தகவலறிந்து இருங்கள். தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் புதிய இணையவழி மோசடி குறித்து குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இது "டிஜிட்டல் கைது" (digital arrest) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊழலில், மோசடி செய்பவர்கள் தங்களை சட்ட அமலாக்க அல்லது அரசாங்க அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து தனிநபர்களை பயமுறுத்தி பணம் பறிக்கிறார்கள்.
2023-ம் ஆண்டின், முதல் காலாண்டில் டிஜிட்டல் கைது மோசடிகளால் மட்டும் இந்திய குடிமக்கள் ₹120.3 கோடியை இழந்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் (Ministry of Home Affairs (MHA)) சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தில் (Indian Cybercrime Coordination Centre) I4C ஆவணத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இணைய மோசடிகளில் இது தொடர்பான மோசடிகளும் அடங்கும். இது இணைய குற்றவியல் புகார்களைக் கையாளும் பொறுப்பு இந்த மையத்திற்கு உண்டு. மொத்தத்தில், 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் இணைய மோசடிகள் ₹1,776 கோடியாக இருந்தது. இவற்றில், 46 சதவீத வழக்குகள் மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியாவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
தேசிய இணைய குற்றவியல் அறிக்கையிடல் தளமானது (National Cybercrime Reporting Portal (NCRP)), இதன் அறிக்கையில் இணையகுற்றவியல் புகார்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 2023-ம் ஆண்டு, முதல் நான்கு மாதங்களில், 740,000 புகார்கள் வந்துள்ளன. இது 2021-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 4,52,000 புகார்களை விட குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
இது எப்படி வேலை செய்கிறது?
டிஜிட்டல் கைது மோசடியில், மோசடி செய்பவர்கள் ஒரு போலியான காட்சியை உருவாக்குகிறார்கள். அதாவது, பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் அல்லது இதுபோன்ற குற்றங்களை அவர்கள் குறிப்பிடலாம். மோசடி செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பாதிக்கப்பட்டவரை எச்சரிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவரின் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் குற்றச் செயலில் ஈடுபட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
மோசடி செய்பவர்கள் சீருடை அணிந்த நிலையில், சட்ட அமலாக்க அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். பாதிக்கப்பட்டவரை "வழக்கு" என்று குறிப்பிட்டு, இதை மூடுவதற்கு ஈடாக அவர்கள் பணம் செலுத்த வேண்டும். இணையகுற்றவாளிகள் பயன்படுத்தும் நிலையான முறையாக இது மாறிவிட்டது.
I4C-ன் படி, டிஜிட்டல் கைது மோசடிகள் பொதுவாக ஒரு திட்டமிட்ட வரிசையைப் பின்பற்றுகின்றன.
முதலில், அவர்கள் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண்கிறார்கள். அவர்கள் தங்கள் மோசடியை மேலும் உறுதிப்படுத்த தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கின்றனர்.
ஆள்மாறாட்டம் : மோசடி செய்பவர்கள் காவல்துறை, சிபிஐ அல்லது பிற முகமைகளின் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். அவர்கள் போலி சீருடைகளை அணியலாம் அல்லது பயத்தை உருவாக்க அரங்கேற்றப்பட்ட பின்னணியைப் பயன்படுத்தலாம்.
அழுத்தத்தைப் பயன்படுத்துதல் : கைது செய்யப்படுவதைத் தவிர்க்க, பாதிக்கப்பட்டவர் விரைவாகச் செயல்படுமாறு வலியுறுத்தப்படுகிறது. வழக்கை "மூட" பணம் கேட்கப்படுகிறது.
இத்தகைய மோசடிகளுக்கு எதிரான சிறந்த பாதுகாப்புக்கான விழிப்புணர்வு அவசியம். சட்ட அமலாக்க அதிகாரிகள் அல்லது அரசாங்க அதிகாரிகளிடமிருந்து எதிர்பாராத ஆடியோ அல்லது வீடியோ அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். அழைப்பு மோசடியானது என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக இணைப்பைத் துண்டிக்கவும். தெரியாத எண்களில் இருந்து வீடியோ அழைப்புகளைத் தவிர்க்கவும்.
உங்கள் நெட்வொர்க்கில் உள்ள மற்றவர்களை குறிவைப்பதில் மோசடி செய்பவர்களுக்கு உதவக்கூடிய தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், கூறப்படும் வழக்கைத் தீர்ப்பதற்கு பணத்தை மாற்ற வேண்டாம். அதற்குப் பதிலாக, அதிகாரப்பூர்வ உதவிக்கரம் எண்களில் (official helplines) உள்ளூர் காவலைத் தொடர்பு கொள்ளவும், தேவைப்பட்டால், உங்கள் வங்கிக் கணக்குகளைத் தற்காலிகமாகத் தடுக்கவும்.
அறிக்கையிடுவதற்கு ஸ்கிரீன்ஷாட்கள் அல்லது அழைப்புக்கான பதிவுகள் போன்ற எந்தவொரு ஆதாரத்தையும் வைத்திருங்கள். உங்களிடம் உள்ள அனைத்து விவரங்களுடன் உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்வதே சிறந்த நடவடிக்கையாகும்.
மோசடிகளைத் தவிர்க்க இந்திய கணினி அவசரநிலைப் பதில் குழு (Indian Computer Emergency Response Team (CERT-In)) குறிப்பிட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளது. முதலில், நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம், அரசாங்க நிறுவனத்தைச் சேர்ந்ததாகக் கூறும் எந்தவொரு அழைப்பாளரின் அடையாளத்தையும் உறுதிப்படுத்தவும். இரண்டாவதாக, தெரியாத அழைப்பாளர்களுடன் அல்லது ஆன்லைனில் தனிப்பட்ட அல்லது நிதி விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். மூன்றாவதாக, அழுத்தத்தின் கீழ் ஒருபோதும் பணத்தை மாற்ற வேண்டாம். நான்காவதாக, மரியாதைக்குரிய முகமைகள் உடனடியாக பணம் கேட்காது. இறுதியாக, சந்தேகம் இருந்தால், 1930 என்ற தேசிய சைபர்-செக்யூரிட்டி ஹெல்ப்லைனுக்கு அல்லது சைபர் கிரைம் இணையதளம் மூலம் சம்பவங்களைப் புகாரளிக்கவும்.
நீங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளீர்கள் என நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு, மறுபரிசீலனை சாத்தியமா என்பதைப் பார்க்கவும். மேலும், இழப்புகளைத் தடுக்க தற்காலிக கணக்கை முடக்கவும்.
உங்கள் உள்ளூர் இணையகுற்றவியல் துறை மற்றும் தேசிய இணையகுற்றவியல் அறிக்கையிடல் தளத்தில் (National Cybercrime Reporting Portal (NCRP)) முறையான அறிக்கையைச் சமர்ப்பிக்கவும், மோசடிக்கான ஏதேனும் ஆதாரங்களை வழங்கவும்.
டிஜிட்டல் மோசடிகளின் இந்த யுகத்தில் தகவல் மற்றும் விழிப்புடன் இருப்பது அவசியம். ஏனெனில், மோசடி செய்பவர்கள் சந்தேகத்திற்கு இடமில்லாது நபர்களை ஏமாற்றுவதற்கு தொடர்ந்து புதிய முறைகளை வகுக்கிறார்கள்.
சாகர் ஃபியூச்சர் ஷிப்ட் லேப்ஸின் இணை நிறுவனர், மற்றும் ஷுபம் ஒரு எத்திகல் ஹேக்கிங் நிபுணர் ஆவார்.