இந்தியாவில் குறைவான மாற்று கருவுறுதல் விகிதங்களை அடைவதால் ஏற்படும் சமூகப்பொருளாதார தாக்கங்களைப் பற்றி விவாதிக்கவும். -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :

1. மக்கள்தொகை அளவீடுகள் பொதுவாக நிலையானதும் நீண்ட காலத்திற்கு மாறக்கூடியதுமாகும். கவனம் கட்டுப்பாடற்ற கருவுறுதல் பற்றிய கவலைகளிலிருந்து தொழிலாளர் பற்றாக்குறை பற்றிய கவலைகளுக்கு மாறியுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும். இந்தியாவின் மக்கள்தொகை 2060-ம் ஆண்டளவில் 1.6 பில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கருவுறுதல் பிரச்சினையை அரசியல் ரீதியாக மிகவும் சர்ச்சைக்குரியதாக ஆக்குகிறது.


2. இந்தியாவை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு, ஒவ்வொரு தம்பதியினரும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பரிந்துரைத்துள்ளார். இந்த அணுகுமுறை இந்தியாவுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. அரசியல் அழுத்தத்தின் மூலம் அதிக கருவுறுதலை ஊக்குவிப்பது வெற்றியடைய வாய்ப்பில்லை. குறிப்பாக, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)) 1.9க்கு கீழே குறைந்துள்ளது.


3. மக்கள்தொகை மாற்றத்தால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையை மாநிலங்களுக்கு இடையேயான இடம்பெயர்வு மற்றும் இலக்கு கொண்ட திறன் மேம்பாடு மூலம் தீர்க்க முடியும். இடம்பெயர்வு நடைமுறைகளை எளிமையாக்குவது மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான தொழிலாளர் இயக்கத்திற்கான தடைகளை நீக்குவது, குறிப்பாக கோவிட்-19-ன் போது உருவாக்கப்பட்டவை. புலம்பெயர்ந்தோருக்கான மேம்படுத்தப்பட்ட வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மாநிலங்களில் சமமான தொழிலாளர் கிடைப்பதை உறுதி செய்ய உதவும்.


4. சமூகங்களுக்கிடையில் கருவுறுதல் வேறுபாடுகள் குறைந்து வருகின்றன. முஸ்லிம்களுக்கான மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)) மற்ற குழுக்களைவிட அதிகமாக இருந்தாலும், கணிசமாக குறைந்துள்ளது. சரியான கல்வி, சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுடன், இருபதாண்டுக்குள் முஸ்லிம்கள், பட்டியலிடப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் மொத்த கருவுறுதல் விகிதத்தை (TFR) மற்ற சமூகங்களுக்கு ஏற்ப கொண்டுவர முடியும்.


5. அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் நிதிப் பகிர்வில் தென் மாநிலங்கள் சவால்களை எதிர்கொள்கின்றன. இது அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கான பங்கு குறைந்து வருவதே காரணம். நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த, மாற்று நிலைகள் மக்கள் தொகை அளவைக் காட்டிலும் நிர்வாகத் திறனில் கவனம் செலுத்த வேண்டும்.


6. கருவுறுதலில் கடுமையான சரிவு மற்றும் அதன் விளைவாக தொழிலாளர் பற்றாக்குறை எதிர்காலத்தில் சாத்தியமில்லை. கேரளாவில் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)) சற்று அதிகரித்துள்ளது. மேலும், மற்ற மாநிலங்கள் மாற்று நிலையைச் சுற்றி நிலைப்படுத்தி வருகின்றன. சில மாவட்டங்களில் 2036-ம் ஆண்டுவரை மாற்று நிலைக்கு மேல் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) இருக்கும். தொழிலாளர் பற்றாக்குறையை குறுகியகால மற்றும் நீண்டகால தொழிலாளர் இயக்க உத்திகள் மூலம் தீர்க்க முடியும்.


7. பெண்களின் வேலை பங்கேற்பு விகிதம் பல வளரும் பொருளாதாரங்களை விட குறைவாக உள்ளது. மக்கள்தொகை மாற்றங்கள் பெண்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், அதிக எண்ணிக்கையில் பணியாளர்களில் சேரவும் வாய்ப்புகளை உருவாக்கலாம்.


