி அல்லாத வருவாய் 10.5% அதிகரித்துள்ளது. ஆனால், நகராட்சிகள் மூலம் வருவாய் ஈட்டும் பங்கு 51 சதவீதத்தில் இருந்து 43 சதவீதமாக குறைந்துள்ளது. இது அவர்களின் தன்னிறைவு திறன் குறைவதைக் காட்டுகிறது.


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban local bodies (ULBs)) வரி வசூலிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, 2017-18ல், பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் 5%-20% மட்டுமே வரி வசூலித்துள்ளன. இந்தியா முழுவதும், சொத்து வரி வசூல் மிகக் குறைவு, வெறும் ₹25,000 கோடி இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.15% மட்டுமே. கூடுதலாக, நகர்ப்புற சேவைகளுக்கான செலவுகளை மீட்டெடுப்பது 20% முதல் 50% வரை இருக்கும். இது சேவைகளின் விலைக்கும் அவர்களிடமிருந்து வசூலிக்கும் பணத்திற்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியைக் காட்டுகிறது.


இந்திய நகரங்களும் குறைந்த உள்வாங்கும் திறன் கொண்ட சவால்களை எதிர்கொள்கின்றன. இது நகர்ப்புற உள்கட்டமைப்பு பிரச்சினைகளை இன்னும் அதிகமாக்குகிறது. 15-வது நிதி ஆணையத்தின் அறிக்கையின் படி, மொத்த நகராட்சி வருவாயில் சுமார் 23% செலவிடப்படாமல் இருப்பதாகக் காட்டுகிறது. இருப்பினும், உபரி பணம் திறம்பட பயன்படுத்தப்படவில்லை. 2018-19ஆம் ஆண்டில், ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்கள் கூட தங்கள் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்ட படி மூலதன செலவினத்தில் (capital expenditure) 50% மட்டுமே செலவிட்டுள்ளன. ஒன்றிய அரசின் திட்ட நிதியின் பயன்பாடும் குறைவாகவே இருந்தது. புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டம் (Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT)) அதன் 80% நிதியைப் பயன்படுத்தியது, அதே நேரத்தில் சீர்மிகு நகரங்களின் திட்டத்தில் 70% மட்டுமே பயன்படுத்தியது.


பொது-தனியார் கூட்டாண்மைகள் (Public-private partnerships (PPPs)) நகர்ப்புற உள்கட்டமைப்பிற்கான நிதியின் முக்கிய ஆதாரமாகும். ஆனால், அவை கடந்த பத்தாண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளன. பொது-தனியார் கூட்டாண்மை முதலீடுகள் 2012ல் அதிகபட்சமாக ₹8,353 கோடியாக இருந்தது. ஆனால், 2018ல் வெறும் ₹467 கோடியாகக் குறைந்தது. பொது-தனியார் கூட்டாண்மை திட்டங்களின் வெற்றி பெரும்பாலும் பணம் செலுத்துதல் அல்லது நம்பகத்தன்மை நிதியளிப்பைப் பொறுத்தது. இருப்பினும், திட்டத்தில் குறிப்பிட்ட வருவாய் இல்லாததால், முதலீட்டாளர்கள் இந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இது அவர்களின் வணிக ஈர்ப்பைக் கணிசமாக குறைக்கும்.


அடுத்த கட்டம் சீர்திருத்தம்


பல நிதி சவால்களைக் கருத்தில் கொண்டு, இரண்டு பகுதி அணுகுமுறை தேவைப்படுகிறது. நீண்ட கால மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் இரண்டும் இருக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு, கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம். இந்த சீர்திருத்தங்களில் நகராட்சி அளவில் நிதி நிர்வாகத்தை மேம்படுத்த மாநில நிதி ஆணையங்களை வலுப்படுத்துவதும் அடங்கும். மேலும், நகராட்சி அரசாங்கங்களுக்கு அதிக நிதி மற்றும் நிர்வாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். நகர்ப்புற வளர்ச்சிக்கு வளங்களை சிறப்பாக நிர்வகிக்கவும் ஒதுக்கவும் இது அவர்களுக்கு உதவும். இந்த மாற்றங்களால், தனியார் முதலீடுகளை ஈர்க்க முடியும். கடன் வாங்குதல் மற்றும் நகராட்சி பத்திரங்கள் போன்ற முறைகள் மூலம் இதைச் செய்யலாம். நடுத்தர காலத்தில், பின்வரும் நடவடிக்கைகள் நிலையான நகர்ப்புற உள்கட்டமைப்பின் வளர்ச்சியை கணிசமாக மாற்றும்.


முதலில், திட்டங்களின் பட்டியலை உருவாக்க வேண்டும். உயர் அதிகாரம் கொண்ட நிபுணர்குழு மற்றும் 12-வது திட்ட பணிக்குழு ஆகியவை நிதியுதவி கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த கட்டமைப்பு அடுத்த 20 ஆண்டுகளில் ₹70 லட்சம் கோடி நகர்ப்புற உள்கட்டமைப்பு முதலீட்டு தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முதலீட்டில் சுமார் 15% பொது-தனியார் கூட்டாண்மைகளில் இருந்து வரலாம். இது ஆண்டுக்கு 250-300 பொது-தனியார் கூட்டாண்மை திட்டங்களைக் குறிக்கும். இந்த இலக்கை அடைய, 600-800 திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.


இரண்டாவதாக, திட்டத் தயாரிப்பு நிதி உதவியிலிருந்து பிரிக்கப்பட வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில், நகர்ப்புற உள்கட்டமைப்பு முதலீடுகள் விரைவான திட்டத் தயாரிப்பு காரணமாக எதிர்பார்த்த அளவு முன்னேறவில்லை. புதிய தேசிய திட்டங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், நிதியிலிருந்து திட்ட தயாரிப்பை பிரிப்பது முக்கியம். திட்டங்கள் நிதி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு ஏற்ப வடிவமைக்க வேண்டும். குறிப்பாக, காலநிலை மாற்றத்தால் இந்தியா பல்வேறு பாதிப்பை சந்தித்து வருகிறது.


மூன்றாவதாக, செயல்பாடுகளை மேம்படுத்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (Digital Public Infrastructure (DPI)) பயன்படுத்தவும். நகர்ப்புற சேவைகள், குறிப்பாகப் பொதுப் போக்குவரத்து, காலாவதியான முறைகளால் நிறுத்தி வைக்கப்படுகிறது. DPI-ஐ ஏற்றுக்கொள்வது பொது சேவைகளின் மேலாண்மை மற்றும் செயல்பாட்டை மாற்றும். இந்தத் துறையில் இந்தியாவை உலகளவில் முன்னணி நாடக நிலைநிறுத்த இது உதவும்.


நான்காவதாக, போக்குவரத்துத் திட்டங்களில் நில மதிப்பைக் கைப்பற்றுதல். 2036-க்குள் ₹70 லட்சம் கோடி முதலீட்டில் பாதி நகர்ப்புற போக்குவரத்துக்காக குறிப்பாக மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இது நில மதிப்பைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பை உருவாக்குகிறது. மெட்ரோ மற்றும் ரயில் திட்டங்களை நகர்ப்புற வளர்ச்சியுடன் இணைக்க வேண்டும். இது வேலைகளை போக்குவரத்து மையங்களுக்கு அருகில் கொண்டு வரவும், நகரங்களின் வடிவமைப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும்.


ஒத்துழைப்பின் தேவை


முடிவாக, இந்தியாவின் நகர்ப்புற எதிர்காலம் நேரடியாக நிதி மற்றும் கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்வதை சார்ந்துள்ளது. பங்குகள் அதிகமாக உள்ளன. இப்போது செயல்பட வேண்டிய நேரம் இது. உடனடி மற்றும் நீண்டகால உத்திகள் இரண்டிலும் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியா தனது வளர்ந்து வரும் நகரங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்க முடியும். இது எதிர்காலத்திற்கான நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யும். முன்னோக்கி செல்லும் பாதையில் அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களுக்கிடையில் ஒத்துழைப்பு தேவைப்படும். தனியார் துறையினரின் பங்களிப்பும் அவசியம். கூடுதலாக, புதுமை மற்றும் நிர்வாக செயல்திறனை மேம்படுத்துவதில் வலுவான கவனம் செலுத்த வேண்டும்.


மாதவ் பாய் இந்தியாவின் உலக வள நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.




Original article:

Share: