முக்கிய அம்சங்கள் :
1. தற்போது, மசோதாவை முன்வைத்து, ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை கூறியதாவது, இந்தியாவில் முதல் பயணிகள் இரயில் சேவை 1853-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மேலும், இரயில்வே சட்டம் 1890-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இரயில்வே வாரியச் சட்டம் (Indian Railways Board Act) 1905-ம் ஆண்டில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் தொடர்பாக அரசு தற்போது முடிவெடுத்துள்ளதாவது, இந்திய இரயில்வே வாரியச் சட்டம்-1905, இரயில்வே சட்டம்-1989 உடன் இணைக்க திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு சட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே சட்டமாக மாற்றப்படும். இந்த புதிய சட்டம் இரயில்வே (திருத்த) மசோதா, 2024 (Railways (Amendment) Bill) என்று அழைக்கப்படும்.
2. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இரயில்வே வாரியத்தின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்று காங்கிரஸ் எம்பி மனோஜ் குமார் கூறினார். இது தனியார்மயமாக்கலை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் கவலை தெரிவித்தார்.
3. மக்களவையில் மசோதா மீதான முழு நாள் விவாதத்தின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று ஆர்எஸ்பியைச் சேர்ந்த என்.கே.பிரேமச்சந்திரன் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
உங்களுக்குத் தெரியுமா?
1. 'இரயில்வே சட்டம்-1989' (Railways Act) இந்திய இரயில்வேயின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை நிர்வகிக்கிறது. சிறந்த நிர்வாகத்திற்காக இரயில்வேயை மண்டலங்களாக அமைப்பதற்கான ஏற்பாடுகள் இதில் அடங்கும். ‘இந்திய இரயில்வே வாரியச் சட்டம், 1905’ இரயில்வே வாரியத்தை உருவாக்கியது. இந்த இரயில்வே வாரியம் இந்திய இரயில்வேயை மேற்பார்வையிடும் ஒன்றிய அதிகாரம் படைத்ததாகும். இந்தச் சட்டத்தின்படி, இரயில்வே தொடர்பான அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை ஒன்றிய அரசு வாரியத்திடம் ஒப்படைக்கலாம்.
2. ஆகஸ்ட் 9, 2024 அன்று, மக்களவையில் ‘இரயில்வே (திருத்தம்) மசோதா, 2024’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா 1905 சட்டத்தை ரத்து செய்து, இரயில்வே வாரியம் தொடர்பான அதன் விதிகளை 1989 சட்டத்துடன் ஒருங்கிணைக்க வழிவகுத்தது. மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்களின் அறிக்கையின்படி, இந்த நடவடிக்கையானது சட்டக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவதையும், இரண்டு தனித்தனி சட்டங்களைக் குறிப்பிடுவதற்கான தேவையை நீக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.