8. இந்தியாவின் தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் குறைந்த உற்பத்தித்திறன், முறைசாரா வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். நவீன உற்பத்தி மற்றும் சேவைகளில் பொருளாதார வளர்ச்சி தொழிலாளர்கள் அதிக உற்பத்தி வேலைகளுக்கு செல்ல உதவும். தொழிலாளர் சந்தையில் உள்ள அழுத்தம், பகுதிநேர-வேலை (semi-employed) மற்றும் வீட்டு அடிப்படையிலான தொழிலாளர்களிடையே (home-based workers) திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும்.


உங்களுக்குத் தெரியுமா?


1. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை தெரிவிக்கும் அறிக்கைகளுடன் மக்கள்தொகைப் பிரச்சினைகள் மீண்டும் விவாதிக்கப்படுகின்றன. அதன்பிறகு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் செய்யும் பணியும் நடைபெறும். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்கள், ஒருவேளை தங்கள் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்று கவலைப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் மக்களுக்கு அதிக குழந்தைகளைப் பெற அறிவுறுத்துவதாகவும் கூறியுள்ளனர்.


2. ஒன்றியத்திலிருந்து மாநிலங்களுக்கு வளங்கள் எவ்வாறு பகிரப்படுகிறது என்பதை தீர்மானிக்க மக்கள்தொகை ஒரு முக்கிய காரணியாகும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் நிதி ஆயோக், மாநிலங்களுக்கு எவ்வளவு வளங்கள் என்பதையும், அவை எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படும் என்பதைத் தீர்மானிக்கிறது. மக்கள் தொகை என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் அளவுகோல்களில் ஒன்றாகும்.


3. மற்றொரு முக்கிய பதில் பின்தங்கிய மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதாகும். இந்தப் பகுதியில் தற்போது பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு உதாரணம், ஆர்வமுள்ள மாவட்ட முயற்சி (aspirational district initiative) ஆகும்.


4. இந்தியாவின் மக்கள்தொகை சூழ்நிலையை சுருக்கமாக பார்ப்போம். அதன் மக்கள்தொகை 2070-ல் சுமார் 170 கோடியாக உயரும் என்றும் அதன் பிறகு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள்தொகை வளர்ச்சி பெரும்பாலும் மொத்த கருவுறுதல் விகிதத்தால் (TFR) அளவிடப்படுகிறது, இது தற்போதைய கருவுறுதல் முறையைப் பின்பற்றினால் ஒரு பெண் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையாகும். இந்தியா, ஒட்டுமொத்தமாக, TFR 2ஐ எட்டியுள்ளது, மாற்று கருவுறுதல் விகிதம் 2.1-க்குக் கீழே, அதாவது தாய்க்குப் பதிலாக ஒரு மகள் வருவார். மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மாற்று அல்லது குறைவான கருவுறுதல் விகிதத்தைக் கொண்ட மாநிலங்களில் வசிக்கின்றனர், அதே சமயம் மூன்றில் ஒரு பகுதியினர் மாற்று-நிலை கருவுறுதலை விட அதிகமாக உள்ள மாநிலங்களில் வசிக்கின்றனர்


5. மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) இந்திய மாநிலங்களில் பெரிதும் மாறுபடுகிறது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (National Family Health Survey (NFHS)) 5-ன் படி, இது 1.5 முதல் 3.0 வரை இருக்கும். இந்த வேறுபாட்டைக் குறைக்க இரண்டு வழிகள் உள்ளன. TFR குறைவாக உள்ள மாநிலங்களில் அதிகரிப்பது ஒரு வழி. வேறு வழி TFR அதிகமாக இருக்கும் மாநிலங்களில் குறைப்பது. இருப்பினும், குறைந்த TFR உள்ள மாநிலங்களில் கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க முயற்சிப்பது நல்லதல்ல. இந்தியா, ஒட்டுமொத்த அளவில் அதிக மக்கள்தொகை கொண்டது.




Original article:

Share: