இந்தியாவின் பயிர்க்கழிவுகளை எரிப்பதைக் கண்காணிக்கும் முறை ஏன் சர்ச்சைக்குரியது?

 இந்தியாவில் விவசாயிகள் கோதுமை பயிரிடுவதற்காக, நெல் அறுவடைக்குப் பின் எஞ்சியிருக்கும் பயிர்க் கழிவுகள் அல்லது பயிர் சருகுகளை விரைவாக அகற்றுவதற்காக, சட்டங்களை மீறி, தீ மூட்டுகிறார்கள்.


இந்தியாவில் விவசாயிகள் கோதுமை பயிரிடுவதற்காக, நெல் அறுவடைக்குப் பின் எஞ்சியிருக்கும் பயிர்க் கழிவுகள் அல்லது பயிர் சருகுகளை விரைவாக அகற்றுவதற்காக, அந்த நடைமுறையைத் தடுக்கும் சட்டங்களை மீறி, தீ மூட்டுகிறார்கள்.


இந்த எரிப்பு முறையை மாற்றக்கூடிய அறுவடை இயந்திரங்களுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்கினாலும், இந்த இயந்திரங்களுக்கான தேவை குறைவாக உள்ளது. விலை அதிகம் என்பதால், வாடகைக்கு விட விரும்புவோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.


பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை இந்தியா எவ்வாறு கண்காணிக்கிறது?


அதிக பரப்பளவைக் கொண்டிருப்பதால், வேளாண்மையில் தீயை கண்காணிக்க செயற்கைக்கோள்கள் மட்டுமே ஒரே வழி என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


இந்தியாவின் விண்வெளி நிறுவனம் இரண்டு நாசா செயற்கைக்கோள்களின் தரவுகளைப் பெறுகிறது. இந்த செயற்கைக்கோள்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய வட மாநிலங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை, காலை 10:30 மணிக்கு (0500 GMT) மற்றும் மதியம் 1:30 மணிக்கு (0800 GMT) கடந்து செல்கின்றன.


நாசா செயற்கைக்கோள்கள் 90 வினாடிகள் நீடிக்கும் குறுகிய நேரத்தில் மட்டுமே பயிர்க்கழிவு எரிவதை கண்டறியும். அந்த நேரத்தில் தெரியும் அல்லது முந்தைய அரை மணி நேரத்தில் எரியும் தீயை மட்டுமே அவர்களால் கண்டறிய முடியும்.


விவசாயிகள், காலப்போக்கில், இந்தக் கண்காணிப்பு காலத்தை உணர்ந்து, நாசா செயற்கைக்கோள்களின் கண்காணிப்பைத் தவிர்ப்பதற்காக தங்கள் பயிர் கழிவுகளை எரிக்கும் நேரத்தை மாற்றியதாக நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.


தேசிய தலைநகர் பிராந்தியத்தில் மாசு மேலாண்மையை கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசகர், இந்த வாரம் சுற்றுப்பாதை மற்றும் நிலையான செயற்கைக்கோள்களில் இருந்து பயிர்க்கழிவுகள் எரிக்கப்படும் தரவுகளில் முரண்பாடு இருப்பதாக கூறினார். நாசா கோடார்ட் விண்வெளி விமான மையத்தின் மூத்த விஞ்ஞானியின் தகவலை அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாசா செயற்கைக்கோள்கள் ஏற்கனவே நகர்ந்த பிறகு, தென் கொரிய நிலையான செயற்கைக்கோள் மாலை 4:20 மணிக்கு (1050 GMT) பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை கண்டறிந்ததாக விஞ்ஞானி குறிப்பிட்டார்.


இதற்கு மாற்று வழி என்ன?


இதற்கு மாற்றாக நிலையான செயற்கைக்கோள்களில் இருந்து பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவது பற்றிய தரவுகளை வாங்குமாறு ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த தரவு "துல்லியமானது அல்ல" (sub-optimal) என்று அரசாங்கம் கூறியது.


அதற்கு பதிலாக, இந்தியாவின் விண்வெளி நிறுவனம் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை கணக்கிடுவதற்கான அமைப்பை உருவாக்கி, அவை விட்டுச்செல்லும் எரிந்த பகுதிகளை ஆய்வு செய்கிறது.




Original article:

Share: