பாரிஸ் உடன்படிக்கையின் முக்கிய இலக்குகளை காலநிலை பொறுப்புகள் தொடர்ந்து தவறவிடுகின்றன: NDC தொகுப்பு அறிக்கை -தன்னு ஜெயின்

 சமீபத்திய தொகுப்பு அறிக்கை காலநிலை நடவடிக்கை இன்னும் போதுமானதாக இல்லை என்பதைக் காட்டுகிறது. பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை எட்டுவதற்கு உமிழ்வு குறைப்பு நடவடிக்கை இல்லை .


சமீபத்திய தேசிய தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளின் (Nationally Determined Contributions (NDC)) தொகுப்பு அறிக்கை ஒரு தெளிவான யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள நாடுகளின் அதிகமான பங்கேற்பு மற்றும் மேம்பட்ட அர்ப்பணிப்புகள் இருந்தபோதிலும், பாரிஸ் ஒப்பந்தத்தின் வெப்பநிலை இலக்குகளில் இருந்து விலகி சென்றது.


தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDC) என்பது பாரீஸ் உடன்படிக்கைக்கு ஏற்ப உலக நாடுகளால் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் புதுப்பிக்கப்படும் தேசிய காலநிலை செயல் திட்டங்கள் ஆகும். இது உலகளாவிய வெப்பநிலை உயர்வை 2°C க்கும் குறைவாகவும் 1.5°C ஆகவும் கட்டுப்படுத்த முயல்கிறது.


195 நாடுகள் NDC செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தாலும், 168 சமீபத்திய NDCகள் உலகளாவிய உமிழ்வுகளில் 95% உள்ளடக்கியிருந்தாலும், அவை காலநிலை நடவடிக்கையின் அவசியத்தில் சர்வதேச ஒருமித்த கருத்தை பரிந்துரைக்கிறது.  இது அர்ப்பணிப்புகளுக்கும் தேவையான நடவடிக்கைகளுக்கும் இடையில் ஒரு சிக்கலான இடைவெளியை மறைக்கிறது. அனைத்து காலநிலை உறுதிமொழிகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்டாலும், உலக வெப்பநிலை 2.1-2.8°C வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கான 1.5 டிகிரி செல்சியஸ் அளவை விட அதிகமாகும்.


தற்போதைய திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், 2030-ஆம் ஆண்டில் 51.5 ஜிகா டன்கள் கார்பன்-டை-ஆக்ஸ்டைடு (CO2) உமிழ்வை சந்திக்க நேரிடும். இது 2019-ஆம் ஆண்டை விட 2.6% மட்டுமே குறைவாக உள்ளது.  இந்த அளவுகளில் பசுமை இல்ல வாயு மாசுபாடு விதிவிலக்கு இல்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்களுக்கும் மற்றும் பொருளாதாரத்திற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.


மீதமுள்ள கார்பன் பட்ஜெட்டை (carbon budget) எவ்வளவு விரைவாகப் பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் கவலைக்குரிய பிரச்சினை. தற்போதைய NDCகள் 2030-ஆம் ஆண்டிற்குள் 1.5°Cக்கான நிதியை பட்ஜெட்டில் 86% செலவழிக்கும்.  இது தோராயமாக 70 பில்லியன் டன்  கார்பனை (CO2)  மட்டுமே மிச்சப்படுத்துகிறது. இது இன்னும் இரண்டு வருட உமிழ்வு குறைப்பு நடவடிக்கைக்கு மட்டமே பயன்படும். 


காலநிலை இலக்குகளுக்கும் அவற்றை அடைவதற்கான திறனுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியை அறிக்கை காட்டுகிறது. 91% நாடுகள் காலநிலை நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான தங்கள் திட்டங்களைப் பகிர்ந்து கொண்டாலும், 69% நாடுகள் வெற்றி பெற சர்வதேச ஆதரவு தேவை என்று கூறியுள்ளன. வெளிப்புற உதவியை நம்பியிருப்பது இந்த உலகளாவிய காலநிலை எதிர்வினையை பலவீனமாக்குகிறது. இந்த இலக்குகள் நிதி உதவி, தொழில்நுட்ப பகிர்வு மற்றும் உள்ளூர் திறன்களை வளர்ப்பதற்கான ஆதரவு ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.


தேசியக் கொள்கைகளில் காலநிலை இலக்குகள் அதிகரித்து வருவது ஒரு நேர்மறையான நிலையாக உள்ளது. ஏறக்குறைய பாதி (48%) நாடுகள் தங்கள் காலநிலை இலக்குகளை சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் திட்டங்களில் சேர்த்துள்ளன. காலநிலை இலக்குகளை சர்வதேச கடமைகளாக பார்ப்பதில் இருந்து தேசிய வளர்ச்சியின் முக்கிய அங்கமாக மாற்றுவதை இது காட்டுகிறது. கூடுதலாக, 66% நாடுகள் தங்களின் காலநிலைக் கொள்கைகளை அவற்றின் வளர்ச்சி முன்னுரிமைகளுடன் சீரமைத்து, காலநிலை நடவடிக்கையை ஒருங்கிணைப்பதில் அதிக முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.


இருப்பினும், இந்த ஒருங்கிணைப்பு சவால்களை எதிர்கொள்கிறது. மேம்படுத்தப்பட்ட பங்குதாரர் ஆலோசனை, பாலின-உணர்திறன் அணுகுமுறைகள் மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பது ஆகியவை பல்வேறு சமூக மற்றும் பொருளாதார சூழல்களில் காலநிலை கொள்கைகளை செயல்படுத்துவதில் உள்ள சிக்கலை காட்டுகிறது. இந்த  அறிக்கையின் முக்கியத்துவம், வெற்றிகரமான காலநிலை நடவடிக்கைக்கு தொழில்நுட்ப தீர்வுகள் மட்டும் தேவைப்படாமல்,  சமூக சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய ஆளுகை ஆகியவற்றில் இன்னும் தேவையான கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.


பொறுப்புகளின் துறைசார் விநியோகம் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் இரண்டையும் வெளிப்படுத்துகிறது. ஆற்றல் பகிர்வு (95%), விவசாயம் மற்றும் வனவியல் (89%) மற்றும் போக்குவரத்து (87%) ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துவது முக்கிய உமிழ்வு ஆதாரங்களுடன் ஒத்துப்போகிறது.  எவ்வாறாயினும், இந்தத் துறைகளில் உள்ள உறுதிப்பாடுகளின் மாறுபட்ட நிலை மற்றும் தனித்தன்மை ஆகியவை நாடுகளிடையே சீரற்ற திறன் மற்றும் முன்னுரிமையை பரிந்துரைக்கின்றன.


குறிப்பிட்ட, செலவு குறைந்த தணிப்பு விருப்பங்களை அடையாளம் காண்பது நடவடிக்கைக்கான நடைமுறை கட்டமைப்பை வழங்குகிறது. இருப்பினும், தொழில்துறை ஆற்றல் திறன் (30%) மற்றும் ஃபுளூரின் வாயு (fluorinated gas) உமிழ்வைக் குறைத்தல் (26%) போன்ற சில உயர்-சாத்தியமான விருப்பங்களுக்கு ஒப்பீட்டளவில் சில நாடுகள் உறுதியளித்துள்ளன என்பது, தவறவிட்ட வாய்ப்புகள் மற்றும் மேம்பட்ட நடவடிக்கைக்கான சாத்தியமான பகுதிகளைக் குறிக்கிறது.


தொகுப்பு அறிக்கை (synthesis report) உலகளாவிய காலநிலை நடவடிக்கையின் கலவையான படத்தை வழங்குகிறது. பங்கேற்பு மற்றும் அதிகரித்துவரும் கொள்கை ஒருங்கிணைப்பு ஆகியவை முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், உமிழ்வு குறைப்பு, செயல்படுத்தும் திறன் மற்றும் ஆதரவு வழிமுறைகள் ஆகியவற்றில் உள்ள கணிசமான இடைவெளிகள் தற்போதைய அணுகுமுறைகள் போதுமானதாக இருக்காது என்று கூறுகின்றன.


மூன்று முக்கிய பகுதிகளுக்கு உடனடி கவனம் தேவை என்பதை குறிப்பிட்டுள்ளது. முதலாவதாக, கார்பன் வரவுசெலவுத் திட்டத்தின் விரைவான குறைப்பு, தற்போதுள்ள கடமைகளை விரைவாக செயல்படுத்துவதையும் எதிர்கால NDC புதுப்பிப்புகளில் மேம்பட்ட லட்சியத்தையும் கோருகிறது. இரண்டாவதாக, சர்வதேச சமூகம் ஆதரவு இடைவெளியை நிவர்த்தி செய்ய வேண்டும்.  இறுதியாக, நிதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தில் நிபந்தனைக்குட்பட்ட உறுதிமொழிகளை செயல்படுத்த காலநிலை நடவடிக்கையை பரந்த வளர்ச்சி நோக்கங்களுடன் ஒருங்கிணைந்த முன்னேற்றம் மற்றும் சமூக அனுமதியை வலுப்படுத்தல் வேண்டும்.


அடுத்த சில வருடங்கள் முக்கியமானதாக இருக்கும். தற்போதைய NDCகள் 2030-ஆம் ஆண்டுக்குள் 1.5°C-க்கு மீதமுள்ள கார்பன் பட்ஜெட்டில் பெரும்பாலானவற்றைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், உலகளாவிய நிலை இதை மாற்றியமைக்கும் செயலை எதிர்கொள்கிறது.


பாரிஸ் உடன்படிக்கை இலக்குகளை அடைவதற்கான பாதை, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானதாகவே உள்ளது. ஆனால், உலகளாவிய சமூகத்தின் ஈடு இணையற்ற ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது.




தன்னு ஜெயின் இந்துஸ்தான் டைம்ஸ் தலைமை உள்ளடக்க தயாரிப்பாளர் (content producer). உலகெங்கிலும் உள்ள காலநிலை செய்திகளின் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து, இணைக்கப்பட்ட அறிக்கைகள், ஆராய்ச்சி மற்றும் நிபுணர்களின் பேச்சைப் பயன்படுத்தி அதன் தாக்கத்தை பகுப்பாய்வு செய்கிறார்.




Original article:

Share: