இங்கிலாந்து பாராளுமன்றம் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இது நோயுற்ற நோயாளிகள் தங்கள் சொந்த வாழ்க்கையை துணையோடு முடித்துக் கொள்ள உதவி கோர அனுமதிக்கிறது.
நவம்பர் 29 அன்று இங்கிலாந்து பாராளுமன்றம் துணையோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் (assisted dying) மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது. "சுதந்திர வாக்களிப்பு" முறையில், எம்.பி.க்கள் கட்சிக் கொள்கையைப் பின்பற்றாமல் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இறுதியில், 38 எம்.பி.க்கள் வாக்களிக்காமல் 330க்கு 275 என்ற பெரும்பான்மையுடன் மசோதா ஆதரிக்கப்பட்டது.
மரணம் அடையும் நிலையில் உள்ள நோயாளிகள் அபாயகரமான நோய்களிலிருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் போன்றோர்கள் தங்கள் சொந்த துணையோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ள உதவி கோருவதற்கு இந்த மசோதா அனுமதிக்கிறது. இந்த மசோதா இப்போது "பொது மசோதாக் குழுவிற்கு" அனுப்பப்படும். இது பாராளுமன்றத்தில் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, முன்மொழியப்பட்ட திருத்தங்களை அனுமதிக்கும். பின்னர் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸுக்கு (House of Lords) அனுப்பப்படும். அங்கு இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பு மேலும் மாற்றங்கள் செய்யப்படலாம்.
துணையோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது ஏன்? மசோதாவில் வழங்கப்பட்ட நடைமுறை என்ன? இது இந்தியாவின் சட்டத்துடன் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?
இங்கிலாந்தின் தற்போதைய நிலை
துணையோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ளுதல் என்பது ஒரு நோயாளி ஒரு மருத்துவரின் உதவியுடன் தனது சொந்த வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் செயல்முறையாகும். கருணைக்கொலை என்பது ஒரு தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளியின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மருத்துவரின் தீவிர ஈடுபாட்டை உள்ளடக்கியது. இதன்படி, இங்கிலாந்தில் உள்ள சட்டம் எந்த விதமான உதவியால் மரணமடைவதையோ அல்லது கருணைக்கொலையையோ அனுமதிக்காது. தற்கொலை அல்லது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் செயல்முறைக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
2013-ஆம் ஆண்டு முதல், இங்கிலாந்தில் இறப்பதை அனுமதிக்க குறைந்தபட்சம் மூன்று மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், இந்த பிரச்சினையில் நாடு ஒரு சிக்கலான மற்றும் மாறுபட்ட விவாதத்தைக் கண்டது.
தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு, வாழ்க்கையின் இறுதிக் கவனிப்பானது, அவர்களின் வலி போன்ற அறிகுறிகளை சரியாக நிர்வகிக்காது என்று ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். மனிதாபிமான வழியில் தங்கள் சொந்த துன்பங்களை எப்போது முடிவுக்குக் கொண்டுவருவது என்பதைத் தேர்வுசெய்ய அனுமதிப்பதன் மூலம், இச்சட்டம் நோயாளிக்கு ஒரு கட்டுப்பாட்டைக் கொடுக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். இத்தகைய சட்டங்கள் தற்கொலைகளைத் தடுக்கலாம் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இருப்பினும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் விஷயத்தில் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படும் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் தங்கள் சொந்த மரணத்தில் கையொப்பமிட வற்புறுத்தப்படவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ உதவும் என்று கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. இறப்பதற்குப் பதிலாக, வாழ்நாள் முடிவடையும் வரை பராமரிப்பை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.
மசோதா என்ன சொல்கிறது?
ஆரம்பத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட தீவிர நோய்வாய்ப்பட்ட நபர் மற்றும் அத்தகைய முடிவை எடுக்கும் மன "திறன்" கொண்ட ஒரு நபர் மட்டுமே இத்தகைய மரணத்தை கோர முடியும் என்று மசோதா கூறுகிறது. இதில் நோயாளி பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், கோரிக்கைக்கு முன் 12 மாதங்கள் இங்கிலாந்து வசிக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது.
இந்த மசோதா, "சிகிச்சையால் குணப்படுத்த முடியாத" "மோசமான நோய்", அல்லது "நியாயமாக 6 மாதங்களுக்குள் எதிர்பார்க்கக்கூடிய மரணத்தை நோக்கியுள்ளவர்" போன்றோர்கள் இதன் வரம்பிற்குள் வரலாம். இதில் குறைபாடுகள் உள்ளவர்கள் அல்லது "மனநல கோளாறு" உள்ளவர்கள் சேர்க்கப்படவில்லை என்று மசோதா தெளிவாகக் கூறுகிறது.
துணையோடு இறக்கும் கோரிக்கையை முன்வைக்கும் நபர், "மருத்துவர்" முன்னிலையில் "முதல் அறிவிப்பில்" கையொப்பமிட வேண்டும். அத்தகைய உதவியை வழங்கத் தயாராக இருக்கும் ஒரு தகுதி வாய்ந்த மருத்துவர் மற்றும் மற்றொரு மருத்துவர் "முதல் மதிப்பீட்டை" மேற்கொள்வார். நோயாளி உதவியால் இறப்பதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான தகுதிகளைப் பூர்த்திசெய்கிறாரா? அல்லது தானாக முன்வந்து அவ்வாறு செய்துள்ளாரா? என்ற நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டதாக மருத்துவர் என்பதை உறுதிசெய்து, அவர்கள் கோரிக்கையை இரண்டாவது "சுயாதீன மருத்துவரிடம்" பரிந்துரைப்பார்கள். அவர் குறைந்தபட்சம் ஏழு நாட்கள் விரிவான ஆலோசனைக்குப் பிறகு முடிவை எடுப்பார்.
இதை ஒருங்கிணைக்கும் மருத்துவரின் (coordinating doctor's) மதிப்பீட்டில், சுயாதீன மருத்துவர் (independent doctor) உடன்படவில்லை என்றால், ஒருங்கிணைக்கும் மருத்துவர், இதை மற்றொரு சுயாதீன மருத்துவரிடம் அனுப்ப உத்தரவிடலாம். இருப்பினும், இதை ஒரு முறை மட்டுமே செய்ய முடியும்.
ஒருங்கிணைப்பு மற்றும் சுயாதீன மருத்துவர்கள் இருவரும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், அது லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். அங்கு கோரிக்கையை வழங்குவதற்கான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். நோயாளி மற்றும் இரண்டு மருத்துவர்களை நீதிமன்றம் கேட்டு விசாரிக்க முடியும். நீதிமன்றம் கோரிக்கையை மறுத்தால், நோயாளி மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் முடிவை மேல்முறையீடு செய்யலாம். உயர் நீதிமன்றம் அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றம் கோரிக்கையை வழங்கினால், அடுத்தக்கட்ட நடைமுறை தொடரும். 14 நாட்களுக்குப் பிறகு, மருத்துவர்கள், இறப்பதற்கான கோரிக்கையை உறுதிப்படுத்த நோயாளியின் "இரண்டாவது அறிவிப்பில்" கையொப்பமிட அனுமதிக்கப்படுவார்.
ஒருங்கிணைக்கும் மருத்துவர், அல்லது நியமிக்கப்பட்ட பயிற்சியாளர், நோயாளிக்கு "அங்கீகரிக்கப்பட்ட பொருளை" கொடுப்பார். இந்த பொருளைப் பற்றிய விவரங்கள் தனி விதிமுறைகளில் கோடிட்டுக் காட்டப்படும்.
பொருளைப் பெறுபவர் தாங்களாகவே அதைப் பயன்படுத்த முடிவு செய்ய வேண்டும் மற்றும் அதை நிர்வகிப்பதற்கான இறுதி நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று மசோதா கூறுகிறது. ஒருங்கிணைப்பு மருத்துவர் அதை நிர்வகிக்க அனுமதிக்கப்படவில்லை.
இந்தியாவில் செயலற்ற கருணைக்கொலை
2018-ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றம், "கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமை" என்பது இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாகும் என்று கூறியது. மேலும், "செயலற்ற கருணைக்கொலை" (Passive euthanasia) சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. செயலற்ற கருணைக்கொலை என்பது நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் உயிர் ஆதரவை நிறுத்துவதாகும். இதன் மூலம் நோயாளிகள் மருத்துவ தலையீடு இல்லாமல் இயற்கையாக இறக்க முடியும். இது துணையோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் மசோதாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
செயலற்ற கருணைக்கொலையை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியது.
வழிக்காட்டுதல்களின் படி, ஓர் உயிலில் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கையொப்பமிடப்பட வேண்டும் மற்றும் நீதித்துறை மாஜிஸ்திரேட் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர், தகுந்த தகுதி வாய்ந்த மருத்துவக் குழு மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் பிரதிநிதித்துவத்துடன் மற்றொரு வெளி மருத்துவக் குழு ஆகியயோரிடமிருந்து ஒப்புதல்கள் தேவை என குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும், 2019-ஆம் ஆண்டில் இந்தியன் சொசைட்டி ஆஃப் கிரிட்டிகல் கேர் மெடிசின் (Indian Society of Critical Care Medicine) வழிகாட்டுதல்களை மாற்றுவதற்கு ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தது. அவை இந்த வழிகாட்டல்கள் சிக்கலானவை மற்றும் செயல்பட முடியாதவை என்று குறிப்பிட்டன. ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான காலக்கெடுவை அறிமுகப்படுத்தவும், நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்தவும் 2023-ஆம் ஆண்டில் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை மாற்றியமைத்த போதிலும், இந்த வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நாடு முழுவதும் அவை செயல்படுத்தப்படுவது குறைவாகவே உள்ளது.
ஆகஸ்ட் 2024-இல், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்கள் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் போலவே இருந்தன. இவை நீண்ட நாள் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ உதவியை திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்துகின்றன. மேலும், அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் விருப்பமுள்ள அனைவரும் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.